Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 3.5 Vaadivaasal Book Back Solution

இயல் 3.5 – வாடிவாசல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 3.5 ‘Vaadivaasal’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 3.5 வாடிவாசல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 3.5 Vaadivaasal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

வாடிவாசல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vaadivaasal’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: புறநானூறு

நூல்வெளி

  • சி.சு.செல்லப்பா சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.
  • சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார்.
  • “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  • வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.
  • இவருடைய “சுதந்திரதாகம்” புதினத்திற்கு “2001-ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருது” கிடைத்தது.

நெடு வினா

வாடிவாசல் கதை வாயிலாக நீங்கள் உணர்ந்த கருத்துகளை விளக்குக

ஜல்லிகட்டு ஒரு விளையாட்டு

வாடிவாசல் நிகழ்வில், மனிதன் இரத்தம் சிந்தலாம்; உயிரை விடலாம். ஆனால், காளையின் உடலில் ஒருதுளி இரத்தம் கூட வெளிப்படக் கூடாது. இறுதயமில்லா மனிதனோ, காளையோ வென்று, செம்மாந்து நிமிர்ந்து நிற்க நேரிடும். மனிதன் தன் வீரத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக கருதும் போக்கு ஜல்லிக்கட்டில் நிலவுகிறது.

கருப்புப் பிசாசு வருது

வாடிவாசல் வேலி அடைப்பின் மீது வேடிக்கை பார்க்க உட்கார்ந்திருந்தவர்கள், திடீரெனக் கத்தினார்கள். வாடிபுரம் காளை வருது டோய்; கறுப்பு பிசாசுடா. அவர்கள் குரலில் திகில் வெளிப்பட்டது. காளை அவிழ்த்து விடப்பட்டது. அது முக்காரமிட்டது. அது விட்ட மூச்சில் தரை மண் பறந்தது. காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்ட, உருமா, இரண்டு பவுன் தங்கம் எல்லாம் அங்கிருந்தவர்கள் கண்ணில் பட்டன.

ஆசைக்கு உலை வைத்த காளை

தன் லங்கோட்டை சரிசெய்து கொண்ட பிச்சி, மருதவனை உஷார் படுத்திவிட்டுக் காளை பிடிக்க ஆயத்தமானான். பிடிக்கப் புறப்பட்டவனுக்காகச் சிலர் பரிதாபப் பட்டனர். பார்வையாளராக அமர்ந்திருந்த ஜமீன்தார். தம் பார்வையிலேயே பிச்சியை ஊக்கப்படுத்தினார். கேலி பேசியவர்களை கண்டித்தார்.

காளை திட்டிவாசலில் தலைநிமிர்ந்து நின்றது. மண் சிதறக் காளை ஒருமுறை மூச்சுவிட்டு, மீண்டும் தரையை மோந்ததது. எதிரில் நின்ற பிச்சிக்கு தன் தந்தையின் ஆசைக்கும், உயிர்க்கும் உலை வைத்த அடையாளமாகக் காளையின் கொம்பில் ரத்தம் தெரிந்தது.

காளையை அடக்கத் திட்டம்

டுர்ரீ எனக் குரல் கொடுத்த மருதன், காளையின் வாலைத் தொட்டு விட்டு ஒதுங்கினான். மருதன் மீது பாயக் காளை திரும்பியது. பிச்சி காளை மீது சடக்கெனப் பாய்ந்து திமிலில் இடக்கை போட்டு நெஞ்சோடு இறக்கி அணைத்த, உடலைக் காளையின் கழுத்தோடு ஒட்டி, வலக்கையால் காளையின் கொம்பை பற்றிக் கொண்டான். பிச்சியின் எதிர்பாராத பாய்ச்சல், காளைக்குப் பாதமாகி விட்டது. ஆனாலும் மிருக சுபாவத்துடன் சமாளித்த பிச்சியைக் கீழே தள்ள முயன்று, தவ்வி ஆள் உயரம் குதித்தது. பிச்சியின் பிடி இறுகியது.

நீயோ நானா போராட்டம்

ஆள் உயரத்திற்கு எம்பித் தவ்வி இரண்டாவது முறையும் காளை பிச்சியைக் கீழே தள்ள முயன்றது. பிச்சி தன் கால்களைத் தரையில் பதிக்க முயன்றான். காளை துள்ளியது. காளை களைத்துப் போனதால். மூன்றாம் முறை தவ்வ இயலவில்லை. பிச்சியைக் காளை உருட்டி தள்ளிக் கிழித்திருக்க வேண்டும். ஆனால் கிழத்தியான், வென்றுட்டான்டா…. என்றது கூட்டம்.

பிச்சி பெற்ற வெற்றி

காளையின் நெற்றிபத்திட்டில் பிச்சி கைபோட்டு, உருமால் பட்டையை இழுத்து மெடல், சங்கிலி பட்டுத்துணியை வாயில் கவ்வியபடி, தலையில் கால்பதித்து அழுத்தி, மார்பில் அழுத்தம் கொடுத்துக் காளையை எதிர்ப்பக்கம் தள்ளிவிட்டு ஒதுங்கினான். “உசிலனூர் அம்பிலியின் பேரைக் காப்பாத்திட்டேடா! நீ புலிக்குப் பொறந்தவன்டா” என்று பாராட்ட, பிச்சியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

பண்பாடு உயிர்ப்பு

அடங்காத காளையை அடக்க, எவ்வாறு திட்டமிட வேண்டும்? காளையை எப்படிப் பற்றிக் பிடிக்க வேண்டம்? பிடி தளர்த்தாமல் இறதி வரை ஏன் போராட வேண்டும்? என்பவற்றை எல்லாம் வாடிவாசல் கதையால் அறிய முடிகிறது. போட்டியில் கலந்துகொள்ளும்போத மற்றவர் போற்றுவதையும், தூற்றுவதையும் காதில் வாங்காமல் கருமமே கண்ணாகச் செயல்பட வேண்டும் என்பதை எல்லாமும் அறிய முடிகிறது.

தமிழர் பண்பாட்டில், காளையை அடக்குவதை மனிதன் விளையாட்டாக நினைக்கிறான். காளைக்கு அது விளையாட்டு இல்லை. பண்பாட்டின் உயிர்ப்பில் இந்தத் தெளிவு மிகமிக அவசியம் என்பதும் தெளிவாகிறது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வாடிவாசல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. வாடிவாசல் என்னும் குறும்புதினத்தின் ஆசிரியர்

  1. திரு.வி.க.
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சி.சு. செல்லப்பா

விடை : சி.சு. செல்லப்பா

2. கொல்லேற்றுக்க கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே என்று குறிப்பிடும் நூல்

  1. திரு.வி.க.
  2. பாரதிதாசன்
  3. கவிமணி
  4. சி.சு. செல்லப்பா

விடை : சி.சு. செல்லப்பா

3. பிச்சி வென்றெடுத்த காளையின் ஊர்

  1. அலங்காநல்லூர்
  2. உசிலனூர்
  3. அவணியாபுரம்
  4. வாடிபுரம்

விடை : வாடிபுரம்

4. சி.சு.செல்லப்பாவின் __________ புதினத்திற்காக சாகித்திய அகாதெமி பரிசு பெற்றுள்ளார்.

  1. காந்தள் நாட்கள்
  2. ஆலாபனை
  3. ஒரு கிராமத்து நதி
  4. சுதந்திர தாகம்

விடை : சுதந்திர தாகம்

5. வாடிவாசல் புதினத்தின் உட்கரு

  1. தீண்டாமை ஒழிப்பு
  2. பெண் சிசுக் கொலை
  3. ஏறு தழுவுதல்
  4. கூலி தொழிலாளர்கள்

விடை : ஏறு தழுவுதல்

6. ஜல்லிக்கட்டைப் பற்றிய குறிப்பினை ___________ சங்க இலக்கிய நூல் கூறுகிறது.

  1. புறநானூறு
  2. கலித்தொகை
  3. அகநானூறு
  4. பரிபாடல்

விடை : கலித்தொகை

7. சி.சு.செல்லப்பா ____________ இதழைத் தொடக்கியுள்ளார் 

  1. காலம்
  2. எழுத்து
  3. அணி
  4. உலகம்

விடை : எழுத்து

8. ஜல்லிகட்டிற்கு பெயர் போன ஊர் 

  1. அலங்காநல்லூர்
  2. அலங்காநத்தம்
  3. நார்த்தாமலை
  4. ஆதமங்கலம்

விடை : அலங்காநல்லூர்

குறு வினா

1. குறுநாவல் என்றால் என்ன?

அளவில் சிறுகதையை விட நீளமாகவும், புதினத்தை விடச் சிறியதாகவும் இருக்கும் கதை குறும்புதினம். இதனைக் குறுநாவல் என்றும் சொல்வர்.

சிறுகதைக்கும் புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் என்று கொள்ளலாம்

2. சி.சு. செல்லப்பாவின் எழுதியுள்ள படைப்புகளை எழுதுக.

வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது

3. சி.சு. செல்லப்பா சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதினம் எது?

சுதந்திரதாகம் (2001)

சிறு வினா

சி.சு.செல்லப்பா – குறிப்பு வரைக

  • பங்களிப்பு: சிறுகதை, புதினம், விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு
  • பணி: உதவி ஆசியராகப் பணி (சந்திரோதியம், தினமணி)
  • இதழ்: எழுத்து
  • படைப்பு: வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது
  • விருது: சுதந்திரதாகம் (2001 – சாகித்திய அகாதெமி விருது)

Leave a Comment