Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.1 Sirpakalai Book Back Solution

இயல் 6.1 – சிற்பக்கலை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.1 ‘Sirpakalai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.1 சிற்பக்கலை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.1 Sirpakalai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

சிற்பக்கலை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Sirpakalai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Sirpakalai Subject.

Previous Lesson: இடைச்சொல் – உரிச்சொல்

Class 8 Tamil Text Books – Download

பலவுள் தெரிக

1. பல்லவர் காலச் சிற்பக்கலைக்குச் சிறந்த சான்று ____________

  1. மாமல்லபுரம்
  2. பிள்ளையார்பட்டி
  3. திரிபுவனவீரேசுவரம்
  4. தாடிக்கொம்பு

விடை : மாமல்லபுரம்

2. திருநாதர்குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை ____________

  1. விலங்கு உருவங்கள்
  2. தீர்த்தங்கரர் உருவங்கள்
  3. தெய்வ உருவங்கள்
  4. நாட்டியம் ஆடும் பாவை உருவங்கள்

விடை : தீர்த்தங்கரர் உருவங்கள்

குறு வினா

1. செப்புத் திருமேனிகள் பற்றிக் குறிப்பு வரைக.

  • சோழர் காலத்தில் மிகுதியான செப்புத் திருமேனிகள் உருவாக்கப்பட்டன.
  • கடவுளின் உருவங்களும் மிகுந்த கலை நுட்படத்தோடு வடிவமைக்கப்பட்டன.
  • செப்புத் திருமேனைகளில் பொற்காலம் எனபர்.

2. நடுகல் என்றால் என்ன?

போரி்ல் விழுப்புண் பட்டு இறந்த வீரருக்குக் கல்லில் வீரரின் உருவம் பொறிக்கப்பட்டு நடுவது நடுகல் ஆகும்.

3. இசைத் தூண்கள் யார் காலத்தில் அமைக்கப்பட்டவை?

இசைத் தூண்கள் விஜய நகர மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்டவை.

சிறு வினா

1. முழு உருவச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு யாது?

முழு உருவச் சிற்பங்கள்:-

உருவத்தின் முன், பின் பகுதிகள் தெளிவாக முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள்

புடைப்புச் சிற்பங்கள்:-

உருவத்தின் முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள்.

2. நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலின் சிற்பங்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைநுட்பத்தில் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பகமாகக் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன.

நெடு வினா

தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலை நயம் மிக்கனவாகவும் வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

  • பல்லவர் கால மாமல்லபுரச் சிற்பங்கள் பெரும்பாைறகளைச் செதுக்கிப் பற்பல உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சபாண்டவர்கள் இரதத்தில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் அழகாக உள்ளன. காஞ்சி கைலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாக திகழ்கின்றன.
  • தஞ்சைப் பெரிய கோவிலில் காணப்படும் 14 அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும், நந்தியும் வியப்பூட்டும் வண்ணம் உள்ளது.
  • விஜய நகர மன்னர்கள் காலத்தில் மிக உயர்ந்த கோபுரங்கள் சிற்ப வேலப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன. பல்வேறு ஓசைகளை எழுப்பும் இசைக் கற்றூண்களையும் அமைத்தன.
  • நாயக்கர் மன்னர்கள் சிற்ப வேலைபாடுடன் ஆயிரங்களால் மண்டபத்தை அமைத்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மண்டபத்து தூண்களில் கண்ணப்பர், குறவன், குறத்தி போன்ற சிற்பங்கள் உள்ளன. அரிச்சந்திரன். சந்திரமதி சிற்பங்களில் ஆடை ஆபரணங்கள் கலை நயத்துடன் காணப்படுகின்றன. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி சந்திரமதி சிற்பம் நயம் மிக்கது.
  • கோவைக்கு அண்மையில் உள்ள பேரூர் சிவன் கோவிலில் உள்ள சிற்பங்கள் நாயக்காலச் சிற்பக் கலைநுடபத்தின் உச்சநிலைப் படைப்பு எனலாம்.
  • விழியோட்டம், புருவ நெளிவு, நக அமைப்பு என மிகமிக நுட்பமாகக் கலைநயத்துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன.
  • இவை அனைத்தும் கலைநயத்திற்கும், வரலாற்றுப் பதிவுகளும் தக்க சான்றுகளாகும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “சிற்பக்கலை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. கண்ணகிக்குச் சிலை வடித்த செய்தியை கூறும் நூல்

  1. தொல்காப்பியம்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : சிலப்பதிகாரம்

2. மாளிகைகளில் பல சிற்பங்களில் சுதைச் சிற்பங்கள் இருந்த செய்தியை ___________ கூறுகிறது

  1. தொல்காப்பியம்
  2. மணிமேகலை
  3. சிலப்பதிகாரம்
  4. மணிமேகலை

விடை : மணிமேகலை

3. சிற்ப தொழிலுக்குரிய உறுப்புகளைப் ____________, ___________ கூறுகின்றன

  1. தொல்காப்பியம், நன்னூல்
  2. திவாகரநிகண்டு, மணிமேகலை
  3. சிலப்பதிகாரம், வளையாபதி
  4. சீவகசிந்தாமணி, குண்டலகேசி

விடை : திவாகரநிகண்டு, மணிமேகலை

4. பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்களில் பொருந்தாதது

  1. திருமயம்
  2. காஞ்சிபுரம்,
  3. குன்றக்குடி
  4. திருப்பரங்குன்றம்

விடை : காஞ்சிபுரம்

5. ____________ காலம் செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது.

  1. சேரர்
  2. பாண்டியர்
  3. பல்லவர்
  4. சோழர்

விடை : சோழர்

6. கற்சிற்பங்கள் அமைக்கும் கலை _____________ காலத்தில் விரைவாக வளர்ச்சி பெற்றது.

  1. சேரர்
  2. சோழர்
  3. பாண்டியர்
  4. பல்லவர்

விடை : சோழர்

7. _____________ மன்னர் பல இடங்களில் ஆயிரங்கால் மண்டபங்களை அமைத்தனர்.

  1. சேரர்
  2. நாயக்கயர்
  3. பாண்டியர்
  4. சோழர்

விடை : நாயக்கயர்

8. இறந்த மைந்தனைக் கையில் ஏந்தியபடி நிற்கும் சந்திரமதி சிலையும் _____________ல் அமைந்துள்ளது.

  1. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  2. இராமேசுவரம் பெருங்கோவில்
  3. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்
  4. கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்,

விடை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

9. ______________ மதத்தில் சில சிற்பங்கள் அளவுக்கு மீறிய உயரமும், பருமனும் உடையனவாக உள்ளன.

  1. வைணவ
  2. பெளத்த
  3. சமண
  4. சைவ

விடை : சமண

10. சிற்பக்கலை பற்றி தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள நூல்

  1. சிற்பக்கலை
  2. சிற்பச்செந்நூல்
  3. சிற்ப ஓவியம்
  4. சிற்ப நூல்

விடை : சிற்பச்செந்நூல்

11. இசைக் கற்றூண்களை _____________ மன்னர்கள் அமைத்தார்கள்

  1. பாண்டிய
  2. விஜயநகர
  3. சோழ
  4. நாயக்க

விடை : விஜயநகர மன்னர்

12. தமிழக அரசு சிற்பக்கல்லூரி உள்ள இடம்

  1. கும்பகோணம்
  2. சுவாமி மலை
  3. மாமல்லபுரம்
  4. மதுரை

விடை : மாமல்லபுரம்

13. அரசு கவின்கலைக் கல்லூரிகள் ____________, ______________ இடங்களில் உள்ளன

  1. சென்னை, கும்பகோணம்
  2. மதுரை, திருநெல்வேலி
  3. மாமல்லபுரம், சுவாமி மலை
  4. மதுரை, கோவை

விடை : சென்னை, கும்பகோணம்

கோடிட்ட இடங்களை நிரப்புக

1.  சிற்பிகள் _____________ என சிறப்பிக்கப்படுகின்றன

விடை: கற்கவிஞர்கள்

2. யோகக்கலை, நாட்டியக்கலை கூறுகள் _____________யில் இடம் பெறச் செய்தனர்.

விடை: தமிழகச் சிற்பக்கலை

3. சமண மதத்தில் சிற்பங்கள் அளவுக்கு மீறிய ____________, __________ உடையவையாக உள்ளன.

விடை : உயரமும், பருமனும்

3. தமிழகத்தில் கட்டப்படும் கோவில்களில் இன்றும் __________________, __________________ அமைக்கப்பட்டு வருகின்றன

விடை : கதைச்சிற்பங்கள், கற்சிற்பங்கள்

குறு வினா

1. பல்லவர்கள் காலச் சிற்பங்கள் உள்ள இடங்கள் சிலவற்றை கூறுக

மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி, மலைக்கோட்டை

2. பாண்டியர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ள இடங்கள் சிலவற்றை கூறுக

திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம்

3. சிற்பக் கலை என்பது யாது?

கல், உலோகம், செங்கல், மரம் முதலியவற்றைக் கொண்டு கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் உருவங்கள் அமைக்கும் கலையே சிற்பக்கலை ஆகும்.

4. சிற்பங்களின் நான்கு நிலைகள் யாவை?

தெய்வ உருவங்கள், கற்பனை உருவங்கள், இயற்கை உருவங்கள், முழு வடிவ உருவங்கள்

5. உருவ அமைப்பு அடிப்படையில் உள்ள சிற்பங்களின் வகைகளை கூறுக

  • முழு உருவச் சிற்பங்கள்
  • புடைப்புச் சிற்பங்கள் – என இரண்டாகப் பிரிக்கலாம்.

6. முழு உருவச் சிற்பங்கள் என்பது யாவை?

உருவத்தின் முன்பகுதியும் பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு உருவத்துடன் அமைந்த சிற்பங்களை முழு உருவச் சிற்பங்கள் என்று கூறலாம்.

7. புடைப்புச் சிற்பங்கள் காணப்படும் இடங்களை சிலவற்றை எழுதுக

கோவிலின் தரைப் பகுதி, கோபுரம், தூண்கள், நுழைவாயில்கள், சுவர்களின் வெளிப்புறங்கள்

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment