Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.5 Mangayarai Pirapatharkae Book Back Solution

இயல் 7.5 – மங்கையராய்ப் பிறப்பதற்கே…

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.5 ‘Mangayarai Pirapatharkae’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.5 மங்கையராய்ப் பிறப்பதற்கே…

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.5 Mangayarai Pirapatharkae Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

மங்கையராய்ப் பிறப்பதற்கே வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Mangayarai Pirapatharkae’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: சிலப்பதிகாரம்

நெடு வினா

நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக

மகளிர் நாள் விழா

இடம் : பள்ளிக் கலையரங்கம்

நாள் : 08.03.2020

கலையரங்கத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு – இதழாளர் கலையரசியின் சிறப்புரை –  ஆசிரியர்களின் வாழ்த்துரை – மாணவத் தலைவரின் நன்றியரை

மகளிர் நாள் விழா

எம் பள்ளிக் கலையரங்கில் 08.03.2021 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. அவ்விழா பற்றிய அறிக்கையாவது

இடம் : பள்ளிக் கலையரங்கம்

நாள் : 08.03.2020

எம் பள்ளி அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது. சரியாக மாலை 3.30 மணி அளவில் விழா நிகழ்விடமான பள்ளிக் கலையரங்கிற்குள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மகிழ்வுடன் வந்து அமர்ந்தனர். சரியாக 4.00 மணிக்கு சிறப்பு விருந்தினர் இதழாளர் கலையரசி வருகை புரிந்தார். மாணவர்கள் ஆசிரியர்கள் மகிழ்வுடன் ஆரவாரம் செய்து கைதட்டி சிறப்பு விருந்தினர் அவர்களை வரவேற்றனர்.

தலைமையாசிரியரின் வரவேற்பு:-

இதழியல் துறையில் பட்டம் பெற்று, பட்டப்படிப்புடன் அச்சுத்துறையில் முதுகலையும் பயின்று நாளிதழ் வார இதழ் படிப்பவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இதழாளர் திருமதி. கலையரசி அவர்கள் தான் பணிபுரியும் இதழில் செய்திகளை வெளியிடுவது, சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கட்டுரை எழுதுவது, குழந்தைகளுக்கான பகுதிகளை வடிவமைப்பது. கேலிசித்திரம் வாயிலாக சமூக அவலங்களை சுட்டிக்காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துவது என இதழியல் துறையில் பன்முகத்திறமை பெற்றவர். அவரை இவ்விழாவிற்கு வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதழாளரின் சிறப்புரை:-

“காரிருள் அகத்தில் கதிரொளி பாய்ச்சுவதும், துயில்பவர்கள் நெஞ்சில் எழுச்சியை ஏற்படுத்துவதும்” இதழ்களே என்றால் மிகையில்ல. பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்களால் இயலும் என்பதை மகாகவி நமக்கு ஊக்க சக்தியாக தந்து சென்றிருக்கிறார். பெண்களே உங்களுக்கு முழுமையான கல்வி கட்டாயம் தேவை. எநத் ஒரு காரணத்திற்காகவும் உங்கள் கல்வியை விட்டுக் கொடுக்காதீர்கள். “கல்வியில்லா பெண் களர் நிலம்” என்றார் புரட்சிக்கவி. நாம் களர்நிலமாக பயனற்றுப் போக பிறக்கவில்லை. ஞானச் செருக்கும் உடையவர்களாய், புதிய உலகம் படைக்கும் வலிமை பொருந்தியவர்களாய் பிறந்திருக்கிறோம். எனேவ நன்கு படியுங்கள்; புதிய சமுதாயம் படையங்கள்;  புதுமைப் பெண்ணின் மகிழ்வு கண்டு இம்மண்ணுலம்கம் வியக்கட்டும் என்று சிறப்புரையாற்றினார்.

நன்றியுரை:-

நிறைவாக பள்ளியின் மாணவத் தலைவர் “மோகனா” நன்றி கூறினார். அழைப்பிற்கிணங்கி வருகை தந்த சிறப்பு விருந்தினருக்கும், அவரை அழைத்து வந்து விழாவினை ஏற்பாடு செய்த தலைமையாசிரியருக்கும், உடன் ஒத்துழைத்த ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், அமைதி காத்த மாணவ நண்பர்களுக்கும் நன்றி கூறினாள்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மங்கையராய்ப் பிறப்பதற்கே…” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

1. இசைப்பேரரசி என்று நேரு பெருமகனாரால் பாராட்டப்பட்டவர்

  1. ராஜம் கிருஷ்ணன்
  2. பாலசரஸ்வதி
  3. சின்னப்பிள்ளை
  4. எம்.எஸ்.சுப்புலட்சுமி

விடை: எம்.எஸ்.சுப்புலட்சுமி

2. எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. அவையில் பாடிய ஆண்டு

  1. 1963
  2. 1954
  3. 1966
  4. 1969

விடை: 1966

3. பாலசரஸ்வதி ____________ வயதில் அரங்கேற்றத்திற்காக முதன் முதலாக மேடை ஏறினார்.

  1. 6
  2. 7
  3. 8
  4. 10

விடை: 1966

4. பாலசரஸ்வதி முதன் முதலாக அரங்கேற்றம் செய்த இடம்

  1. சென்னை
  2. தஞ்சாவூர்
  3. காஞ்சிபுரம்
  4. திருவண்ணாமலை

விடை: காஞ்சிபுரம்

5. வேருக்கு நீர் என்ற புதினத்திற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

  1. பாலசரஸ்வதி
  2. ராஜம் கிருஷ்ணன்
  3. கிருஷ்ணம்மாள்
  4. எம்.எஸ்.சுப்புலட்சுமி

விடை: ராஜம் கிருஷ்ணன்

6. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி என்ற புதினத்தினை எழுதியவர்

  1. பாலசரஸ்வதி
  2. கிருஷ்ணம்மாள்
  3. எம்.எஸ்.சுப்புலட்சுமி
  4. ராஜம் கிருஷ்ணன்

விடை: ராஜம் கிருஷ்ணன்

7. பொருந்தாததை தேர்க

  1. பரதநாட்டியக் கலைஞர் வாழ்க்கை – கரிப்பு மணிகள்
  2. படுகர் இன மக்கள் வாழ்வியல் மாற்றங்கள் – குறிஞ்சித்தேன்
  3. பள்ளிக் குழந்தைகள் – கூட்டுக்குஞ்சுகள்
  4. வேளாண் தொழிலாளர் உழைப்பு சுரண்டல் – சேற்றில் மனிதர்கள்

விடை: பள்ளிக் குழந்தைகள் – கூட்டுக்குஞ்சுகள்

7. ராஜம் கிருஷ்ணன் பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதிய நூல்

  1. கரிப்பு மணிகள்
  2. குறிஞ்சித்தேன்
  3. மண்ணகத்துப் பூந்துளிகள்
  4. சேற்றில் மனிதர்கள்

விடை: மண்ணகத்துப் பூந்துளிகள்

8. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண்

  1. பாலசரஸ்வதி
  2. கிருஷ்ணம்மாள்
  3. எம்.எஸ்.சுப்புலட்சுமி
  4. ராஜம் கிருஷ்ணன்

விடை: ராஜம் கிருஷ்ணன்

9. கிருஷ்ணம்மாள் பங்கு பெற்ற இயக்கங்களுள் பொருந்தாது

  1. ஒத்துழையாமை இயக்கம்
  2. சட்ட மறுப்பு இயக்கம்
  3. வெள்ளையனே வெளியேறு இயக்கம்
  4. சுதேசி இயக்கம்

விடை: சுதேசி இயக்கம்

10. உழுபவருக்கே நில உரிமை இயக்கத்தினை துவங்கியவர்

  1. பாலசரஸ்வதி
  2. எம்.எஸ்.சுப்புலட்சுமி
  3. கிருஷ்ணம்மாள்
  4. ராஜம் கிருஷ்ணன்

விடை: கிருஷ்ணம்மாள்

11. கிருஷ்ணம்மாள் _______________, _______________ இணைந்து நாட்டு மக்களுக்காக உழைத்தார்.

  1. காந்தியடிகள், வினோ பாபா
  2. காந்தியடிகள், காமராஜர்
  3. காமராஜர், வினோ பாபா
  4. இராஜாஜி, காமராஜர்

விடை: காந்தியடிகள், வினோ பாபா

12. கிருஷ்ணம்மாளுக்கு ____________ நாடு வாழ்வுரிமை விருது வழங்கியது

  1. சுவிட்சர்லாந்து
  2. தாய்லாந்து
  3. மலேசியா
  4. சுவீடன்

விடை : சுவீடன்

13. கிருஷ்ணம்மாள் ______________ சேர்ந்து பணிபுரிந்தவர்

  1. ஒத்துழையாமை இயக்கம்
  2. சட்ட மறுப்பு இயக்கம்
  3. சுதேசி இயக்கம்
  4. பூதான இயக்கம்

விடை : பூதான இயக்கம்

14. களஞ்சியம் மகளிர் குழுவினை ஆரம்பித்தவர்

  1. சின்னப்பா
  2. சின்னப்பிள்ளை
  3. சின்னத்துரை
  4. சரசுவதி

விடை : சின்னப்பிள்ளை

15. எம்.எஸ். சுப்புலட்சுமி __________ பாடல் மூலம் பிரபலமானர்

  1. சுப்ரபாதம்
  2. காற்றினிலே வரும் கீதம்
  3. இரகுபதி ராகவராஜாராம்
  4. மீரா பற்றி பாடல்

விடை : காற்றினிலே வரும் கீதம்

16. பண்டிட் இரவிசங்கர் ___________ யின் நாட்டியக் கச்சேரியைப் புகழ்ந்தவர்

  1. கிருஷ்ணம்மாள்
  2. எம்.எஸ்.சுப்புலட்சுமி
  3. பாலசரஸ்வதி
  4. ராஜம் கிருஷ்ணன்

விடை: பாலசரஸ்வதி

17. வாஜ்பாய் அவர்களின் கைகளால் பெண் ஆற்றல் விருது (ஸ்திரீ சக்தி புரஸ்கார்) பெற்றவர்

  1. கிருஷ்ணம்மாள்
  2. எம்.எஸ்.சுப்புலட்சுமி
  3. சின்னப்பிள்ளை
  4. ராஜம் கிருஷ்ணன்

விடை: சின்னப்பிள்ளை

Leave a Comment