[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.5 Kutriyalugaram Kutriyaligaram Book Back Solution

இயல் ஒன்று – குற்றியலுகரம், குற்றியலிகரம்”

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.5 ‘Kutriyalugaram Kutriyaligaram’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.5 குற்றியலுகரம், குற்றியலிகரம்”

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.5 Kutriyalugaram Kutriyaligaram Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

குற்றியலுகரம், குற்றியலிகரம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kutriyalugaram Kutriyaligaram’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Kutriyalugaram Kutriyaligaram subject.

Next Lesson: சொலவடைகள்

கற்றவை கற்றபின்

ஒன்று முதல் பத்து வரையுள்ள எண்ணுப்பெயர்களைப் பட்டியலிட்டு எழுதுங்கள்; அவற்றில் குற்றியலுகரச் சொற்களை எடுத்து எழுதுங்கள்.

எண்ணுப்பெயர்கள்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து

குற்றியலுகரச் சொற்கள்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, எட்டு, ஒன்பது, பத்து

குற்றியலுகர எண்ணுப் பெயர்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

வன்தொடர் குற்றியலுகரம்

மூன்று, எட்டு, பத்து

மென்தொடர் குற்றியலுகரம்

ஒன்று, இரண்டு, நான்கு, ஐந்து, ஒன்பது

உயிர்த் தொடர் குற்றியலுகரம்

ஆறு

குற்றியலுகர எண்ணுப் பெயர்களின் மாத்திரை அளவைக் கண்டுபிடியுங்கள்.

எண்ணுப்பெயர்கள் மாத்திரை அளவு
ஒன்று 1 + ½ + ½ = 2
இரண்டு 1 + 1 + ½ + ½ = 3
மூன்று 2 + ½ + ½ = 3
நான்கு 2 + ½ + ½ = 3
ஐந்து 2 + ½ + ½ = 3
ஆறு 2 + ½ = 2½
ஏழு 2 + 1 = 3
எட்டு 1 + ½ + ½ = 2
ஒன்பது 1 + ½ + 1 + ½ = 3
பத்து 1 + ½ + ½ = 2

கு, சு, டு, து, று ஆகிய குற்றியலுகரத்தை இறுதியாகக் கொண்ட ஈரெழுத்துச் சொற்களைத் திரட்டுக.

  • கு – பாகு, வாகு
  • டு – பாடு, சாடு, ஓடு, விடு
  • சு – காசு, வீசு, பேசு
  • து – வாது, கேது, சாது, மாது
  • று – வறு, சேறு, செறு

மதீப்பீடு

கீழ்க்காணும் சொற்களைக் குற்றியலுகர வகையின் அடிப்படையில் வகைப்படுத்துக.

ஆறு, எஃகு, கரும்பு, விறகு, உழக்கு, எட்டு, ஏடு, பந்து, காசு, கொய்து

நெடில் தொடர் குற்றியலுகரம் காசு
ஆய்தத் தொடர் குற்றியலுகரம் எஃகு
உயிர்த் தொடர் குற்றியலுகரம் ஆறு, ஏடு, விறகு
வன் தொடர் குற்றியலுகரம் உழக்கு, எட்டு
மென் தொடர் குற்றியலுகரம் பந்து, கரும்பு
இடைத் தொடர் குற்றியலுகரம் கொய்து

பொருந்தாத சொற்களை எடுத்து எழுதுக.

1. பசு, விடு, ஆறு, கரு

விடை : கரு

2. பாக்கு, பஞ்சு, பாட்டு, பத்து

விடை : பஞ்சு

3. ஆறு, மாசு, பாகு, அது

விடை : அது

4. அரசு, எய்து, மூழ்கு, மார்பு

விடை : அரசு

5. பண்பு, மஞ்சு, கண்டு, எஃகு

விடை : எஃகு

குறுவினா

1. குற்றியலுகரம் என்னும் சொல்லைப் பிரித்து விளக்கம் தருக.

தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் ஆகும்

குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்

2. குற்றியலிகரம் என்றால் என்ன?

முழுமையாக ஒரு மாத்திரை அளவில் ஒலிக்காமல் அரைமாத்திரை அளவாகக் குறைந்து ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

மொழியை ஆள்வோம்

கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு ஏற்பத் தொடரில் அழுத்தம் தர வேண்டிய சொற்களை எடுத்து எழுதுக.

கோதை கவிதையைப் படித்தாள்

வினா அழுத்தம் தர வேண்டிய சொல்
கோதை எதைப் படித்தாள்? எதைப்
கவிதையைப் படித்தது யார்? யார்
கோதை கவிதையை என்ன செய்தாள்?   என்ன

படத்திற்குப் பொருத்தமான திணையை எழுதுக

Samacheer Kalvi 7th Tamil Guide Kutriyalugaram Kutriyaligaram Book Back Solution Samacheer Kalvi 7th Tamil Guide Kutriyalugaram Kutriyaligaram Book Back Solution Samacheer Kalvi 7th Tamil Guide Kutriyalugaram Kutriyaligaram Book Back Solution
உயர்திணை – ஆண்பால் அஃறிணை – ஒன்றன்பால் உயர்திணை –  பெண்பால்

கீழ்க்காணும் சொற்களை உயர்திணை, அஃறிணை என வகைப்படுத்துக.

வயல், முகிலன், குதிரை, கயல்விழி, தலைவி, கடல், ஆசிரியர், புத்தகம், சுரதா, மரம்

உயர்திணை அஃறிணை
முகிலன், கயல்விழி, தலைவி, ஆசிரியர் சுரதா வயல், குதிரை, கடல், புத்தகம், மரம்

தொகைச் சொற்களை விரித்து எழுதுக.

1. இருதிணை

விடை : உயர்திணை, அஃறிணை

2. முக்கனி

விடை : மா, பலா, வாழை

3. முத்தமிழ்

விடை : இயல், இசை, நாடகம்

4. நாற்றிசை

விடை : கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு

5. ஐவகைநிலம்

விடை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை

6. அறுசுவை

விடை : இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு, துவர்ப்பு

கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.

Class 7 Tamil Chapter 1.5 கட்டங்களிலுள்ள எழுத்துகளை மாற்றி, மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் எழுதினால் ஒரே சொல் வருமாறு கட்டங்களில் எழுதுக.

இரு பொருள் கொண்ட ஒரு சொல்லால் நிரப்புக.

1. அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண்டும்.
ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.

2. மழலை பேசும் மொழி அழகு.
இனிமைத் தமிழ் மொழி எமது.

3. அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும்.
அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை.

4. நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்
   எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது சொல்

5. உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர்.
குழந்தையை மெதுவாக நட என்போம்.

6. நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு.
நீச்சத் தண்ணி குடி’ என்பது பேச்சு வழக்கு

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்.

  • ஊடகம் – Media
  • பருவ இதழ் – Magazine
  • மொழியியல் – Linguistics
  • பொம்மலாட்டம் – Puppetry
  • ஒலியியல் – Phonology
  • எழுத்திலக்கணம் – Orthography
  • இதழியல் – Journalism
  • உரையாடல் – Dialogue

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “குற்றியலுகரம், குற்றியலிகரம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையை தேர்வு செய்க

1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் ____________ சொற்களாக மட்டும் அமையும்.

  1. ஓரெழுத்து
  2. ஈரெழுத்து
  3. மூவெழுத்து
  4. நான்கெழுத்து

விடை: ஈரெழுத்து

2. ஆயுதத்தொடர் குற்றியலுகரம் ____________ எழுத்தை தொடர்ந்து வரும்.

  1. உயிரெழுத்து
  2. ஆய்த 
  3. மெய் எழுத்து
  4. உயர்மெய் எழுத்து

விடை: ஆய்த

3. தனிநெடில் அல்லாத உயிர்மெய் எழுத்தைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்

  1. மென்தொடர் குற்றியலுகரம்
  2. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
  3. மெய்த்தொடர் குற்றியலுகரம்
  4.  வன்தொடர் குற்றியலுகரம்

விடை: உயிர்த்தொடர் குற்றியலுகரம்

குறு வினா

1. முற்றியலுகரம் என்பது என்ன? எ.கா. தருக

ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை முற்றியலுகரம் என்பர்

(எ.கா) புகு, பசு, விடு, அது, வறு, மாவு, ஏழு

2. குற்றிலியலுகரத்தின் வகைகளை கூறுக

  1. நெடில்தொடர் குற்றியலுகரம்
  2. ஆயுதத்தொடர் குற்றியலுகரம்
  3. உயிர்த்தொடர் குற்றியலுகரம்
  4. வன்த்தொடர் குற்றியலுகரம்
  5. மென்த்தொடர் குற்றியலுகரம்
  6. இடைத்தொடர் குற்றியலுகரம்

3. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்.

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

Leave a Comment