Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.6 Pagupatha Uruppugal Book Back Solution

இயல் 3.6 – பகுபத உறுப்புகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.6 ‘Pagupatha Uruppugal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.6 பகுபத உறுப்புகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.6 Pagupatha Uruppugal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

பகுபத உறுப்புகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Pagupatha Uruppugal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: வாடிவாசல்

சிறு வினா

பகுபத உறுப்பிலக்கணம் கூறுக

அ) வருகின்றாள் = வா (வரு) + கின்று + ஆள்

  • வா – பகுதி
  • வரு – ஆனது விகாரம்
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

ஆ) வாழ்வான் = வாழ் + வ் + ஆன்

  • வாழ் – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆன் – படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதி

இ) காண்பிப்பார் = காண்பி + ப் + ப் + ஆர்

  • காண்பி – பகுதி
  • ப் – சந்தி
  • ப் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதி

ஈ) பிரிந்த = பிரி + த்(ந்) + த் + அ

  • பிரி – பகுதி
  • த் – சந்தி
  • ந் – ஆனதுவிகாரம்
  • த் – எதிர்கால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

நினைவிற்கொள்க

இறந்தகால இடைநிலை த், ட், ற், இன்
நிகழ்கால இடைநிலை கிறு, கின்று, ஆநின்று
எதிர்கால இடைநிலை ப், வ்
எதிர் மறை இடைநிலை அ, அல், இல்
தன்மை ஒருமை வினைமுற்று விகுதிகள் என், ஏன், அல், அன், கு, டு, து, று
தன்மை பன்மை வினைமுற்று விகுதிகள் எம், ஏம், அம், ஆம், ஓம், கும், டும், தும், றும்
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதிகள் ஐ, ஆய், இ
முன்னிலை பன்மை வினைமுற்று விகுதிகள் இர், ஈர், மின்
படர்க்கை ஆண்பால் வினைமுற்று விகுதிகள் அன், ஆன்
படர்க்கை பெண்பால் வினைமுற்று விகுதிகள் அள், ஆள்
படர்க்கை பலர்பால் வினைமுற்று விகுதிகள் அர், ஆர், ப, மார், கள்
படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதிகள் து, று, டு
படர்க்கை பவவின்பால் வினைமுற்று விகுதிகள் அ, ஆ
வியங்கோள் வினைமுற்று விகுதிகள் க, இய, இயர்
தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள் அ, உம்
தெரிநிலை வினைமுற்று விகுதிகள் உ, இ, அ

இலக்கணத் தேர்ச்சிகொள்

1. பகுபத உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு. அவை பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகும்

2. காலம் காட்டும் இடைநிலைகளை எடுத்துகாட்டுடன் விளக்குக?

இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்

  • த், ட், ற், இன் – ஆகியன இறந்த காலம் காட்டும் இடைநிலைகள்

சான்று

  • செய்தான் = செய் + த் + ஆன் – த் – இறந்தகால இடைநிலை

நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்

  • கிறு, கின்று, ஆநின்று – ஆகியன நிகழ்காலம் காட்டும் இடைநிலைகள்
  • சான்று : உண்கிறான்= உண் + கிறு + ஆன் – கிறு – நிகழ்கால இடைநிலை

எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்

  • ப், வ் – ஆகியன எதிர்காலம் காட்டும் இடைநிலைகள்

சான்று

  • படிப்பான்=படி + ப் + ப் + ஆன் – ப் – எதிர்கால இடைநிலை

3. பகுபதத்தில் சந்தி, சாரியை எவ்விடங்களில் அமையும்?

சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் அமையும், சிறுபான்மை இடைநிலைக்கும், விகுதிக்கும் இடையில் அமையும்

சாரியை

இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் அமையும், சிறுபான்மை பகுதிக்கும், இடைநிலைக்கும் இடையில் அமையும்

4. விகுதிகள் எவற்றை உணர்ந்தும்?

விகுதிகள், திணை (உயர்திணை, அஃறிணை) பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன் பால், பலவின்பால்), இடம் (தன்னிலை, முன்னிலை, படக்கை) ஆகியவற்றை உணர்த்தும்.

5. பகுபத உறுப்பிலக்கணம் தருக

பகுதி சந்தி விகாரம் இடைநிலை சாரியை விகுதி
அமைந்து அமை த் ந் த்
பார்த்தான் பார் த் த் ஆன்
தோன்றி தோன்று
வருகிறார் வா வரு கிறு ஆர்
செய் செய்
நடந்தனன் நட த்  ந் த்  அன்  அன்
கொடுத்த காடு த் த்

6. பின்வருவனவற்றுள் பொருந்தாத இணையை தேர்க

  1. அன் – வந்தனன்
  2. இன்- முறிந்தது
  3. கு – கான்குவன்
  4. அன் – சென்றன

விடை : இன்- முறிந்தது

7. பின்வருவனவற்றுள் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றைப் பயன்படுத்தி சொற்களை உருவாக்குக

பேசு இன் ஆன் பேசினான், பேசுகிறான்,  பேசுவான், பேசான்
எழுது கிறு எழுதினாள், எழுதிகிறாள், எழுதுவான், எழுதான்
வணங்கு வ் வணங்கினாள், வணங்குகிறான், வணங்குவான், வணங்கான்

7. பின்வருவனவற்றுள் வேர்ச்சொல், எதிர்மறை இடைநிலை, விகுதி ஆகியவற்றை பயன்படுத்தி சொற்களை உருவாக்குக

பார் ஆன் பாரான்
காண் அல் அன் காணலன்
உரை இல் அர் பார்த்திலர்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன் என்று போற்றப்படும் சி.வை.தாமோதரனார் இலங்கை யாா்பாணத்தில் பிறந்தவர். தமிழ்நாட்டுக்கு வருகைபுரிந்து, தம் இருபதாவது வயதிலேயே “நீதிநெறி விளக்கம் என்னும் நூலை உரையுடன் பதிப்பித்து வெளியீட்டு, அறிஞர்களின் கவனத்தைக் கவரந்தார். 1868-ம்  ஆண்டு, தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்குச் சேனாவரையர் உரையையும் பின்னர் கலித்தொகை, இறையனார் அகப்பொருள். வீரசோழியம் உள்ளிட்ட பல நூல்களையும் செம்மையாக பதிப்பித்தும் புகழ்கொண்டார். அத்துடன் நில்லாது கட்டளைக் கலித்துறை, நட்சத்திர மாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார், ஆறாம் வாசகப் புத்தகம் முதலிய பள்ளிப்பாடநூல்களையும் எழுதினார்

அவருடைய தமிழ்பணியைக் கண்ட பெர்சிவல் பாரதியார். அவரைத் தாம் நடத்திய “தினவர்த்தமானி” என்னும் இதழுக்கு ஆசிரியராக்கினார். அவ்வமயம் அவர் ஆங்கிலேயர் பலருக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அரசங்கத்தாரால், சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் பண்டிதராக நியமிக்ப்பட்டார். பிறகு பி.எல். தேர்விலும் தேர்ச்சி பெற்று, கும்பகோணத்தில் வழக்கறிஞராக பணியாற்றி, 1884-ம் ஆண்டில் புதுக்கோட்டை உயர்நீதிமன்ற நீதுிபதியாக நியமிக்கப்பட்ட்டார். தாமோதரனார் எந்தப் பணி ஆற்றினாலும் தமது சொந்தப் பணியாகப் கருதிப் கடமையாற்றினார்.

1. மாநிலக்கல்லூரி புணர்ச்சி விதி கூறுக

மாநிலக்கல்லூரி – மாநிலக்கல்லூரி

  • “மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும் ஆகும்” என்ற விதிப்படி “மாநில + கல்லூரி” என்றாயிற்று
  • “இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் கசதப மிகும்” என்ற விதிப்படி “மாநிலக்கல்லூரி என்றாயிற்று

2. ஆசிரியராக்கினார் இதன் பகுதி

  1. ஆசு
  2. ஆசிரி
  3. ஆசிரியராக்கு
  4. ஆசி

விடை  : ஆசிரியராக்கு

3. சிறு சிறு தொடர்களாக மாற்றி எழுதுக

தாமோதரனானர் நீதிநெறி விளக்கம் என்ற் நூலைப் பதிப்பித்து வெளியீட்டுக் கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களை பதிப்பித்து கட்டளைக் கலித்துறை, நட்சத்திரமாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

  • தாமோதரனானர் நீதிநெறி விளக்கம் என்ற் நூலைப் பதிப்பித்து வெளியீட்டார்
  • கலித்தொகை, வீரசோழியம் உள்ளிட்ட நூல்களை பதிப்பித்தார்.
  • கட்டளைக் கலித்துறை, நட்சத்திரமாலை, சூளாமணி வசனம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

4. பெரும்புகழ் – இலக்கணக்குறிப்பு தருக

பண்புத்தொகை

5. கல்லூரி, உயர்நீதிமன்றம், வரலாறு, பணி ஆகியவற்றிற்குப் பொருத்தமான ஆங்கிலச் சொற்களை எழுதுக

  • கல்லூரி – College
  • வரலாறு – History
  • உயர்நீதிமன்றம் – High Court
  • பணி – Work, Job

வல்லின மெய்களை இட்டும், நீக்கியும் எழுதுக

1. குமரனைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் குமரனது வீடு.

விடை: குமரனைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? என் வீட்டிற்கு வருகைத் தாருங்கள். என் வீட்டிற்கு பக்கத்து வீடு தான் குமரனது வீடு.

2. அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவேப் பெண்களும் அரசு பணியை பெற வேண்டும்.

விடை: அனைத்துத் துறைகளிலும் ஆண்களை போலவே பெண்களும் அரசு பணியைப் பெற வேண்டும்.

3. கல்வி கேள்விகளில் சிறந்தவர் நன்மைத் தீமைகளை புரிந்து பேசுவர்

விடை: கல்வி கேள்விகளில் சிறந்தவர், நன்மை தீமைகளை புரிந்து பேசுவர்.

4. தமிழர் ஆற்று தண்ணீரை தேக்கி சேமித்து கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

விடை: தமிழர் ஆற்று தண்ணீரைத் தேக்கி சேமித்துக் கால்வாய் வெட்டிப் பாசனம் செய்தனர்.

5. சான்றோர் மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்ட செய்தனர்

விடை: சான்றோர், மிகுந்தப் பொறுப்புடன் சிறப்பான சேவைப் புரிந்து கொள்கையை நிலைநாட்டச் செய்தனர்.

தமிழாக்கம் தருக

1. Education is the most powerful weapon, which you can use to change the world.

விடை: கல்வி என்பது அதிக ஆற்றல் வாய்ந்த கருவி என்பதனைக் கொண்டு, நீ உலகையே மாற்றலாம்.

2. Looking at beauty in the world is the first step of purifying the mind.

விடை: உலகில் காணப்படும் அழகை நோக்குவதே, மனத்தைத் தூய்மை செய்வதற்கு முதல் படியாகும்.

3. Culture does not make people; People make culture.

விடை: பண்பாடு என்பது மக்களை உருவாக்குவதில்லை; மக்களே பண்பாட்டை உருவாக்குகிறார்கள்.

4. People without the knowledge of their past history and culture is like a tree without roots.

விடை: கடந்தகால வரலாற்றையும், நாகரிகத்தையும் பற்றிய அறிவைப் பெறாத மக்கள், வேர் இல்லாத மரத்திற்கு ஒப்பாவர்.

5. A nation’s culture resides in the hearts and in the soul of its people.

விடை: ஒரு தேசத்தின் பண்பாடு என்பது, அத் தேசமக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது.

கலைச்சொல் அறிவோம்

  • இனக்குழு – Ethnic Group
  • முன்னொட்டு – Prefix
  • புவிச்சூழல் – Earth Environment
  • பின்னொட்டு – Suffix
  • வேர்ச்சொல் அகராதி – Rootword Dictionary
  • பண்பாட்டு கூறுகள் – Cultural Elements

அறிவை விரிவு செய் 

  • சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர். பாலகிருஷ்ணன்.
  • பண்பாட்டு கூறுகள் – Cultural Elements
  • வாடிவாசல் – சி.சு. செல்லப்பா.
  • எழுத்து இதழ்த் தொகுப்பு – தொகுப்பாசிரியர் – கி.அ. சச்சிதானந்தன். 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பகுபத உறுப்புகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பகுதி _________ என்றும் கூறுவர்

  1. முதனிலை
  2. முதலெழுத்து
  3. முதற்சொல்
  4. நிலைமொழி

விடை: முதனிலை

2. விகுதி பெறாத ஏவல் வினையாக வருவது

  1. இடைநிலை
  2. சந்தி
  3. சாரியை
  4. பகுதி

விடை: பகுதி

3. அஃறிணை ஒன்றன்பால், படர்க்கை இடம் என்பவற்றை வெளிப்படுத்தும் விகுதி

  1. ஆன்
  2. ஆள்
  3. து
  4. ஆர்

விடை: து

4. நிகழ்கால இடைநிலைகளுள் பொருந்தாது

  1. கிறு
  2. கின்று
  3. ஆநின்று
  4. ப், வ்

விடை: ப், வ்

5. ஓர் ஆக்கப்பெயர் சொல்லில் பெயர் பகுதியை விகுதியோடு இணைப்பதற்கு வரும் இடைநிலை ________ ஆகும்

  1. ஆக்க இடைநிலை
  2. எதிர்மறை இடைநிலை
  3. பெயர் இடைநிலை
  4. கால இடைநிலை

விடை: பெயர் இடைநிலை

6. பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு

  1. எழுத்துப்பேறு
  2. புறநிலை
  3. இலக்கணப்போலி
  4. தனிநிலை

விடை: எழுத்துப்பேறு

7. பகுபத உறுப்புகளில் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை காட்டுவது

  1. பகுதி
  2. இடைநிலை
  3. சந்தி
  4. விகுதி

விடை: விகுதி

8. இறந்தகால இடைநிலைகளில் பொருந்தாது

  1. த்
  2. வ்
  3. ட்
  4. ற்

விடை: வ்

சிறு வினா

1. பகுபத உறுப்புகள் என்றால் என்ன?

சொற்களைப் பொருள்நோக்கிலும் பிரித்து எழுதுவர். ஒவ்வொரு சொல்லிலும் உள்ள உறுப்புகள் எவையெவை என்ற வகையிலும் பிரித்து எழுதும் உறுப்புகளைப் பகுபத உறுப்புகள் என்பர்.

2. பகுபத உறுப்புகளின் வகைகளை எழுதுக?

பகுபத உறுப்புகள் 6 வகைப்படும்

பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் எனப் பொதுவாக ஆறு வகைப்படும்.

3. வினைப்பகுபதத்தின் அடிப்படை உறுப்புகள் யாவை?

பகுதி, விகுதி

4. பகுதி என்றால் என்ன?

ஒருசொல்லின் அடிச்சொல்லே பகுதியாகும். இதனை முதனிலை என்றும் கூறுவர்.

5. விகுதி என்றால் என்ன?

ஒரு வினைமுற்றுச் சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் உறுப்பு விகுதி எனப்படும்.

6. விகுதி பயன்பாடு பற்றி எழுதுக

வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்றபல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்படுகிறது.

7. எதிர்மறை இடைநிலை என்பது யாது?

எதிர்மறை வினைச்சொற்களில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து எதிர்மறையை உணர்த்தும் இடைநிலை, எதிர்மறை இடைநிலை ஆகும்.

8. விகுதி வெளிப்படும் நிலையை கூறுக

  • ‘ஆன்’ என்னும் விகுதி உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும்
  • ‘ஆள்’ என்னும் விகுதி உயர்திணை, பெண்பால், ஒருமை, படர்க்கை இடம் என்பனவற்றையும்
  • ‘து’ என்னும் விகுதி அஃறிணை ஒன்றன்பால், படர்க்கைஇடம் என்பனவற்றையும் வெளிப்படுத்துகின்றன.
செய்தேன் செய் + த் + ஏன் தன்மை ஒருமை
செய்தோம் செய் + த் + ஓம் தன்மை பன்மை
உண்டாய் உண் + ட் + ஆய் முன்னிலை ஒருமை
உண்டீர் உண் + ட் + ஈர் முன்னிலை பன்மை
கொடுத்தான் கொடு + த் + த்+ ஆன் படர்க்கை ஆண் பால்
படித்தாள் படி + த் + த்+ ஆள் படர்க்கை பெண் பால்
ஆடினார் ஆடு + இன் + ஆர் படர்க்கை பலர் பால்
நடந்தது நட + த்(ந்) + த் + அ + து படர்க்கை ஒன்றன் பால்

வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கணப் பொருண்மைகளை உணர்த்தவும் விகுதி பயன்படுகிறது.

சான்று :

  • எழுதுக – எழுது + க
  • உரைத்த – உரை + த் + த் + அ

9. இடைநிலை வகைகளையும், அதன் உறுப்புகளையும் எழுதுக

இறந்தகால இடைநிலைகள்

த், ட், ற், இன்

நிகழ்கால இடைநிலைகள்

கிறு, கின்று, ஆநின்று

எதிர்கால இடைநிலைகள்

ப், வ்

எதிர்மறை இடைநிலைகள்

ஆ, அல், இல்

10. சந்தி என்றால் என்ன?

பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய பகுபத உறுப்புகள் புணரும்போது இடையில் தோன்றும் உறுப்பு, சந்தி எனப்படும்.

11. எழுத்துப்பேறு என்றால் என்ன?

பகுபத உறுப்புகளில் அடங்காமல் ஏழாவது உறுப்பாக வரும் புறத்துறுப்பு எழுத்துப்பேறு எனப்படும்.

Leave a Comment