Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 6.2 Ravana Kaviyam Book Back Solution

இயல் 6.2 – இராவண காவியம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 6.1 ‘ Ravana Kaviyam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 6.2 இராவண காவியம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 6.2 Ravana Kaviyam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

இராவண காவியம் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ravana Kaviyam’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Ravana Kaviyam Subject.

Previous Lesson: சிற்பக்கலை

நூல் வெளி

  • இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம்.
  • இந்நூல் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என ஐந்து காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது.
  • இந்நூல் புலவர் குழந்தை அவர்களால் இயற்றப்பட்டது.
  • தமிழ்க்காண்டத்திலுள்ள பாடல்ங்கள் இங்கு இடம் பெற்றுள்ளன.
  • தந்தை பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க 25 நாள்களில் இவர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.
  • யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இலக்கண, இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

சொல்லும் பொருளும்

  • மைவனம் – மலைநெல்
  • முருகியம் – குறிஞ்சிப்பறை
  • பூஞ்சினை – பூக்களை உடைய கிளை
  • சிறை – இறகு
  • சாந்தம் – சந்தனம்
  • பூவை- நாகணவாய்ப் பறவை
  • பொலம் – அழகு
  • கடறு – காடு
  • முக்குழல் – கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்;
  • பொலி – தானியக்குவியல்
  • உழை – ஒரு வகை மான்
  • கல் – மலை
  • முருகு – தேன், மணம், அழகு
  • மல்லல்- வளம்
  • செறு- வயல்
  • கரிக்குருத்து – யானைத்தந்தம்
  • போர்- வைக்கோற்போர்
  • புரைதப- குற்றமின்றி
  • தும்பி- ஒருவகை வண்டு
  • துவரை – பவளம்
  • மரை – தாமரை மலர்
  • விசும்பு – வானம்
  • மதியம் – நிலவு

இலக்கணக் குறிப்பு

  • இடிகுரல் – உவமைத்தொகை
  • பிடிபசி – வேற்றுமைத் தொகை
  • பூவையும் குயில்களும், முதிரையும் சாமையும் வரகும் – எண்ணும்மை
  • கருமுகில், இன்னுயிர், பைங்கிளி – பண்புத்தொகை
  • பெருங்கடல், முதுவெயில், இன்னிளங்குருளை – பண்புத்தொகை
  • மன்னிய- பெயரெச்சம்
  • வெரீஇ – சொல்லிசை அளபெடை
  • கடிகமழ் – உரிச்சொற்றொடர்
  • மலர்க்கண்ணி – மூன்றாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை
  • எருத்துக்கோடு – ஆறாம் வேற்றுமைத்தொகை
  • கரைபொரு – இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • மரைமுகம் – உவமைத் தொகை
  • அதிர்குரல், வருமலை – வினைத் தொகை

பகுபத உறுப்பிலக்கணம்

1. பருகிய = பருகு+இன்+ ய்+அ

  • பருகு – பகுதி
  • இன்- இறந்த கால இடைநிலை (ன் கெட்டது விகாரம்)
  • ய் -உடம்படுமெய்
  • அ –பெயரெச்ச விகுதி

2. பூக்கும் = பூ + க் + க் + உம்;

  • பூ – பகுதி
  • க் – சந்தி
  • க் – எதிர்கால இடைநிலை
  • உம் – வினைமுற்று விகுதி

பலவுள் தெரிக

பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப் பகுதி ____________

  1. குறிஞ்சி
  2. நெய்தல்
  3. முல்லை
  4. பாலை

விடை : முல்லை

குறு வினா

1. பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

2. இடிகுரல், பெருங்கடல் இலக்கணக்குறிப்பு தருக?

  • இடிகுரல் – உவமைத்தொகை
  • பெருங்கடல் – பண்புத்தொகை

சிறு வினா

1. இராவண காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் கா ட்சி போல் உள்ளது.

2. குறிஞ்சி மணப்பதற்கு நிகழ்வுகளைக் குறிப்பிடுக?

தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

நெடு வினா

இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரி.

குறிஞ்சி மணம்:-

தீயில் இட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும் உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின் மணமும் காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரவித் தோய்ந்து கிடந்தத னால் எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம் கமழ்ந்து காணப்பட்டன.

பறவைகளின் அச்சம்:-

எருதின் கொம்புகளைப் போன்றிருந்த பாலைக் காயை நிலத்தில் விழுந்து வெடிக்குமாறு அவர்கள் கோலினால் அடித்து விளையாடினர். அவ்வோசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.

தும்பியின் காட்சி:-

தும்பியானது கரையை நெருங்கி வருகின்ற மலை போன்ற அலையினைத் தடவி, கடற்கரை மணலிடை உலவி, காற்றிலே தன் நீண்ட சிறகினை உலர்த்தும். பின்னர்த் தாமரை மலரையொத்த பெண்களின் முகத்தினை நோக்கித் தொடர்ந்து செல்லும். அது வானில் முழு நிலவைத் தொடர்ந்து செல்லும் கருமேகத்தின் காட்சி போல் உள்ளது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இராவண காவியம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. இராவணனை பாட்டுத்தலைவனாக கொண்ட காவியம் 

  1. இராமாணயம்
  2. இராவண காவியம்
  3. திருவிளையாடற்புராணம்
  4. சிலப்பதிகாரம்

விடை : இராவண காவியம்

2. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம்

  1. மணிமேகலை
  2. திருவிளையாடற்புராணம்
  3. சிலப்பதிகாரம்
  4. இராவண காவியம்

விடை : இராவண காவியம்

3. இராவண காவியத்தின் உட்பிரிவு

  1. சருக்கம்
  2. படலம்
  3. காண்டம்
  4. காதை

விடை : காண்டம்

4. இராவண காவியத்தின் முதல் காண்டம்

  1. இலங்கைக் காண்டம்
  2. தமிழகக் காண்டம்
  3. விந்தக் காண்டம்
  4. பழிபுரி காண்டம்

விடை : தமிழகக் காண்டம்

5. இராவண காவியத்தின் கடைசி காண்டம்

  1. இலங்கைக் காண்டம்
  2. தமிழகக் காண்டம்
  3. போர்க்காண்டம்
  4. விந்தக் காண்டம்

விடை : போர்க்காண்டம்

6. புலவர் குழந்தை ______________ வேண்டுகோளுக்கிணங்க திருக்குறளுக்கு உரை எழுதினார்

  1. தந்தைப் பெரியார்
  2. அறிஞர் அண்ணா
  3. முத்துராமலிங்கனார்
  4. கலைஞர் கருணாநிதி

விடை : தந்தைப் பெரியார்

6. புலவர் குழந்தை ______________, ___________________ நூல்களை எழுதியுள்ளார்

  1. யாப்பதிகாரம், தொடையதிகாரம்
  2. யாப்பதிகாரம், இராமண காவியம்
  3. தொடையதிகாரம், இராமண காவியம்
  4. இராமண காவியம், இராமாணயம்

விடை : யாப்பதிகாரம், தொடையதிகாரம்

7. மைவனம் சொல்லின் பொருள் தருக

  1. சந்தனம்
  2. பொலம்
  3. மலைநெல்
  4. கொம்பு

விடை : மலைநெல்

8. முருகு சொல்லின் பொருள் தருக

  1. மலை
  2. தேன்
  3. குட்டி
  4. தாமரை

விடை: தேன்

9. இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் எனக் கூறியவர்

  1. தந்தைப் பெரியார்
  2. அறிஞர் அண்ணா
  3. முத்துராமலிங்கனார்
  4. கலைஞர் கருணாநிதி

விடை : அறிஞர் அண்ணா

10. கரிக்குருத்து என்னும் சொல்லின் பொருள் ___________

  1. கரிக்கோல்
  2. பனைக்குருத்து
  3. தென்னங்குருத்து
  4. யானைத்தந்தம்

விடை : யானைத்தந்தம்

11. இராவண காவிய காப்பியத் தலைவன் ___________

  1. இராமன்
  2. இராவணன்
  3. இலக்குணன்
  4. துரியோதன்

விடை : இராவணன்

12. ஐவகை நிலங்கள் பற்றி இடம்பெறும் இராவண காவியக்காண்டம் __________

  1. இலங்கைக் காண்டம்
  2. தமிழகக் காண்டம்
  3. விந்தக் காண்டம்
  4. பழிபுரி காண்டம்

விடை : தமிழகக்காண்டம்

குறு வினா

1. முக்குழல் – பொருள் கூறுக

கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியற்றால் ஆன குழல்கள்

2. இராவண காவியத்திலுள்ள காண்டங்களை எழுதுக

தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம்

3. இராவண காவியம் – குறிப்பு வரைக

  • ஆசிரியர் – புலவர் குழந்தை
  • காலம் – 20-ம் நூற்றாண்டு
  • உட்பிரிவு – தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம்
  • பாடல் எண்ணிக்கை – 3100

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment