Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 Sorpoonga Book Back Solution

இயல் மூன்று – சொற்பூங்கா

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 1.4 ‘Sorpoonga’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 1.4 சொற்பூங்கா

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 1.4 Sorpoonga Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

சொற்பூங்கா வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sorpoonga’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Sorpoonga subject.

Previous Lesson: தமிழ் வரிவடிவ வளர்ச்சி

நூல் வெளி

  • செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர்.
  • நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
  • தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார்.
  • திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார்.
  • இவரது தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள் என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

ஓரெழுத்து ஒருமொழிகள்

உயிர் எழுத்து ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசை மா, மீ, மூ, மே, மே, மோ
தகர வரிசை தா, தீ, தூ, தே, தை
பகர வரிசை பா, பூ, பே, பை, போ
நகர வரிசை நா, நீ, நே, நை, நோ
ககர வரிசை கா, கூ, கை, கோ
சகர வரிசை சா, சீ, சே, சோ
வகர வரிசை வா, வீ, வை, வெள
யகர வரிசை யா
குறில் எழுத்து நொ, து

 

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளை தொகுத்து எழுதுக

முன்னுரை

மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியை (சொல்லை) ஓர் எழுத்து மொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் உடைய மொழி என மூன்று வகையாக்குவர்.

ஓரெழுத்து ஒருமொழி

உயிர் எழுத்துகள் வரிசையில் ஆறு எழுத்துகளும், மகர வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நகர வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும். க, ச, வகர வரிசைகளில் நான்கு எழுத்துகளும், யகர வரிசையில் ஒரு எழுத்தும் ஆக மொத்தம் நாற்பது நெடில் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.

பூ-யா சொற்கள்

பூ என்பது ஓரெழுத்து ஒரு மொழி. கா என்பதும் ஒரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்து பூங்கா எனக் கலைச்சொல் ஆக்கி வைத்துள்ளனர். யா என்பது வினா. யாது, யாவர், யாவன், யாங்கு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் வந்து நிற்கும் எழுத்து “யா” தானே!

மா சொல்

மா என்பதும் ஓரெழுத்து ஒரு மொழிகளுள் ஒன்று. நாட்டிலுள்ள பெருமக்கள் பெரிதும் கூடும் அவையை மாநாடு என்கிறோம். பல குறு நிலங்களை உள்ளடக்கிய பெருநிலத்தை மாநிலம் என்கிறோம். மா என்பது விலங்கையும் குறிக்கும். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்றெல்லாம் வந்து விலங்கினப் பெயராகி நிற்கின்றது.

ஈ-காரச் சொல்

ஈ என்பது பொதுப்பெயர் ஓயாது ஒலி செய்யும் ஒலிக்குறிப்பைக் காட்டி நிற்கிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்து வழங்கும் வழக்கம் உள்ளது. ஈ என்பது ஈகை என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை. ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறுவதும் உண்டு.

கால மாற்றத்தில் கரைந்தவை

இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். ஆன் என்பது ஆ ஆகியது; மான் என்பது மா ஆகியது;  கோன் என்பது கோ ஆகியது; தேன் என்பது தே ஆகியது; பேய் என்பது பே ஆகியது இவையெல்லாம் கால வெள்ளத்தில் கரைந்து தேய்ந்தவை.

ஏகாரச் சொல்

எட்டத்தில் போகிற ஒருவனை ஏய் என அழைத்தனர். ஏற் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏய் என்பது ஏ என வழக்கில் ஊன்றிவிட்டது. அம்மை ஏவு என்பர். ஏவுதல் என்பது “அம்பு விடுதல்” ஏவும் அம்பு” ஏ என்றாகியது. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை என்றது தமிழ். அதில் வல்லவனை ஏகலைவன் என்று பாராட்டியது.

முடிவுரை

தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பனவற்றை கையில் கனியாகக் காட்டும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சொற்பூங்கா” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. தமிழில் சொல் என்பதற்கு நெல் என்பது ஒரு பொருள்

  1. நெல்
  2. செல்
  3. சேறு
  4. பார்

விடை: நெல்

2. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனக் குறிப்பிட்டவர்

  1. தொல்காப்பியர்
  2. அகத்தியர்
  3. பவணந்தி அடிகள்
  4. நாலடியார்

விடை: தொல்காப்பியர்

3. நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி இக் கூற்றிணைக் கூறியவர்

  1. அகத்தியர்
  2. பவணந்தி அடிகள்
  3. தொல்காப்பியர்
  4. நாலடியார்

விடை: தொல்காப்பியர்

4. ஓரெழுத்து ஓரு மொழியாக வரும் நெடில் எழுத்துக்கள் எண்ணிக்கை

  1. 33
  2. 22
  3. 40
  4. 52

விடை: 40

5. ஓரெழுத்து ஓரு மொழிகளின் எண்ணிக்கை

  1. 33
  2. 22
  3. 42
  4. 52

விடை: 42

5. ஆமா என்பதன் பொருள்

  1. மான்
  2. யானை
  3. காட்டு பசு
  4. எருமை

விடை: காட்டு பசு

6. மக்கள் கூடும் அவையை ____________ எனக் குறிப்பர்

  1. மாநாடு
  2. மாநிலம்
  3. மாஞாலம்
  4. மாநிறம்

விடை: மாநாடு

7. அம்பு விடும் கலையை ___________ ஆகும்.

  1. ஏகலைவன்
  2. ஏவலன்
  3. ஏவுதல்
  4. ஏகலை

விடை: ஏகலை

8. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர்

  1. இலக்கண வரலாறு
  2. தமிழிசை இயக்கம்
  3. தனித்தமிழ் இயக்கம்
  4. இரா.இளங்குமரனார்

விடை: இரா.இளங்குமரனார்

9. இரா.இளங்குமரனார் எழுதிய நூல்களில் பொருந்தாது

  1. பெருஞ்சித்திரனார்
  2. தமிழின் பெருமைகள்
  3. கவிமணி
  4. தேவநேயப்பாவணர்

விடை: தமிழின் பெருமைகள்

10. இரா.இளங்குமரனார் தொகுத்துள்ள நூல்

  1. தமிழ் பெருமைகள்
  2. தேவநேயம்
  3. என்கதை
  4. திருக்குறள் சொல்லும் உண்மை

விடை: தேவநேயம்

11. திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்தவர்

  1. இலக்கண வரலாறு
  2. தமிழிசை இயக்கம்
  3. தனித்தமிழ் இயக்கம்
  4. இரா.இளங்குமரனார்

விடை: இரா.இளங்குமரனார்

சிறுவினா

இரா.இளங்குமரனார் – சிறுகுறிப்பு வரைக

  • சிறப்பு  பெயர் – செந்தமிழ் அந்தணர்
  • பணி – ஆசிரியர்
  • பன்முகத் திறன் – நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர்
  • படைப்புகள் – இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம்
  • தொகுப்பு நூல் – தேவநேயம்

Leave a Comment