Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 2.5 Vinaimutru Book Back Solution

இயல் 2.5 – வினைமுற்று

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 8th Tamil Chapter 2.5 ‘Vinaimutru’ Here, you’ll find solutions to all the questions from the 8th Standard Tamil Book Lesson 2.5 வினைமுற்று

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 8th Tamil Chapter 2.5 Vinaimutru Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 8th Tamil Guide PDF.

வினைமுற்று வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Vinaimutru’ which is the first subject of class 8 Tamil. Additionally, you can also access additional questions related to the Vinaimutru subject.

Previous Lesson: வெட்டுக்கிளியும் சருகுமானும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. மாடு வயலில் புல்லை மேய்ந்தது இத்தொடரிலுள்ள வினைமுற்று ______________

  1. மாடு
  2. வயல்
  3. புல்
  4. மேய்ந்தது

விடை : மேய்ந்தது

2. பின்வருவனவற்றுள் இறந்தகால வினைமுற்று ______________

  1. படித்தான்
  2. நடக்கிறான்
  3. உண்பான்
  4. ஓடாது

விடை : படித்தான்

3. பின்வருவனவற்றுள் ஏவல் வினைமுற்றுச் சொல் ______________

  1. செல்க
  2. ஓடு
  3. வாழ்க
  4. வாழிய

விடை : ஓடு

சிறு வினா

1. வினைமுற்று என்றால் என்ன?

ஒருவினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்

2. தெரிநிலை வினைமுற்று எவற்றைக் காட்டும்?

செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றை தெரிநிலை வினைமுற்று காட்டும்.

3. வியங்கோள் வினைமுற்று விகுதிகள் யாவை?

க, இய, இயர், அல் என்பன வியங்கோள்  வினைமுற்று ஆகும்

4. ஏவல் வினைமுற்றுக்கும் வியங்கோள் வினைமுற்றுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள் யாவை?

ஏவல் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று
1. முன்னிலையில் வரும். இருதிணை, ஐம்பால், மூவிடங்களுக்கும்
பொதுவாய் வரும்.
2. ஒருமை, பன்மை வேறுபாடு உண்டு. ஒருமை, பன்மை வேறுபாடு இல்லை.
3. கட்டளைப் பொருளை மட்டும் உணர்த்தும். வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களை உணர்த்தும்.
4. விகுதி பெற்றும் பெறாமலும் வரும். விகுதி பெற்றே வரும்.

மொழியை ஆள்வோம்

தமிழ் எண்கள் அறிவோம். (விடுபட்ட கட்டங்களை நிரப்புக)

1 2 3 4 5 6 7 8 9 10
  ௪  ௭ ௧0
11 12 13 14 15 16 17 18 19 20
௧௨ ௧௩ ௧  ௪ ௧௫ ௧௬ ௧ ௭ ௧௮ ௧௯ ௧0
21 22 23௩ 24  ௪ 25 26 27 28 29 30
௨௧ ௨௨ ௨௩ ௨  ௪ ௨௫ ௨௬ ௨ ௭ ௨௮ ௨௯ ௨0

வண்ணமிடப்பட்டுள்ள எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக

  1. உலக ஈர நில நாள் பிப்ரவரி 2 – உ
  2.  உலக ஓசோன் நாள் செப்டம்பர் 16 – க௬ 
  3. உலக இயற்கை நாள் அக்டோபர் 3 – ௩ 
  4. உலக வனவிலங்கு நாள் அக்டோபர் 6 – ௬ 
  5. உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம் அக்டோபர் 5 – ௫

அறிந்து பயன்படுத்துவோம்.

தொடர் வகைகள்

தொடர்கள் பொருள் அடிப்படையில் நான்கு வகைப்படும்.

செய்தித் தொடர்

ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் செய்தித் தொடர் ஆகும்.

(எ.கா.)

கரிகாலன் கல்லணையைக் கட்டினான்.

வினாத்தொடர்

ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர் வினாத்தொடர் ஆகும்

(எ.கா.)

சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார்?

விழைவுத் தொடர்

ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர் விழைவுத் தொடர் ஆகும்.

(எ.கா.)

    • இளமையில் கல். (ஏவல்)
    • உன் திருக்குறள் நூலைத் தருக. (வேண்டுதல்)
    • உழவுத்தொழில் வாழ்க. (வாழ்த்துதல்)
    • கல்லாமை ஒழிக. (வைதல்)

உணர்ச்சித் தொடர்

உவகை, அழுகை, அவலம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் உணர்ச்சித் தொடர் எனப்படும்.

(எ.கா.)

    • அடடா! என் தங்கை பரிசு பெற்றாள்! (உவகை)
    • ஆ! புலி வருகிறது! (அச்சம்)
    • பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவே! (அவலம்)
    • ஆ! மலையின் உயரம்தான் என்னே! (வியப்பு)

கொடுக்கப்பட்டுள்ள தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.

1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.  

விடை: செய்தி தொடர்

2. கடமையைச் செய். 

விடை: விழைவுத்  தொடர்

3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!  

விடை: உணர்ச்சித் தொடர்

4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? 

விடை: வினாத்தொடர்

தொடர்களை மாற்றுக

1. நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை: நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?

2. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)

விடை: என்னே! காட்டின் அழகு!

3. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை: பூனை காலில் அடிபட்டுவிட்டது

4. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)

விடை: அதிகாலையில் துயில் எழு

5. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)

விடை: முகில்கள் திரண்டால் மழை பெய்யும்

6. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)

விடை: காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ?

மொழியோடு விளையாடு

உரிய வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக

நட உண் உறங்கு
ஆண்பால் நடக்கிறான் உண்கிறான் உறங்கினான்
பெண்பால் நடக்கிறாள் உண்கிறாள் உறங்கினாள்
பலர்பால் நடக்கிறார் உண்டார் உறங்கினார்
ஒன்றன் பால் நடந்தது உண்டது உறங்கியது
பலவின் பால் நடந்தன உண்டன உறங்கின
தன்மை நடந்தேன உண்கிறேன் உறங்கினேன்
முன்னிலை நடந்தீர் உண்டீர் உறங்குவீர்
படர்க்கை அவன் நடந்தான் அவன் உண்பான் அவன் உறங்கினாள்
இறந்த காலம் நடந்தான் உண்டான் உறங்கினான்
நிகழ் காலம் நடக்கிறான் உண்கிறான் உறங்குகிறான்
எதிர் காலம் நடப்பான் உண்பான் உறங்குவான்

வினைமுற்றுக்கு உரிய வேர்ச்சொல்லை எழுதுக

  • நடக்கிறது – நட
  • போனான் – போ
  • சென்றனர் – செல்
  • போனான் – போ
  • உறங்கினாள் – உறங்கு
  • வாழிய – வாழ்
  • பேசினாள் – பேசு
  • வருக – வா
  • தருகின்றனர் – தா
  • பயின்றாள் – பயில்
  • கேட்டார் – கேள்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • பழங்குடியினர் – Tribes
  • சமவெளி – Plain
  • பள்ளத்தாக்கு – Valley
  • புதர் – Thicket
  • மலைமுகடு – Ridge
  • வெட்டுக்கிளி – Locust
  • சிறுத்தை – Leopard
  • மொட்டு – Bud

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வினைமுற்று” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. வினைச்சொல் என்பது __________ஐ குறிக்கும் சொல்

  1. பெயர்
  2. வினை
  3. மரபு
  4. உவமஉருபு

விடை : வினை

2. வினைமுற்று __________ வகைப்படும்

  1. 5
  2. 6
  3. 3
  4. 2

விடை :  2

3. செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது __________ எனப்படும்.

  1. குறிப்புவினைமுற்று
  2. வியங்கோள் வினைமுற்று
  3. ஏவல் வினைமுற்று
  4. தெரிநிலை வினைமுற்று

விடை : தெரிநிலை வினைமுற்று

4. ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று, __________ எனப்படும்.

  1. குறிப்புவினைமுற்று
  2. ஏவல் வினைமுற்று
  3. வியங்கோள் வினைமுற்று
  4. தெரிநிலை வினைமுற்று

விடை : ஏவல் வினைமுற்று

5. ஒருமை, பன்மை ஆகிய இருவகைகளில் வரும் வினைமுற்று __________ ஆகும்

  1. குறிப்பு வினைமுற்று
  2. வியங்கோள் வினைமுற்று
  3. ஏவல் வினைமுற்று
  4. தெரிநிலை வினைமுற்று

விடை : ஏவல் வினைமுற்று

6. வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வரும் வினைமுற்று __________ ஆகும்

  1. குறிப்பு வினைமுற்று
  2. ஏவல் வினைமுற்று
  3. தெரிநிலை வினைமுற்று
  4. வியங்கோள் வினைமுற்று

விடை : வியங்கோள் வினைமுற்று

7. கூற்றினை கவனி (வியங்கோள் வினைமுற்று)

1. இரு திணைகளையும் காட்டுகிறது
2. ஐந்து பால்களையும் வெளிப்படுத்துகிறது
3. முன்னிலை, படர்க்கை இடங்களில் மட்டுமே வருகிறது.
4. இதன் விகுதிகள் க, இய, இயர், அல் போன்றவை ஆகும்.

  1. 1, 2, 3 சரி
  2. 2, 3, 4  சரி
  3. 1, 2, 4  சரி
  4. 1, 3, 4  சரி

விடை : 1, 2, 4  சரி

8. ______________ பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது.

  1. வேண்டல்
  2. வாழ்த்துதல்
  3. விதித்தல்
  4. வைதல்

விடை : விதித்தல்

சிறு வினா

1. வினைச்சொல் என்பது யாது?

ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். ஒன்றன் தொழிலை உணர்த்தி காலத்தைக் காட்டி நிற்கும் சொல் வினைச்சொல் எனப்படும்.

2. வினைமுற்றின் வகைகளை கூறுக

தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

3. குறிப்பு வினைமுற்று என்பது யாது?

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகியவற்றுள் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று, குறிப்பு வினைமுற்று எனப்படும்.

Leave a Comment