Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.3 Agalayvugal Book Back Solution

இயல் 3.3 – அகழாய்வுகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 3.3 ‘Agalayvugal’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 3.3 அகழாய்வுகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 3.3 Agalayvugal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

அகழாய்வுகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Agalayvugal’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Agalayvugal Subject.

Previous Lesson: மணிமேகலை

குறு வினா

தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும் ஏன்?

நமக்கு இதுவரை கிடைத்துள்ள பழங்காலப் பொருட்கள் நாம் வாழ்ந்த காலத்தை மட்டுமன்றி பழம்பெரும் வரலாற்றைப் பறை சாற்றகின்றன. நமது நாகரிகத்தை எடுத்துக் காட்டுகின்றன. எனவே தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும்.

சிறு வினா

வியத்தகு அறிவியல் விரவிக் கிடக்கும் நிலையில் அகழாய்வின் தேவை குறித்து உங்களது கருத்துகளைத் தொகுத்துரைக்க

 • அறிவியல் மிகவும் வேகமானது. ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்து அதுவே சில ஆண்டுகளில் மாற்றம் அடைந்து முன்னது காணாமல் போய்விடுகின்றது.
 • கணினியை வைரஸ் அழித்து விடும். ஆனால், மண்ணாலும், கல்லாலும் ஆன பழம் பொருட்களை எந்த வைரஸூம் கூட அழிக்க முடியாது.
 • பழமையே புதுமை என்பதை மனதில் கொண்டு அகழாய்வை மேலும் மேற்கொள்ள வேண்டும்.

நெடு வினா

பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

முன்னுரை:-

நமது பண்பாட்டை எண்ணிப் பார்பதற்கும் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதற்கும் துணை நிறபவை அகழாய்வுகள்.

அரிக்கமேடு அகழாய்வு:-

அரிக்கமேடு அகழாய்வில் பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவற்றில் காணப்பட்ட தொட்டிகளில் சாயம் தோய்க்கப் பட்டிருந்ததாகத் தெரிகின்றது.

அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்தன.

அதனால் ரோமானியர்களுக்கும் நமக்கும் இருந்த வாணிபத் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு:-

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது பழம்பெரும் பழங்கால அடையாளமாக உள்ளன.

கீழடி அகழாய்வு:-

மதுரை அருகே கீழடி என்னும் இடத்தடில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள், உலோகப் பொருட்கள், முத்துக்கள், கிளிஞ்சல் பொருள்கள், மான் கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், பழுப்பு, கறுப்பு, சிவப்பு – கறுப்புப் பானைகள், சதுரங்க்காய்கள், தானியங்களைச் சேமித்து வைக்கும் கலன்கள், செம்பு, சங்கு வளையல்கள், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கற்கருவிகள், உறைக்கிணறுகள் போன்ற தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன.

இவை 2300 ஆண்களுக்கு முற்பட்டவை என கருதப்படுகின்றன. இதுவரை கிடைத்த அகழாய்வில் இறப்பு தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளன.

ஆனால் கீழடியில் வாழ்விடப்பகுதிகளே முழுமையான அளவில் கிடைத்துள்ளன. செங்கல் கட்டுமானங்கள் தமிழரின் உயரிய நாகரிகத்தைக் காட்டும் சாட்சிகளாக அமைந்துள்ளன.

முடிவுரை:-

தமிழகர்களின் உணவு, உடை, வாழிடம் முதலியன இயற்கையைச் சிதைக்காத இயல்புகளைக் கொண்டவை என்பதற்கு அகழாய்வில் கண்ட சான்றுகள் ஆவணங்களாகத் திகழ்கின்றன.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “அகழாய்வுகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. 1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் பல்லாவரத்தில் __________, ____________ கண்டுபிடித்தார்.

 1. எலும்பு, பழங்காசுகள்
 2. எலும்பு, கற்கருவி
 3. மண்பாண்டங்கள், கற்கருவி
 4. பழங்காசுகள், கற்கருவி

விடை: எலும்பு, கற்கருவி

2. ரோமானியங்கள் கோவையில் __________கண்டுபிடித்தனர்.

 1. எலும்பு
 2. மண்பாண்டங்கள்
 3. கற்கருவி
 4. பழங்காசுகள்

விடை: பழங்காசுகள்

3. ரோமானியங்கள் மண்பாண்டங்கள் கிடைத்த அகழாய்வு

 1. ஆதிச்சநல்லூர்
 2. வெம்பக்கோட்டை
 3. அரிக்கமேடு
 4. கீழடி

விடை: அரிக்கமேடு

3. முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம்

 1. ஆதிச்சநல்லூர்
 2. வெம்பக்கோட்டை
 3. அரிக்கமேடு
 4. கீழடி

விடை: ஆதிச்சநல்லூர்

4. மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. மணிமேகலை
 2. சிலப்பதிகாரம்
 3. திருவாசகம்
 4. கம்பராமாயணம்

விடை: சிலப்பதிகாரம்

5. பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. மணிமேகலை
 2. சிலப்பதிகாரம்
 3. திருவாசகம்
 4. கம்பராமாயணம்

விடை: மணிமேகலை

6. பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. மணிமேகலை
 2. சிலப்பதிகாரம்
 3. திருவாசகம்
 4. கம்பராமாயணம்

விடை: திருவாசகம்

7. பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

 1. மணிமேகலை
 2. சிலப்பதிகாரம்
 3. திருவாசகம்
 4. கம்பராமாயணம்

விடை: கம்பராமாயணம்

8. நன்னூலினை இயற்றியவர்

 1. திருக்குறளார்
 2. அப்பூதியடிகள்
 3. மாணிக்க வாசகர்
 4. பவணந்தி முனிவர்

விடை: பவணந்தி முனிவர்

குறு வினா

1. அகழாய்வு என்பது யாது?

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலப்பகுதியில் செதுக்கிச் செதுக்கி ஆராய்தலே அகழாய்வு எனப்படும்

2. பட்டிமண்டபம் குறித்து கூறும் இலக்கியங்களை கூறுக

சிலப்பதிகாரம், திருவாசகம், மணிமேகலை, கம்பராமாயணம்

3. இந்தியாவில் முதல் கல்லாயுதத்தை கண்பிடித்தவர் யார்?

1863 ஆம் ஆண்டு இராபர்ட் புரூஸ்புட் என்னும் தொல்லியல் அறிஞர்  சென்னைப் பல்லாவரம் செம்மண் மேட்டுப்பகுதியில் எலும்பையும் கற்கருவியையும்  கண்டுபிடித்தார். இந்தக் கற்கருவிதான் இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம்.

4. முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வு எது?

ஆதிச்சநல்லூர் (1914)

5. அறிவியலின் வகைகள் யாவை?

 • வணிக அறிவியல்
 • மக்கள் அறிவியல்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment