Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 9.3 Sattamethai Ambedkar Book Back Solution

இயல் 9.3 – சட்டமேதை அம்பேத்கர்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 9.3 ‘Sattamethai Ambedkar’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 9.3 சட்டமேதை அம்பேத்கர்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 9.3 Sattamethai Ambedkar Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

சட்டமேதை அம்பேத்கர் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sattamethai Ambedkar’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Sattamethai Ambedkar Subject.

Previous Lesson: இளைய தோழனுக்கு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் _____________

  1. இராதாகிருட்டிணன்
  2. அம்பேத்கர்
  3. நௌரோஜி
  4. ஜவஹர்லால் நேரு

விடை : அம்பேத்கர்

2. பூனா ஒப்பந்தம் _____________ மாற்ற ஏற்படுத்தப்பட்டது.

  1. சொத்துரிமையை
  2. பேச்சுரிமையை
  3. எழுத்துரிமையை
  4. இரட்டை வாக்குரிமையை

விடை : இரட்டை வாக்குரிமையை

3. “சமத்துவச் சமுதாயம்” அமைய அம்பேத்கர் ஏற்படுத்திய இயக்கம் _____________

  1. சமாஜ் சமாத சங்கம்
  2. சமாத சமாஜ பேரவை
  3. தீண்டாமை ஒழிப்புப் பேரவை
  4. மக்கள் நல இயக்கம்

விடை : சமாஜ் சமாத சங்கம்

4. அம்பேத்கரின் சமூகப்பணிகளைப் பாராட்டி இந்திய அரசு _____________ விருது வழங்கியது.

  1. பத்மஸ்ரீ
  2. பாரத ரத்னா
  3. பத்மவிபூசண்
  4. பத்மபூசன்

விடை : பாரத ரத்னா

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. புத்த சமயம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய நூல் _____________

விடை : புத்தரும் அவரின் தம்மமும்

2. அம்பேத்கர் நிறுவிய அரசியல் கட்சியின் பெயர் _____________

விடை : சுதந்திர தொழிலாளர் கட்சி

3. பொருளாதாரப் படிப்பிற்காக அம்பேத்கர் _____________ சென்றார்.

விடை : இலண்டன்

குறு வினா

1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக்கொண்டார்?

பீமாராவ் ராம்ஜி படித்த பள்ளியில் மகாதேவ் அம்பேத்கர் என்ற ஆசிரியர், பீமாராவ் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இதனால், பீமாராவ் என்னும் தம் பெயரைப் அம்பேதகர் என்று மாற்றிக் கொண்டார்.

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.

  • தீண்டாமைக்கு எதிராக, “ஒடுக்கப்பட்ட பாரதம்” என்னும் இதழை 1927-ம் ஆண்டு தொடங்கினார்.
  • மேலும் 1930-ம் ஆண்டு நாசிக் கோயில் நுழைவு போராட்டத்தை நடத்தி வெற்றி கொண்டார்.

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன்னர் “என் மக்களுக்குகாக நியாயமாக என்ன கிடைக்க வேண்டுமே, அதற்காகப் போராடுவேன். அத சமயத்திர் சுயராஜ்ஜிய கோர்க்கைகளை முழு மனதுடன் ஆதரிப்பேன்” என்று கூறினார்.

சிறு வினா

1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?

மக்கள் ஆட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றில் இருந்து இந்திய நடைமுறைகளுக்குப் பொருந்தும் சட்டக் கூறுகளையும், இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, அயர்லாந்து முதலிய நாடுகளின் சட்டங்களையும் ஆராய்ந்து இந்திய நாட்டிற்கான சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.

2. அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக.

  • 1935-ம் ஆண்டில் மாநில சுயாட்சி வழங்குவதற்கான இந்திய அரசாங்கச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
  • ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் நலனைப் பாதுகாக்க தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்.
  • சுதந்திர தொழிலாளர் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.
  • அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் 15 பேரையும் வெற்றி பெறச் செய்தார்.

நெடு வினா

பூனா ஒப்பந்தம் பற்றி எழுதுக

  • “ஒடுகக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும்” என்று இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்தினார்.
  • இதன் விளைவாக, ஒரு தொகுதியில் பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும், ஒடுக்கப்பட்ட சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க ஒரு வாக்கும் அளிக்கும் இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • அதனால் இதை ஏற்க மறுத்த காந்தியடிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • இதன் விளைவாக 24.09.1931-ல் காந்தியடிகளும், அம்பேத்கரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
  • அதன்படி, ஒடுக்கப்பட்டோருக்குத் தனி வாக்குரிமை என்பதற்குப் பதிலாக பொது வாக்கெடுப்பில் தனித்தொகுதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
  • ஒந்த ஒப்பந்தமே பூனா ஒப்பந்தம் எனப்பட்டது.

சிந்தனை வினா

பாகுபாடில்லாத மக்கள் சமூகம் உருவாக நமது கடமைகளாக நீங்கள் கருதுவன யாவை?

  • மதம், ஜாதி ஆகியவற்றை நினைக்காமல் அனைவரிடமும் சமத்துவமாக பழக வேண்டும்.
  • நான் இந்த மதத்திற்கு் உரியவன், இந்த சாதிக்குரியவன் என்ற எண்ணத்தை முற்றிலும் தவிர்து, நான் ஒரு இந்தியன் என்றும் நினைப்பை உருவாக்க வேண்டும்.
  • சமத்துவம், ஒருமைப்பாட்டு உணர்வு, சகிப்புத்தன்மை ஆகியவை ஒவ்வொரவரிடமும் இருக்க வேண்டும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சட்டமேதை அம்பேத்கர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாகவும் விளங்கியவர்

  1. அம்பேத்கர்
  2. மகாத்மா காந்தி
  3. நேதாஜி
  4. பகத்சிங்

விடை : அம்பேத்கர்

2. அம்பேத்கர் பிறந்த நாள்

  1. 14 ஏப்ரல் 1890
  2. 14 ஏப்ரல் 1892
  3. 14 ஏப்ரல் 1891
  4. 14 ஏப்ரல் 1983

விடை : 14 ஏப்ரல் 1891

3. அம்பேத்கரின் ஆசிரியர்

  1. மகாதேவ் அம்பேத்கர்
  2. பீம்ராவ் ராம்ஜி
  3. ராம்ஜி அம்பேத்கர்
  4. ராம்ஜி கொண்டதேவ்

விடை : மகாதேவ் அம்பேத்கர்

3. அம்பேத்கர் __________ அமைப்பை நிறுவியவர்

  1. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை
  2. பிற்படுத்தப்பட்டோர் பேரவை
  3. ஒடுக்கப்பட்டோர் பேரவை
  4. பிற்படுத்தப்பட்டோர் நல்வாழ்வு பேரவை

விடை : ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை

4. ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவையை அம்பேத்கர் தொடங்கிய ஆண்டு

  1. 1921
  2. 1922
  3. 1923
  4. 1924

விடை : 1924

5. முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்ற இடம்

  1. அமெரிக்கா
  2. இங்கிலாந்து
  3. இந்தியா
  4. சீனா

விடை : இங்கிலாந்து

6. முதலாவது வட்ட மேசை மாநாடானது நடைபெற்ற ஆண்டு 

  1. 1926
  2. 1928
  3. 1930
  4. 1932

விடை : 1930

7. ஒடுக்கப்பட்டோர் பாரதம் என்னும் இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு

  1. 1924
  2. 1925
  3. 1926
  4. 1927

விடை : 1927

8. அம்பேத்கருக்குப் ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்ட ஆண்டு 

  1. 1989
  2. 1990
  3. 1986
  4. 1987

விடை : 1990

9. அம்பேத்கர் மறைந்த ஆண்டு

  1. 1956
  2. 1957
  3. 1958
  4. 1959

விடை : 1956

10. அம்பேத்கர் எழுதிய முதல் நூல்

  1. இந்தியாவில் சாதிகளின் தோற்றம்
  2. இந்தியாவில் சாதிகளின் வளர்ச்சி
  3. இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
  4. இந்தியாவில் மதங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

விடை : இந்தியாவில் சாதிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

11. அம்பேத்கருக்கு முனைவர் பட்டம் வழங்கிய பல்கலைக்க கழகம்

  1. சென்னை பல்கலைக்கழகம்
  2. கல்கத்தா பல்கலைக்கழகம்
  3. பம்பாய் பல்கலைக்கழகம்
  4. கொலம்பியா பல்கலைக்கழகம்

விடை : கொலம்பியா பல்கலைக்கழகம்

12. அம்பேத்கர் மறைவுக்கு பின் வெளியிட்டப்பட்ட நூல்

  1. மகாவீரரும் அவரின் தம்மமும்
  2. அசோகரும் அவரின் தம்மமும்
  3. முருகனும் அவரின் தம்மமும்
  4. புத்தரும் அவரின் தம்மமும்

விடை : புத்தரும் அவரின் தம்மமும்

குறு வினா

1. அம்பேத்கர் பிறப்பு பற்றி குறிப்பு வரைக

அம்பேத்கர் 14.04.1891-ல் மகாராட்டிர மாநிலத்திலுள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அம்பவாதே என்னும் ஊரில் ராம்ஜி சக்பால் – பீமா பாய் ஆகியோருக்கு பதினான்காவது மகனாக பிறந்தார்.

2. அம்பேத்கரின் பொன் மொழி யாது?

நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று

  • முதல் தெய்வம் – அறிவு
  • இரண்டாவது தெய்வம் – சுயமரியாதை
  • மூன்றாவது தெய்வம் – நன்னடத்தை

3. முதலாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டவர் யாவர்?

  • இந்தியர்களுக்கு அரசியல் உரிமை வழங்குவதைப் பற்றி முடிவு செய்ய 1930-ம் ஆண்டு நவம்பர் திங்கள் இங்கிலாந்தில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடைபெற்றது.
  • அம்பேத்கருடன் தமிழகத்தின் இராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசனும் கலந்து கொண்டார்.

4. அம்பேத்கர் புத்த சமயம் மீது கொண்ட பற்று பற்றி விவரி

  • அம்பேத்கர் புத்த சமயக் கொள்கையின் மீது ஈடுபாடு கொண்டவர்.
  • இலங்கையில் நடைபெற்ற புத்த துறவிகள் கருத்தரங்கிலும், உலக பெளத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார்.
  • 1956-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் நாளில் நாக்பூரில் புத்த சமயத்தில் இணைத்து கொண்டார்.
  • அவர் எழுதிய ‘புத்தரும் அவரின் தம்மும்’ என்ற புத்தகம் அவரது மறைவுக்கு பின் 1957-ம் ஆண்டு வெளியானது.

 

Leave a Comment