இயல் 3.1 – நோயும் மருந்தும்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 3.1 ‘Noyum Marunthum’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 3.1 நோயும் மருந்தும்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 3.1 Noyum Marunthum Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.
நோயும் மருந்தும் பாடல் வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Noyum Marunthum’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Noyum Marunthum subject.
நோயும் மருந்தும் பாடல்
தீர்வனவும் தீராத் திறத்தனவும் செய்ம்மருந்தின் ஊர்வனவும் போலாதும் உவசமத்தின் உய்ப்பனவும் யார்வினவும் காலும் அவைமூன்று கூற்றவா நேர்வனவே ஆகும் நிழல்இகழும் பூணாய் பேர்தற்கு அரும்பிணி தாம்இவை அப்பிணி |
பாடலின் பொருள்
ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மைபற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக. மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை. அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
நூல்வெளி
- நீலகேசி ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
- இந்நூல் சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்துச் சருக்கங்களை கொண்டது.
- சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூலான இதன் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.
- நீலகேசிக் காப்பியத்தின் தருமவுரை சருக்கத்திலிருந்து இரண்டு பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன.
சொல்லும் பொருளும்
- தீர்வன – நீங்குபவை
- திறத்தன – தன்மையுடையன
- உவசமம் – அடங்கி இருத்தல்
- கூற்றவா – பிரிவுகளாக
- நிழல்இகழும் – ஒளிபொருந்திய
- பூணாய் – அணிகலன்களை அணிந்தவளே
- பேர்தற்கு – அகற்றுவதற்கு
- பிணி – துன்பம்
- திரியோகமருந்து – மூன்று யோகமருந்து
- ஓர்தல் – நல்லறிவு
- தெளிவு – நற்காட்சி
- பிறவார் – பிறக்கமாட்டார்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. உடல் நலம் என்பது ___________ இல்லாமல் வாழ்தல் ஆகும்.
- அணி
- பணி
- பிணி
- மணி
விடை : பிணி
2. நீலகேசி கூறும் நோயின் வகைகள் ___________
- இரண்டு
- மூன்று
- நான்கு
- ஐந்து
விடை : மூன்று
3. இவையுண்டார் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது ___________
- இ + யுண்டொர்
- இவ் + உண்டொர்
- இவை + உண்டார்
- இவை + யுண்டொர்
விடை : இவை + உண்டார்
4. தாம் + இனி என்பதை்சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ___________
- தாம் இனி
- தாம்மினி
- தாமினி
- தாமனி
விடை : தாமினி
குறு வினா
1. நோயின் மூன்று வகைகள் யாவை?
- மருந்தினால் நீங்கும் நோய்
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?
- நல்லறிவு
- நற்காட்சி
- நல்லாெழுக்கம்
சிறு வினா
நோயின் வகைகள், அவற்றைத் தீர்க்கும் வழிகள் பற்றி நீலகேசி கூறுவன யாவை?
- ஒளிபொருந்திய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நோயின் தன்மை பற்றி யார் வினவினாலும் அது மூன்று வகைப்படும் என அறிவாயாக.
- மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை.
- எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள் மற்றொரு வகை.
- வெளியில் ஆறி உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை.
- அகற்றுவதற்கு அரியவை பிறவித் துன்பங்கள் ஆகும்.
- இவற்றைத் தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையே அம்மருந்துகள்.
- இவற்றை ஏற்றோர் பிறவித் துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.
சிந்தனை வினா
துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?
தருமம் செய்தல், கோபத்தை தணித்தல், முயற்சி செய்தல், கல்வி கற்றல், உலக டையை அறிந்து நடத்தல், நல்ல நூல்களைப் படித்தல், பெறாமை படாமல் இருத்தல், பொய்சாட்சி சொல்லாமல் இருத்தல், இனிமையாகப் பேசுதல், பேராசையைத் தவிர்த்தல், நட்புடன் பழகுதல், பெரியோர்களை மதித்தல், ஒழுக்கம் தவறாமல் இருத்தல், நன்றியை மறவாமல் இருத்தல், காலத்தைக் கடைபிடித்தல், களவு செய்யாதிருத்தல், இழிவானதைத் செய்யாதிருத்தல், இரக்கம் கொள்ளுதல், பொய் சொல்லாதிருத்தல், ஆணவம் கொள்ளாதிருத்தல், சுறுசுறுப்புடன் இருத்தல், உடற்பயிற்சி செய்தல், அதிகாலையில் எழுந்திருத்தல் போன்றவை கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் ஆகும்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “நோயும் மருந்தும்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. ___________ ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று
- சிலப்பதிகாரம்
- நீலகேசி
- மணிமேகலை
- குண்டலகேசி
விடை : நீலகேசி
2. உவசமம் என்பதன் பொருள்
- நீங்குபவை
- அடங்கி இருத்தல்
- அகற்றுவதற்கு
- நல்லறிவு
விடை : அடங்கி இருத்தல்
3. நோயை தீர்க்கும் மருந்துகள் …………….
- 2
- 3
- 4
- 5
விடை : 3
4. கூற்றவா என்பதன் பொருள்
- நீங்குபவை
- பிரிவுகளாக
- ஒளிபொருந்திய
- நல்லறிவு
விடை : பிரிவுகளாக
5. ஓர்தல் என்பதன் பொருள்
- நற்காட்சி
- நல்லறிவு
- நல்லொழுக்கம்
- நல்லெண்ணம்
விடை : நல்லறிவு
6. தெளிவு என்பதன் பொருள்
- நல்லறிவு
- நல்லொழுக்கம்
- நல்லெண்ணம்
- நற்காட்சி
விடை : நற்காட்சி
7. நீலகேசி ___________ சமயத்தினை சார்ந்தது
- இந்து
- சமணம்
- புத்தம்
- கிறித்தவம்
விடை : சமணம்
8. தெளிவோடு என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- தெளிவ் + ஓடு
- தெளிவு + ஓடு
- தெளிவு + வோடு
- தெளிவு + யோடு
விடை : தெளிவு + ஓடு
9. ஐம்பெருங்காப்பியம் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
- ஐந்து + பெருங்காப்பியம்
- ஐந்து + பெருமை + காப்பியம்
- ஐந்து + பெரு + காப்பியம்
- ஐந்து + பெருங் + காப்பியம்
விடை : ஐந்து + பெருமை + காப்பியம்
10. பிணி + உள் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- பிணிஉள்
- பிணியுள்
- பிணியுள
- பிணிஉள
விடை : பிணியுள்
11. இன்பம் + உற்றே என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
- இன்பமுறே
- இன்பமுற்றே
- இன்பஉறே
- இன்பஉற்றே
விடை : இன்பமுற்றே
குறு வினா
1. பிறவித் துன்பங்களை தீர்க்கக் கூடிய மருந்தகளாக நீலேகேசி கூறுவன யாவை?
நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
2. மக்களின் உடலுக்கும், உள்ளத்திற்கும் துன்பம் தருவன எது?
நோய்
3. ஐம்பெருகாப்பியங்கள் யாவை?
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
4. ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?
சூளாமணி, நீலகேசி, உதயண குமார காவியம், யசோதர காவியம், நாககுமார காவியம்
சிறு வினா
நீலகேசி குறிப்பு வரைக
- ஐஞ்சிறுகாப்பியங்களுள் ஒன்று.
- சமணசமயக் கருத்துகளை வாதங்களின் அடிப்படையில் விளக்குகிறது.
- கடவுள் வாழ்த்து நீங்கலாக பத்துச் சருக்கங்களை கொண்டது.
- சமயத் தத்துவங்களை விவாதிக்கும் தருக்க நூல்
- ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை.