[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 Tamilarkalin Kaparkalai Book Back Solution

இயல் ஒன்று – தமிழரின் கப்பற்கலை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.3 ‘Tamilarkalin Kaparkalai’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 1.3 தமிழரின் கப்பற்கலை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.3 Tamilarkalin Kaparkalai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

தமிழரின் கப்பற்கலை பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamilarkalin Kaparkalai’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamilarkalin Kaparkalai subject.

Next Lesson: கவின்மிகு கப்பல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது ___________.

  1. கலம்
  2. வங்கம்
  3. நாவாய்
  4. ஓடம்

விடை : ஓடம்

2. தொல்காப்பியம் கடற்பயணத்தை ____________ வழக்கம் என்று கூறுகிறது.

  1. நன்னீர்
  2. தண்ணீர்
  3. முந்நீர்
  4. கண்ணீர்

விடை : முந்நீர்

3. கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி __________.

  1. சுக்கான்
  2. நங்கூரம்
  3. கண்ணடை
  4. சமுக்கு

விடை : சுக்கான்

கோடிட்ட இடங்ளை நிரப்புக

1. கப்பல் கட்டுவதற்குப் பயன்படும் மர ஆணிகள் __________________ என அழைக்கப்படும்.

விடை : தொகுதி

2. கப்பல் ஓரிடத்தில் நிலையாக நிற்க உதவுவது __________________

விடை : நங்கூரம்

3. இழைத்த மரத்தில் காணப்படும் உருவங்கள் __________________ எனக் குறிப்பிடப்படும்.

விடை : கண்ணடை

பொருத்துக

  1. எரா –  திசைகாட்டும் கருவி
  2. பருமல் –  அடிமரம்
  3. மீகாமன் –  குறுக்கு மரம்
  4. காந்தஊசி –  கப்பலைச் செலுத்துபவர்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – ஈ, 4 – அ

தொடர்களில் அமைத்து எழுதுக.

1. நீரோட்டம் 

விடை: ஆழ்துளைக்கிணறு அமைக்கும் முன்னர் நீரோட்டம் பார்ப்பர்

2. காற்றின் திசை

விடை: கப்பலைக் காற்றின் திசைக்கேற்ப செலுத்துவர்

3. வானியல் அறிவு

விடை: தமிழர் வானியல் அறிவில் சிறந்து விளங்கினர்

4. ஏற்றுமதி

விடை: துறைமுகத்தில் கப்பல்கள் மூலம் பொருள்களை ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகின்றன

குறுவினா

1. தோணி என்னும் சொல்லின் பெயர்க்காரணத்தைக் கூறுக.

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியை குடைந்து தோண்டப்பட்டவை தோணி எனப்பட்டன.

2. கப்பல் கட்டும்போது மரப்பலகைகளுக்கு இடையே தேங்காய் நார் (அ) பஞ்சு வைப்பதன் நோக்கம் என்ன?

மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.

3. கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.

  • ஏரா
  • பருமல்
  • நங்கூரம்
  • கூம்பு
  • வங்கு
  • சுக்கான்
  • பாய்மரம்

சிறுவினா

1. சிறிய நீர்நிலைகளையும், கடல்களையும் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்களை எழுதுக.

சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

தோணி, ஓடம், படகு, புணை, மிதவை, தெப்பம்

கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்

கலம், வங்கம், நாவாய்

2. பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக.

  • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர் .
  • திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
  • கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.
  • கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.

3. கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள் யாவை?

  • கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.
  • நீர் மட்ட வைப்பிற்கு வேம்ப், இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்கு தேக்கு, வெண் தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.
  • சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.
  • மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.
  • சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்ட காலம் உழைத்தன.
  • இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மர ஆணிகளைப் பயன்படுத்தினர்.

சிந்தனை வினா

இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதற்குக் கடற்பயணத்தைப் பெரிதும் மேற்கொள்ளாதது ஏன் எனச் சிந்தித்து எழுதுக.

  • கப்பலில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தால் நீண்ட நாளட்கள் பயணம் செய்ய வேண்டும். அதனால் கால விரையம் ஏற்படும்.
  • அதிவிரைவுக்குக் கடற்பயணம் பயன்படுவதில்லை.
  • கடல் உயிரினங்கள் மற்றும் புயல் போன்றவை அச்சத்தை ஏற்படுத்தும்.
  • அதிக பொருட்செலவை ஏற்படுத்தும்.

போன்ற காரணங்களால்  இக்காலத்தில் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடற்பயணத்தை பெரிதும் மேற்கொள்ளவில்லை.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழரின் கப்பற்கலை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பூம்புகார் துறைமுத்திலிருந்து கப்பல்கள் மூலம் பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டதைக் கூறும் நூல் _____________

  1. திருக்குறள்
  2. பட்டினப்பாலை
  3. பதிற்றுப்பத்து
  4. சேந்தன் திவாகரம்

விடை : பட்டினப்பாலை

2. முந்நீர் வழக்கம் என்னும் கடற்பயணத்தைக் குறிப்பிடும் நூல் _____________

  1. திருக்குறள்
  2. பதிற்றுப்பத்து
  3. சேந்தன் திவாகரம்
  4. தொல்காப்பியம்

விடை : தொல்காப்பியம்

3. உலகு கிளர்நதன்ன உருகெழு வங்கம் பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. சேந்தன் திவாகரம்
  4. அகநானூறு

விடை : அகநானூறு

4. அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும்
    பெருங்கலி வங்கம் பாடல்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. சேந்தன் திவாகரம்
  4. அகநானூறு

விடை : அகநானூறு

5. உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை _____________ எனப்பட்டன

  1. தோணிகள்
  2. கப்பல்கள்
  3. கட்டுமரங்கள்
  4. படகுகள்

விடை : சேந்தன் தோணிகள்

6. மரத்தினால் ஆன ஆணி _____________

  1. கண்ணடை
  2. கம்மியர்
  3. தச்சுமுழம்
  4. தொகுதி

விடை : தொகுதி

7. பழந்தமிழர் _____________ வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி கடல்பயணம் செய்திருக்கலாம்.

  1. குதிரைகள்
  2. ஆமைகள்
  3. யானைகள்
  4. மரங்கள்

விடை : ஆமைகள்

8. பழந்தமிழர் _____________ வழிகாட்டிகளாகப் பயன்படுத்தி கடல்பயணம் செய்திருக்கலாம்.

  1. குதிரைகள்
  2. ஆமைகள்
  3. யானைகள்
  4. மரங்கள்

விடை : ஆமைகள்

9. கப்பல் கட்டும் கலைஞர்கள் _______________ என்று அழைக்கப்பட்டனர்

  1. கைவினைஞர்கள்
  2. கம்மியர்
  3. கவிஞர்கள்
  4. படைப்பாளிகள்

விடை : கம்மியர்

10. கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. திருக்குறள்
  3. மணிமேகலை
  4. புறநானூறு

விடை : மணிமேகலை

11. ___________ என்பது இழைத்த மரத்தில் காணப்படும் உருவஙகள் ஆகும்.

  1. கழிமுகம்
  2. கண்ணடை
  3. வெட்டுவாய்
  4. கழியிடை

விடை : கண்ணடை

12. மரத்தின் வெட்டப்பட்ட பகுதியை ___________ என்பர்

  1. வெட்டுவாய்
  2. கண்ணடை
  3. கழிமுகம்
  4. கழியிடை

விடை : வெட்டுவாய்

13. நீளம், அகலம், உயரம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணக்கிட்டுக் கப்பல்களை உருவாக்க _________ என்னும் நீட்டல் அளவையால் கணக்கிட்டனர்

  1. தச்சுமுழம்
  2. அச்சுமுழம்
  3. தண்டைமுழம்
  4. வெண்முகம்

விடை : தச்சுமுழம்

14. நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக
 என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. திருக்குறள்
  3. புறப்பாடல்
  4. புறநானூறு

விடை : புறப்பாடல்

15. கலம் தந்த பொற்பரிசம்
கழித்தாேணியால் கரை சேர்க்குந்து
 என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. புறநானூறு
  3. மணிமேகலை
  4. புறபாடல்

விடை : புறநானூறு

குறு வினா

1. தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் சிறந்து விளங்கினர் என குறிப்பிடு நூல்களை எழுதுக

திருக்குறள், பட்டினப்பாலை, அகநானூறு, பதிற்றுப்பத்து, சேந்தன் திவாகரம்

2. தமிழர்கள் அயல்நாட்டுக்குக் கப்பலில் சென்றனர் என்பதற்கு சான்று ஒன்று தருக.

நியூசிலாந்து நாட்டு வெலிங்டன் அருங்காட்சியகத்தில் பழங்காலத் தமிழ்நாட்டுக் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட மணி ஒன்று இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அயல் நாடுகளுக்குக் கப்பல்களில் சென்றனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

4. கட்டுமரங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன?

மரங்கள் பலவற்றை இணைத்துக் கட்டி கட்டுமரங்கள் உருவாக்கப்பட்டன

4. தோணி என்றால் என்ன?

எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்து விட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.

5. கப்பற்படையால் நாடுகளை வென்ற சோழர்களை கூறுக

இராசராச சோழன், இராசேந்திர சோழன்

7. தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள் யாவை?

பெரிய பாய்மரம், திருக்கைத்திப் பாய்மரம், காணப்பாய்மரம், கோசுப்பாய்மரம்

8. கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கப்படும பெயர்களை எழுதுக

மாலுமி, மீகாமன், நீகான், கப்பலோட்டி

Leave a Comment