Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.3 Thiruvilayadapuranam Book Back Solution

இயல் 5.3 – திருவிளையாடற்புராணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 5.3 ‘Thiruvilayadapuranam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 5.3 திருவிளையாடற்புராணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 5.3 Thiruvilayadapuranam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

திருவிளையாடற்புராணம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thiruvilayadapuranam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: நீதிவெண்பா

சொல்லும் பொருளும்

 • கேள்வியினான் – நூல் வல்லான்
 • கேண்மையினான் – நட்பினன்
 • தார் – மாலை
 • முடி – தலை
 • முனிவு – சினம்
 • அகத்து உவகை – மனமகிழ்ச்சி
 • தமர் – உறவினர்
 • நீபவனம் – கடம்பவனம்
 • மீனவன் – பாண்டிய மன்னன்
 • கவரி – சாமரை ( கவரிமாவின் முடியில் செய்த விசிறியாகிய அரசுச் சின்னம்)
 • நுவன்ற – சொல்லிய
 • என்னா – அசைச்சொல்

இலக்கணக் குறிப்பு

 • கேள்வியினான் – வினையாலைணையும் பெயர்
 • காடனுக்கும் கபிலனுக்கும் – எண்ணும்மை
 • கழிந்த – பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

தணிந்தது = தணி + த் (ந்) + த் + அ +து

 • தணி – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்த கால இடைநிலை
 • அ – சாரியை
 • து – படர்க்கை வினைமுற்று விகுதி

நூல் வெளி

 • திருவிளையாடற்கதைகள் சிலப்பதிகாரம் முதற்கொண்டு கூறப்பட்டு வந்தாலும் பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணமே விரிவும் சிறப்பும் கொண்டது.
 • இந்நூல் மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க காணடம் என மூன்று காண்டங்களும் 64 படலங்களும் உடையது.
 • பரஞ்சோதி முனிவர் திருமறைக்காட்டில் (வேதாரண்யம்) பிறந்தவர்.
 • 17-ம் நூற்றாண்டில் சேர்ந்தவர்
 • சிவபக்தி மிக்கவர்
 • வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி முதலியன இவர் இயற்றிய வேறு நூல்களாகும்.

பலவுள் தெரிக.

இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் ___________ இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் ___________

 1. அமைச்சர், மன்னன்
 2. அமைச்சர், இறைவன்
 3. இறைவன், மன்னன்
 4. மன்னன், இறைவன்

விடை : மன்னன், இறைவன்

குறு வினா

1. கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல் இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்?

 • கழிந்த பெரும் கேள்வியினான் (மிகுந்த கல்வியறிவு உடையவர்) – குலேசபாண்யடின்
 • காதல்மிகு கேண்மையினான் (கபிலரிடம் நட்பு கொண்டவர்) – இடைக்காடனார்

2. அமர்ந்தான் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

அமர்ந்தான் = அமர்  + த் (ந்) + த் +ஆன்

 • அமர் – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்த கால இடைநிலை
 • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

சிறு வினா

மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

 • குலேச பாண்டியன் தமிழ் புலமை வாய்ந்தவன்.
 • அவன் அவையில் புலவர் இடைக்காடனார் பாடிய பாடலை மன்னன் பொருட்படுத்தாமல் அவமதித்தான்.
 • இடைக்காடனார் கடம்பவனத்து இறைவனிடம் முறையிட்டார்
 • இறைவன் கடம்பவனம் கோயிலை விட்டு நீங்கி வைகை ஆற்றின் தெற்கே கோயில் உருவாக்கி அமர்ந்தார்.
 • இதையறிந்த  மன்னர் யான் என்ன தவறு செய்தேன்? ஏன் இங்கு அமர்நதீர்? என்று வருந்தினான்.
 • இறைவன் இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றமே தவிர, வேறு எந்த தவறும் இல்லை என்றார்.
 • தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாரை அழைத்து மங்கல ஒப்பனை செய்து, பொன் இருக்கையில் அமர்த்தி, பணிந்து வணங்கி தம் தவறைப் பொறுத்தருள வேண்டினான்.

நெடு வினா

இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.

மன்னனின் அவையில் இடைக்காடனார்:-

வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். இதைக் கேள்வியுற்ற இடைக்காடனார் குலேசனின் அவைக்கு சென்று தான் இயற்றிய கவிதையப் படித்தார்.

இடைக்காடனாரின் புலமையை அவமதித்தல்:-

வேப்பமாலை அணிந்த குலேச பாண்டியன் மிகுந்த கல்வியறிவு உடையவன். தமிழறியும் பெருமான், அடியார்க்கு நல்நிதி போன்றவன், பொருட்செல்வமும், கல்விச் செல்வமும் உடையவன் என்று கேட்டுணர்நது தாங்கள் முன் சுவை நிரப்பிய கவிதை பாடினார் இடைக்காடனார். பாண்டியன் சிறிதேனும் பாடலைப் பொருட்படுத்தாமல் புலவரின் புலமையை அவமதித்தான்.

இடைக்காடனார் இறைவனிடம் முறையிடுதல்:-

இறைவா! பாண்டியன் என்னை இகழவில்லை. சொல்லின் வடிவான பார்வதியையும், பொருளின் வடிவான உம்மையும் அவமதித்தான் என்று சினத்துடன் இறைவனிடம் கூறினார்.

இறைவன் கோவிலை விட்டு வெளியேறுதல்:-

இடைக்காடனாரின் வேண்டுகோளை ஏற்று வைகை ஆற்றின் தெற்கே கோயில் அமைத்து குடி கொண்டார் இறைவன். உடனே கபிலரும் மகிழ்ந்து இடைக்காடனாேராடு வெளியேறினார்.

இறைவனிடம் மன்னன் வேண்டுதல்:-

இதையறிந்த மன்னன் இறைவனிடம் என் படைகளால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் தங்களுக்கு இடையூறு ஏற்பட்டதா? மறையவர் ஒழுக்கம் குறைந்தாேரா? தவமும், தானமும் சுருங்கியதோ? இல்லறமம், துறவறமும் தத்தம் வழயில் தவறினவோ? தந்தையே நான் அறியேன் என்றார் குலசேகர பாண்டியன்.

இறைவனின் பதில்:-

“வயல் சூழ்ந்த கடம்ப வனத்தை விட்டு ஒருபோது நீங்க மாட்டோம்.” “இடைக்காடனார் பாடலை இகழ்ந்த குற்றம் தவிர உன்னிடம் குற்றம் இல்லை”  என்றார். “இடைக்காடன் மீது கொண்ட அன்பினால் இங்கு வந்தோம்” என்றார்.

பிழையைப் பொறுத்தருள இறைவனிடம் வேண்டுதல்:-

வானிலிருந்து ஒலித்த இறைவனின் சொல் கேட்டான் குலேச பாண்டியன், மகிழ்ந்து, பரம்பொருளே! புண்ணியனே! சிறியவரின் குற்றம் பொறுப்பு பெரியவர்க்குப் பெருமை என்று குற்றத்தைப் பொறுக்க வேண்டினான்.

மன்னன் இடைக்காடனாருக்குப் பெருமை செய்தல்:-

மன்னன் மாளிகை வாழை, சாமரை இவற்றாலன விதானமும் விளக்கும் உடையது. பூரண கும்பம் மாலை, கொடி இவற்றால் ஒப்பனை செய்யப்பட்டது. புலவர்கள் குழு இடைக்காடனாரை மங்கலாமாக ஒப்பனை செய்து பொன் இருக்கையில் அமர்த்தினர்

மன்னன் புலவரிடம் வேண்டுதல்:-

மன்னன் புலவர்களிடம், தான் இடைக்காடனாருக்குச் செய்த குற்றத்தைப் பொறுத்து கொள்ள வேண்டும் என்றான். புலவர்களும், நீர் கூறிய அழுதம் போன்ற சொல்லால் எங்கள் சினம் தணிந்து விட்டது என்றார்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திருவிளையாடற்புராணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கபிலரின் நண்பராய் கருதப்படுபவர்

 1. பரஞ்சோதி முனிவர்
 2. இடைக்காடனார்
 3. குலேச பாண்டியன்
 4. ஒட்டக்கூத்தர்

விடை : இடைக்காடனார்

2. திருவிளையாடற்புராணத்தை எழுதியவர்

 1. பரஞ்சோதி முனிவர்
 2. இடைக்காடனார்
 3. குலேச பாண்டியன்
 4. ஒட்டக்கூத்தர்

விடை : பரஞ்சோதி முனிவர்

3. திருவிளையாடற்புராணம் ___________ படலங்களை கொண்டுள்ளது.

 1. 96
 2. 86
 3. 74
 4. 64

விடை : 64

4. தகடூர் எறிநத பெருஞ்சேரல் இரும்பொறை __________ -க்கு கவரி வீசினாள்

 1. பரஞ்சோதி முனிவர்
 2. இடைக்காடனார்
 3. குலேச பாண்டியன்
 4. மோசிகீரனார்

விடை : மோசிகீரனார்

5. பாண்டிய மன்னன் அணியும் மாலை

 1. அத்தி பூ
 2. பனம் பூ
 3. வேப்பம்பூ
 4. மல்லிகை

விடை : வேப்பம்பூ

6. பரஞ்சோதி முனிவர் _________ ஊரில் பிறந்தவர்

 1. தஞ்சாவூர்
 2. திருமறைக்காடு
 3. திருத்துறைப்பூண்டி
 4. திருவண்ணாமலை

விடை : திருமறைக்காடு

7. திருவிளையாடற்புராணம் __________ காண்டங்களை கொண்டுள்ளது.

 1. 2
 2. 3
 3. 4
 4. 10

விடை : 3

8. குலேச மன்னன் __________ நாட்டை ஆட்சி புரிந்தான்

 1. பல்லவ
 2. பாண்டிய
 3. சேர
 4. சோழ

விடை : பாண்டியன

9. பரஞ்சோதி முனிவர் வாழ்ந்த காலம்

 1. 10 நூற்றாண்டு
 2. 12 நூற்றாண்டு
 3. 17 நூற்றாண்டு
 4. 18 நூற்றாண்டு

விடை : 17 நூற்றாண்டு

10. பொருந்தாததை தேர்க

 1. தீம்தேன்
 2. நல்நிதி
 3. பெருந்தகை
 4. ஒழுகுதார்

விடை : ஒழுகுதார்

குறு வினா

1. நின்இடம் பிரியா இமையப் பாவை – இவ்வடிகளில் பரஞ்சோதி முனிவரால் சுட்டப்படுவர் யார்?

ஈசன் இடத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவியே இவ்வடிகளில் சுட்டப்படுகின்றார்.

2. சொல் பொருளான உன்னையும் இகழந்தான் இவ்வடிகளில் பரஞ்சோதி முனிவரால் பொருளானவன், இகழந்தவன் என குறிப்பிடப்படுபவர்கள் யாவர்?

 • பொருளானவன் – திருஆல்வாய் இறைவன் ஈசன்
 • இகழந்தவன் – குலேச பாண்டின்

3. திருவிளையாடற் புராணத்தில் இடம்பெற்றுள் காண்டங்களை எழுதுக.

 • மதுரைக் காண்டம்
 • கூடற்காண்டம்
 • திருவாலவாய் காண்டம்

4. பரஞ்சோதி முனிவர் குறிப்பு வரைக

 • ஊர் – திருமறைக்காட்டில் (வேதாரண்யம்)
 • காலம் – 17-ம் நூற்றாண்டு
 • சிவபக்தி மிக்கவர்
 • நூல்கள் – வேதாரண்யப் புராணம், திருவிளையாடல் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப்பத்தந்தாதி

Leave a Comment