[Term-3] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 1.3 Thikellam Pugalurum Thirunelveli Book Back Solution

இயல் மூன்று – திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 1.3 ‘Thikellam Pugalurum Thirunelveli’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 3 Lesson 1.3 திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 1.3 Thikellam Pugalurum Thirunelveli Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thikellam Pugalurum Thirunelveli’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Thikellam Pugalurum Thirunelveli subject.

Next Lesson: வயலும் வாழ்வும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. திருநெல்வேலி_________ மன்னர்களோடு தொடர்பு உடையது.

  1. சேர
  2. சோழ
  3. பாண்டிய
  4. பல்லவ

விடை : பாண்டிய

2. இளங்கோவடிகள் _________ மலைக்கு முதன்மை கொடுத்துப் பாடினார்.

  1. இமய
  2. கொல்லி
  3. பொதிகை
  4. விந்திய

விடை : பொதிகை

3. திருநெல்வேலி _________ ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

  1. காவிரி
  2. வைகை
  3. தென்பெண்ணை
  4. தாமிரபரணி

விடை : தாமிரபரணி

பொருத்துக

  1. தண்பொருநை –  பொன்நாணயங்கள் உருவாக்கும் இடம்
  2. அக்கசாலை –  குற்றாலம்
  3. கொற்கை –  தாமிரபரணி
  4. திரிகூடமலை –  முத்துக் குளித்தல்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஈ, 4 – ஆ

குறு வினா

1. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகள் யாவை?

பச்சையாறு, மணிமுத்தாறு, சிற்றாறு, காரையாறு, சேர்வலாறு, கடனாநதி

2. கொற்கை முத்து பற்றிக் கூறுக.

  • தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் இருந்தது.
  • இங்கு முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றதாகத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
  • கொற்கையில் விளைந்த பாண்டி நாட்டு முத்து உலகப் புகழ் பெற்றதாக விளங்கியது

சிறு வினா

1. திருநெல்வேலிப் பகுதியில் நடைபெறும் உழவுத் தொழில் குறித்து எழுதுக.

  • திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையகா பங்கு வகிப்பது உழவுத்தொழில்.
  • தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு உழவுத்தொழில் நடைபெறுகின்றது.
  • குளத்து பாசனமும், கினற்றும் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன. இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகிறது
  • மானாவாரிப்பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள், காய்கனிகள், பருத்தி, பயறு வகைகள் போன்றவை பயிரிடப்படுகின்றன.

2. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

  • அகத்தியர் பொதிகை மலையில் வாழ்ந்தார் என்பர்
  • சங்கப்புலவரான மாறோக்கத்து, நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக்கவிராயர், கவிராசப் பண்டிதர் ஆகியோர் திருநெல்வேலிச் சீமையில் பிறந்து தமிழுக்குச் செழுமை சேர்த்துள்ளனர்
  • அயல் நாட்டு அறிஞர்களான ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர் போன்றோரையும் தமிழின்பால் ஈர்த்த பெருமைக்கு உரியது திருநெல்வேலி

3. திருநெல்வேலி நகர அமைப்புப் பற்றிக் கூறுக

  • நெல்லையில் உள்ள தெருக்கள் அதன் பழமைக்குச் சான்றாக உள்ளது.
  • காவற்புரைத் தெரு என்று ஒரு தெரு உள்ளது. அரசால் தண்டிக்கப்பட்டவர்கள் இங்கு சிறை வைக்கப்பட்டதால் இப்பெயர் பெற்றது
  • மேல வீதியை அடுத்து கூழைக்கடைத்தெரு உள்ளது. அதாவது தானியங்கள் விற்கும்  கடைத்தெரு ஆகும்
  • முற்காலத்தில் பொன் நாணயங்களை உருவாக்குபவர் வாழ்ந்த இடம் அக்கசாலைத் தெரு. பெரு வணிகம் நடைபெற்ற இடம் பேட்டை

சிந்தனை வினா

மக்கள் மகிழ்ச்சியாக வாழ ஒரு நகரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

  • இயற்கை வளம் மிகுந்ததாக இருக்க வேண்டும்.
  • அனைத்துப் பொருட்களும் அருகில் கிடைக்கும் படி இருக்க வேண்டும்.
  • சாதி மத பேதமின்றி மத நல்லிணகத்தைப் போற்றும் படியாக இருக்க வேண்டும்.
  • சுற்றுப்புறத்தூய்மை உடையதாக இருக்க வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரமாக விளங்கிய நகர்

  1. பாஞ்சாலங்குறிச்சி
  2. சாத்தூர்
  3. கோவில்பட்டி
  4. திருநெல்வேலி

விடை : திருநெல்வேலி

2. திருநெல்வேலி என்பதன் மருவிய சொல்

  1. நெல்லை 
  2. திருவேலி
  3. திருநெல்
  4. நெல்வேலி

விடை : நெல்லை

3. திருநெல்வேலியை திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி என போற்றியவர்

  1. திருநாவுக்கரசர்
  2. திருஞானசம்பந்தர்
  3. சேக்கிழார்
  4. மாணிக்கவாசகர்

விடை : திருஞானசம்பந்தர்

4. தண்பொருநைப் புனல் நாடு என்று ___________ திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளவர்.

  1. திருநாவுக்கரசர்
  2. சேக்கிழார்
  3. திருஞானசம்பந்தர்
  4. மாணிக்கவாசகர்

விடை : சேக்கிழார்

5. திரிகூடமலை என வழங்கப்படும் மலை

  1. இமயமலை
  2. கிழக்கு தொடர்ச்சி மலை
  3. விந்திய மலை
  4. குற்றாலமலை

விடை : குற்றாலமலை

6. வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. திருகுற்றாலக்குறவஞ்சி
  2. முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
  3. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
  4. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்

விடை : திருகுற்றாலக்குறவஞ்சி

7. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் நகர்

  1. பேட்டை
  2. சேரன்மகாதேவி
  3. செங்கோட்டை
  4. பாளையங்கோட்டை

விடை : பாளையங்கோட்டை

8. முற்காலத்தில் வேணுவனம் என குறிப்பிடப்படும் இடம்

  1. திருநெல்வேலி
  2. சேரன்மகாதேவி
  3. செங்கோட்டை
  4. பாளையங்கோட்டை

விடை : திருநெல்வேலி

9. வேணுவனம் என்பதன் பொருள்

  1. மூங்கில்நாடு
  2. மூங்கில் மரம்
  3. மூங்கில்காடு
  4. மூங்கில்

விடை : மூங்கில்காடு

10. தன்பொருநை நதி எனப்படும் ஆறு

  1. காவிரி ஆறு
  2. கங்கை ஆறு
  3. தாமிரபரணி
  4. நொய்யல் ஆறு

விடை : தாமிரபரணி

11. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் _________________ முதலிடம் வகிக்கின்றது

  1. சேரன்மகாதேவி
  2. செங்கோட்டை
  3. பாளையங்கோட்டை
  4. திருநெல்வேலி

விடை : திருநெல்வேலி

12. தாமிரபரணி கடலோடு கலக்கும் இடத்தில் _________________ என்னும் துறைமுகம் இருந்தது.

  1. பூம்புகார்
  2. கொற்கை
  3. காவிரிபூம்பட்டினம்
  4. காசிமேடு

விடை : கொற்கை

13. முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுறை – வரிகள் இடம் பெற்ற நூல்

  1. அகநானூறு
  2. குறுந்தொகை
  3. நற்றிணை
  4. புறநானூறு

விடை : நற்றிணை

14. திருநெல்வேலியினை வளம் செழிக்க செய்யும் ஆறு

  1. காவிரி ஆறு
  2. தாமிரபரணி
  3. கங்கை ஆறு
  4. நொய்யல் ஆறு

விடை : தாமிரபரணி

15. வானரங்கள் கொற்கையில் பெருந்துறை முத்து என்ற வரிகள் இடம் பெற்ற நூல்

  1. நற்றிணை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. குறுந்தொகை

விடை : அகநானூறு

16. வணிகம் நடைபெறும் பகுதி __________ என அழைக்கப்படுகிறது

  1. சேரன்மகாதேவி
  2. செங்கோட்டை
  3. பாளையங்கோட்டை
  4. பேட்டை

விடை : பேட்டை

17. திங்கள் நாள்விழா மல்கு திருநெல்
வேலியுறை செல்வர் தாமே
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. தேவாரம்
  2. திருகுற்றாலக்குறவஞ்சி
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : தேவாரம்

18. பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு அறியாப் பழங்குடி
என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்

  1. மணிமேகலை
  2. அகநானூறு
  3. புறநானூறு
  4. சிலப்பதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

குறு வினா

1. திருநெல்வேலி என்று பெயர் வரக்காரணம் என்ன?

திருநெல்வேலி நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலி  போல் அமைந்திருந்ததால் திருநெல்வேலி எனப் பெயர்  பெற்றது.

2. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுவை எவை?

தாமிரபரணி ஆற்றின் மேற்குக் கரையில் திருநெல்வேலியும் கிழக்கு கரையில் பாளையங்கோட்டை அமைந்துள்ளன. இவ்விரு நகரங்களும்  இரட்டை நகரங்கள் என அழைக்கப்படுகின்றன.

3. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எது?

தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு பாளையங்கோட்டை

4. திருநெல்வேலியின் வரலாற்றை நினைவூட்டும் ஊர்கள் எவை?

  • சேரன்மகாதேவி
  • கங்கைகொண்டான்
  • திருமலையப்பபுரம்
  • வீரபாண்டியப்பட்டினம்
  • குலசேகரப்பட்டினம்

5. திருநெல்வேலியில் உள்ள கோட்டைகள் சான்றுகள் எவை?

  • பாளையங்கோட்டை
  • உக்கிரன்கோட்டை
  • செங்கோட்டை

 

Leave a Comment