Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 Tamilmozhi Valthu Book Back Solution

இயல் மூன்று – தமிழ்மொழி வாழ்த்து

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 1.1 ‘Tamilmozhi Valthu’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 1.1 தமிழ்மொழி வாழ்த்து

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 1.1 Tamilmozhi Valthu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

தமிழ்மொழி வாழ்த்து பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Tamilmozhi Valthu’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Tamilmozhi Valthu subject.

தமிழ்மொழி வாழ்த்து பாடல்

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றறென்றும் வாழியவே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையகமே!

தொல்லை வினைதரு தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே!

வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே!

– பாரதியார்

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்கலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிநது உரக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மமொழி வாழ்க! எங்கள் தமிழ்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறைப்படைக!  பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

நூல் வெளி

  • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவர்.
  • சி.சுப்பிரமணிய பாரதியார் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி விடுதலை போருக்கு வித்திட்டவர்
  • கவிதைகள் மட்டுமின்றி சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசனக் கவிதைகளையும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும், வசன கவிதைகளையும், சீட்டுக் கவிகளையும் எழுதியவர்.
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.
  • இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

சொல்லும் பொருளும்

  • நிரந்தரம் – காலம் முழுமையும்
  • வண்மொழி – வளமிக்கமொழி
  • வைப்பு – நிலப்பகுதி
  • இசை – புகழ்
  • சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  • தொல்லை – பழமை, துன்பம்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் _____________

  1. வைப்பு
  2. கடல்
  3. பரவை
  4. ஆழி

விடை : வைப்பு

2. என்றென்றும் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

  1. என் + றென்றும்
  2. என்று + என்றும்
  3. என்றும் + என்றும்
  4. என் + என்றும்

விடை : என்று + என்றும்

3. வானமளந்தது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….

  1. வான + மளந்தது
  2. வான் + அளந்தது
  3. வானம் + அளந்தது
  4. வான் + மளந்தது

விடை : வானம் + அளந்தது

4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………………

  1. அறிந்ததுஅனைத்தும்
  2. அறிந்தனைத்தும்
  3. அறிந்ததனைத்தும்
  4. அறிந்துனைத்தும்

விடை : அறிந்ததனைத்தும்

5. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….

  1. வானம்அறிந்து
  2. வான்அறிந்த
  3. வானமறிந்த
  4. வான்மறிந்

விடை : வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்து இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

  • வாழ்க – வாழிய
  • ங்கள் – ன்றென்றும்
  • ண்மொழி – ளர்மொழி
  • கன்று – றிந்த

குறு வினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்டு வாழ்கிறது

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

சிறு வினா

தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.

  • எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க!
  • எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் தமிழே வாழ்க!
  • ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் புகழ்கொண்ட தமிழே வாழ்க!
  • உலகம் உள்ள வரையிலும் தமிழே வாழ்க!
  • எங்கும் உள்ள அறியாமை இருள் நீங்கட்டும்.
  • தமிழ் உயர்வுற்று  உலகம் ழுழுவதும் சிறப்படைக!
  • பொருந்தாத பழங்கருத்தால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிரட்டும்.
  • என்றென்றும் தமிழே! வாழ்க
  • வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் தன்மையை அறிந்து வளரும் தமிழே! வாழ்க

சிந்தனை வினா

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?

  • நமது தாய்மொழி தமிழ். இதன் சிறப்புகள் பல. இம்மொழி வரலாற்றுத் தொன்மை, பண்பாட்டு வளம், சொல்வளம், கருத்துவளம் ஆகியவற்றால் ஓங்கி உயர்ந்துள்ளது.
  • அழியாத மொழியாக, சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொணடிருக்கும் ஒரே மொழி நம் தமிழ்மொழி தான்.
  • தமிழ்மொழி ஒன்று தான் வாழ்வுக்கே இல்கணம் அமைந்து சிறந்து மிளிரும் வளமான மொழியாகும். மானிட வாழ்க்கையைேய “அகம்” “புறம்” என இருவகைப்படுத்தி இலக்கணங்கண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு
  • இத்தகைய வளமிக்க மொழியாக விளங்குவதனால் தான் பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கிறார்.

கற்பவை கற்றபின்

படித்துச் சுவைக்க.

செந்தமிழ் அந்தாதி
செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்்கனைய நாயகியே! – முந்தை
மொழிக்கெல்லலாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!
எழில்மகவே! எந்தம் உயிர்.உயிரும்நீ; மெய்யும்நீ; ஓங்கும் அறமாம்
பயிரும்நீ; இன்பம்நீ; அன்புத் தருவும்நீ;
வீரம்நீ; காதல்நீ; ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ; யாவும்நீ யே!

– து. அரங்கன்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “தமிழ்மொழி வாழ்த்து” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மொழி என்பது கருத்தை அறிவிக்கும் ________ ஆகும்

  1. வழி
  2. கருத்து
  3. கருவி
  4. சொல்

விடை : கருவி

2. புகழ் என பொருள் தரும் சொல்

  1. கருவி
  2. இசை
  3. பொறுமை
  4. சிறுமை

விடை : இசை

3. பாரதியார் என்ற இதழை நடத்தியவர் _____________

  1. குமுதம்
  2. விடகன்
  3. அவள்
  4. இந்தியா

விடை : இந்தியா

4. சந்திரிகையின் கதை நூலின் ஆசிரியர் _____________

  1. பாரதிதாசன்
  2. சுரதா
  3. பாரதியார்
  4. வாணிதான்

விடை : பாரதியார்

5. சிந்துக்குத் தந்தை, புதிய அறம் பாட வந்த அறிஞர் என்றெல்லாம் அழைக்கப்படுபவர் _____________

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. வாணிதான்

விடை : பாரதியார்

6. தமிழ்தேனீ என்று பாரதியாரைப் புகழ்ந்தவர் _____________

  1. சுரதா
  2. காந்தி
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதிதாசன்

7. வண்மொழி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வன்மை + மொழி
  2. வண் + மொழி
  3. வன் + மொழி
  4. வண்மை + மொழி

விடை : வண்மை + மொழி

8. வளர்மொழி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வளரும்+ மொழி
  2. வளர் + மொழி
  3. வள் + மொழி
  4. வளர + மொழி

விடை : வளர் + மொழி

8. சீட்டுக்கவி என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. சீட்டுக் + கவி
  2. சீட் + கவி
  3. சீட்டு + கவி
  4. சீட்டு + க்கவி

விடை : சீட்டு + கவி

9. வானம் + அளந்து என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. வானம்அளந்து
  2. வானம் அளந்து
  3. வானமளந்து
  4. வானம்மளந்து

விடை : வானமளந்து

9. தமிழ்மொழி வாழ்த்து ஆசிரியர்

  1. சுரதா
  2. காந்தி
  3. பாரதிதாசன்
  4. பாரதியார்

விடை : பாரதியார்

குறு வினா

1. பாரதியாரின் பன்முக ஆற்றல்களை எழுதுக

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்

2. பாரதியாரால் நடத்தப்பட்ட இதழ்கள் கூறு

இந்தியா, விஜயா

3. பாரதியாரை எவ்வாறெல்லாம் பாரதிதாசன் புகழ்ந்துள்ளார்?

சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

4. பாரதியார் குறிப்பு வரைக

  • பன்முக ஆற்றல்  – கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்த்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர்
  • நடத்திய இதழ்கள் – இந்தியா, விஜயா
  • உரைநடை நூல்கள் – சந்திரிகையின் கதை, தராசு
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என பாரதிதாசன் பாரதியாரைப் புகழ்ந்துள்ளார்.

Leave a Comment