[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.3 Kaniyamigu Thalaivar Book Back Solution

இயல் மூன்று – கண்ணியமிகு தலைவர்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.3 ‘Kaniyamigu Thalaivar’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 3.3 கண்ணியமிகு தலைவர்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.3 Kaniyamigu Thalaivar Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

கண்ணியமிகு தலைவர் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kaniyamigu Thalaivar’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kaniyamigu Thalaivar subject.

Next Lesson: தன்னை அறிதல்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. காயிதேமில்லத் ________________ பண்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.

  1. தண்மை
  2. எளிமை
  3. ஆடம்பரம்
  4. பெருமை

விடை : எளிமை

2. காயிதே மில்லத் என்னும் அரபுச் சொல்லுக்குச் ………….. என்பது பொருள்.

  1. சுற்றுலா வழிகாட்டி
  2. சமுதாய வழிகாட்டி
  3. சிந்தனையாளர்
  4. சட்ட வல்லுநர்

விடை : சமுதாய வழிகாட்டி

3. விடுதலைப் போராட்டத்தின்போது காயிதேமில்லத் ________________ இயக்கத்தில் கலந்து கொண்டார்.

  1. வெள்ளையனே வெளியேறு
  2. உப்புக் காய்ச்சும்
  3. சுதேசி
  4. ஒத்துழையாமை

விடை : ஒத்துழையாமை

4. காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ________________

  1. சட்டமன்றம்
  2. நாடாளுமன்றம்
  3. ஊராட்சி மன்றம்
  4. நகர் மன்றம்

விடை : நாடாளுமன்றம்

5. எதிரொலித்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. எதிர் + ரொலித்தது
  2. எதில் + ஒலித்தது
  3. எதிர் + ஒலித்தது
  4. எதி + ரொலித்தது

விடை : எதிர் + ஒலித்தது

6. முதுமை+மொழி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________________

  1. முதுமொழி
  2. முதுமைமொழி
  3. முதியமொழி
  4. முதல்மொழி

விடை : முதுமொழி

குறு வினா

1. விடுதலைப் போராட்டத்தில் காயிதே மில்லத் அவர்களின் பங்கு பற்றி எழுதுக.

  • நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒத்துழையாமை இயக்கதத்தில் பங்கு கொள்ள காந்தியடிகள் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
  • காந்தியடிகளின் இத்தகைய வேண்டுகோள் காயிதேமில்லத்தின் மனதில் விடுதலை உணர்வை ஏற்படுத்தியது.
  • கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.

2. காயிதே மில்லத் அவர்கள் தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தார் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை எழுதுக.

காயிதே மில்லத் அவர்கள் தன் மகனுக்கு திருமண செய்ய முடிவு செய்தார். பெரிய தலைவர் என்பதால் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடக்கும் என அனைவரும் நினைத்தனர். பெண் வீட்டாரிடம் மணக்கொடை வாங்காமல் மிக எளிமையாக மகன் திருமணத்தை நடத்தினார்

சிறு வினா

ஆட்சி மொழி பற்றிய காயிதே மில்லத்தின் கருத்தை விளக்குக.

ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன்.

மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சிந்தனை வினா

நீங்கள் ஒரு தலைவராக இருந்தால் எத்தகைய மக்கள் நலப்பணிகளைச் செய்வீர்கள்?

  • தமிழை உலகமொழி ஆக்குவேன்.
  • ஏழ்மை நிலையை ஒழித்து, அனைத்தும் அனைவருக்கும் என்பதை நடைமுறைக்கு கொண்டு வருவேன்.
  • சாதி, மத ஏற்றத் தாழ்வுகளை நீக்குவேன்.
  • இந்திய நதிகளை இணைப்பேன்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கண்ணியமிகு தலைவர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. கண்ணியமிகு என்னும் அடைமொழியால் சிறப்பிக்கப்படும் தலைவர் ________________

  1. காந்தியடிகள்
  2. காயிதே மில்லத்
  3. பெரியார்
  4. நேரு

விடை : காயிதே மில்லத்

2. மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன் எனக் கூறியவர்

  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. காயிதே மில்லத்
  4. நேரு

விடை : காயிதே மில்லத்

3. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் போர் நடைபெற்ற ______________

  1. 1962
  2. 1972
  3. 1982
  4. 1992

விடை : 1962

4. காயிதே மில்லத்தின் இயற்பெயர் ______________

  1. முகமது அலி
  2. முகமது ஜின்னா
  3. முகமது மைதீன்
  4. முகமது இசுமாயில்

விடை : முகமது இசுமாயில்

5. கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தவர். 

  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. காயிதே மில்லத்
  4. நேரு

விடை : காயிதே மில்லத்

6. காயிதே மில்லத் ஜமால் முகமது கல்லூரியை உருவாக்கிய இடம் ______________

  1. தஞ்சை
  2. திருச்சி
  3. கோவை
  4. மதுரை

விடை : திருச்சி

7. கேரளாவில் காயிதே மில்லத் தொடங்கிய கல்லூரி

  1. காகிதே மில்லத் கல்லூரி
  2. ஜமால் முகமது கல்லூரி
  3. ஃபரூக் கல்லூரி
  4. ஜமால் மில்லத் கல்லூரி

விடை : ஃபரூக் கல்லூரி

8. தமிழ் மொழியை நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

  1. காந்தியடிகள்
  2. பெரியார்
  3. காயிதே மில்லத்
  4. நேரு

விடை : காயிதே மில்லத்

9. தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் திகழ்கிறார் என காயிதே மில்லதை புகழந்தவர்.

  1. அறிஞர் அண்ணா
  2. காமராசர்
  3. பெரியார்
  4. ஜவகர்லால் நேரு

விடை : அறிஞர் அண்ணா

10. இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர் காயிலே மில்லத்தை பாராட்டியவர்

  1. காமராசர்
  2. அறிஞர் அண்ணா
  3. ஜவகர்லால் நேரு
  4. பெரியார்

விடை : பெரியார்

குறுவினா

1. காயிதே மில்லத் என்று பெயர் ஏற்படக் காரணம் யாது?

காயிதே மில்லத் இயற்பெயர் முகமது இசுமாயில். ஆனால் மக்கள் அவரை அன்போடு காயிதே மில்லத் எனறு அழைத்தனர். காயிதே மில்லத் என்னும் அரபு சொல்லுக்கு சமுதாய வழிகாட்டி என்று பொருள். அப்பெயருக்கேற்ப மக்களின் வழிகாட்டியாக திகழ்ந்தானர்

2. காயிதே மில்லத்தின் நேர்மைக்குரிய நிகழ்வை கூறுக

காயிதே மில்லத் ஒருமுறை தமது இயக்க அலுவலகத்தில் இருந்த போது அங்கிருந்த பணியாளரை அழைத்தார். அவரிடம் ஓர் உறையையும் பணத்தையும் கொடுத்து, “அஞ்சல்தலை வாங்கி இந்த உறையில் ஒட்டி அஞ்சலில் சேர்த்து விடுங்கள்“ என்று கூறினார்.

அந்தப் பணியாளர் “ஐயா நம் அலுவலகத்திலேயே அஞ்சல்தலைகள் வாங்கி வைத்துள்ளோம், அவற்றிலிருந்து ஒன்றை எடுத்து ஒட்டி விடுகிறேன்“ என்றார். அதற்கு அந்தத் தலைவர், “வேண்டாம். இது நான் தனிப்பட்ட முறையில் அனுப்பும் கடிதம். அதற்கு இயக்கப் பணத்தில் இருந்து வாங்கப்பட்ட அஞ்சல்தலைகளைப் பயன்படுத்துவது முறையாகாது“ என்று கூறினார்

இதுவே  காயிதே மில்லத் அவர்களின் நேர்மைக்கு சான்றாக உள்ள நிகழ்வு ஆகும்.

3. காயிதே மில்லத் அரசியல் பணிகளை தொகுத்து எழுதுக

  • 1946  முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர்
  • இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர்
  • இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்
  • மக்களவை உறுப்பினர்

Leave a Comment