Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 8.3 Ayothidasar Sinthanaigal Book Back Solution

இயல் 8.3 – அயோத்திதாசர் சிந்தனைகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 8.3 ‘Ayothidasar Sinthanaigal’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 8.3 அயோத்திதாசர் சிந்தனைகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 8.3 Ayothidasar Sinthanaigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

அயோத்திதாசர் சிந்தனைகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ayothidasar Sinthanaigal’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Ayothidasar Sinthanaigal Subject.

Previous Lesson: மெய்ஞ்ஞான ஒளி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. அயோத்திதாசர் _____________ சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

 1. தமிழக
 2. இந்திய
 3. தென்னிந்திய
 4. ஆசிய

விடை : தென்னிந்திய

2. அயோத்திதாசர் நடத்திய இதழ் _____________

 1. ஒருபைசாத் தமிழன்
 2. காலணாத் தமிழன்
 3. அரைப்பைசாத் தமிழன்
 4. அரையணாத் தமிழன்

விடை : ஒருபைசாத் தமிழன்

3. கல்வியோடு _____________ கற்க வேண்டும் என்பது அயோத்திதாசர் கருத்து.

 1. சிலம்பமும்
 2. கைத்தொழிலும்
 3. கணிப்பொறியும்
 4. போர்த்தொழிலும்

விடை : கைத்தொழிலும்

4. அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தளமாக அமைந்தது அவரது _____________

 1. ஆழ்ந்த படிப்பு
 2. வெளிநாட்டுப்பயணம்
 3. இதழியல் பட்டறிவு
 4. மொழிப்புலமை

விடை : ஆழ்ந்த படிப்பு

5. மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது _____________

 1. வானம்
 2. கடல்
 3. மழை
 4. கதிரவன்

விடை : மழை

சிறு வினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

 1. நல்ல சிந்தனை
 2. சிறப்பான செயல்
 3. உயர்வான பேச்சு
 4. உவப்பான எழுத்து
 5. பாராட்டத்தக்க உழைப்பு

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வாறு இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

ஒரு சிறந்த வழிகாட்டி இருக்க அயோத்திதாசர் ஒருவர்

 • ஒரு சிறந்த வழிகாட்டி மக்களுள் மாமனிதராக
 • அறிவாற்றல் பெற்றவராக
 • நன்னெறியைக் கடைப்பிடிப்பவராக இருக்க வேண்டும்

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

 • அயோத்திதாசரின் கொள்கைகளை வலியுறுத்தவும்
 • ஒடுக்கபட்டோர் நலன் பாதுகாக்கவும்
 • சாலைகள் அமைக்கவும்,
 • கால்வாய்களை பராமரிக்கவும்,
 • குடிகளின் பாதுகாப்புக் காவல்துறையினை நியமதித்தல்,
 • பொது மருத்துவமனைகள் அமைத்தல்,
 • சிறார்கள் தோறும் கல்விகூடங்கள் ஏற்படுத்துதல்

ஆகியவற்றிற்காக திராவிட மகாஜன சங்கம் போராடியது

சிறு வினா

1. அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.

 • 1907-ம் ஆண்டு சென்னையில் “ஒரு பைசா தமிழன்” என்னும் வார இதழைக் காலணா விலையில் தொடங்கினார்.
 • ஓராண்டிற்குப் பிறகு அதன் பெயரைத் “தமிழன்” என மாற்றினார்.
 • மக்களுக்கு நீதி, நேர்மை, சரியான பாதை ஆகியவற்றைத் தெளிவு படுத்துவதே இந்த இதழின் நோக்கம் என்று அயோத்திதாசர் குறிப்பிட்டார்.
 • தமிழன் இதழ் தமிழ்நாடு மட்டுமின்றி மைசூர், கோலார், ஐதராபாத், இரங்கூன், மலேசியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் வாழ்ந்த தமிழர்களுக்கும் பகுத்தறிவுச் சிந்தனை, இன உணர்வு, சமுகச் சிந்தனை ஆகியவற்றை ஊட்டினார்.

2. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின் கருத்துகள் யாவை?

 • விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் அன்று. அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது அயோத்திதாசரின் கருத்து.
 • சுயராஜ்ஜியத்தின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதாக மட்டும் இருக்கக் கூடாது.
 • மக்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக அது அமைய வேண்டும்.
 • மக்களின் வாழ்க்கையில் மாற்றம் உண்டானால் ஒழிய, நாடு முன்னேற முடியாது என்று ஆணித்தரமாக் கூறினார் அயோத்திதாசர்.

நெடு வினா

வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றிய அயோத்திதாசரின் சிந்தனைகளைத் தொகுத்து எழுதுக

வாழும் முறை

 • அன்பு கொண்டு வாழ வேண்டும். கோபம், பொறாமை, களவு, பொய் போன்றவற்றை நீக்கி வாழ வேண்டும்.
 • பிற உயிர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது.
 • அறிவை அழிக்கும் போதைப் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது

சமத்துவம்

 • அயோத்திதாசர் மக்கள் அனைவரும் சம உரிமை பெற்று சமத்துவமாக வாழ வேண்டும் என்று விரும்பினார்.
 • கல்வி, வேளாண்மை, காவல் துறை போன்ற அனைத்து துறைகளிலும் மக்கள் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும்.
 • ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் எல்லா வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம்  வழங்கப்பட வேண்டும்.
 • இந்து, பெளத்தம், கிறிஸ்துவர், இஸ்லாமியர், ஆங்கிலோ இந்தியர், ஐரோப்பியர் போன்ற அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் அயோத்திதாசர்

சிந்தனை வினா

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால் மக்களிடம் இருக்க வேண்டிய உயர்பண்புகள் யாவை?

ஒரு சமூகம் உயர்வடைய வேண்டுமானால், மக்களிடம அன்பு, பெறாமை, சகிப்புத்தன்மை, ஒருமைப்பாட்டு உணர்வு, மனிதநேயம், இரக்கம், கொடை, உணர்வு, சமத்துவம், பிறர் நிலையில் தன்னை வைத்துப் பாரத்தல், உதவும் மனப்பான்மை ஆகிய உயர் பண்புகள் இடம் பெற்றிருக்க வேண்டும்.

 

பின்வரும் பகுதியில் “அயோத்திதாசர் சிந்தனைகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்கள் _____________, _____________

 1. பெரியார், அம்பேத்கர்
 2. பெரியார், அண்ணாதுரை
 3. அம்பேத்கர், அண்ணாதுரை
 4. கருணாநிதி, அண்ணாதுரை

விடை: பெரியார், அம்பேத்கர்

2. தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்ததின் தந்தை என்று போற்றப்படுபவர்

 1. மகாத்மா காந்தி
 2. அயோத்திதாசர்
 3. பாரதியார்
 4. தந்தை பெரியார்

விடை : அயோத்திதாசர்

3. அயோத்திதாசர் பிறந்த ஆண்டு

 1. 1844
 2. 1845
 3. 1846
 4. 1847

விடை : 1845

4. அயோத்திதாசரின் இயற்பெயர் _____________

 1. காத்தவராயன்
 2. ராமசாமி
 3. பீமாராவ்
 4. குருசாமி

விடை : காத்தவராயன்

5. அயோத்திதாசர் என்பவர் காத்தவராயனின் _______________

 1. நண்பர்
 2. சகோதரர்
 3. மருத்துவர்
 4. ஆசிரியர்

விடை : ஆசிரியர்

6. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களில் பொருந்தாதது

 1. போகர் எழுநூறு
 2. அகத்தியர் இருநூறு
 3. சிமிட்டு இரத்திரனச் சுருக்கம்
 4. பால சுருக்கம்

விடை : பால சுருக்கம்

7. என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டித மணி அயோத்திதாசரும் தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள் எனக் கூறியவர்

 1. பேரறிஞர் அண்ணாதுரை
 2. அண்ணல் அம்பேத்கர்
 3. கலைஞர் கருணாநிதி
 4. தந்தை பெரியார்

விடை : தந்தை பெரியார்

8. ஒரு பைசாத்தமிழன் என்னும் வார இதழின் ஆசிரியர் _______________

 1. மகாத்மா காந்தி
 2. பாரதியார்
 3. அயோத்திதாசர்
 4. தந்தை பெரியார்

விடை : அயோத்திதாசர்

9. ஒரு பைசாத்தமிழன் வார இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு _____________

 1. 1904
 2. 1906
 3. 1907
 4. 1909

விடை : 1907

10. ஒரு பைசாத்தமிழன் இதழ் ஓராண்டிற்குப் பிறகு அடைந்த பெயர் மாற்றம் _____________

 1. தமிழன்
 2. தேசபக்தன்
 3. நேதாஜி
 4. திராவிடன்

விடை : தமிழன்

11. அயோத்திதாசர் எழுதிய நூல்களில் பொருந்தாதது

 1. திருமண விவாகம்
 2. புத்தரது ஆதிவேதம்
 3. இந்திரர் தேச சரித்திரம்
 4. புத்தர் சரித்திரப்பா

விடை : திருமண விவாகம்

12. அயோத்திதாசர் திருவள்ளுவர், ஔவையார் ஆகியோரின் படைப்புகளுக்குப் __________ கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.

 1. பௌத்த
 2. சமணக்
 3. சைவ
 4. வைணவ

விடை : பௌத்த

12. சென்னை ___________ உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

 1. தாம்பரத்தில்
 2. கோடம்பாக்கத்தில்
 3. எழும்பூரில்
 4. வியார்பாடியில்

விடை : தாம்பரத்தில்

13. திராவிட மகாஜன சங்கம் என்னும் அமைப்பைத்  தேற்றுவித்த ஆண்டு

 1. 1891
 2. 1892
 3. 1893
 4. 1894

விடை : 1892

குறு வினா

1. அயோத்திதாசரின் இயற்பெயர் என்ன?

அயோத்திதாசர் இயற்பெயர் காத்தவராயன்

2. அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் சிலவற்றை கூறுக

போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்

3. அயோத்திதாசர் எழுதிய நூல்கள் சிலவற்றைக் கூறுக

புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா

4. அயோத்திதாசர் திராவிட மகாஜனசங்கம் நிறுவக்காரணம் என்ன?

அயோத்திதாசரின் தமது கொள்கைகளை வலியுறுத்தவும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் 1892-ல் திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்

5. யாருடைய படைப்புகளுக்கு பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் அயோத்திதாசர் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்?

திருவள்ளுவர், ஒளவையார்

Leave a Comment