[Term-1] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 Pechumozhiyum Ezhuthumozhiyum Book Back Solution

இயல் ஒன்று – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.3 ‘Pechumozhiyum Ezhuthumozhiyum’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 1 Lesson 1.3 பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.3 Pechumozhiyum Ezhuthumozhiyum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

பேச்சுமொழியும் எழுத்துமொழியும் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Pechumozhiyum Ezhuthumozhiyum’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Pechumozhiyum Ezhuthumozhiyum subject.

Next Lesson: ஒன்றல்ல இரண்டல்ல

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.

  1. படித்தல்
  2. கேட்டல்
  3. எழுதுதல்
  4. வரைதல்

விடை : கேட்டல்

2. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.

  1. பேச்சு
  2. எழுத்து
  3. குரல்
  4. பாட்ட

விடை : எழுத்து

3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________

  1. உருது
  2. இந்தி
  3. தெலுங்கு
  4. ஆங்கிலம்

விடை : தெலுங்கு

4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்

  1. இலக்கிய
  2. உலக
  3. நூல்
  4. மொழி

விடை : உலக

சரியா தவறா என எழுதுக.

1. மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.

விடை : சரி

2. எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

விடை : சரி

3. பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.

விடை : தவறு

4. எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.

விடை : தவறு

5. பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம்.

விடை : சரி

ஊடகங்களை வகைப்படுத்துக.

வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்

எழுத்து மொழி: மின்னஞ்சல், செய்தித்தாள், நூல்கள்

பேச்சு மொழி: வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம்

குறு வினா

1. மொழியின் இரு வடிவங்கள் யாவை?

மொழியின் இரு வடிவங்கள் பேச்சு மொழி, எழுத்து மொழி ஆகும்.

2. பேச்சுமொழி என்றால் என்ன?

வாயினால் பேசப்பட்டு உணரப்படுவது பேச்சு மொழி ஆகும்

3. வட்டார மொழி எனப்படுவது யாது?

இடத்திற்கு இடம் பேச்சு மொழி மாறுபடும். மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் பேச்சுமொழி மாறுபடும். இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.

சிறு வினா

1. பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கனை விளக்குக.

பேச்சுமொழி எழுத்துமொழி
1. பேச்சுமொழியில் சொற்கள் குறுகி ஒலிக்கும்.

எ.கா. நல்லாச் சாப்டான்

எழுத்து மொழியல் சொற்கள் முழுமையாக எழுதப்படும்.

எ.கா. நன்றாகச்சாப்பிட்டான்

2. உணர்ச்சிக் கூறுகள் அதிகம் உணர்ச்சிக் கூறுகள் குறைவு
3. உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் உண்டு உடல் மொழி, குரல் ஏற்றத்தாழ்வுக்கு இடம் இல்லை
4. திருத்தமான மொழி நடையில் அமைகிறது திருத்தமான மொழி நடையில் அமைவதில்லை

2. கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன?

  • ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்கின்றன.
  • வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத்தடைகள் போன்றவற்றின் காரணமாக அவர்கள் பேசும் மொழியில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
  • அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பு குறையும் போது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அதுவே கிளை மொழி என்பர்
  • கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளை மொழி ஆகும்.

சிறு வினா

இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

  • இலக்கியங்கள் காலத்தை காட்டும் கண்ணாடி என்பர். இலக்கியங்கள் தோன்றிய காலச் சூழலை காட்டுவதாலும் பண்பாடு, நாகரிகம், சமூக வாழ்க்கை ஆகியவற்றைக் காட்டுவதாலும் அவை அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
  • வாழ்வோடு இணைந்த சுவை கொண்டு இலக்கியங்கள் படைக்கப்படுவதாலும் நீதி நெறிகளை முன் வைப்பதாலும் இன்றும் இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதாலும் இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்கின்றன.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “பேச்சுமொழியும் எழுத்துமொழியும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பேசுவதும் கேட்பதும் மொழியின் ______________ ஆகும்.

  1. மூன்றாம் நிலை
  2. முதல் நிலை
  3. இரண்டாம் நிலை
  4. நான்காம் நிலை

விடை : முதல் நிலை

2. பேச்சு மொழியின் __________ வடிமே எழுத்து மொழி

  1. ஒலி
  2. ஒளி
  3. வரி

விடை : வரி

3. பேச்சு மொழி ______________ பிறரால் உணரப்படுகிறது

  1. பேசப்பட்டு
  2. எழுதப்பட்ட
  3. அறிமுகப்படுத்தி
  4. உரைத்தும்

விடை : பேசப்பட்டு

4. கண்ணால் கண்டு உணருமாறு வரி வடிவமாக எழுதப்பட்டு படிக்கப்படுவது ___________________ ஆகும்.

  1. செய்கை மொழி
  2. எழுத்து மொழி
  3. இலக்கிய மொழி
  4. பேச்சு மொழி

விடை : எழுத்து மொழி

5. எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பில்
    திரிபும் தத்தமில் சிறிது உள வாகும் பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. நாலடியார்
  2. நன்னூல்
  3. நான்மணிக்கடிகை
  4. திருவள்ளுவமாலை

விடை : நன்னூல்

5. கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் ______________  பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.

  1. ஆங்கிலத்திலிருந்து
  2. தமிழிலிருந்து
  3. சமஸ்கிருதத்திலிருந்து
  4. பாரசீகத்திலிருந்து

விடை : தமிழிலிருந்து

6. எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்
    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும் இவ்வடிகளின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. திருவள்ளுவர்

விடை : பாரதிதாசன்

7. மின்னஞ்சல் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. மின்ன + அஞ்சல்
  2. மின் + அஞ்சல்
  3. மின் + நஞ்சல்
  4. மின்ன + ஞ்சல்

விடை : மின் + அஞ்சல்

8. செய்தித்தாள் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. செய்தித் + தாள்
  2. செய்தி + தாள்
  3. செய்தி + த்தாள்
  4. செய்த் + தாள்

விடை : செய்தி + தாள்

9. திரை + படம் என்பதனை சேர்த்து எழுதக் கிடைப்பது

  1. திரை படம்
  2. திரைப்படம்
  3. திரைப்பாடம்
  4. திரை பாடம்

விடை : திரைப்படம்

குறுவினா

1. இரட்டை வழக்கு மொழி என்பது யாது?

பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால் அஃது இரட்டை வழக்கு மொழி (Diglossic Language) எனப்படும்.

2. தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகளை கூறுக

கன்னடம், தெலுங்கு, மலையாளம்

3. தமிழ் மொழி எவையெல்லாம் நிறைந்தது?

பழைமை, புதுமை

4. மொழி என்பது எதற்காக உருவாக்கப்பட்டது?

தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காகவே மனிதனால் உருவாக்கப்பட்டது.

Leave a Comment