இயல் 4.5 – இதழாளர் பாரதி
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 4.5 ‘Ithalalar Bharathi’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 4.5 இதழாளர் பாரதி
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 4.5 Ithalalar Bharathi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.
இதழாளர் பாரதி வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Ithalalar Bharathi’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
Previous Lesson: தொல்காப்பியம்
நூல் வெளி
பாரதியின் இதழாளர் முகம் குறித்து நீங்கள் அறிவன யாவை?
பாரதியின் பன்முகம்
பாரதியார் கவிஞர் மட்டும் அல்லர்! சிறந்த பேச்சாளர்; பாடகர்; கட்டுரையாளர்; கதாசிரியர்; மொழிபெயர்ப்பாளர்; அரசியல் ஞானி; ஆன்மிகவாதி; அனைத்திற்கும் மேலாக சிறந்த இதழாளர்.
இதழாளர் பாரதி
பாரதி, “சுதேசிமித்திரன்” இதழில் உதவி இதழாசிரியராகச் சேர்ந்தார். அதனால் அவரது உலகாளாவிய பார்வை கூர்மைப்பட்டுச் சிறந்த இதழாளரானார். தொடர்ந்து சக்கரவர்த்தினி, இந்தியா, பாலபாரதி, விஜயா, கர்மயோகி எனப் பல இதழ்களில் பணியாற்றித் தம் வாழ்க்கைப் பேராட்டத்திற்கு இடையிலேயும் பாரதி, உலகப் பார்வை கொண்டு செயல்பட்டார்.
படைப்பில் புதுமை
“தான்” என்பதை ஒழித்து, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல், விடுதலை வேட்கையைத் தூண்டப் பல புனைப்பெயர்களில் எழுதினார். தாம் பணியாற்றிய இதழ்களில் கருத்துடன் காட்சியும் இடம்பெற வேண்டும் எனக் கருதிக் கருத்துப் படங்களைக் கேலிச் சித்திரங்களாக வெளியீட்டுத் தமிழ் இதழ்களில் “கார்ட்டூன்” என்பதை அறிமுகப்படுத்தினார்.
வழித்தடம் அமைத்தவர்
இதழியல் துறையில் பலர் பாரதியைப் பின்பற்றிச் செயல்பட்டனர். தமிழ் இதழ்களில் ஆண்டு, திங்கள், நாள் என நல்ல தமிழை முதலில் அறிமுகம் செய்தவர் பாரதியே. அவர் மூச்சும், பேச்சும் இளைஞருக்காகவும், பெண்களுக்காகவும் ஆனவையாக இருந்தன. “சக்ரவர்த்தினி” என்னும் தம் இதழில் குறள் வெண்பாவை எழுதிப் பெண் விடுதலைக்குப் பாடுபட்டார். புரட்சியையும், விடுதலையையும் குறிக்க “இந்தியா” இதழை சிவப்பு வண்ணத்தில் வெளியட்டார்.
புனைப்பெயர் பயன்படுத்தல்
தான் மட்டுமன்றித் தம் நண்பர்களும் ஆங்கிலேயர் கெடுபிடிக்கு ஆளாகக் கூடாதென விரும்பி நண்பர் பெயர்களையும் அவர்கள் கூடிப் பேசும் இடங்களையும் கூடப் புனைபெயர்களிலேயே சுட்டி வந்தார். பாரதியார் பயன்படுத்திய புனைப்பெயர்களில் அவரின் இதழியல் அறத்தைக் காண முடியும்.
புதுமை விரும்பி பாரதி
இதழ்களில் தேதி குறிப்பிடல், கருத்துப்படம் வெளியிடல், “மகுடமிடல்” என்னும் தலைப்பிடல் ஆகியவை நிலைகளில் முன்னோடியாக விளங்கினார். ஆங்கிலேயர் அளித்த பல கெடுபிடிகளுக்கும் நெருக்கடிகளுக்கும் இடையிலும் இதழியல் பணியைக் கைவிடாது செயல்படுத்தினார்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “இதழாளர் பாரதி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. __________ சமஸ்தானத்தின் பணிக் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறினார்.
- எட்டையபுரம்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
விடை : எட்டையபுரம்
2. பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ்
- யங் இந்தியா
- சுதேசமித்திரன்
- சக்கரவர்த்தினி
- கர்மயோகி
விடை : சக்கரவர்த்தினி
3. தமிழ் இதழியில் துறையில் முதன் முதலாகப் கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- பெரியார்
- பாரதியார்
விடை : பாரதியார்
4. பாரதியார் பெண்களுக்குகாக __________ இதழில் குறள் வெண்பா எழுதியுள்ளார்.
- யங் இந்தியா
- சக்கரவர்த்தினி
- சுதேசமித்திரன்
- கர்மயோகி
விடை : சக்கரவர்த்தினி
5. பத்திரிக்கை துறையில் பாரதியின் குருவாக கருதப்பட்டவர்
- வ. இராமசாமி
- பி.பி. சுப்பையா
- கனக லிங்கம்
- ஜி. சுப்பிரமணியம்
விடை : ஜி. சுப்பிரமணியம்
6. கண்ணம்மா, வள்ளி என்னும் புனைப்பெயர்களால் பாரதியாரால் குறிப்பிடப்பட்டவர்
- தமிழ்த்தாய்
- பாரத்தாய்
- செல்லம்மா
- கஸ்தூரி பாய்
விடை : செல்லம்மா
7. பாரதியார் விகட சித்திரத்தை ________ என்று குறிப்பிடுவார்.
- கேலிச்சித்திரம்
- புனையா ஓவியம்
- எழுதா ஓவியம்
- விகட ஓவியம்
விடை : கேலிச்சித்திரம்
8. பாரதியார் கருத்துப்படங்களை _________ இதழில் வெளியிட்டுள்ளார்.
- சித்திர வள்ளி
- விஜயா
- பஞ்ச்
- பால பாரதி
விடை : விஜயா
9. பாரதி __________ என்ற இதழை சிவப்பு வண்ணத்தாளில் வெளியிட்டார்.
- இந்தியா
- யங் இந்தியா
- சுதேசமித்திரன்
- கர்மயோகி
விடை : இந்தியா
10. இந்தியா இதழின் சிவப்புநிறமானது எதைக் குறிக்கிறது?
- அமைதி
- புரட்சி
- செழுமை
- உயர்வு
விடை : புரட்சி
11. தலைப்பிடலைக் குறிப்பிட பாரதியார் பயன்படுத்திய சொல்
- மகுடமிடல்
- பேரழகு
- தனிச்சிறப்பு
- இணையற்றது
விடை : மகுடமிடல்
12. உத்தமர் தேசாபிமானி என்று புனைப் பெயர் உடையவர்
- பாரதிதாசன்
- பாரதி
- வாணிதாசன்
- கண்ணதாசன்
விடை : பாரதி
பலவுள் தெரிக
1. பாரதி முதன் முதலாக பணியாற்றி இதழ் எது?
சுதேசமித்திரன்
2. பாரதியார் ஆசியராகவும் துணையாசிரியராகவும் பணியாற்றி இதழ்கள் எவை?
சுதேசமித்திரன், இந்தியா, விஜயா, தருமபோதினி, சக்கரவர்த்தினி, பாலபாரதி, சூர்யோதயம், கரம்யோகி
3. பாரதியாரின் படைப்புகளை வெயிட்ட இதழ்களை கூறுக
விவேகபாநு, தேசபக்தன், கலைமகள், காமன் வில்,சர்வஜன மித்திரன், கதாரத்னாகரம்