Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 5.6 Thirukural Book Back Solution

இயல் 5.6 – திருக்குறள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 5.6 ‘Thirukural’, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 5.6 திருக்குறள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 5.6 Thirukural Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

திருக்குறள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thirukural’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Thirukural subject.

Previous Lesson: தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்

சொல்லும் பொருளும்

  • நாடி – நாடுதல்
  • ஆய்ந்து – ஆராய்ந்து
  • இறை – அரசர்
  • விளையாடல் – செயல் செய்தல்
  • ஒறுப்பது – தண்டிப்பது
  • கடியன் – கடுமையானவர்
  • வேந்தன் – அரசன்
  • கடுகி – விரைந்து

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. அரசரை அவரது …………… காப்பாற்றும்.

  1. செங்கோல்
  2. வெண்கொற்றக்குடை
  3. குற்றமற்ற ஆட்சி
  4. படை வலிமை

விடை : குற்றமற்ற ஆட்சி

2. சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ……………. தகுதி அறிந்து பேச வேண்டும்.

  1. சொல்லின்
  2. அவையின்
  3. பொருளின்
  4. பாடலின்

விடை : அவையின்

3. கண்ணோடாது என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………………….

  1. கண் + ஓடாது
  2. கண் + ணோடாது
  3. க + ஓடாது
  4. கண்ணோ + ஆடாது

விடை : கண் + ஓடாது

4. கசடற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………

  1. கச + டற
  2. கசட + அற
  3. கசடு + உற
  4. கசடு + அற

விடை : கசடு + அற

5. என்று + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………

  1. என்றாய்ந்து
  2. என்றுஆய்ந்து
  3. என்றய்ந்து
  4. என்ஆய்ந்த

விடை : என்றாய்ந்து

குறு வினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?

இச்செயலை இந்தவகையால் இவர் செய்துமுடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்கவேண்டும

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

எதையும் நன்கு ஆராய்ந்து ஒருபக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.

பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் ‘செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக் குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் ‘சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.

1. அவைஅறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
   தொகைஅறிந்த தூய்மை யவர்.

2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
   அதனை அவன்கண் விடல்.

3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
   தேர்ந்துசெய் வஃதே முறை.

விடை :-

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.

 

பின்வரும் பகுதியில் “திருக்குறள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. ______________ நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்

  1. காலம்
  2. நடுவுநிலைமை
  3. முறையாக ஆராய்தல்
  4. உயிர்கள் காப்பாற்று

விடை : நடுவுநிலைமை

2. உலகம் என்று பொருள் தரும் சொல்

  1. கடல்
  2. அரசன்
  3. வையகம்
  4. இறைவன்

விடை : வையகம்

3. அரசர் என்று பொருள் தரும் சொல்

  1. உலகம்
  2. குடிமக்கள்
  3. இறைவன்
  4. இறை

விடை : இறை

4. ஒத்தாங்கு என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. ஒத்து + ஆங்கு
  2. ஒத்த + ஆங்கு
  3. ஒத்து + யாங்கு
  4. ஒத்த + யாங்கு

விடை : ஒத்து + ஆங்கு

5. இன்னச்சொல் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. இன்னாச் + சொல்
  2. இன்னா + சொல்
  3. இன்ஆ + சொல்
  4. இன்ன + சொல்

விடை : இன்னா + சொல்

6. தூய்மையானவர் என்ற சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது

  1. தூய்மை + யானவர்
  2. தூய்மை + ஆனவர்
  3. தூய்மை+ அனவர்
  4. தூய்மை + அவர்

விடை : தூய்மை + ஆனவர்

சிறு வினா

1. அரசனின் செய்ய வேண்டிய கடமை யாது?

ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசன் செய்ய வேண்டிய கடமையாகும்.

2. சிறந்த சொல்லாற்றலின் இயல்பென வள்ளூவர் கூறுவது யாது?

கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பென வள்ளூவர் கூறுகிறார்.

3. சொல்வளமும், நற்பண்பும் உடையவர்கள் எவ்வாறு பேச வேண்டும்?

சொல்வளமும், நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதியறிந்து பேசுதல் வேண்டும்.

Leave a Comment