Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 7.1 Sitrakal Oli Book Back Solution

இயல் 7.1 – சிற்றகல் ஒளி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.1 ‘Sitrakal Oli’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.1 சிற்றகல் ஒளி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.1 Sitrakal Oli Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

சிற்றகல் ஒளி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sitrakal Oli’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: திருக்குறள்

பலவுள் தெரிக

1. மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

  1. திருப்பதியும் திருத்தணியும்
  2. திருத்தணியும் திருப்பதியும்
  3. திருப்பதியும் திருச்செந்தூரும்
  4. திருப்பரங்குன்றமும் பழனியும்

விடை : திருப்பதியும் திருத்தணியும்

2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது 

  1. திருக்குறள்
  2. புறநானூறு
  3. கம்பராமாயணம்
  4. சிலப்பதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

குறு வினா

1. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

  • ம.பொ.சி. வறுமையிலும் நூல் வாங்குவதற்கும் பணமில்லாத நிலையில் பழைய புத்தகங்கள் வாங்கி படிப்பார்.
  • இவர் விரும்பமான புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கும் வழக்கம் உள்ளவர்
  • இவர் பல வேளைகளில் பட்னி கிடந்து புத்தகம் வாங்கி ஆனந்தம் அடைவார்
  • செவி வழியாகவும் இலக்கிய அறிவை பெற்றார்.

2. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் – ம.பொ.சி.

பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். – ம.பொ.சி.

சிறு வினா

தலையைக் கொடுத்தேனம் தலைநகரைக் காப்போம் – இடம் சுட்டி பொருள் விளக்குக

இடம்:-

ம.பொசி.யின் தன் வரலாற்றப் பகுதியில் சிற்றகல் ஒளி என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளன.

பொருள்:-

ஆந்திர மாநிலம் பிரியும் போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று அந்திர தலைவர்கள் விரும்பினர். அதனை எதிர்த்து ம.பொ.சி. கூறிய கூற்று இது.

விளக்கம்:-

  • மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் ஒரு கூட்டத்தை கூட்டினர். அப்போது, தமிழ் மாநிலத்தின் தலைநகர் “சென்னை” என்ற தீர்மானத்தை முன் மொழிந்தனர்
  • முன்மொழிந்து “தலையை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று ம.பொ.சி முழங்கினார்.
  • 25.03.1953-ல் பிரதமர் நேரு, சென்னை தமிழருக்கே என்ற உறுதிமொழியை நாடளுமன்றத்தில் நடுவணரசின் சார்பில் வெளியிட்டார்.

நெடு வினா

நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்” என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

அறிமுகவுரை:-

அன்பார்ந்த அவையோரே! வணக்கம்! மாணவப் பருவத்திலே நாம் நாட்டுப்பற்று உடையர்களாய் இருத்தல் வேண்டும் என்பதைப் பற்றி உங்கள் முன் பேச வந்துள்ளேன்.

பொருள்:-

  • நாட்டின் எதிர்காலம் வகுப்பறைகளில் தான் வடிவமைக்கப்டுகிறது என்றார் நேரு. கல்வியோடு நாட்டுப்பற்றையும் கண் எனப் போற்றி வளர்க்க வேண்டும்.
  • சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்டு விழாக்களை கொண்டாடும் போது நம் முன்னோர்கள் சிந்திய கண்ணீரையும், செந்நீரையும், விலைமதிப்பில்லாத உயிரையும் மனப்பூர்வமாக உணர்ந்து செயல்பட வேண்டும்.
  • அகிம்சை, தீண்டாமை விலக்கு, கதர் விறபனை, வெள்ளையேன வெளியேறு போன்ற விடுதலைப் போராட்ட முறைகளை  நாம் மறத்தல் கூடாது.
  • செக்கடியில், சிறைச்சாலையிலும் நம் வீரர்கள் பட்ட துன்பத்தை எண்ணிப் பார்த்து, நாட்டு விழாக்களைக் கொண்டுடாடும் போது நாட்டைக் காக்கும் சூளுரை ஏற்பவர்களாகவும், அதனைச் செயல்படுத்துகிறவர்களாகவும் நாம் இருத்தல் வேண்டும்.
  • மாணவப் பருவத்தில் நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை ஆகியவற்றில் இணைந்து நாட்டுப் பற்றையும், சேவை மனப்பான்மையையும் நாம் வளர்த்து கொண்டால் நாம் நாட்டைக் காக்கும் நல்லோராய், பற்றாளராய் மாற முடியும்.
  • கல்வி, பொருளாதாரம், தொழில் பெருக்கம் இவற்றில் நாம் அக்கறை உடையவர்களாய் இருப்பதும் நாட்டுப்பற்றே
  • நம் நாட்டின் உயர்வுக்கும் முற்போக்கு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பவைகளை முறியடித்து கல்வி, அறிவியல், தொழில்நுட்பபம் போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • சொந்த நலன் கருதி சொந்த நாட்டையே சீரழிக்கும் கயவர் போல் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

விளக்கம்:-

நாடு நமக்கு என்ன செய்தது என்பதை நினைக்காமல் நாட்டிற்காக நாம் நல்ல செயல்களை செய்வேம் என்று கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சிற்றகல் ஒளி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. ம.பொ.சி. பிறந்த நாள்

  1. 27.07.1907
  2. 26.06.1906
  3. 25.05.1905
  4. 28.08.1908

விடை: 26.06.1906

2. காந்தியடிகள் சத்தியாகிரத்தை _________ ஆண்டு தொடங்கினார்

  1. 1886
  2. 1896
  3. 1906
  4. 1916

விடை : 1906

3. ம.பொ.சி _____________ பகுதியில் பிறந்துள்ளார்

  1. சால்வன்குப்பம்
  2. மயிலாப்பூர்
  3. பட்டினப்பாக்கம்
  4. தண்டையார்பேட்டை

விடை : சால்வன்குப்பம்

4. பேராயக் கட்சியானது வெள்ளையனே வெளியேறு தீர்மானத்தை ___________ -ல் நிறைவேற்றியது.

  1. 1941 ஜூலை 8
  2. 1941 ஆகஸ்ட் 8
  3. 1942 ஜூலை 8
  4. 1942 ஆகஸ்ட் 8

விடை : 1942 ஆகஸ்ட் 8

5. தமிழா! துள்ளி எழு என்னும் துண்டறிக்கை வெளியிட்ட நாள்

  1. 29.09.1932
  2. 30.09.1932
  3. 28.09.1932
  4. 27.09.1932

விடை : 30.09.1932

6. கே.எம்.பணிக்கர் தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரிய ஆணையம் _________________ மாவட்டத்தை ஆந்திராவிற்கு கொடுத்தது

  1. சித்தூர்
  2. திருத்தணி
  3. திருப்பதி
  4. ரேணிகுண்டா

விடை : சித்தூர்

6. கே.எம்.பணிக்கர் தலைமையில் அமைக்கப்பட்ட மொழிவாரிய ஆணையம் _________________ மாவட்டத்தை ஆந்திராவிற்கு கொடுத்தது

  1. சித்தூர்
  2. திருத்தணி
  3. திருப்பதி
  4. ரேணிகுண்டா

விடை : சித்தூர்

7. பசல் அலி ஆணையத்தின் பரிந்துரை வெளியான நாள்

  1. 1952 அக்டோபர் 10
  2. 1954 அக்டோபர் 10
  3. 1955 அக்டோபர் 10
  4. 1957 அக்டோபர் 10

விடை : 1955 அக்டோபர் 10

8. சிலம்பு செல்வர் என அழைக்கப்படுவர்

  1. ஜெயகாந்தன்
  2. ம.பொ.சிவஞானம்
  3. முத்துராமகிருஷ்ணன்
  4. ராதாகிருஷ்ணன்

விடை : ம.பொ.சிவஞானம்

9. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்

  1. ஜெயகாந்தன்
  2. ம.பொ.சிவஞானம்
  3. முத்துராமகிருஷ்ணன்
  4. ராதாகிருஷ்ணன்

விடை : ம.பொ.சிவஞானம்

10. வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூல் ____________ ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றது

  1. 1946
  2. 1956
  3. 1966
  4. 1976

விடை : 1966

11. மார்ஷல் ஏ.நேசமணிக்கு சிலையோடு மணிமண்டபம் அமைந்துள்ள ஊர்

  1. திருநெல்வேலி
  2. தூத்துக்குடி
  3. கன்னியாகுமரி
  4. நாகர்கோவில்

விடை : நாகர்கோவில்

12. தலையைக் கொடுத்தாவது தலைநகரைக் காப்போம் என்று முழங்கியவர்

  1. ம.பொ.சி
  2. செங்கல்வராயன்
  3. மங்கலங்கிழார்
  4. மார்ஷல் ஏ.நேசமணி

விடை : ம.பொ.சி

13. ம.பொ.சி துவங்கிய கழகம் 

  1. திராவிடர் கழகம்
  2. குடியரசு கழகம்
  3. தமிழரசுக் கழகம்
  4. மறுமலர்ச்சி கழகம்

விடை : தமிழரசுக் கழகம்

14. ம.பொ.சி விரும்பிய நூல்

  1. கம்பராமாயணம்
  2. திருக்குறள்
  3. சிலப்பதிகாரம்
  4. நாலடியார்

விடை : சிலப்பதிகாரம்

15. _____________-ல் கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்து, தமிழகத்தின் தென்  எல்லையாக மாறியது.

  1. 1956 நவம்பர் 1
  2. 1956 நவம்பர் 2
  3. 1956 நவம்பர் 3
  4. 1956 நவம்பர் 4

விடை: 1956 நவம்பர் 1

குறுவினா

1. 1906-ம் ஆண்டின் சிறப்புகளாக குறிப்பிடப்படுபவை யாவை?

  • ம.பொ.சி. சென்னை ஆயிரம் விளக்கு சால்வன் குப்பத்தில் 1906-ல் பிறந்தார்
  • காந்தியடிகள் சத்தியாகிர அறப்போரினை தென்னாப்பிரிக்காவில் தொடங்கினார்
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தை தொடங்கினார் வ.உ.சி

2. ம.பொ.சி அரசியலில் வகித்துள்ள பதவிகளை எழுதுக

  • சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
  • சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)

3. ம.பொ.சிக்கு சிவஞானம் என்னும் பெயர் அமையக் காரணம் யாது?

சரபையர் என்ற முதியவர் ஒருவர் என்னுடைய பெயரை மாற்றி ‘சிவஞானி’ என்றே அழைத்தார். பின்னாளில் சிவஞானி என்னும் பெயரே சிறிது திருத்தத்துடன் சிவஞானம் என்று நிலைபெற்றது.

4. சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் எது?

சென்னை மாநிலத்திலிருந்து கேரளாவுடன் இணைந்த மாவட்டம் – மலபார்

5. ம.பொ.சி பற்றி குறிப்பு வரைக

  • சிலம்புச் செல்வர் என்று போற்றப்படுபவர்
  • இவர்  விடுதலை பேராட்ட வீரர் (1906 – 1995)
  • சட்டமன்ற பேரவைத் தலைவர் (1952-1954)
  • சட்ட மேலவை தலைவர் (1972 – 1978)
  • தமிழரசுக் கழகத்தை தொடங்கியவர்
  • “வள்ளலால் கண்ட ஒருமைப்பாடு” என்ற இவரின் நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்

Leave a Comment