[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.4 Kappalottiya Tamilar Book Back Solution

இயல் மூன்று – கப்பலோட்டிய தமிழர்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.4 ‘Kappalottiya Tamilar’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 3.4 கப்பலோட்டிய தமிழர்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.4 Kappalottiya Tamilar Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

கப்பலோட்டிய தமிழர் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kappalottiya Tamilar’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kappalottiya Tamilar subject.

Next Lesson: தேசியம் காத்த செம்மல்

நூல் வெளி

  • இரா.பி.சேது தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்  பேச்சாளர் எனப் பன்முகத் திறன் பெற்றவர்.
  • இவரைச் சொல்லின் செல்வர் எனப் போற்றுவர்.
  • செய்யுளுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றை உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே என்பர்.
  • இவரது தமிழின்பம் என்னும் நூல் இந்திய அரசின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ஆகும்.
  • ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு உள்ளிட்ட பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
  • வ.உ. சிதம்பரனார் பேசுவதாக அமைந்த நம் பாடப்பகுதி கடற்கரையினிலே என்னும் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

மதிப்பீடு

வ.உ. சிதம்பரனாரின் உரையை வாழ்க்கை வரலாறாகச் சுருக்கி எழுதுக.

முன்னுரை

கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் போற்றப்படுபவர் வ.உ.சிதம்பரனார் ஆவார். ஆங்கிலேயரை எதிர்த்து சுதேசி கப்பல் இயக்கிய பெருமைக்குரியர் வ.உ.சிதம்பரனார். அவரின் உரை வழி, அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக காண்போம்.

சுதேசக் கப்பல்

தூத்துக்குடியில் கொற்கை துறைமுகத்தில் முத்து வாணிகத்தில் நம்மவர் சிறந்திருந்தனர். கப்பல் வணிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆதிக்கத்துப் பின்னர் கப்பல்களில் ஆங்கிலேயக் கொடி பறந்தது. நம்மவர் கூலிகளாக அக்கப்பலில் வேலை செய்தனர். இந்நிலையை மாற்ற பாண்டித்துரைத் தலைவராக கொண்டு சுதேசக் கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரனார் உருவாக்கினார். இக்கப்பல் முதல் முதலில் கொழும்பு நோக்கிச் சென்றது.

ஆங்கிலேயரின் அடக்குமுறை

சுதேசக் கப்பல் வணிகம் வளரத் தொடங்கியது. ஆங்கிலக் கப்பல் வணிகம் வீழத் தொடங்கியது. அதனால் ஆங்கிலேயர்கள் வ.உ.சிதம்பரனாரையும் அவரது நண்பர்களையும் பயமுறுத்தினர். அதற்கெல்லாம் கவலைப்படாமல் “வந்தேமாதரம்” என்ற முழக்கத்தை எழுப்பினார். இதனைக் கேட்ட மக்கள் விடுதலைக்கு ஆதரவாக ஊக்கம் அடைந்தனர். ஆங்கில அரசு வ.உ.சிதம்பரனாரைச் சிறையில் அடைத்தது.

வ.உ.சிதம்பரனாரின் தியாகம்

வ.உ.சிதம்பரனார் கோவைச்சிறை, கண்ணூர் சிறை ஆகியவற்றில் கொடும்பணி செய்தார். அவர் உடல் சலித்தது. உள்ளம் தளரவில்லை. சிறையதிகாரி வ.உ.சிதம்பரனாரிடம் அறிவரை கூற “உனக்கும் உன் கவர்னருக்கும் மன்னனுக்கும் புத்தி சொல்வேன்” என்றார். சிறையில் செக்கிழுத்தார். சிறையில் கைத்தோல் உரிய கடும்பணி செய்தார். செந்தமிழும் கன்னித்தமிழும் கண்ணீரைப் போக்கியது.

தமிழ்ப்பற்றும் ஏக்கமும்

வ.உ.சிதம்பரனார் தொல்காப்பியம், இன்னிலை கற்றுத் தன் துன்பங்களை மறந்தார். ஆங்கிலத்தில் ஆலன் இயற்றிய அறிவு நூல்களில் ஒன்றை “மனம் போல் வாழ்வு” என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தார். மெய்யறிவு, மெய்யறம் முதலிய சிறு நூல்களைப் படைத்தார். சிறை வாழ்வு முடிந்து வ.உ.சிதம்பரனார் வெளியில் வந்தபோது தன் குழந்தைகளை கண்டு மகிழந்தார். ஆனால் கடற்கரையில் தன் ஆசைக்குழந்தை சுதேசக் கப்பலைக் காணாமல் வருத்தம் அடைந்தார் என்று நற்காலம் வருமே என்று ஏங்கினார்.

முடிவுரை

“பாயக் காண்பது சுந்திர வெள்ளம்
பணியக் காண்பது வெள்ளையர் உள்ளம்

என்று நாம் பாடும் நாள் எந்நாளோ?” என்று உருக்கமாகப் பேசி கடற்கரையை விட்டு அகன்றார் வ.உ.சிதம்பரனார். 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கப்பலோட்டிய தமிழர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர்

  1. இராஜாஜி
  2. இரா.பி.சேதுபிள்ளை
  3. வ.உ.சி
  4. பாண்டித்துரையார்

விடை : இரா.பி.சேதுபிள்ளை

2. தமிழின்பன் நூலின் ஆசிரியர்

  1. வ.உ.சி
  2. இராஜாஜி
  3. இரா.பி.சேது
  4. பாண்டித்துரையார்

விடை : இரா.பி.சேது

3. இரா.பி.சேதுவின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் ____________

இந்திய அரசின் முதல் சாகித்திய அகாதெமி

  1. ஆற்றங்கரையினிலே
  2. கடற்கரையினிலே
  3. தமிழ்விருந்து
  4. தமிழின்பம்

விடை : தமிழின்பம்

4. வ.உ.சிதம்பரனார் பேசுவதாக எழுதிய இரா.பி.சேதுவின் நூல் ____________

  1. ஆற்றங்கரையினிலே
  2. கடற்கரையினிலே
  3. தமிழ்விருந்து
  4. தமிழின்பம்

விடை : கடற்கரையினிலே

5. சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் நூல் ___________

  1. தமிழின்பம்
  2. ஆற்றங்கரையினிலே
  3. கடற்கரையினிலே
  4. தமிழ்விருந்து

விடை : தமிழின்பம்

6. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் என்ற வரியின் ஆசிரியர்

  1. வ.உ.சி.
  2. பாண்டித்துரையார்
  3. திருவள்ளுவர்
  4. பாரதியார்

விடை : திருவள்ளுவர்

8. வந்தே மாதரம் என்போம், எங்கள் மாநிலத்தாயை வணங்குதும் என்போம் என்ற வரிகளை எழுதியவர்?

  1. வ.உ.சி.
  2. சுரதா
  3. வள்ளுவர்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

9. வந்தே மாதரம் என்னும் சுதேச மந்திரம் பிறந்த இடம் ___________

  1. வங்க நாடு
  2. தமிழ்நாடு
  3. மராட்டிய நாடு
  4. டெல்லி

விடை : வங்க நாடு

10. தொல்காப்பியத்தை படித்து தொல்லையெல்லாம மறந்தேன் எனக் கூறியவர்

  1. வ.உ.சி
  2. பாண்டித்துரையார்
  3. இரா.பி.சேதுபிள்ளை
  4. அண்ணா

விடை : வ.உ.சி

11. மெய்யறிவு, மெய்யறம் என்ற நூல்களை எழுதியவர்

  1. பாண்டித்துரையார்
  2. வ.உ.சி
  3. இரா.பி.சேதுபிள்ளை
  4. அண்ணா

விடை : வ.உ.சி

12. சுதந்தரம் எனது பிறப்புரிமை; அதை அடைந்தே தீருவேன் என்று வடநாட்டிலே மார்தட்டி நின்றவர் ___________

  1. பாலகங்காதர திலகர்
  2. பகத்சிங்
  3. நேதாஜி
  4. காந்தியடிகள்

விடை : பாலகங்காதர திலகர்

13. ஆலன் என்பவர் இயற்றிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்தவர்

  1. பாண்டித்துரையார்
  2. வ.உ.சி
  3. இரா.பி.சேதுபிள்ளை
  4. அண்ணா

விடை : வ.உ.சி

14. மனம் போல் வாழ்வு என்ற நூலினை மொழிபெயர்த்தவர்

  1. வ.உ.சி.
  2. பாண்டித்துரையார்
  3. இரா.பி.சேதுபிள்ளை
  4. அண்ணா

விடை : வ.உ.சி.

15. சிதம்பரனாருக்கு இரட்டை வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதி

  1. சந்திரமோன்
  2. ஆலன்
  3. மார்க்முல்லர்
  4. பின்ஹேவ்

விடை : பின்ஹேவ்

சிறு வினா

இரா.பி.சேது – குறிப்பு வரைக

  • பன்முகத்திறன் – தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்  பேச்சாளர்
  • சிறப்பு பெயர் – சொல்லின் செல்வர்
  • சாகித்திய அகாதெமி விருது – தமிழின்பம்
  • எழுதிய நூல்கள் – ஆற்றங்கரையினிலே, கடற்கரையினிலே, தமிழ் விருந்து, தமிழகம்- ஊரும் பேரும், மேடைப்பேச்சு

Leave a Comment