[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 3.2 Manithaneyam Book Back Solution

இயல் இரண்டு – மனிதநேயம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 3.2 ‘Manithaneyam’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 3.2 மனிதநேயம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 3.2 Manithaneyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

மனிதநேயம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Manithaneyam’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Manithaneyam subject.

Next Lesson: ஆசியஜோதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதல் _______________

  1. மனித வாழ்க்கை
  2. மனித உரிமை
  3. மனிதநேயம்
  4. மனித உடைமை

விடை : மனிதநேயம்

2. தம் பொருளை கவர்ந்தவரிடமும் _______________ காட்டியவர் வள்ளலார்.

  1. கோபம்
  2. வெறுப்பு
  3. கவலை
  4. அன்பு

விடை : அன்பு

3. அன்னை தெராசாவிற்கு _______________ க்கான நோபல் பரிசு கிடைத்தது

  1. பொருளாதாரம்
  2. இயற்பியல்
  3. மருத்துவம்
  4. அமைதி

விடை : அமைதி

4. கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் _______________

  1. குழந்தைகளை பாதுகாப்போம்
  2. குழந்தைகளை நேசிப்போம்
  3. குழந்தைகள் உதவி மையம்
  4. குழந்தைகளை வளர்ப்போம்

விடை : குழந்தைகளை பாதுகாப்போம்

பொருத்துக

  1. வள்ளலார் – நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
  2. கைலாஷ் சத்யார்த்தி – பசிப்பிணி போக்கியவர்
  3. அன்னை தெராசா – குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்

விடை : 1 – ஆ, 2 – இ, 3 – அ

சொற்றொடரில் அமைத்து எழுதுக

1. மனிதநேயம்

விடை : அனைவரிடம் மனிதமாண்பு மலர வைப்பதே மனிதநேயம்

2. உரிமை

விடை : சுதந்திரம் அனைவருக்கும் பிறப்பு உரிமை

3. அமைதி

விடை : அன்னை தெராசாவிற்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு கிடைத்தது

4. அன்பு செய்தல்

விடை : வள்ளலார் தம் பொருளை கவர்ந்தவரிடமும் அன்பு செய்தல் வேண்டும் என நினைத்தார்

குறு வினா

1. யாரால் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

மனித நேயத்துடன் வாழ்பவர்களால் தான் இவ்வுலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது?

2. வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?

வள்ளலார் பசிப்பிணியை பாேக்க வடலூரில் சத்திய தருமச் சாலையைத் தொடங்கி எல்லாருக்கும் உணவளித்தார்

3. அன்னை தெரசா கண்ணீர் விடக் காரணம் யாது?

ஒரு நாள் அன்னை தெரசா சாலையின் ஓரமாக நடந்து சென்றார். அப்போது வழியல் மூதாட்டி ஒருவர் சாலையின் ஓரம் படுத்திருந்தார். அவர்முகத்தை துணியால் மூடி இருந்தார். ஒரு கையால் பூனைக்குட்டியை அணைத்துக் கொண்டு இருந்தார்.

அன்னை தெரசா அவரின் அருகில் சென்று உற்று நோக்கினார். தொழுநோயின் கடுமையால் உண்டான வேதனை மூதாட்டியன் முகத்தில் தெரிந்தது. கைகளில் விரல்கள் இல்லை.

அன்னைதெராசா மனம் கலங்கினார். மூதாட்டியின் அருகில் சென்று அவரை தொட்டு தூக்கினார். சாலை ஓரத்தில் படுத்து இருப்பது ஏன்? எனக் கேட்டார்.

என்னைத் தொடாதீர்கள். என் நோய் உங்களுக்கும் தொற்றிக் கொள்ளும் என உறவினர்கள் என்னை வெறுத்து விலக்கி விட்டனர். என்னுடன் பேசுவதில்லை.

என்னைக் கண்டாலே விலகி ஓடுகின்றனர். இந்த பூனை மட்டும் என்னுடன் இருக்கிறது என அழுதாள் மூதாட்டி. இதைக் கேட்ட அன்னை தெராசா கண்ணீர் விட்டார்.

சிறு வினா

கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு யாது?

கைலாஷ் சத்யார்த்தி சிறுவயதில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார். அவன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பான்.

ஏன் அந்தச் சிறுவன் தன்னைப்போல் பள்ளிக்கு வரவில் என்ற கேள்வி அவர் உள்ளத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. தன் ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார். “பணம் இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை.

வீட்டின் உணவுத் தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும். எனவே அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான்” என்ற பதில் கிடைத்தது. அந்த பதில் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தைக் கொடுத்தது.

இதுவே கைலாஷ் சத்யார்த்தி நாேபல் பரிசு பெறத் தூண்டுகோலாக அமைந்த இளமைக்கால நிகழ்வு ஆகும்.

சிந்தனை வினா

அன்னை தெரசாவின் மனிதநேயம் பற்றிய வேறு ஒரு நிகழ்வினை அறிந்து எழுதுக.

அன்னை தெரசா அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, தெருத்தெருவாகப் போய் யாசகம் கேட்டு தனது சேவை மையங்களுக்கு நிதி திரட்டுவது வழக்கம். ஒரு நாள் ஒரு கடையில் சென்று யாசம் கேட்டார். அந்த கடைக்காரர் வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு பார்த்தும் பார்க்காதது போல் இருந்தார்.

கடைக்காரரிடம் இருந்து எதையாவது வாங்கிவிட வேண்டும் என்று உறுதியுடன் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். கடைக்காரர் தெராசாவை கோபமாகப் பார்த்து விட்டு, தெராசா நீட்டிய கையில் எச்சிலை துப்பினார். அப்போது சற்றம் மனம் தளராமல் “மிக்க நன்றி! நீங்கள் கொடுத்தது எனக்கு, என் விடுதியில் இருக்கும் அனாதை குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று கேட்டார்.

அந்தக் கடைக்காரர் “இப்படி ஒரு சகிபப்புத் தன்மை உடைய பெண்ணை இப்பொழுது தான் முதன்முறையாகப் பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு நொடிப்பொழுதில் கல்லாப் பெட்டியில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்து அன்னை தெரசாவிடம கொடுத்துவிட்டார். இப்படி அன்னை தெராசவின் ஒவ்வொரு வெற்றியின் பின்னணியிலும் பல்வேறு அவமானங்கள் இருந்தன.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மனிதநேயம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மனிதன் _________________ வாழாமல் பிறர்க்கென வாழ வேண்டும்

  1. தனக்கென
  2. உறவினருக்காக
  3. பிள்ளைகளுக்காக
  4. பெற்றோருக்காக

விடை : தனக்கென

2. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என ____________________ கூறினார்

  1. வள்ளலார்
  2. அன்னை தெரசா
  3. கைலாஷ் சத்தியார்த்தி
  4. திருமூலர்

விடை : வள்ளலார்

3. அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் ______________

  1. கைலாஷ் சத்யார்த்தி
  2. அன்னை தெரசா
  3. வள்ளலார்
  4. சுத்தானந்த பாரதி

விடை : கைலாஷ் சத்யார்த்தி

4. தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென
   முயலுநர் உண்மையானே என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. திருக்குறள்
  3. புறநானூறு
  4. திருவாசகம்

விடை : புறநானூறு

5. வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை
என்ற கூற்றினை கூறியவர்

  1. கைலாஷ் சத்யார்த்தி
  2. அன்னை தெரசா
  3. வள்ளலார்
  4. இராமலிங்க அடிகளார்

விடை : அன்னை தெரசா

6. குழந்தைகளைத் தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத் தன்மைக்கு எதிரான குற்றம்.
உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள். உலகம் அழகானது 
எனக் கூறியவர்

  1. கைலாஷ் சத்யார்த்தி
  2. அன்னை தெரசா
  3. வள்ளலார்
  4. இராமலிங்கனார்

விடை : கைலாஷ் சத்யார்த்தி

7. பசித்தோருக்கு உணவு வழங்கும் வள்ளலாரின் மனிதநேயச் செயல் _______________ இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  1. கடலூரில்
  2. திருவாதவூரில்
  3. வடலூரில்
  4. திருத்தணியில்

விடை : வடலூரில்

குறு வினா

1. மனித நேயம் என்பது என்ன?

மனிதநேயம் என்பது எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துதல் ஆகும்

2. கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் உரிமைக்காக செய்த செயல்களை எழுதுக.

  • கடந்த முப்பது ஆண்டுகளில் 86,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார்.
  • உலகக் குழந்தைகள் கல்வி உரிமைக்காக 103 நாடுகளில் 80,000 கி.மீ தூரம் நடைப்பயணம் சென்றுள்ளார்.

Leave a Comment