இயல் 7.2 – ஏர் புதிதா?
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 7.2 ‘Yer puthitha’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 7.2 ஏர் புதிதா?
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 7.2 Yer puthitha Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
ஏர் புதிதா? பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Yer puthitha’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
ஏர் புதிதா? பாடல்
முதல்மழை விழுந்ததும் மேல்மண் பதமாகிவிட்டது. வெள்ளி முளைத்திடுது, விரைந்துபோ நண்பா! காளைகளை ஓட்டிக் கடுகிச்செல், முன்பு! பொன் ஏர் தொழுது, புலன் வழிபட்டு காடு புதிதன்று, கரையும் பிடித்ததுதான் மாட்டைத் தூண்டி, கொழுவை அழுத்து கவலையில்லை! |
நூல் வெளி
- ஏர் புதிதா? எனும் கவிதை கு.ப.ரா படைப்புகள் என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
- 1902-ல் கும்பகோணத்தில் பிறந்தவர்
- மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.
- தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
- இவரின் மறைவுக்கு பின்னர் இவரது படைப்புகளுள் அகலிகை, ஆத்மசிந்தனை ஆகியன நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன்ஏர் பூட்டுதல் தமிழர் பண்பாட்டின் மகுடம் ஆகும். |
பலவுள் தெரிக
1. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.
- உழவு, மண், ஏர், மாடு
- மண், மாடு, ஏர், உழவு
- உழவு, ஏர், மண், மாடு
- ஏர், உழவு, மாடு, மண்
விடை : உழவு, ஏர், மண், மாடு
குறு வினா
முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?
- முதல் மழை விழுந்தவுடன் நிலம் ஈர்த்தால் பண்பட்டது.
- விரைந்து சென்று பொன் போன்ற ஏரிலே காளைகளைப் பூட்டி, நிலத்தை உழுதனர். ஊக்கத்துடன், வலிமையுடன் உழைத்தனர். நாற்று நட்டனர்.
- மேலும் மழை பொழிய நிலம் குளிர்ந்தது. நாற்றுகள் நிமிர்ந்து வளர்ந்தன. கிழக்கும் வெளுத்தது. கவலையும் மறந்தது.
“முதல்மழை விழுந்ததும்
மேல் மண் பதமாகிவிட்டது
வெள்ளி முளைத்திடுது, விரைந்து போ நண்பா!”
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “ஏர் புதிதா?” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் விழா
- பொன் ஏர் பூட்டுதல்
- நாகரிகம்
- உழுதல்
- கலை
விடை : பொன் ஏர் பூட்டுதல்
2. கு.ப.ராஜகோலன் பிறந்த ஆண்டு
- 1903
- 1904
- 1902
- 1905
விடை : 1902
2. கு.ப.ராஜகோலன் பிறந்த ஆண்டு
- 1903
- 1904
- 1902
- 1905
விடை : 1902
3. கு.ப.ரா. ஆசிரியராகப் பணிபுரிந்த இதழ்களில் பொருந்தாதது
- கிராம ஊழியன்
- தமிழ்நாடு
- பாரத ஊழியன்
- மக்கள் சேவகன்
விடை : மக்கள் சேவகன்
4. பொன் ஏர் பூட்டுதல் விழா ___________ மாதத்தில் நடைபெறுகிறது
- தை
- ஆனி
- ஆடி
- சித்திரை
விடை : சித்திரை
5. கு.ப.ரா. பிறந்த ஊர்
- தஞ்சை
- கும்பகோணம்
- நெல்லை
- மதுரை
விடை : கும்பகோணம்
6. கு.ப.ரா. பிறந்த ஆண்டு
- 1903
- 1902
- 1904
- 1905
விடை : 1902
7. ____________ உலகத்தார்க்கு அச்சாணி எனப் போற்றப்பட்டனர்.
- தச்சர்
- ஆசிரியர்
- புலவர்
- உழுவோர்
விடை : உழுவோர்
8. அழுத்து இலக்கணக்குறிப்பு
- வினையெச்சம்
- பெயரெச்சம்
- உருவகம்
- உவமை
விடை : வினையெச்சம்
சிறு வினா
1. பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?
வேளாண்மை செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பண்பாட்டு நிகழ்வு பொன் ஏர் பூட்டுதல் ஆகும்
2. கு.ப.ராஜகோபாலன் குறிப்பு வரைக
- பிறந்த ஆண்டு – 1902
- பிறந்த இடம் – கும்பகோணம்
- பன்முகத் தன்மை – மிகச்சிறந்த சிறுகதை ஆசிரியர், கவிஞர், நாடக ஆசிரியர், மறுமலர்ச்சி எழுத்தாளர்
- பணி – தமிழ்நாடு, பாரதமணி, பாரததேவி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் ஆசிரியர் பணி
- நூல் தொகுப்பு – அகலிகை, ஆத்மசிந்தனை (மறைவுக்கு பின்)