இயல் 4.1 – இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 4.1 ‘Iyanthirangalum Inaiyavali Payanpadum’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 4.1 இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 4.1 Iyanthirangalum Inaiyavali Payanpadum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.
இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Iyanthirangalum Inaiyavali Payanpadum’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Iyanthirangalum Inaiyavali Payanpadum Subject.
Previous Lesson: திருக்குறள்
பலவுள் தெரிக
1. கீழ்க்காணும் மூன்று தொடர்களுள்
அ. இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் ஆகும்.
ஆ. வங்கி அட்டை இல்லை என்றால் அலைபேசி எண், வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ. திறன் அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
- அ, ஆ ஆகியன சரி; இ தவறு
- அ, இ ஆகியன சரி; ஆ தவறு
- அ தவறு; ஆ, இ ஆகியன சரி
- மூன்றும் சரி
விடை : அ, இ ஆகியன சரி; ஆ தவறு
2. தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
- தேசியத் திறனாய்வுத் தேர்வு
- ஊரகத் திறனாய்வுத் தேர்வு
- தேசியத் திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு
- மூன்றும் சரி
விடை : ஊரகத் திறனாய்வுத் தேர்வு
குறு வினா
இணைய வழியில் இயங்கும் மின்னனு இயந்திரங்கள் எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
- தொலைநகல் இயந்திரம்
- தானியக்கப் பண இயந்திரம்
- அட்டைப் பயன்படுத்தும் இயந்திரம்
- திறனட்டைக் கருவி
- ஆளறி சோதனைக் கருவி
சிறு வினா
பள்ளி மாணவர்களுக்கான தமிழக அரசின் இணையவழிச் சேவைகளை எழுதுக
- 10-ம் வகுப்பு மாணவர்கள் – தேசியத்திறனாய்வுத் தேர்வு (NTSE)
- 8-ம் வகுப்பு மாணவர்கள் – தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு (NMMS)
- 9-ம் வகுப்பு கிராமப் பள்ளி மாணவர்கள் – ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST)
இத்தேர்வுகளை இணையம் மூலம் பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம்
- 10 மற்றும் 12-ம் வகுப்பு முடித்தவர்கள், அவர்கள் பள்ளியிலேயே அரசு வேலை வாய்ப்பகப் பதிவினைச் செய்யலாம்
- விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி பெற்றவர்களின் விவரங்கள் இணையம் மூலம் கணினியில் பதிவேற்றம் செய்யப்படுகின்றது.
நெடு வினா
அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.
அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-
- கையில் பணம் இல்லாமல் கடைக்குச் சென்று பொருள் வாங்கவும் மற்ற வணிக பரிமாற்றங்களுக்கும் இந்தக் கருவி பயன்படுகிறது.
- இந்த இயந்திரத்தில் வங்கி அட்டையின் காந்தப்பட்டை இருக்கும் பகுதியைத் தேய்க்கும் போது வாடிக்கையாளரின் விவரங்கள், இணையத் தொடர்பின் மூலம் வங்கி கணினிக்கு செல்கிறது.
- கணினியால் அட்டை ஆராயப்பட்டு கடவுச்சொல் சரிபார்க்கப்பட்டு பண பரிவர்த்தனைக்கு வங்கி ஒப்புதல் அளிக்கின்றது.
திறன் அட்டைக் கருவி:-
- தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.
- குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
- நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.
- அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. 1959 இல் இந்த __________ இயந்திரம் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
- தொலைநகல்
- ஜெராக்ஸ்
- தானியங்கிப் பண
- அட்டை தேய்ப்பி
விடை : ஜெராக்ஸ்
2. தமிழகத்தில் ______________ திறன் அட்டையாக மாற்றப்பட்டுள்ளது.
- ஆதார் அட்டை
- குடும்ப அட்டை
- பான் அட்டை
- கடன் அட்டை
விடை : குடும்ப அட்டை
3. செஸ்டர்ன் கால்சன் உலகின் முதல் ஒளிப்படியை எடுத்த ஆண்டு
- 1935
- 1936
- 1937
- 1938
விடை : 1936
4. தொலைநகல் சேவை நிறுவப்பட்ட ஆண்டு
- 1965
- 1865
- 1975
- 1875
விடை : 1865
5. அறிவியல் முன்னேற்றமே, மனிதனின் _________ குறையக் காரணம் ஆகும்.
- கவலை
- துன்பம்
- செலவு
- பயண நேரம்
விடை : பயண நேரம்
7. நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநர் ____________
- ஜான் ஷெப்பர்டு பாரன்
- ஜியோவான்னி காசில்வி
- செஸ்டர் காரல்சன்
- டிம் பெர்னெர்ஸ் லீ
விடை : செஸ்டர் காரல்சன்
8. பான்டெலிகிராஃப் என்ற தொலைநகர் கருவியை வடிவமைத்தவர் ____________
- ஜான் ஷெப்பர்டு பாரன்
- செஸ்டர் காரல்சன்
- ஜியோவான்னி காசில்வி
- டிம் பெர்னெர்ஸ் லீ
விடை : ஜியோவான்னி காசில்வி
10. 1985-ல் ____________ என்பவர் கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் தொலைநகல் எடுக்கும் தொழில்நுட்பததைக் கண்டுபிடித்தார்.
- ஜான் ஷெப்பர்டு பாரன்
- ஹாங்க் மாக்னஸ்கி
- ஜான் ஷெப்பர்டு பாரன்
- டிம் பெர்னெர்ஸ் லீ
விடை : ஹாங்க் மாக்னஸ்கி
குறு வினா
1. ஆளறி சோதனைக் கருவி எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வருகைப் பதிவுக்காகவும் வெளியேறுகைப் பதிவுக்காகவும் இக்கருவி பயன்படுத்தப்படுகிறது.
2. ஒளிப்படி இயந்திரம் கண்டுபிடிக்க காரணம் யாது?
நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமைச் சட்ட வல்லுநரும் பகுதி நேர ஆய்வாளருமான செஸ்டர் கார்ல்சன் தம் தொழிலுக்காக நிறைய காகிதங்களைப் படி எடுக்க வேண்டியிருந்தது. அந்தப் பணிச்சுமையே அவரை இப்புதிய கண்டுபிடிப்பை நோக்கித் தள்ளியது.
3. கடிதப்போக்குவரத்து குறையவும் காரணம் யாது?
மின்னஞ்சல் மூலமாக கடிதப் போக்குவரத்து குறைந்துள்ளது.
4. தொலைநகல் இயந்திரத்தின் பயன் யாது?
தொலைநகல் இயந்திரம் கோப்புகளையும் ஒளிப்படங்களையும் உடனடியாக ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு அனுப்பப் பயன்படுகிறது.
5. அட்டைத்தேப்பி இயந்திரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்கள் எவை?
- கட்டணம் செலுத்தும் கருவி
- விற்பனைக் கருவி
6. இணைய வணிக கண்டுபிடிப்புகளை பற்றிக் குறிப்பிடுக
- 1979-ல் மைக்கல் ஆல்டரிச் இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தார்
- 1989-ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.
- கரும்பு முதல் கணினி வரை இன்று விற்காத பொருளே இணைய வணிகத்தில் இல்லை