[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 3.5 Valakku Book Back Solution

இயல் மூன்று – வழக்கு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 3.5 ‘Valakku ‘ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 3.5 வழக்கு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 3.5 Valakku Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

வழக்கு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Valakku ‘ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Valakku subject.

Next Lesson: கப்பலோட்டிய தமிழர்

பொருத்துக

  1. பந்தர் – முதற்போலி
  2. மைஞ்சு – முற்றுப்போலி
  3. அஞ்சு – இடைப்போலி
  4. அரையர் – கடைப்போலி

விடை – 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

குறுவினா

1. வழக்கு என்றால் என்ன?

நம் முன்னோர் எந்தெந்ச் சொற்கள் என்னென்ன பொருளில்  பயன்படுத்தினார்களோ அச்சொற்கள் அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்

2. தகுதி வழக்கின் வகைகள் யாவை ?

ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்லத் தகுதியற்ற சொற்களைத் தகுதியான வேறு சொற்களால் குறிப்பிடுவது தகுதி வழக்கு ஆகும்.

தகுதி வழக்கு மூன்று வகைப்படும்.

  • இடக்கரடக்கல்
  • மங்கலம்
  • குழூஉக்குறி

3. வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது இந்த தொடரில் இடம்பெற்றுள்ள போலிச் சொல்லைக் கண்டறிக. அதன் சரியான சொல்லை எழுதுக.

போலிச் சொல் : நஞ்சு

  •  வாழைப்பழம் மிகவும் நஞ்சு விட்டது

சரியான சொல் : நைந்து 

  • வாழைப்பழம் மிகவும் நைந்து விட்டது

மொழியை ஆள்வோம்

பின்வரும் தொடர்களை எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் எனப் பிரிக்க.

1. வீரர்கள் நாட்டைக் காத்தனர்.

  • எழுவாய் – வீரர்கள்
  • பயனிலை – நாட்டைக்
  • செயப்படுபொருள் – காத்தனர்

2. பொதுமக்கள் அந்நியத் துணிகளைத் தீயிட்டு எரித்தனர்.

  • எழுவாய் – பொதுமக்கள்
  • பயனிலை – அந்நியத்துணிகளைத்
  • செயப்படுபொருள் – தீயிட்டு எரித்தனர்

3. கொற்கைத் துறைமுகத்திலே பாண்டியனுடைய மீனக்கொடி பறந்தது.

  • எழுவாய் – கொற்கைத் துறைமுகத்திலே
  • பயனிலை – பாண்டியனுடைய மீனக்கொடி
  • செயப்படுபொருள் – பறந்தது

4. திருக்குறளை எழுதியவர் யார்?

  • எழுவாய் – திருக்குறளை
  • பயனிலை – எழுதியவர்
  • செயப்படுபொருள் – யார்?

5. கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதிய புலவர்.

  • எழுவாய் – கபிலர்
  • பயனிலை – குறிஞ்சிப்பாட்டை
  • செயப்படுபொருள் – எழுதிய புலவர்

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் அமையும்படி ஐந்து தொடர்களை எழுதுக.

  1. கம்பர் இராமாயணத்தை எழுதினார்
  2. ராமு கவிதை எழுதினான்
  3. கீதா ஓவியம் வரைந்தாள்
  4. ஒளவையார் ஆத்திசூடி இயற்றினார்
  5. வீரர்கள் நாட்டைக் காத்தனர்

மொழியோடு விளையாடு

இடைச்சொல் ‘கு’ சேர்த்துத் தொடரை எழுதுக.

(எ.கா.) வீடு சென்றான் – வீடு+கு+சென்றான் – வீட்டுக்குச் சென்றான்

1. மாடு புல் கொடுத்தார்  = …………………………

விடை: மாடு + கு + புல் கொடுத்தார் = மாடுக்குப் புல் கொடுத்தார்

2. பாட்டு பொருள் எழுது = …………………………

விடை: பாட்டு + கு + பொருள் எழுது = பாட்டுக்குப் பொருள் எழுது

3. செடி பாய்ந்த நீர்  = …………………………

விடை: செடி + கு + பாய்ந்த நீர் = செடிக்குப் பாய்ந்த நீர்

4. முல்லை தேர் தந்தான் பாரி  = …………………………

விடை: முல்லை + கு + தேர் தந்தான் பாரி = முல்லைக்குத் தேர் தந்தான் பாரி

5. சுவர் சாந்து பூசினாள் = …………………………

விடை: சுவர் + கு + சாந்து பூசினாள் = சுவர்க்குச் சாந்து பூசினாள்

இரண்டு சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.

கண் அழகு
உண்டு
கண்ணழகு கண்ணுண்டு
மண்
விண்
பண்
  • கண் + அழகு = கண்ணழகு
  • மண் + அழகு = மண்ணழகு
  • விண் + அழகு = விண்ணழகு
  • பண் + அழகு = பண்ணழழு
  • கண் + உண்டு= கண்ணுண்டு
  • மண் + உண்டு= மண்ணுண்டு
  • விண் + உண்டு = விண்ணுண்டு
  • பண் + உண்டு = பண்ணுண்டு

அகம் என முடியும் சொற்களை எழுதுக.

  • நூலகம்
  • மருந்தகம்
  • தலைமையகம்
  • எழிலகம்
  • அலுவலகம்
  • செயலகம்

கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.

1. திருக்குறள் ____________ பால்களைக் கொண்டது.

விடை : ௩ (3)

2. எனது வயது ____________

விடை : க௩ (13)

3. நான் படிக்கும் வகுப்பு ____________

விடை : எ (7)

4.  தமிழ் இலக்கணம் ____________   வகைப்படும்.

விடை : ரு (5)

5. திருக்குறளில் ____________  அதிகாரங்கள் உள்ளன.

விடை : க௩௩ (133)

6. இந்தியா ____________ ஆம் ஆண்டு விடுதலை பெற்றது.

விடை : க௯௪எ (1947)

குறிப்புகளைக் கொண்டு தலைவர்களின் பெயர்களைக் கட்டங்களிலிருந்து கண்டுபிடித்து எழுதுக.

தி ரு ப் பூ ர் கு ன்
ரு தா கா க் நா லை
ந் யா ர் டு ட்
ள் ஜி ரா ஜா யா ர் ம்
ளி ஜா தி யா பொ மை ன்
ரா ர் னா சி
ம் டி ண் பா மி
மை வா ஞ் சி நா ன் ழி ப்
ர் யா சி ச் நா லு வே ல் பு

1. மூதறிஞர் ____________

விடை: இராஜாஜி

2. வீரமங்கை ____________

விடை: வேலுநாச்சியார்

3. பாஞ்சாலங்குறிச்சி வீரன் ____________

விடை: கட்டபொம்மன்

4. வெள்ளையரை எதிர்த்த தீரன் ____________

விடை: சின்னமலை

5. கொடிகாத்தவர் ____________

விடை: திருப்பூர் குமரன்

6. எளிமையின் இலக்கணம் ____________

விடை: கக்கன்

7. தில்லையாடியின் பெருமை ____________

விடை: வள்ளியம்மை

8. கப்பலோட்டிய தமிழர் ____________

விடை: சிதம்பரனார்

9. பாட்டுக்கொரு புலவன் ____________

விடை: பாரதியார்

10. விருதுப்பட்டி வீரர் ____________

விடை: காமராஜர்

11. கள்ளுக்கடை மறியல் பெண்மணி ____________

விடை: நாகம்மை

12. மணியாட்சியின் தியாகி ____________

விடை: வாஞ்சிநாதன்

நிற்கு அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்.

  • கதைப்பாடல் – Ballad
  • பேச்சாற்றல் – Elocution
  • துணிவு – Courage
  • ஒற்றுமை – Unity
  • தியாகம் – Sacrifice
  • முழக்கம் – Slogan
  • அரசியல் மேதை – Political Genius
  • சமத்துவம் – Equality

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வழக்கு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வழக்கு __________ வகைப்படும்

  1. 4
  2. 3
  3. 2
  4. 6

விடை: 2

2. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது __________ ஆகும்.

  1. தகுதி வழக்கு
  2. இலக்கணப்போலி
  3. இயல்பு வழக்கு
  4. மரூஉ

விடை: இயல்பு வழக்கு

3. இயல்பு வழக்கு __________ வகைப்படும்

  1. 5
  2. 6
  3. 4
  4. 3

விடை: 3

4. வாசல் என்பது __________

  1. இலக்கணப்போலி
  2. இயல்பு வழக்கு
  3. இலக்கணமுடையது
  4. மரூஉ

விடை: மரூஉ

5. ___________ யை முன்பின்னாகத் தொக்க போலி எனவும் குறிப்பிடுவர்.

  1. இலக்கணப்போலி
  2. இயல்பு வழக்கு
  3. இலக்கணமுடையது
  4. மரூஉ

விடை: இலக்கணப்போலி

6. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து, சிதைந்து வழங்கும் சொற்கள்

  1. இலக்கணப்போலி
  2. இயல்பு வழக்கு
  3. மரூஉ
  4. இலக்கணமுடையது

விடை: மரூஉ

குறுவினா

1. இயல்பு வழக்கின் வகைகளை எழுதுக

  1. இலக்கணமுடையது
  2. இலக்கணப்போலி
  3. மரூஉ

2. இலக்கணப்போலி என்பது என்ன?

இலக்கண முறைப்படி அமையாவிடினும், இலக்கணமுடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படும்.

3. இடக்கரடக்கல் என்றால் என்ன?

பிறரிடம் வெளிப்படையாகச் சொல்லத் தகாத சொற்களைத் தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது இடக்கரடக்கல் ஆகும்.

4. குழூஉக்குறி என்றால் என்ன?

ஒரு குழுவினர் ஒரு பொருள் அல்லது செயலைக் குறிக்கத் தமக்குள் பயன்படுத்திக்கொள்ளும் சொற்கள் குழூஉக்குறி எனப்படும்.

5. போலியின் வகைகளை எழுதுக?

  • முதற்போலி
  • இடைபோலி
  • கடைப்போலி

6. முற்றுப்போலி என்றால் என்ன?

ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது முற்றுப்போலி எனப்படும்.

Leave a Comment