[Term-3] Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.5 Peyarsol Book Back Solution

இயல் இரண்டு – பெயர்ச்சொல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 2.5 ‘Peyarsol’ Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 3 Lesson 2.5 பெயர்ச்சொல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 2.5 Peyarsol Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

பெயர்ச்சொல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Peyarsol’ which is the first subject of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Peyarsol subject.

Next Lesson: பாதம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இடுகுறிப்பெயரை வட்டமிடுக

  1. பறவை
  2. மண்
  3. முக்காலி
  4. மரங்கொத்தி

விடை : மண்

2. காரணப்பெயரை வட்டமிடுக

  1. மரம்
  2. வளையல்
  3. சுவர்
  4. யானை

விடை : வளையல்

3. இடுகுறிசிறப்புப்பெயரை வட்டமிடுக

  1. வயல்
  2. வாழை
  3. மீன்கொத்தி
  4. பறவை

விடை : வாழை

குறுவினா

1. பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?

பெயர்ச் சாெல் ஆறு வகைப்படும். அவையாவன

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தாெழிற்பெயர்

2. இடுகுறிப்பெயர் என்றால் என்ன?

ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) மா, கருவேலங்காடு.

3. காரணப்பெயர் என்றால் என்ன?

நம் முன்னாேர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தாேடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காணப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நாற்காலி, கரும்பலகை

சிறுவினா

1. அறுவகைப் பெயர்ச்சொற்களை எழுதுக.

பொருட்பெயர்

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும். இஃது உயிருள்ள பொருள்களையும் உயிரற்ற பொருள்களையும் குறிக்கும்.

(எ.கா.) மரம், செடி, மயில், பறவை, புத்தகம், நாற்காலி.

மனிதர்கள் பெயர்கள் பொருட்பெயர் வகையையே சாரும்.

உயர்திணைப் பொருட்பெயர்: (எ.கா.) அக்ஸா, ஜோசப், மாறன் & மகாலட்சுமி

இடப்பெயர்

ஓர் இடத்தின் பெயரைக் குறிக்கும் பெயர் இடப்பெயர் எனப்படும்.

(எ.கா.) சென்னை, பள்ளி, பூங்கா, தெரு.

காலப்பெயர்

காலத்தைக் குறிக்கும் பெயர் காலப்பெயர் எனப்படும்.

(எ.கா.) நிமிடம், நாள், வாரம், சித்திரை, ஆண்டு.

சினைப்பெயர்

பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப்பெயர் எனப்படும்.

(எ.கா.) கண், கை, இலை, கிளை.

பண்புப்பெயர்

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் பண்புப்பெயர் எனப்படும்.

(எ.கா.) வட்டம், சதுரம், செம்மை, நன்மை.

தாெழிற்பெயர்

தாெழிலைக் குறிக்கும் பெயர் தாெழிற்பெயர் எனப்படும்.

(எ.கா.) படித்தல், ஆடுதல், நடித்தல்.

2. அறுவகைப் பெயர்ச்சொற்களுக்கும் எடுத்துக்காட்டுகள் தருக.

காவியா புத்தகம் படித்தாள்

  • புத்தகம் – பொருட்பெயர்

காவியா பள்ளிக்குச் சென்றாள்

  • பள்ளி – இடப்பெயர்

காவியா மாலையில் விளையாடினாள்

  • மாலை – காலப்பெயர்

காவியா தலை அசைத்தாள்

  • தலை – சினைப்பெயர்

காவியா இனிமையாகப் பேசுவாள்

  • இனிமை – பண்புப்பெயர்

காவியாவுக்கு நடனம் ஆடுதல் பிடிக்கும்

  • ஆடுதல் – தொழிற்பெயர்

மொழியை ஆள்வோம்

அகராதியை பயன்படுத்தி பொருள் எழுதுக

1. கருணை

விடை : உயிர்களிடத்தில் கொள்ளும் ஒருவகை பரிவு உணர்வு

2. அச்சம்

விடை : பயம், மனதில் ஏற்படும் ஓர் உணர்வு, தைரியத்தை இழக்கும் நிலைமை

3. ஆசை

விடை : வேண்டும் பொருள் மீது செல்லும் விருப்பம்

கீழ்காணும் பெயர்ச்சாெற்களை அகரவரிசையில் எழுதுக.

பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்

விடை :

ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம்,  பூனை, மனிதன், மாணவன், மான், வெளவால்

பின்வரும் வாக்கியங்களில் உள்ள அறுவகைப் பெயர்களை எடுத்து எழுதுகை.

1. கைகள் இரண்டும் பிறர்க்கு உதவுதே எனச் சான்றோர்கள் கருதினர்

  • இரண்டுமே,  சான்றோர் – பண்புப்பெயர்
  • கைகள் – சினைப்பெயர்
  • உதவவே, கருதினர் – தொழிற்பெயர்

2. அறம், பொருள், இன்பம், வீடு அடைதல் நூலின் பயனாகும்.

  • அறம், பொருள், இன்பம், வீடு, நூல் – பொருட்பெயர்
  • அடைதல் – தொழிற்பெயர்

3. அறிஞர்களுக்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்.

  • அழகு – பண்புப்பெயர்
  • அறிஞர் – பொருட்பெயர்
  • கற்றுணர்ந்து, அடங்கல் – தொழிற்பெயர்

4. நீதிநூல் பயில் என்கிறார் பாரதியார்.

  • நீதிநூல், பாரதியார் – பண்புப்பெயர்
  • பயில் – பொருட்பெயர்

5. மாலை முழுவதும் விளையாட்டு.

  • மாலை- காலப்பெயர்
  • உடையவர்கள் – விளையாட்டு

6. அன்பு நிறைய உடையவர்கள் மேலாேர்

  • அன்பு, மேலாேர் – பண்புப்பெயர்
  • உடையவர்கள் – பொருட்பெயர்

பின்வரும் பாடலைப் படித்து, அடிக்கோடிட்ட சாெல் எவ்வகைப் பெயர்ச்சொல் என்பதை எழுதுக.

1. விடியலில் துயில் எழுந்தவன்.

  • துயில் – காலப்பெயர்

2. இறைவனைக் கை தாெழுதேன்.

  • கை – சினைப்பெயர்

3. புகழ்பூத்த மதுரைக்குச் சென்றேன்

  • மதுரைக்குச் – இடப்பெயர்

4. புத்தகம் வாங்கி வந்தேன்

  • புத்தகம் – பொருட்பெயர்

5. கற்றலைத் தாெடர்வாேம் இனி

  • கற்றலைத் – தொழிற்பெயர்

6. நன்மைகள் பெருகும் நனி

  • நன்மைகள் – பண்புப்பெயர்

மொழியோடு விளையாடு

கட்டங்களில் உள்ள வார்த்தைகளைக் கொண்டு தொடர்களை அமைக்க

வெல்லும் கேளிர் தீதும்
வாரா நன்றும் யாவரும்
யாதும் ஊரே பிறர்தர வாCய்மையே
  1. வாய்மையே வெல்லும்
  2. யாதும் ஊரே யாவரும் கேளிர்
  3. தீதும் நன்றும் பிறர்தர வாரா

சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துங்கள்

  1. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்
  2. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  3. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  4. அமுதசுரபியைப் பெற்றாள்
  5. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்

விடை :-

  1. மணிமேகலை மணிபல்லவத் தீவிற்குச் சென்றாள்
  2. அமுதசுரபியைப் பெற்றாள்
  3. ஆதிரையிடம் சென்று முதல் உணவைப் பெற்றாள்
  4. சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்
  5. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக மாற்றுமாறு மன்னனிடம் வேண்டினாள்

ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக

1. அரம் – அறம்

அரம் – மரத்தை அறுக்க அரம் பயன்பட்டது.
அறம் – உதவி என்று வருபவருக்கு அறம் செய்ய வேண்டும்.

2. மனம் – மணம்

மனம் – என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன்
மணம் – என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது.

இருபொருள் தருக

1. ஆறு

ஆறு – நதி
ஆறு – எண்

2. திங்கள்

திங்கள் – சந்திரன்
திங்கள் – வாரத்தின் இரண்டாம் நாள்

3. ஓடு

ஓடு – வீட்டின் கூரையில் அமைப்பது
ஓடு – வேகமாக ஓடுதல்

4. சிரி

சிரி – சிரிப்பு
சிரி – அணிகலன்

புதிர்ச்சொல் கண்டுபிடி

இச்சொல் மூன்றெழுத்துச் சொல். உயிர் எழுத்துக்கள் வரிசையில் முதல் எழுத்து இச்சொல்லின் முதல் எழுத்து. வல்லின மெய் எழுத்துகளின் வரிசையில் கடைசி எழுத்து இச்சொல்லின் இரண்டாம் எழுத்து. வாசனை என்னும் பொருள் தரும் வேறு சொல்லின் கடைசி எழுத்து இச்சொலின் மூன்றாம் எழுத்து. அஃது என்ன?

விடை – அறம்

கட்டத்தில் உள்ள சொற்களை கொண்டு தொடர்கள் உருவாக்கும்

மாலையில் கற்போம்
பிறருக்கு உதவி எழுவோம்
பெரியோரை விளையாடுவோம்
நூல் பல செய்வோம்
உடற்பயிற்சி புரிவோம்
அதிகாலையில் வணங்குவோம்
  • மாலையில் விளையாடுவோம்.
  • பிறருக்கு உதவி புரிவோம்.
  • பெரியோரை வணங்குவோம்.
  • நூல் பல கற்போம்.
  • உடற்பயிற்சி செய்வோம்.
  • அதிகாலையில் எழுவோம்.

நிற்க அதற்குத் தக…

கலைச்சாெல் அறிவாேம்

  • அறக்கட்டளை – Trust
  • தன்னார்வலர் – Volunteer
  • இளம் செஞ்சிலுவைச் சங்கம் – Junior Red Cross
  • சாரண சாரணியர் – Scouts & Guides
  • சமூகப்பணியாளர் – Social Worker

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பாதம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

1. இடுகுறிப் பொதுப்பெயரினை குறிக்கும் சொல்

  1. மரம்
  2. கருவேலங்காடு
  3. மா
  4. பலா

விடை: மரம்

2. இடுகுறிப் சிறப்புப்பெயரினை குறிக்கும் சொல்

  1. மரம்
  2. இலை
  3. கருவேலங்காடு
  4. பறவை

விடை: கருவேலங்காடு

3. காரணப் பொதுப்பெயரினை குறிக்கும் சொல்

  1. மரம்
  2. கருவேலங்காடு
  3. இலை
  4. பறவை

விடை: கருவேலங்காடு

4. காரணப் சிறப்புப்பெயரினை எடுத்துக்காட்டுடன் கூறுக

  1. மரம்
  2. அணி
  3. இலை
  4. வளையல்

விடை: வளையல்

Leave a Comment