இயல் 2.3 – முல்லைப்பாட்டு
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 2.3 ‘Mullaipattu’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 2.3 முல்லைப்பாட்டு
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 2.3 Mullaipattu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
முல்லைப்பாட்டு பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Mullaipattu’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Mullaipattu Subject.
முல்லைப்பாட்டு பாடல்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல, பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு, கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை, அருங்கடி மூதூர் மருங்கில் போகி, யாழ்இசை இன வண்டு ஆர்ப்ப, நெல்லொடு, நாழி கொண்ட, நறுவீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய், கைதொழுது, பெருமுது பெண்டிர், விரிச்சி நிற்ப சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருகுவர், தாயர்” என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் |
சொல்லும் பொருளும்
- நனந்தலை உலகம் – அகன்ற உலகம்
- நேமி – வலம்புரிச்சங்கு
- காேடு – மலை
- காெடுஞ்செலவு – விரைவாகச் செல்லுதல்
- நறுவீ – நறுமணமுடைய மலர்கள்
- தூஉய் – தூவி
- விரிச்சி – நற்சாெல்
- சுவல் – தாேள்
இலக்கணக்குறிப்பு
- மூதூர் – பண்புத்தாெகை
- உறுதுயர் – வினைத்தாெகை
- கைதாெழுது – மூன்றாம் வேற்றுமைத் தாெகை
- தடக்கை – உரிச்சாெல் தாெடர்
பகுபத உறுப்பிலக்கணம்
பாெறித்த – பாெறி + த் + த் +அ
- பாெறி – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- அ – பெயெரச்ச விகுதி
பலவுள் தெரிக
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
- கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
- கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
- கடல் நீர் ஒலித்தல்
- கடல் நீர் கொந்தளித்தல்
விடை : கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
குறு வினா
1. பெற்றோர் வேலையிலிருந்து திரும்பத் தாமதாகும் போது அழும் தம்பிக்கு நீங்கள் கூறும் ஆறுதல் சொற்களை எழுதுக.
தம்பி அழாதே! அப்பாவும் அம்மாவும் விரைவில் வந்துவிடுவார்கள். வரும்போது உனக்கு விளையாட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வருவார்கள்.
2. மாஅல் – பொருளும், இலக்கணக் குறிப்பும் தருக
மா அல் | ||
பொருள் | திருமால் | பேருருவம் |
இலக்ககணக்குறிப்பு | செய்யுளிசை அளபெடை | உரிச்சொல் தொடர் |
நெடு வினா
முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்தியை விவரித்து எழுதுக
மழை:-
மேகம் அகன்ற உலகத்தை வளைத்து பெருமழை பொழிகிறது. மாவலி மன்னன் திருமாலுக்கு நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும், விண்ணுக்கும் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மழை மேகம் ஒலிக்கும் கடலின் குளர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு வலமாய் எழுகிறது. மலையைச் சூழந்து விரைந்து வேகத்துடன் பெரு மழையைப் பொழிகிறது.
தெய்வ வழிபாடு:-
முது பெண்கள் காவலையுடைய ஊர்பக்கறம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுக்ள நறுமணம் கொண்ட பூக்களைச் சுற்றி ஆரவாரிக்கும். மலர்ந்து முல்லைப் பூவோடு நெல்லையும் சேர்த்து தெய்வத்தின் முன் தூவி வழிபடுவபர். தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நிற்பர்.
கன்றின் வருத்தம்:-
“சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி”
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள்
வருந்தாதே:-
புல்லை மேய்ந்த உன் தாய்மாரை வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட என் இடையர் இப்பொழுது ஓட்டு வந்து விடுவார் “வருந்தாதே” என்றாள் இடைமகள்.
முதுபெண்டிர் தலைவியிடம் கூறியது:-
இடைமகள் மூலம் நற்சொல்லைக் கேட்டாேம். நின் தலைவன் பகைவரை வென்று திறைப் பொருளோடு வருவது உறுதி. மனத்தடுமாற்றம் கொள்ளாேதே!
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “காற்றே வா!” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
இலக்கணக்குறிப்பு
- பெரும்பெயல், சிறுபுன், அருங்கடி, பெருமுதுபெண்டிர்- பண்புத்தாெகை
- நல்லோர் – வினையாலணையும் பெயர்
பகுபத உறுப்பிலக்கணம்
1. பாெழிந்து – பாெழி + த் (ந்) + த் + உ
- பாெழி – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
2. நிமிர்ந்த – பாெழி + த் (ந்) + த் + உ
- நிமிர் – பகுதி
- த் – சந்தி
- ந் – ஆனது விகாரம்
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
3. கொண்டு = கொள்(ண்) + ட் + உ
- கொள் – பகுதி
- ள்(ண்) – ஆனது விகாரம்
- ட் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
4. அசைத்து – பாெறி + த் + த் + உ
- அசை – பகுதி
- த் – சந்தி
- த் – இறந்தகால இடைநிலை
- உ – வினையெச்ச விகுதி
5. நோக்கு – நோக்கு + இ
- நோக்கு – பகுதி
- உ – வினையெச்ச விகுதி
பலவுள் தெரிக
1. முல்லைப்பாட்டு ____________ அடிகளை கொண்டது
- 101
- 102
- 103
- 104
விடை : 103
2. பத்துபாட்டு நூல் வகையை சார்ந்த நூல்
- நற்றிணை
- முல்லைப்பாட்டு
- திருக்குறள்
- குறுந்தொகை
விடை : முல்லைப்பாட்டு
3. பிடவம் ________ திணைக்குரிய பூ
- குறிஞ்சி
- மருதம்
- முல்லை
- நெய்தல்
விடை : முல்லை
5. பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்
- திருமுருகாற்றுப்படை
- குறிஞ்சிப்பாட்டு
- பட்டினப்பாலை
- முல்லைப்பாட்டு
விடை : முல்லைப்பாட்டு
6. வலம்புரிச் சங்கு பொறித்த கைகளையுடைவர்
- மாவலி மன்னன்
- நான்முகன்
- திருமால்
- முருகன்
விடை : திருமால்
7. குறுகிய வடிவம் கொண்டு நீர்வார்த்துக் தந்தவன்
- மாவலி மன்னன்
- நான்முகன்
- திருமால்
- முருகன்
விடை : திருமால்
8. எழிலி என்ற சொல்லின் பொருள்
- மேகம்
- மலை
- அலை
- கலை
விடை : மேகம்
9. முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர்
- கபிலர்
- நப்பூதனார்
- நக்கீரர்
- மாங்குடிமதேனார்
விடை : நப்பூதனார்
10. நன்ந்தலை என்ற சொல்லின் பொருள் தருக
- அகன்ற
- இழந்த
- கவர்ந்த
- சுருங்கி
விடை : அகன்ற
11. வீ என்ற சொல்லின் பொருள் தருக
- மான்கள்
- கண்கள்
- மலர்கள்
- விண்மீன்கள்
விடை : மலர்கள்
12. முல்லை நிலத்துக்குரிய மாதங்கள்
- தை, மாசி
- பங்குனி, சித்திரை
- ஆவணி, புரட்டாசி
- கார்த்திகை, மார்கழி
விடை : ஆவணி, புரட்டாசி
13. பொன்வணிகனாரின் ஊர்
- மதுரை
- உறையூர்
- குற்றாலம்
- காவிரிப்பூம்பட்டினம்
விடை : காவிரிப்பூம்பட்டினம்
குறு வினா
1. முல்லைப்பாட்டு நூல் குறிப்பு வரைக
- பத்துபாட்டு நூல்களுள் ஒன்று.
- 103 அடிகளை கொண்டது
- ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது
- முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை கொண்ட நூல்.
2. நப்பூதனார் குறிப்பு வரைக
முல்லைப் பாட்டினை பாடியவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனாவார்.
3. விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
- ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவான ஊர்ப்க்கத்தில் போய், தெய்வத்தை தொழுது நிற்பர்.
- அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர்.
- அவர்கள் நல்ல சொல்லைக் கூறின் தம் செயல் நன்மையில் முடியும்
- தீய மொழியைக் கூறின் தம் செயல் தீயதாய் முடியும் எண்ணுவர்.
4. இளங்கன்று வருந்தக் காரணம் யாது?
சிறு தாப்புக் கயிற்றில் கட்டப்பட்ட இளங்கன்று இன்று பசியால் வாடிக் கொண்டிருந்தது.
5. முதுபெண்டிர் தலைவியை எவ்வாறு ஆற்றப்படுத்தினர்?
- நின் தலைவன் பகைவரை வென்று திரைப்பொருளோடு வருவான்.
- தலைவியே! மனத்தடுமாற்றம் கொள்ளாதே
6. திருமால் பற்றி முல்லைப்பாட்டில் கூறியுள்ள செய்தி யாது?
- வலம்புரிச்சங்கு பொறித்த கைகளை உடையவன் திருமால்.
- குறுகிய வடிவம் எடுத்தவன்.
- மாவலி மன்னனர் நீர்வார்த்துத் தரும்போது மண்ணுக்கும் விண்ணுக்குமாகப்ப பேருருவம் எடுத்தவன்.
7. முல்லை நிலத்திற்குரிய பெரும் பொழுது, சிறு பொழுதுகளை கூறுக
- பெரும்பொழுது – கார்காலம் (ஆவணி, புரட்டாசி)
- சிறுபொழுது – மாலை.
8. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள கருப்பொருள்கள் யாவை?
- நீீர் – குறுஞ்சுனை நீர், காட்டாறு
- மரம் – கொன்றை, காயா, குருத்தம்
- பூ – முல்லை, பிடவம், தோன்றிப்பூ
9. முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள உரிப்பொருள்கள் யாவை?
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்திருத்தல்)