Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.1 Neerindri Amaiyathu Ullgu Book Back Solution

இயல் 2.1 – நீரின்றி அமையாது உலகு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 2.1 ‘Neerindri Amaiyathu Ullgu’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 2.1 நீரின்றி அமையாது உலகு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 2.1 Neerindri Amaiyathu Ullgu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

நீரின்றி அமையாது உலகு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Neerindri Amaiyathu Ullgu’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Neerindri Amaiyathu Ullgu Subject.

Previous Lesson: தொடர் இலக்கணம்

பலவுள் தெரிக

1. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது ?

  1. அகழி
  2. ஆறு
  3. இலஞ்சி
  4. புலரி

விடை : புலரி

2. பொருத்தமான விடையைத் தேர்க.

அ. நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ. நீரின்று அமையாது யாக்கை – ஔவையார்
இ. மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்

  1. அ, இ
  2. ஆ, இ
  3. அ, ஆ
  4. அ, ஆ, இ

விடை : அ, இ

குறு வினா

1. கூவல் என்று அழைக்கப்படுவது எது?

கூவல் என்று அழைக்கப்படுவது உவர் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை என்பதாகும்.

2. உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

ஆறு, குளம், வாய்க்கால், கிணறு

3. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
    காடும் உடையது அரண் – இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

அகழிநீர், வெறுநிலம், நீளமான மலை, குளிர்ந்த நிழல் தரும் காடு

சிறு வினா

1. அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்யவேண்டியவற்றை எழுதுக.

  • அதிகப்படியான் நிலத்தடி நீரை மக்கள் பயன்படுத்தி விட்டனர். நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டதால் நிலத்தடி நீரை சிக்கனமாகவே பயன்படுத்த வேண்டும்.
  • மழைநீர் சேமிப்புத் தொட்டி மூலம் நிலத்தடியில் மழை நீரைச் சேமிக்க வேண்டும்.
  • மிகுதியாக தடுப்பணைகளை உருவாக்க வேண்டும்.
  • இப்படிச் செய்வதால் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

2. சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

பயன்பாட்டுக்குத் தேவையான நீரை வெளியேற்றவும், சேற்றை வெளியேற்றவும் சோழர் காலக் குமிழித் தூம்பு பயன்படுத்தப்பட்டது. சோழர் காலக் குமிழித் தூம்பினைப் பயன்படுத்துவதன் மூலம் தூர் வார வேண்டிய அவசியம் இல்லை.

நெடு வினா

1. நீரின்று அமையாது உலகு என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரி

  • நீர்இன்று அமையாது உலகு என்னும் தம் கருத்தை வள்ளுவர் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.
  • மனித வாழ்வின் அடித்தளம் நீரே!
  • மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க் கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகிறது.
  • மழை உழவுக்கு உதவுகிறது.
  • விதைத்த விதை ஆயிரமாகப் பெருகுகிறது.
  • நிலமும், மரமும், உயிர்களும் நோயின்றி வாழ நீரே அவசியம்.
  • உடலை குளரிவிப்பதற்கும், சாமியாடிகளுக்கு மஞ்சள் நீர் கொடுப்பதும், திருமணமான பின் கடலாடுதலும், இறப்பு சடங்கிலும், வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நீர் கொடுத்து வரேவற்பதற்கும், விவசாய நிலத்திற்கு உழைக்கச் செல்வோர் குடிப்பதும் என அனைத்து செயல்களுக்கும் நீரே அவசியம்.
  • அதனால் தான் வள்ளுவர் “நீர்இன்று அமையாது உலகு” என்று அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

 

பின்வரும் பகுதியில் “நீரின்றி அமையாது உலகு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர்

  1. இளங்கோவடிகள்
  2. திருவள்ளுவர்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை: இளங்கோவடிகள்

2. நீர்நிலைப் பெயர்களில் பொருந்தாதது

  1. அகழி
  2. தகழி
  3. உறைக்கிணறு
  4. ஊருணி

விடை : தகழி

3. பாண்டி மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியானது அழைக்கப்படும் பெயர்

  1. கம்மாய்
  2. கண்மாய்
  3. உறைக்கிணறு
  4. ஊருணி

விடை : கண்மாய்

4. பாண்டி மண்டலத்தில் ஏரியானது __________ பெயரிட்டு அழைக்கப்படுகிறது.

  1. கம்மாய்
  2. கண்மாய்
  3. உறைக்கிணறு
  4. ஊருணி

விடை : கண்மாய்

5. உலக சுற்றுச்சூழல் நாள்

  1. ஜூன் 4
  2. ஜூன் 5
  3. ஜூன் 6
  4. ஜூன் 7

விடை : ஜூன் 5

6. உணவெனப்படுவது நிலத்தோடு நீரே எனக் கூறும் சங்க நூல்

  1. திருக்குறள்
  2. சிலப்பதிகாரம்
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : புறநானூறு

7. குளித்தல் என்ற சொல் குறித்த புதிய சிந்தனைகளத் தந்தவர்

  1. திருவள்ளுவர்
  2. ஒளவையார்
  3. இளங்கோவடிகள்
  4. தொ.பரமசிவன்

விடை : தொ.பரமசிவன்

8. நீரின்று அமையாது உலகம் என்ற வரிகளை கூறியவர்

  1. இளங்கோவடிகள்
  2. திருவள்ளுவர்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை: திருவள்ளுவர்

9. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழவேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன என்று கூறியவர்

  1. இளங்கோவடிகள்
  2. கபிலர்
  3. கம்பர்
  4. மாங்குடி மருதனார்

விடை: மாங்குடி மருதனார்

11. இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை 

  1. ஜான் பென்னி குவிக்
  2. திருவள்ளுவர்
  3. சர் ஆர்தர் காட்டன்
  4. தொ.பரமசிவன்

விடை : சர் ஆர்தர் காட்டன்

12. கிராண்ட் அணைக்கட் என்ற பெயர் பெற்ற அணை

  1. கல்லணை
  2. கட்டுக் கிணறு
  3. இலஞ்சி
  4. முல்லைப் பெரியார் அணை

விடை : கல்லணை

13. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. புறநானூறு
  2. அகநானூறு
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : புறநானூறு

14. தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் எனக் கூறியவர்

  1. இளங்கோவடிகள்
  2. கபிலர்
  3. மாங்குடி மருதனார்
  4. தொ.பரமசிவன்

விடை : தொ.பரமசிவன்

15. குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்றவர்.

  1. மாங்குடி மருதனார்
  2. ஆண்டாள்
  3. மாங்குடி மருதனார்
  4. கபிலர்

விடை : ஆண்டாள்

16. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை

  1. கம்மாய்
  2. இலஞ்சி
  3. கூவல்
  4. ஏரி

விடை : கூவல்

17. கல்லணை ____________ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.

  1. காவிரி
  2. வைகை
  3. நொய்யல்
  4. தாமிரபரணி

விடை : காவிரி

18. காேதாவரி ஆற்றின் இடையே ____________ அணையைக் கட்டப்பட்டது

  1. முல்லைப்பெரியார்
  2. கல்லணை
  3. தெளலீஸ்வரம்
  4. வைகை

விடை : தெளலீஸ்வரம்

19. தஞ்சாவூர் மாவட்டம் பாசன வசதி பெற கல்லணை கட்டப்பட்டது.

  1. முல்லைப்பெரியார்
  2. கல்லணை
  3. தெளலீஸ்வரம்
  4. வைகை

விடை : கல்லணை

20. சனி நீராடு என்பது ___________ வாக்கு

  1. இளங்கோவடிகள்
  2. திருவள்ளுவர்
  3. ஒளவையார்
  4. தொல்காப்பியர்

விடை: ஒளவையார்

குறு வினா

1. முந்நீர் விரிவாக்கம் தருக?

ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர்

2. உறை கிணறு என்பது என்ன?

மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணறு உறைகிணறு ஆகும்.

3. மக்கள் பருகும் நீர்நிலையின் பெயர் என்ன?

ஊருணி

4. திருமஞ்சனம் ஆடல் என்றால் என்ன?

தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்று கூறுவர்.

5. நீர்நிலையின் வேறு பெயர்கள் யாவை?

அகழி, அணை, ஊருணி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு, ஏரி, குளம், கேணி, கண்மாய்

6. முல்லைப் பெரியார் அணையின் மூலம் பயன் பெறும் மாநிலங்கள் யாவை?

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம்

சிறு வினா

1. கல்லணை பற்றிய குறிப்பு வரைக

  • கரிகாலனின்  விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை.
  • கல்லணையின் நீளம் – 1808 அடி
  • கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி
  • கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி
  • வலுவான கட்டுமானத் தொழில் நுட்பத்தால் கட்டப்பட்டுள்ளது.
  • கல்லணையைக் கட்டிய பொறியாளர் சர் ஆர்தர் காட்டன்.
  • இவர் கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரைச் சூட்டினார்

2. கல்லணையை கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில் நுப்டம் பற்றி கூறுக

  • காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளை கொண்டு வந்து போட்டனர்.
  • அந்தப் பாறைகள் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்கு சென்றன.
  • அதன்மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத களிமண்ணை புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர்.
  • இதுவே கல்லணையைக் கட்ட பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

3. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் மூலம் பாசன மேலாண்மைக்கு எவ்வாறு தொண்டாற்றினார்?

  • இந்திய நீர் பாசனத்தின் தந்தையான சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர்.
  • கல்லணையைப் பல ஆண்டுக்காலம் ஆராய்ந்தார்.
  • கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைபட்டு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் வெள்ளத்தாலும், வளர்ச்சியாலும் வளமை குன்றியது.
  • இந்நிலையில் சர் ஆர்தர் காட்டன் 1829-ல் காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
  • பயனற்று இருந்த கல்லணையைச் சிறு சிறு பகுதியாக பிரித்து மணல் போக்கிகளை அமைத்தார்
  • அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழிரின் அணைகட்டும் திறனையும், பாசன மேலாண்மையையும் உலகுக்கு எடுத்துக் கூறினார்
  • கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டினார்.
  • கல்லணையின் கட்டுமான உத்திகளை கொண்டு 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment