இயல் மூன்று – பேசும் ஓவியங்கள்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.3 ‘Pesum Oviyangal’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 3.3 பேசும் ஓவியங்கள்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.3 Pesum Oviyangal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.
பேசும் ஓவியங்கள் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Pesum Oviyangal’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Pesum Oviyangal subject.
Next Lesson: கீரைப்பாத்தியும் குதிரையும்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்ட பயன்பட்ட பொருள்களில் ஒன்று _______.
- மண்துகள்
- நீர் வண்ணம்
- எண்ணெய் வண்ணம்
- கரிக்கோல்
விடை : மண்துகள்
2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஓவியம் ________.
- குகை ஓவியம்
- சுவர் ஓவியம்
- கண்ணாடி ஓவியம்
- கேலிச்சித்திரம்
விடை : கேலிச்சித்திரம்
3. கோட்டோவியம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- கோடு + ஓவியம்
- கோட்டு + ஓவியம்
- கோட் + டோவியம்
- கோடி + ஓவியம்
விடை : கோட்டு + ஓவியம்
4. செப்பேடு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
- செப்பு + ஈடு
- செப்பு + ஓடு
- செப்பு + ஏடு
- செப்பு + யேடு
விடை : செப்பு + ஏடு
5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________.
- எழுத்துஆணி
- எழுத்தாணி
- எழுத்துதாணி
- எழுதாணி
விடை : எழுத்துதாணி
கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. கருத்துப் படங்களை அறிமுகப்படுத்தியவர் _________________
விடை : பாரதியார்
2. கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது _________________
விடை : துணி ஓவியம்
3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் _________________ மீது பொறித்துப் பாதுகாத்தனர்.
விடை : செப்பேடுகளில்
குறு வினா
1. ஓவியங்களின் வகைகள் யாவை?
|
|
2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?
குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழரின் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.
3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?
கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய், வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைவர்
4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.
அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்கள் ஆகும்
5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?
நீர்நிலைகள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்
சிறு வினா
1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?
மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை கேலிச்சித்திரம் என்பர்
2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.
- ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்
- இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளை கொண்டு இருக்கும்.
- இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகிறது.
சிந்தனை வினா
தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?
யானைத் தந்தங்களின் மீது வரையப்படும் ஓவியங்கள் தந்த ஓவியங்கள் ஆகும். ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. கேரளாவில் யானைகள் அதிகமாக உள்ளன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றன. எனவே கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “பேசும் ஓவியங்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ஆயக்கலைகள் ______________
- 62
- 96
- 64
- 63
விடை : 64
2. அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் போன்றவற்றின் சுவர்களிலும் மேற்கூரைகளிலும் காணப்படும் ஓவியம்
- சுவர் ஓவியம்
- துணி ஓவியம்
- ஓலைச்சுவடி ஓவியம்
- செப்பேட்டு ஓவியம்
விடை : சுவர் ஓவியம்
3. சுவர் ஓவியம் ______________ரின் வாழ்க்கை நிகழ்வுகளாக வரையப்பட்டுள்ளன
- சுந்தரர்
- அப்பர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
விடை : சுந்தரர்
3. ஓவியம் வரையப் பயன்படும் துணிகளில் பொருந்தாதது
- எழினி
- திரைச்சீலை
- படம்
- கிழி
விடை : படம்
4. ஓலைச்சுவடி ஓவியம் காணப்படும் இடம் ____________
- கன்னிமாரா நூலகம்
- தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம்
- திருவனந்தபுரம் நூலகம்
- அண்ணா நூற்றாண்டு நூலகம்
விடை : தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம்
5. இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
விடை : பரிபாடல்
6. பழந்தமிழர்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்ள உதவும் ஓவியம் ____________
- குகை ஓவியம்
- துணி ஓவியம்
- ஓலைச்சுவடி ஓவியம்
- செப்பேட்டு ஓவியம்
விடை : குகை ஓவியம்
7. சுவர் ஓவியம் காணப்படும் இடம்
- கைலாச நாதர் கோவில்
- தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்
- அண்ணாமலையார் கோவில்
- தஞ்சை பெரிய கோவிலில்
விடை : தஞ்சை பெரிய கோவிலில்
8. தந்த ஓவியம் அதிகம் காணப்படும் மாநிலம்
- கேரளம்
- தமிழ்நாடு
- கர்நாடகம்
- ஆந்திரா
விடை : கேரளம்
9. கண்ணாடி ஓவியர்கள் காணப்படும் இடம்
- தஞ்சாவூர்
- கோவை
- தஞ்சாவூர்
- ஆந்திரா
விடை : தஞ்சாவூர்
10. கருத்துப்பட ஓவியம் முதன்முதலில் வெளி வந்த இதழ்
- விடுதலை
- எழுத்து
- இந்தியா
- கழையானி
விடை : இந்தியா
11. புனையா ஓவியம் கடுப்பப் புனைவில் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
- பதிற்றுப்பத்து
- சிலப்பதிகாரம்
- நெடுவால்வாடை
- மணிமேகலை
விடை : நெடுவால்வாடை
12. புனையா ஓவியம் புறம் போந்தன்ன பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
- பதிற்றுப்பத்து
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- நெடுவால்வாடை
விடை : மணிமேகலை
குறு வினா
1. ஓவியத்தின் வேறு பெயர்களை எழுதுக.
ஓவு, ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி
2. ஓவியம் வரைபவரின் வேறு பெயர்கள் யாவை?
- கண்ணுள் கவிஞர்
- ஓவியப் புலவர்
- ஓவமாக்கள்
- கிளவி வல்லோன்
- சித்திரக்காரர்
- வித்தகர்
3. பசார் பெயிண்டிங்கின் முன்னோடி என கருதப்படுபவர் யார்?
பசார் பெயிண்டிங்கின் முன்னோடி என கருதப்படுபவர் கொண்டையராஜூ