Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.5 Thogai Nilai Thoga Nilai Thodargal Book Back Solution

இயல் 5.5 – தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 5.5 ‘Thogai Nilai Thoga Nilai Thodargal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 5.5 தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 5.5 Thogai Nilai Thoga Nilai Thodargal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thogai Nilai Thoga Nilai Thodargal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thogai Nilai Thoga Nilai Thodargal subject.

Previous Lesson: தமிழர் இசைக்கருவிகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது ____________

  1. வேற்றுமைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. அன்மொழித்தொகை

விடை : வேற்றுமைத்தொகை

2. செம்மரம் என்னும் சொல் ____________த்தொகை.

  1. வினை
  2. பண்பு
  3. அன்மொழி
  4. உம்மை

விடை : பண்பு

3. கண்ணா வா! என்பது ____________த் தொடர்.

  1. எழுவாய்
  2. விளி
  3. வினைமுற்று
  4. வேற்றுமை

விடை : விளி

பொருத்துக.

  1. பெயரெச்சத் தொடர் – கார்குழலி படித்தாள்
  2. வினையெச்சத் தொடர் – புலவரே வருக
  3. வினைமுற்றுத் தொடர் – பாடி முடித்தான்
  4. எழுவாய்த் தொடர் – எழுதிய பாடல்
  5. விளித் தொடர் – வென்றான் சோழன்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – உ, 4 – அ, 5 – ஆ

சிறு வினா

1. தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

தொகைநிலைத் தொடர் ஆறு வகைப்படும். அவை

  • வேற்றுமைத் தொகை
  • வினைத்தொகை
  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • அன்மொழித்தொகை

2. ‘இரவுபகல்’ என்பது எவ்வகைத் தொடர் என விளக்குக.

‘இரவு பகல்’ இத்தொடர், ‘இரவும் பகலும்’ என விரிந்து பொருள் தருகின்றது.

இதில் சொல்லின் இடையிலும், இறுதியிலும் ‘உம்’  என்னும் இடைச்சொல் நின்று பொருள் தருகிறது.

இவ்வாறு சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் ‘உம்’ இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை உம்மைத் தொகை என்பர்.

3. அன்மொழித்தொகையை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது அன்மொழித் தொகை எனப்படும்.

சான்று : பொற்கொடி வந்தாள்

இத்தொடரில் “பொன்னாலாகிய வளையலை அணிந்த பெண் வந்தாள்” என்னும் பொருள் தருகிறது. இதில் “ஆல்” என்னும் வேற்றுமை உருபும் “ஆகிய” என்னும் அதன் பயனும் மறைந்து வந்துள்ளது.

“வந்தாள்” என்னும் சொல்லால் பெண் என்பதனையும் குறிப்பதால், இது மூன்றாம் வேற்றுமைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை ஆகும்.

மொழியை ஆள்வோம்!

கோடிட்ட இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.

(கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு)

1. இடி ______________ மழை வந்தது.

விடை: உடன்

2. மலர்விழி தேர்வின் ______________ ஆயத்தமானாள்.

விடை: பொருட்டு

3. அருவி மலையில் ______________ வீழ்ந்தது.

விடை: இருந்து

4. தமிழைக் ______________ சுவையான மொழியுண்டோ!

விடை: காட்டிலும்

5. யாழ், தமிழர் ______________ இசைக்கருவிகளுள் ஒன்று

விடை: உடைய

பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.

படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், கசுரம், மகுடி

விடை :

உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி

பின்வரும் இணைச்சொற்களை வகைப்படுத்துக.

உற்றார்உறவினர், விருப்புவெறுப்பு, காலைமாலை, கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி, பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.

நேரிணை:-

உற்றார்உறவினர், வாடிவதங்கி, நட்டநடுவில் பட்டிதொட்டி

எதிரிணை:-

விருப்புவெறுப்பு, காலைமாலை, உள்ளும்புறமும், மேடுபள்ளம் ஆடல்பாடல்

செறியிணை :-

கன்னங்கரேல்

சரியான இணைச்சொற்களை இட்டு நிரப்புக.

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் ______________ சிறந்தவர் ஆவர்.

விடை: கல்விகேள்வி

2. ஆற்று வெள்ளம் ______________ பாராமல் ஓடியது.

விடை: மேடுபள்ளம்

3. இசைக்கலைஞர்கள் ______________ வேண்டியவர்கள்.

விடை: போற்றிப்புகழப்பட

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு ______________ இல்லை

விடை: ஈடுஇணை

5. திருவிழாவில் யானை ______________ வந்தது.

விடை: ஆடிஅசைந்து

மொழியோடு விளையாடு

குறுக்கெழுத்துப் புதிர்

Samacheer Kalvi 8th Tamil Guide thogai nilai thoga nilai thodargal - Kurukeluthu Puthir

இடமிருந்து வலம்:-

1. முதற்கருவி எனப் பெயர் பெற்றது. 

விடை: மத்தளம்

2. யாழிலிருந்து உருவான பிற்காலக் கருவி _______________

விடை: வீணை

7. இயற்கைக் கருவி _______________

விடை: சங்கு

12. விலங்கின் உறுப்பைப் பெயராகக் கொண்ட கருவி _______________

விடை: கொம்பு

வலமிருந்து இடம்:-

4. வட்டமான மணி போன்ற கருவி _______________

விடை: சேகண்டி

8. ஐந்து வாய்களைக் கொண்ட கருவி _______________

விடை: குடமுழா

9. இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் _______________

விடை: பாணர்

மேலிருந்து கீழ்:-

1. 19 நரம்புகளைக் கொண்ட _______________

விடை: மகரயாழ்

3. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை _______________ கருவி

விடை: கஞ்ச

5. சிறியவகை உடுக்கை. 

விடை: குடுகுடுப்பை

6. பறை ஒரு _______________ கருவி

விடை: தோல்

கீழிருந்து மேல்:-

8. மூங்கிலால் செய்யப்படும் காற்றுக்கருவி _______________

விடை: குழல்

10. வீணையில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கை _______________

விடை: ஏழு

11. திருமணத்தின் போது கொட்டும் முரசு.

விடை: குடமுழா

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • கைவினைப் பொருள்கள் – Crafts
  • பின்னுதல் – Knitting
  • புல்லாங்குழல் – Flute
  • கொம்பு – Horn
  • முரசு – Drum
  • கைவினைஞர் – Artisan
  • கூடைமுடைதல் – Basketry
  • சடங்கு – Rite

 

பின்வரும் பகுதியில் “தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சத்தை ____________ என்பர்.

  1. வினைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. பண்புத்தொகை

விடை : வினைத்தொகை

2. பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது __________ எனப்படும்.

  1. வினைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. பண்புத்தொகை

விடை : பண்புத்தொகை

3. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது எண்ணும்மை எனப்படும்.

  1. வினைத்தொகை
  2. உம்மைத்தொகை
  3. உவமைத்தொகை
  4. எண்ணும்மை

விடை : எண்ணும்மை

4. பயனிலை அமைந்து, இடையில் எச்சொல்லும் மறையாமல் வருவது ______________ தொடர் ஆகும்

  1. வினையெச்சத் தொடர்
  2. விளித்தொடர்
  3. எழுவாய்த் தொடர்
  4. பெயரெச்சத் தொடர்

விடை : எழுவாய்த் தொடர்

5. வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவது _____________ ஆகும்.

  1. வினைமுற்றுத் தொடர்
  2. விளித்தொடர்
  3. வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
  4. பெயரெச்சத் தொடர்

விடை : வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

Leave a Comment