Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 2.1 Ketkiratha En Kural Book Back Solution

இயல் 2.1 – கேட்கிறதா என் குரல்!

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 2.1 ‘Ketkiratha En Kural ‘, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 2.1 கேட்கிறதா என் குரல்!

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 2.1 Ketkiratha En Kural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

கேட்கிறதா என் குரல்! வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ketkiratha En Kural’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Ketkiratha En Kural Subject.

Previous Lesson: எழுத்து சொல்

பலவுள் தெரிக

1. செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 – காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 – காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

  1. செய்தி 1 மட்டும் சரி
  2. செய்தி 1, 2 ஆகியன சரி
  3. செய்தி 3 மட்டும் சரி
  4. செய்தி 1, 3 ஆகியன சரி

விடை : செய்தி 1, 3 ஆகியன சரி

2. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க

  1. கொண்டல் – அ. மேற்கு
  2. கோடை – ஆ. தெற்கு
  3. வாடை –  இ. கிழக்கு
  4. தென்றல் – ஈ. வடக்கு

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. ‘நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு வரம் மரம் – மரங்களை
வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்’ – இதுபோன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத்தொடர்களை எழுதுக.

1. உயிர்களின் சுவாசம் காற்று!
காற்றின் சுவாசம் மரம்!

2. தூய்மையை நேசிப்போம்!
தூய காற்றைச் சுவாசிப்போம்!

சிறு வினா

1. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்…..முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு ‘நீர்’ தன்னைப் பற்றிப் பேசினால்….. உங்களுடைய கற்பனையில் தலைப்புகளை எழுதுக.

  • நானே! நீர்
  • உலகில் முக்கால் பாகம் நான்
  • நான் இல்லை  என்றால் உலகம் இல்லை
  • ஆதவனின் அணைப்பில் கருவுற்று
    மேகமாய் வளர்ந்து
    மழையாய் பிறப்பேன் நான்
  • விண்ணிலிருந்து நான் விழுந்தால்
  • என்னைக் கண்டு உலகம் சிரிக்கும்
  • மலையில் விழுந்து
    நதியில் ஓடி
    கடலில் சங்கமிக்கும்
    சரித்திர நாயகன் நான்

2. சோலைக்(பூங்கா) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க.

மின் விசிறிக் காற்று நண்பா! வா எங்கெல்லாம் சுற்றித் திரிந்து வருகிறாய்?
சோலைக்காற்று நீ ஓரிடத்தில் இருந்து நிலையகா வீசினாலும் உன்னை இயக்க ஒருவர் தேவை. அது மட்டுமல்லாமல் நீ கொடுக்கும் வெப்பக்காற்றை மனிதர்கள் வேறு வழியின்றி பயன்படுத்துகின்றனர். மின்சாரம் தடை பட்டால் மனிதர்கள் உன்னை இயக்க முடியாது
மின் விசிறிக் காற்று மனிதர்கள் உன்னை விரும்புகிறார்களா?
சோலைக்காற்று ஆம் நான் மக்களுக்கு குளிர்ந்த காற்றைக் கொடுக்கிறேன். என்னிலிருந்து மின்சாரம் தயாரிக்கினறனர், காற்றாைல மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்திலுலம், தமிழகம் முதல் இடத்திலும் உள்ளது. புதுபிக்கக் கூடிய வளமான என்னை பயன்படுத்தி மின்னாற்றலை உருவாக்கும் போது நிலக்கரியின் தேவை குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படுகிறது.
மின் விசிறிக் காற்று இத்தனை சிறப்புகள் கொண்ட உன்னை வைத்து புது மொழியை உலகிற்கு கூறப்போகிறேன்.
சோலைக்காற்று அப்படியா! அப்புது மொழி யாது?
மின் விசிறிக் காற்று “காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்”

நெடு வினா

மலர்ந்தும் மலராத பாதிமலர் போல
         வளரும் விழி வண்ணமே – வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
         விளைந்த கலை அன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
         நடந்த இளந் தென்றலே – வளர்

பொதிகை மலைதோன்றி மதுரை நகர் கண்டு
         பொலிந்த தமிழ் மன்றமே – கவிஞர் கண்ணதாசனின் இப்பாடலில் தவழும் காற்றையும் கவிதை நயத்தையும் பாராட்டி உரை செய்க.

காற்றைப் பாராட்டல்:-

மலர்ந்த மலராத பாதி மலரைம், விடிந்து விடியாத காலைப் பொழுதையும் விரும்பாதார் எவருமில்லை. அனைவரும் காற்றாகிய உன்னையும் நீ இளந்தென்றலாக வரும் போது விரும்புவர் எனக் குறிப்பிட்டுள்ளார் கண்ணதாசன். காற்றானது நதிகளை வருடியும், செடி கொடிகளை வருடியும் இளந்தென்றலாக வருகிறது. காற்றைப் போலவே தமிழும் அனைவராலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறது. தெற்கிலுள்ள பொதிகை மலையில் தோன்றிய தமிழுக்கு மதுரையிலே சங்கம் வைத்து அழகிய தமிழ் வளர்த்ததாகவும் கருத்துக் கொள்ளலாம்.

கவி நயம்:-

கவிஞர் கண்ணதாசனின் பாடலில் எதுகை, மோனை, இயைபு இயைந்தோடும் வகையிலும் கற்பனை காட்சியளிக்கும் வகையிலும், அணி அழகுற வகையிலும், சந்த தாளமிட்டு சொந்தம் கொண்டாடும் தன் கவிநயத்தைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

சான்று:-

மோனை

  • ளரும் – ண்ணமே

எதுகை

  • தியில் – பொதிகை

முரண்

  • மலர்ந்து x மலராத
  • விடிந்தும் x விடியாத

இயைபு

  • வண்ணமே – அன்னமே

அணி

  • பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே (உவமை அணி வந்துள்ளது)

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கேட்கிறதா என் குரல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. உலகம் என்பது ஐம்பூதங்களால் ஆனது எனக் குறிப்பிடுபவர்

  1. வள்ளுவர்
  2. ஒளவையார்
  3. தொல்காப்பியர்
  4. இளங்கோவடிகள்

விடை : தொல்காப்பியர்

2. கிழக்கு என்பதன் மற்றொரு பெயர் 

  1. குடக்கு
  2. வாடை
  3. குணக்கு
  4. கோடை

விடை: குணக்கு

3. வடக்கு என்பதன் மற்றொரு பெயர் 

  1. குடக்கு
  2. வாடை
  3. குணக்கு
  4. கோடை

விடை: வாடை

4. மழைக்காற்று என அழைக்கப்படும் காற்று

  1. வடக்கு
  2. கிழக்கு
  3. மேற்கு
  4. தெற்கு

விடை: கிழக்கு

5. மேற்கு என்பதன் மற்றொரு பெயர் 

  1. வடக்கு
  2. கோடை
  3. மேற்கு
  4. தெற்கு

விடை: கோடை

6. மேற்கு என்பதன் மற்றொரு பெயர் 

  1. வடக்கு
  2. கோடை
  3. மேற்கு
  4. தெற்கு

விடை: கோடை

7. மேற்கு என்பதன் மற்றொரு பெயர் 

  1. வடக்கு
  2. கோடை
  3. மேற்கு
  4. தெற்கு

விடை: கோடை

8. இந்தியாவிற்கு 70 விழுக்காடு மழைப்பொழிவினைத் தரும் காற்று

  1. வடமேற்கு பருவக்காற்று
  2. தென்மேற்கு பருவக்காற்று
  3. கோடைக்காற்று
  4. வாடை காற்று

விடை : தென்மேற்கு பருவக்காற்று

9. இந்தியாவிற்கு 70 விழுக்காடு மழைப்பொழிவினைத் தரும் காற்று

  1. வடமேற்கு பருவக்காற்று
  2. தென்மேற்கு பருவக்காற்று
  3. கோடைக்காற்று
  4. வாடை காற்று

விடை : தென்மேற்கு பருவக்காற்று

10. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. மணிமேகலை
  2. சிலப்பதிகாரம்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : தென்மேற்கு பருவக்காற்று

11. பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எழுதிய சிற்றிலிக்கிய நூல்களில் ஒன்று

  1. குற்றாலக்குறவஞ்சி
  2. பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
  3. இரட்டுற மொழிதல்
  4. தென்றல் வரும் நேரம்

விடை : பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது

13. தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவிற்கு _____________, _____________ பாடல்களைத் தாய்மொழியில் எழுதி வைத்துப் பாடுகிறார்கள்

  1. திருமந்திரம், திருவாசகம்
  2. திருக்குறள், திருமந்திரம்
  3. திருவருட்பா, திருப்பாவை
  4. திருவெம்பாவை, திருப்பாவை

விடை : திருவெம்பாவை, திருப்பாவை

14. வாயு வழக்கம் அறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கம் உண்டாம் என்ற பாடல் வரிகளை எழுதியவர்

  1. ஒளவையார்
  2. திருமூலர்
  3. அகத்தியர்
  4. வள்ளுவர்

விடை : தொல்காப்பியர்

15. முந்நீர் என்பதன் பொருள்

  1. கப்பல்
  2. பயணம்
  3. கடல்
  4. நீர்

விடை : கடல்

16. வளிதொழில் ஆண்ட உரவோன் எனக் குறிப்பிடப்படும் மன்னன் 

  1. ஒளவையார்
  2. ஆதிமந்தியார்
  3. வெண்ணிக் குயத்தியார்
  4. அள்ளூர் நன்முல்லையார்

விடை : வெண்ணிக் குயத்தியார்

17. முசிறி துறைமுகத்துக்கு விரைவில் பயணம் செய்யும் புதிய வழியைக் கண்டுபிடித்த கிரேக்க மாலுமி

  1. ஹிப்பாலஸ்
  2. யுவான்சுவாங்
  3. பிளைவி
  4. தாலமி

விடை : ஹிப்பாலஸ்

18. உலக காற்று நாள்

  1. மே 18
  2. ஜூலை 15
  3. ஜூன் 15
  4. ஆகஸ்ட் 15

விடை : ஜூன் 15

19. வளி மிகின் வலி இல்லை என்று ஐயூர் முடவனார்
சிறப்பித்துள்ளார்.

  1. மதுரை இளநாகனார்
  2. இளங்கோவடிகள்
  3. ஐயூர் முடவனார்
  4. அள்ளூர் நன்முல்லையார்

விடை : ஐயூர் முடவனார்

20. கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று என் வேகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

  1. மதுரை இளநாகனார்
  2. இளங்கோவடிகள்
  3. ஐயூர் முடவனார்
  4. அள்ளூர் நன்முல்லையார்

விடை : மதுரை இளநாகனார்

21. உலகிலேயே அதிகளவு மாசுபடுத்தும் நாடுகளில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நாடு.

  1. அமெரிக்கா
  2. சிங்கப்பூர்
  3. இந்தியா
  4. சீனா

விடை : இந்தியா

22. காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்
___________ முதலிடம் வகிக்கிறது

  1. கேரளா
  2. தமிழகம்
  3. மத்திய பிரதேசம்
  4. ஆந்திரப்பிரதேசம்

விடை : தமிழகம்

குறு வினா

1. மூச்சுப்பயிற்சி குறித்து திருமூலர் கூறிய செய்தி யாது?

மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.

2. காற்று வேறு பெயர்கள் யாவை?

காற்று, வளி, தென்றல், புயல், சூறாவளி

3. ஓசோன் படலத்தின் பயன்கள் சிலவற்றை கூறுக

  • கதிரவனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்களைத் தடுக்கிறது.
  • புவியைப்ப போர்வை போல சுற்றி கதிரவனின் வெப்பத்தை குறைத்து கொடுக்கிறது.

4. பருவக்காற்றுகள் எத்தனை வகைப்படும்?

தென்மேற்கு பருவக்காற்று, வடகிழக்குப் பருவக்காற்று என இரு வகைப்படும்.

5. காற்று மாசினால் மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் சிவலற்றை கூறுக?

கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல், புற்றுநோய், இளைப்பு நேயா், மூளை வளர்ச்சிக் குறைவு

6. அமில மழை எவ்வாறு உருவாகிறது?

காற்றில் கலக்கும் கந்தக-டை-ஆக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு இரண்டும் மழை பொழியும் போது மழை நீரில் கரைந்து அமில மழை உருவாகிறது.

சிறு வினா

1. ஹிப்பாலஸ் பருவக்காற்று குறிப்பு வரைக

  • கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மாலுமி ஹிப்பாலஸ்
  • இவர் பருவக் காற்றின் உதவியினால் முசிறித் துறைமுகத்திற்கு புதிய வழியைக் கண்டுபிடித்தார்.
  • யவனக் கப்பல்கள் விரைவாகவும் அதிகமாகவும் சேரநாட்டு முசிறித் துறைமுகத்துக்கு வந்து சென்றன.
  • அந்தப் பருவக் காற்றுக்கு யவனர், அதைக் கண்டுபிடித்தவர் பெயராகிய ஹிப்பாலஸ் என்பதையே சூட்டினார்கள்.
  • ஹிப்பாலஸ் பருவக்காற்றின் வழியில் யவனக் கடல் வணிகம் பெருகிற்று.

2. காற்றின் வேறு சில பெயரினை எழுதுக

  • வளி
  • தென்றல்
  • புயல்
  • பூங்காற்று
  • மேல்காற்று
  • ஆடிக்காற்று
  • பேய்க்காற்று
  • சூறாவளி
  • கீழ்காற்று
  • சுழல்காற்று
  • தென்றல் காற்று
  • வாடைக்காற்று
  • சூறாவளிக்காற்று
  • கடல் காற்று
  • மென்காற்று
  • கடுங்காற்று
  • இளந்தென்றல்
  • பனிக்காற்று
  • புழுதிக்காற்று
  • புயல்காற்று

Leave a Comment