[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 Naalvagai Kurukkangal Book Back Solution

இயல் இரண்டு – நால்வகைக் குறுக்கங்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.5 ‘Naalvagai Kurukkangal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 2.5 நால்வகைக் குறுக்கங்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.5 Naalvagai Kurukkangal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

நால்வகைக் குறுக்கங்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Naalvagai Kurukkangal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Naalvagai Kurukkangal subject.

Next Lesson: இந்திய வனமகன்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. வேட்கை என்னும் சொல்லில் ஐகாரக் குறுக்கம் பெறும் மாத்திரை அளவு ______.

  1. அரை
  2. ஒன்று
  3. ஒன்றரை
  4. இரண்டு

விடை : அரை

2. மகரக் குறுக்கம் இடம்பெறாத சொல் ________.

  1. போன்ம்
  2. மருண்ம்
  3. பழம் விழுந்தது
  4. பணம் கிடைத்தது

விடை : பணம் கிடைத்தது

3. சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது _______.

  1. ஐகாரக் குறுக்கம்
  2. ஔகாரக் குறுக்கம்
  3.  மகரக் குறுக்கம்
  4. ஆய்தக் குறுக்கம்

விடை : ஔகாரக் குறுக்கம்

குறு வினா

1. ஔகாரம் எப்பொழுது முழுமையாக ஒலிக்கும்?

ஔ, வெள என ஔகார எழுத்து, தனித்து வரும் இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிக்கிறது.

2. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?

ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை

  • முதல் = 1 ½ மாத்திரை
  • இடை = 1 மாத்திரை
  • இறுதி = 1 மாத்திரை

3. மகரக்குறுக்கத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

வலம் வந்தான், போலும்

மொழியை ஆள்வோம்

அறிந்து பயன்படுத்துவோம்.

பால் ஐந்து வகைப்படும். அவை

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்
  4. ஒன்றன்பால்
  5. பலவின்பால்

ஆகியனவாகும்.

உயர்திணையில்,

1. ஓர் ஆணைக் குறிப்பது ஆண்பால்.

(எ.கா.) மாணவன், செல்வன்.

2. ஒரு பெண்ணைக் குறிப்பது பெண்பால்.

(எ.கா) ஆதினி, மாணவி .

3. ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் குறிப்பது பலர்பால்.

(எ.கா.) மாணவர்கள், மக்கள்.

அஃறிணையில்

1. ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.

(எ.கா.) கல், பசு.

2. ஒன்றுக்கு மேற்பட்டவற்றைக் குறிப்பது பலவின்பால்.

(எ.கா.) மண் புழுக்கள், பசுக்கள்.

எதிர்ப்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.

  1. மகளிர் x ஆடவர்
  2. அரசன் x அரசி
  3. பெண் x ஆண்
  4. மாணவன் x மாணவி
  5. சிறுவன் x சிறுமி
  6. தோழி x தோழன்

படத்திற்குப் பொருத்தமான பாலை எழுதுக.

Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga
ஒன்றன்பால் ஆண்பால் ஒன்றன்பால்
Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Poruthamana Palai Eluthuga
பெண்பால் பலர்பால் பலவின்பால்

பிழையைத் திருத்திச் சரியாக எழுதுக.

1. கண்ணகி சிலம்பு அணிந்தான்.

விடை : கண்ணகி சிலம்பு அணிந்தாள்.

2. கோவலன் சிலம்பு விற்கப் போனாள்.

விடை : கோவலன் சிலம்பு விற்கப் போனான்

3. அரசர்கள் நல்லாட்சி செய்தார்.

விடை : அரசர்கள் நல்லாட்சி செய்தனர்.

4. பசு கன்றை ஈன்றன.

விடை : பசு கன்றை ஈன்றது.

5. மேகங்கள் சூழ்ந்து கொண்டது.

விடை : மேகங்கள் சூழ்ந்து கொண்டன.

6. குழலி நடனம் ஆடியது.

விடை : குழலி நடனம் ஆடினாள்

மொழியோடு விளையாடு

வட்டத்திலுள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை அமைக்க.

Samacheer Kalvi 7th Tamil Guide Valar Tamil Book Back Solution Sorgalai Amaika

கல் இலை கடல்
புல் இயல் கலை
புதையல் தையல் இல்லை
கதை கடலை

சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க.

வாழை தயிர் கூடு
குருவி கொய்யா சோறு
விளையாட்டு கூட்டம் அவரை
திடல் பாட்டு காய்
பழம் பறவை போட்டி
  1. வாழை + காய் = வாழைக்காய்
  2. வாழை + பழம் = வாழைப்பழம்
  3. குருவி + கூடு = குருவிக்கூடு
  4. குருவி +  கூட்டம் = குருவிக்கூட்டம்
  5. விளையாட்டு + திடல்= விளையாட்டுத்திடல்
  6. விளையாட்டு + போட்டி = விளையாட்டுப்போட்டி
  7. தயிர் + கூடு = தயிரக்கூடு
  8. தயிர் + சோறு = தயிர்ச்சோறு
  9. கொய்யா + காய் = கொய்யாக்காய்
  10. கொய்யா + பழம் = கொய்யாப்பழம்
  11. அவரை +காய் = அவரைக்காய்
  12. பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
  13. பறவை + கூடு = பறைவக்கூடு
  14. பறவை + கூட்டம் = பறவைக்கூட்டம்

விடுகதைகளுக்கு விடை எழுதுக.

1. மரம் விட்டு மரம் தாவுவேன்; குரங்கு அல்ல. வளைந்த வாலுண்டு; புலி அல்ல. கொட்டைகளைக் கொறிப்பேன்; கிளி அல்ல. முதுகில் மூன்று கோடுகளை உடையவன். நான் யார்?

விடை : அணில்

2. என் பெயர் மூன்று எழுத்துகளைக் கொண்டது. முதலெழுத்தை நீக்கினால் மறைப்பேன். இரண்டாம் எழுத்தை நீக்கினால் குரைப்பேன். மூன்றாம் எழுத்தை நீக்கினால் குதிப்பேன். நான் யார்?

விடை : குதிரை

3. வெள்ளையாய் இருப்பேன்; பால் அல்ல. மீன் பிடிப்பேன்; தூண்டில் அல்ல தவமிருப்பேன்; முனிவரல்ல நான் யார்?

விடை : கொக்கு

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • தீவு – Island
  • உவமை – Parable
  • இயற்கை வளம் – Natural Resource
  • காடு – Jungle
  • வன விலங்குகள் – Wild Animals
  • வனவியல் – Forestry
  • வனப் பாதுகாவலர் – Forest Conservator
  • பல்லுயிர் மண்டலம் – Bio Diversity

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “நால்வகைக் குறுக்கங்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மகரகுறுக்கத்தின் மாத்திரையளவு

  1. ½ மாத்திரை
  2. 1 மாத்திரை
  3. 1½ மாத்திரை
  4. ¼ மாத்திரை

விடை : ½ மாத்திரை

2. ஆய்தகுறுக்கத்தின் மாத்திரையளவு

  1. ½ மாத்திரை
  2. 1 மாத்திரை
  3. 1½ மாத்திரை
  4. ¼ மாத்திரை

விடை : ¼ மாத்திரை

3. மெய் எழுத்து பெறும் மாத்திரையளவு

  1. ¼ மாத்திரை
  2.  ½ மாத்திரை
  3. 1 மாத்திரை
  4. 1½ மாத்திரை

விடை : ¼ மாத்திரை

4. சொல்லுக்கு முதலில் வரும் குறுக்கம் _____________

  1. ஒளகாகரக்குறுக்கம்
  2. மகரக்குறுக்கம்
  3. ஆய்தக்குறுக்கம்
  4. ஐகாரக்குறுக்கம்

விடை : ஒளகாகரக்குறுக்கம்

5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது _____________

  1. ஒளகாகரக்குறுக்கம்
  2. மகரக்குறுக்கம்
  3. ஆய்தக்குறுக்கம்
  4. ஐகாரக்குறுக்கம்

விடை : ஆய்தக்குறுக்கம்

5. ஆய்தம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது _____________

  1. ஒளகாகரக்குறுக்கம்
  2. மகரக்குறுக்கம்
  3. ஆய்தக்குறுக்கம்
  4. ஐகாரக்குறுக்கம்

விடை : ஆய்தக்குறுக்கம்

பொருத்துக

  1. ஐகாரக்குறுக்கம் – ஒளவையார்
  2. ஒளகாகரக்குறுக்கம் – வலம் வந்தான்
  3. மகரக்குறுக்கம் – முஃடீது
  4. ஆய்தக்குறுக்கம் – பறவை

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறு வினா

1. குறுக்கங்கள் என்பதன் விளக்கம் தருக

சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம்.

2. ஔகாரக்குறுக்கம் வரும் இடங்களை கூறுக

ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வராது. சொல்லின் முதலில் மட்டுமே வரும்

4. மகரக்குறுக்கம் என்பதை எடுத்துகாட்டுடன கூறுக

மகரம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது மகரக்குறுக்கம் எனப்படும்.

எ.கா. வலம் வந்தான்

5. ஆய்தக்குறுக்கம் என்பது என்ன?

ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து கால் மாத்திரையாக குறைந்து ஒலிப்பது ஆய்தக்குறுக்கம் எனப்படும்.

Leave a Comment