Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.1 Ondray Kulam Book Back Solution

இயல் 8.1 – ஒன்றே குலம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 8.1 ‘Ondray Kulam’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 8.1 ஒன்றே குலம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 8.1 Ondray Kulam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

ஒன்றே குலம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ondray Kulam’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Ondray Kulam Subject.

Previous Lesson: வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

ஒன்றே குலம் பாடல்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே

– திருமூலர்

பாடலின் பொருள்

மனிதர் அனைவரும் ஒரே இனத்தினர். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே. இக்கருத்துகளை நன்றாக மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை இல்லை. கூசாமல் செல்லவேண்டிய நல்வழி இதைவிட வேறு இல்லை. உலகத்து மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழவேண்டுமாயின் இவற்றை நினைத்து ஈடேறுங்கள்.

படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயிலில் வீற்றிருக்கும் இறைவனுக்கு ஒருபொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால் அது நடமாடும் கோயிலாகிய உடம்பையுடைய அடியார்களுக்குச் சேராது. அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கும் சேரும்.

நூல்வெளி

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
  • இவர் இயற்றிய திருமந்திரம் 3000 பாடல்களைக் கொண்டது.
  • இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

சொல்லும் பொருளும்

  • நமன் – எமன்
  • நாணாமே – கூசாமல்
  • சித்தம் – உள்ளம்
  • உய்ம்மின் – ஈடேறுங்கள்
  • நம்பர் – அடியார்
  • ஈயில் – வழங்கினால்
  • படமாடக்கோயில் – படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அறநெறியில் வாழ்பவர்கள் உயிரைக் கவர வரும் ______________க் கண்டு அஞ்சமாட்டார்கள்.

  1. புலன்
  2. அறனை
  3. நமனை
  4. பலனை

விடை : நமனை

2. ஒன்றே ______________ என்று கருதி வாழ்வபதை மனிதைப் பண்பாகும்.

  1. குலம்
  2. குளம்
  3. குணம்
  4. குடம்

விடை : குலம்

3. நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______________

  1. நம் + இல்லை
  2. நமது + இல்லை
  3. நமன் + நில்லை
  4. நமன் + இல்லை

விடை : நமன் + இல்லை

4. நம்பர்க்கு + அங்கு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______________

  1. நம்பரங்கு
  2. நம்மார்க்கு
  3. நம்பர்க்கங்கு
  4. நம்பங்கு

விடை : நம்பர்க்கங்கு

குறு வினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

மனிதர் அனைவரும் ஒரே இனம். உலகைக் காக்கும் இறைவனும் ஒருவனே என்பதை மனத்தில் நிறுத்துபவர்களுக்கு எமனைப் பற்றிய அச்சம் தேவை

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர்

  • மனிதர் அனைவரும் ஒரே இனம்.
  • இறைவன் ஒருவனே என்பதை ஏற்றல்
  • அடியவர்களாகிய மக்களுக்குக் காணிக்கை கொடுத்தல்

ஆகியவற்றை செய்ய வேண்டும்

சிறு வினா

மக்களுக்குச் செய்ய வேண்டிய தொண்டு குறித்துத் திருமூலர் கூறுவது யாது?

  • படங்கள் அமைந்த கோயிலில் இருக்கக்கூடிய இறைவனுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாகச் செலுத்தினால், அப்பொருள் நடமாடும் கோயில் ஆகிய உடம்பை உடைய அடியார்களுக்கு சேராது.
  • ஆகையால் அடியார்களாகிய மக்களுக்குக் கொடுப்பது கோயிலில் இருக்கும் இறைவனுக்கு கொடுப்பதை போன்றதாகும்.

சிந்தனை வினா

அன்றாட வாழ்வில் நாம் பிறருக்கு எத்தகைய உதவிகளை செய்யாம்?

  • வீட்டு வேலைகளில் பெற்றோருக்க உதவி செய்யலாம்.
  • பேருந்தில் செல்லும்போது பெரியவர்களுக்கு நம் இடத்தை விட்டுக் கொடுக்கலாம்.
  • முதியவர்கள் சாலையை கடக்கும்போது அவர்களுக்கு உதவலாம்.
  • வகுப்பில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தரலாம்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஒன்றே குலம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும், பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்

  1. திருவள்ளுவர்
  2. திருமூலர்
  3. சுரதா
  4. பாதியார்

விடை : திருமூலர்

2. திருமந்திரம் _______________ என்று அழைக்கப்படுகிறது

  1. தமிழ் இரண்டாயிரம்
  2. தமிழ் பாவாயிரம்
  3. நாலாயிரத் தமிழ்
  4. தமிழ் மூவாயிரம்

விடை : தமிழ் மூவாயிரம்

3. திருமந்திரம் _______________ நூலின் ஆசிரியர்

  1. திருவள்ளுவர்
  2. சுரதா
  3. பாதியார்
  4. திருமூலர்

விடை : திருமூலர்

4. சித்தம் என்பதன் பொருள்

  1. உள்ளம்
  2. எமன்
  3. கூச்சம்
  4. கோயில்

விடை : உள்ளம்

5. உய்ம்மின் என்னும் பொருள் தரும் சொல் _______________

  1. எமன்
  2. உள்ளம்
  3. கலை
  4. ஈடேறுங்கள்

விடை : ஈடேறுங்கள்

6. திருமூலர் _________________ எனக் கூறியுள்ளார்

  1. யாதும் ஊரே யாவரும் கேளிர்
  2. ஒன்றே குலம் ஒருவனே தேவன்
  3. தீதும் நன்றும் பிறர் தர வாரா
  4. கேடில் விழுச்செல்வம் கல்வி

விடை : ஒன்றே குலம் ஒருவனே தேவன்

7. மனிதர்களிடையே பிறப்பால் _________________ பாராட்டுவது தவறானது.

  1. இன்பம் துன்பம்
  2. நன்மை தீமை
  3. பெருமை சிறுமை
  4. உயர்வு தாழ்வு

விடை : உயர்வு தாழ்வு

சிறு வினா

1. உலகமக்கள் அனைவரையும் உடன் பிறந்தாராகக் கருதி காட்ட வேண்டியது எது?

அன்பு

2. எதனை போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும்?

பிறருக்கு ஏற்படும் பசி முதலிய துன்பங்களைத் தமக்கு ஏற்பட்டதாகக் கருதி அவற்றைப்போக்க முயல்வதே மனிதர்களின் சிறந்த கடமையாகும்

3. திருமூலர் மக்களை எவ்வாறு கூறுகிறார்?

திருமூலர் அடியார்களாகிய மக்களை நடமாடும் கோயில் என்று கூறுகிறார்

4. திருமூலர் பற்றிய குறிப்பு வரைக

  • திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர்
  • பதினெண் சித்தர்களில் ஒருவர்
  • திருமந்திரம் என்ற நூலை எழுதியுள்ளார்

5. திருமந்திரம் குறிப்பு வரைக

  • திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்
  • 3000 பாடல்களைக் கொண்ட நூல் இது
  • பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை நூல்

Leave a Comment