இயல் 1.3 – தமிழ்விடு தூது
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 1.3 ‘Tamil Vidu Thoothu’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 1.3 தமிழ்விடு தூது
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 1.3 Tamil Vidu Thoothu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.
தமிழ்விடு தூது பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Tamil Vidu Thoothu’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamil Vidu Thoothu Subject.
தமிழ்விடு தூது பாடல்
சீர்பெற்ற செல்வம் தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்தஉனைச் முற்றும்உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோநீ ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள்உணவு அழியா வனப்பு ஒன்று அலது அதிகம் உண்டோ (கண்ணிகள் 69 – 76) |
நூல்வெளி
- தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.
- இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
- இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
- தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
- இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
- தமிழின் சிறப்புகளைக் குறிப்பிடும் சில கண்ணிகள் இப்பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளன
- 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
- இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
சொல்லும் பொருளும்
- குறம், பள்ளு – சிற்றிலக்கிய வகைகள்
- மூன்றினம் – துறை, தாழிசை, விருத்தம்
- சிந்தாமணி – சீவகசிந்தாமணி, சிதறாமணி
- சிந்து – ஒருவகை இசைப்பாடல்
- முக்குணம் – மூன்று குணங்கள் (சமத்துவம் – அமைதி, மேன்மை. இராசசம் – போர், தீவிரமான செயல். தாமசம் – சோம்பல், தாழ்மை)
- பத்துக்குணம் – செறிவு, சமநிலை முதிய பத்துக்குண அணிகள்
- வண்ணங்கள் ஐந்து – வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை
- வண்ணம் நூறு – குறில், அகவல், தூங்கிசை வண்ணம் முதலாக இடை மெல்லிசை வண்ணம் ஈறாக நூறு.
- ஊனரசம் – குறையுடைய சுவை
- நவரசம் – வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
- வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
இலக்கணக்குறிப்பு
- முத்திக்கனி – உருவகம்
- தெள்ளமுது – பணபுத்தொகை
- குற்றமிலா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
- நா – ஓரெழுத்து ஒரு மொழி
- செவிகள் உணவான – நான்காம் வேற்றுமைத் தொகை
- சிந்தாமணி – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரச்சம்
பகுபத உறுப்பிலக்கணம்
1. கொள்வார் – கொள் + வ் +ஆர்
- கொள் – பகுதி
- வ் – எதிர்கால இடைநிலை
- ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி
2. உணர்ந்த = உணர் + த்(ந்) + த் +அ
- உணர் – பகுதி
- த் – சந்தி
- த் – ந் ஆனது விகாரம்
- த் – இறந்த கால இடைநிலை
- அ – பெயரச்ச விகுதி
பலவுள் தெரிக.
1. தமிழ் விடு தூது ……………. என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
- தொடர்நிலைச் செய்யுள்
- புதுக்கவிதை
- சிற்றிலக்கியம்
- தனிப்பாடல்
விடை : சிற்றிலக்கியம்
2. விடுபட்ட இடத்திற்குப் பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
- …………….இனம்
- வண்ணம் …………….
- …………….குணம்
- வனப்பு …………….
-
- மூன்று, நூறு, பத்து, எட்டு
- எட்டு, நூறு, பத்து, மூன்று
- பத்து, நூறு, எட்டு, மூன்று
- நூறு, பத்து, எட்டு, மூன்று
விடை : மூன்று, நூறு, பத்து, எட்டு
3. அழியா வனப்பு, ஒழியா வனப்பு, சிந்தா மணி – அடிக்கோடிட்ட சொற்களுக்கான இலக்கணக்குறிப்பு
- வேற்றுமைத்தொகை
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- பண்புத்தொகை
- வினைத்தொகை
விடை : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
குறு வினா
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
இரண்டு இரண்டு பூக்களை வைத்து தொடுக்கப்படும் மாலை கண்ணி. அதே போல் இரண்டு இரண்டு அடிகளை வைத்து தொடுக்கப்படும் செய்யுள் கண்ணி ஆகும்.
சிறு வினா
தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக
- அமிழ்தினும் மேலான முத்திக் கனியே! முத்தமிழே! உன்னோடு மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்!
- புலவர்கள் குறம், பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பாவைகக்கும் உறவு உண்டா?
- தமிழே! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.
- தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டுமே பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்!
- மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான். ஆனால் தமிழே! நீ மட்டும் 100 வண்ணங்களை பெற்றுள்ளாய்!
- உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்!
- மற்றையோர்க்கு அழகு ஒன்று தான், ஆனால், தமிழே! நீயோ 8 வகையான ஆழகினைப் பெற்றுள்ளாய்!
பின்வரும் பகுதியில் “தமிழாேவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் __________ என்று பெயர்
- பிள்ளைத்தமிழ்
- கலம்பகம்
- கண்ணி
- மாலை
விடை : கண்ணி
2. தமிழ் விடு தூது நூலை முதன் முதலில் புதுப்பித்தவர்
- உ.வே.சா.
- ஒளவையார்
- தமிழன்பன்
- அடியார்க்கு நல்லார்
விடை : உ.வே.சா.
3. 1930-ல் உ.வே.சா. __________ நூலைப் புதுப்பித்துள்ளார்.
- புறநானூறு
- தமிழ் விடு தூது
- அகாநானூறு
- பதிற்றுப்பத்து
விடை : தமிழ் விடு தூது
4. தமிழ் விடு தூது நூலில் ___________ கண்ணிகள் உள்ளன
- 260
- 258
- 250
- 268
விடை : 268
5. சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
- காப்பியங்கள்
- தூது
- திருக்குறள்
- தொல்காப்பியம்
விடை : தூது
6. சிற்றிலக்கிய வகை சார்ந்தது
- குறம்
- பள்ளு
- சீவகசிந்தமணி
- தமிழ்விடுதூது
விடை : சீவகசிந்தமணி
7. தமிழ் விடு தூது கூறும் வண்ணகங்கள்
- 96
- 100
- 104
- 108
விடை : 100
8. தேவர்கள் பெற்றிருக்கும் குணங்களில் பொருந்தாதது
- இராசசம்
- தாமசம்
- சமத்துவம்
- மேற்கண்டதில் எதுவுமில்லை
விடை : மேற்கண்டதில் எதுவுமில்லை
9. தமிழ் விடு தூது நூலின் ஆசிரியர்
- குமரகுருபர்
- சுரதா
- பாரதாசன்
- அறிய இயலவில்லை
விடை : அறிய இயலவில்லை
10. தமிழ்விடு தூது கூறும் நாவின் சுவை
- 5
- 4
- 7
- 6
விடை : 6
குறு வினா
1. எப்போது நா இற்று விழும் என தமிழ்விடு தூது கூறுகிறது?
தமிழே! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.
2. தூது இலக்கியத்தை குறிக்கும் வேறுபெயர்கள் யாவை?
வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்
3. தூது இலக்கியம் என்றால் என்ன?
தலைவன் மீது அன்பு கொண்ட தலைவி ஒருத்தி, தலைவனிடம் தூது அனுப்பி மாலை வாங்கி வருமாறு அன்னம் முதலிய 10 பொருள்களில் ஏதேனும் ஒன்றினை தூது அனுப்புவது தூது இலக்கியம் ஆகும். இது கலி வெண்பாவால் பாடப்படும்.
4. தமிழ்விடு தூது கூறும் மூவகைப் பாவினங்களை கூறுக
துறை, தாழிசை, விருத்தம்
5. நவரசங்கள் என்பவை யாவை
வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், கோபம், நகை, சமநிலை
6. ஐந்து வண்ணங்கள் யாவை?
வெள்ளை, சிவப்பு,கருப்பு ,மஞ்சள், பச்சை
7. தமிழ் விடு தூது – குறிப்பு வரைக
- மதுரை சொக்கநாதர் மீது கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறிவர தமிழை தூது விடுவதாக அமைந்துள்ளது.
- 268 கண்ணிகளை உடையது
- 1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
- இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.