Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 2.6 Thunai Vinaigal Book Back Solution

இயல் 2.6 – துணை வினைகள்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 2.5 ‘Thunai Vinaigal’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 2.6 துணை வினைகள்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 2.6 Thunai Vinaigal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

துணை வினைகள் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Thunai Vinaigal’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Thunai Vinaigal Subject.

Previous Lesson: தண்ணீர்

பலவுள் தெரிக

பொருத்தமான வினையை எடுத்து எழுதுக.

கதிர் அலுவலகத்திலிருந்து விரைவாக —————. அவன் பையன் பள்ளியிலிருந்து இன்னும் ————–.

  1. வந்தான் , வருகிறான்
  2. வந்துவிட்டான், வரவில்லை
  3. வந்தான் , வருவான்
  4. வருவான், வரமாட்டான்

விடை : வந்துவிட்டான், வரவில்லை

கற்பவை கற்றபின்…

பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.

1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) ……………….. மொழியாகும்.

விடை: வேறுபடுத்துவது

2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) ………………..

விடை: பெற்றிருக்கின்றன

3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) ……………….. மொழி தமிழ்.

விடை: புதுபித்துக் கொள்ளும்

4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) ………………..

விடை: தேடிக் கொண்டிருக்கிறேன்

கீழ்க்காணும் துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக

(வேண்டும், பார், உள், வா, விட)

1. வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க ………….

விடை: வேண்டும்

2. பார் – படத்தை உற்றுப் ………………..

விடை: பார்

3. உள் – கடல் நீரினை ……………….. வாங்கியது

விடை: உள்

4. வா – நாளை என் வீட்டுக்கு ………………..

விடை: வா

5. விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து ………………..வேன்

விடை: விடு

 பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துகையில் துணைவினைகளைச் சேர்க்கிறோம். பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களாக மாற்றி, ஏற்ற துணைவினைகளை இட்டு எழுதுக

1. மார்னிங் எழுந்து

  • தமிழ்ச் சொல் : காலையில் எழுந்து
  • துணை வினை சொல் : காலையில் எழுந்துவிட்டாள்

2. பிரஷ் பண்ணி

  • தமிழ்ச் சொல் : பல் துலக்கி
  • துணை வினை சொல் : பல் துலக்கி முடித்தாள்

3. யூனிஃபார்ம் போட்டு

  • தமிழ்ச் சொல் : சீருடை அணிந்து
  • துணை வினை சொல் : சீருடை அணிந்து கொண்டாள்.

4. ஸ்கூலுக்குப் போனாள்

  • தமிழ்ச் சொல் :  பள்ளிக்கு போனாள்
  • துணை வினை சொல் : பள்ளிக்கு பறப்பட்டுப் போனாள்.

மொழியை ஆள்வோம்!

இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக

1. Every flower is a soul blossoming in nature – Gerard De Nerval

மொழி பெயர்ப்பு

  • எல்லா பூக்களும் இயற்கையில் உயிருடன் இருக்கிறது

பழமொழி

  • மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

2. Sunset is still my favourite colour, and rainbow is second – Mattie Stepanek

மொழி பெயர்ப்பு

  • சூரிய அஸ்தமனம் முதலில் எனக்கு பிடித்த வண்ணம், வானவில்லின் வண்ணம் அடுத்த நிலை தான்

பழமொழி

  • தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

3. An early morning walk is a blessing for the whole day – Henry David Thoreau

மொழி பெயர்ப்பு

  • அதிகாலையில் நடைப்பயிற்சி அந்நாளுக்கே ஒரு வரமாகும்

பழமொழி

  • நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

4. Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson

மொழி பெயர்ப்பு

  • வெறுமையான வாழ்வு மட்டும் போதாது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒளி, ஆற்றல், விடுதலை மலர் என இருத்தல் வேண்டும்.

பழமொழி

  • இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்

பிழை நீக்கி எழுதுக

1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.

விடை: சர் ஆர்தர் காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.

2. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

விடை: மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான்.

3. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

விடை: மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

4. நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறோம்.

விடை: நீலனும் மாலனும் அவசரகாலத் தொடர்புக்கான தொலைப்பேசி எண்களின் பட்டியலை வைத்திருக்கிறார்கள்.

5. சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.

விடை: சூறாவளியின் போது மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பித்தான்.

பழமொழிகளைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைக்க

1. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

விடை: நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

2. தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

விடை: தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

3. மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விடை: மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்

4. கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

விடை: கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

மொழியோடு விளையாடு

சொல்லுக்குள் சொல் தேடுக

1. ஆற்றங்கரையோரம்

விடை: ஆறு, கரை, ஓரம்

2. கடையெழுவள்ளல்கள்

விடை: கடை, ஏழு, வள்ளல்கள்

3. எடுப்பார்கைப்பிள்ளை

விடை: எடு, பார், கை, பிள்ளை

4. தமிழ்விடுதூது

விடை: தமிழ், விடு, தூது

5. பாய்மரக்கப்பல்

விடை: பாய், மரம், கப்பல், கல்

6. எட்டுக்கால்பூச்சி 

விடை: எட்டு, கால், பூச்சி

அகராதியில் காண்க

1. கந்தி

விடை: கழுகு, வாசம், கந்தகம், தவப்பெண்

2. நெடில்

விடை: நீளம், மூங்கில், நெட்டெழுத்து

3. பாலி

விடை: ஆலமரம், அணை, எல்லை, ஒரு பாஷை, பாற்பசு, செம்பருத்தி, கரை

4. மகி

விடை: பூமி, பசு

5. கம்புள்

விடை: சங்கு, கம்பங்கோழி, வானம்பாடி

6. கைச்சாத்து

விடை: கையொப்பம், பொருள்பட்டி

சொற்களை இணைத்துத் தொடர்களை விரிவுபடுத்துக

1. அரிசி போடுகிறேன்.

  • புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.
  • நான் நாள்தோறும் காலையில் ஒருபோதும் மறக்காமல் புறாவுக்கு அரிசி போடுகிறேன்.

2. மழை பெய்தது.

  • மாலையில் மழை பெய்ததது.
  • நேற்று மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்ததது.
  • நாள்தோறும் மாலையில் தவறாமல் மழை பெய்ததது.

3. வானவில்லைப் பார்த்தேன்.

  • மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நாள்தோறும் மாலையில் வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது வானவில்லைப் பார்த்தேன்.
  • நான் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.
  • நான் நாள்தோறும் மாலையில் மறக்காமல் மழைபெய்யும் போது கிழக்குப் பக்கம் வானவில் பார்த்தேன்.

4. குழந்தை சிரித்தது.

  • தாெட்டிலில் குழந்தை சிரித்தது.
  • தாெட்டிலில் அழுத குழந்தை சிரித்தது.
  • அம்மாவைப் பார்த்ததும் அழுத குழந்தை சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து பார்த்து  சிரித்தது.
  • அழுத குழந்தை அம்மாவைப் பார்த்து மேலும் பொக்கைவாய் திறந்து  சிரித்தது.
  • அழுத குழந்தை நீக்கிப் பார்த்துச் சிரித்தது.

5. எறும்புகள் போகின்றன.

  • எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் கல்லில் போகின்றன.
  • எறும்புகள் வரிசையாகப் புற்றுக்குள்போகின்றன.
  • சர்க்கரையை நோக்கி எறும்புகள் வரிசையாகப் போகின்றன.
  • அடுக்கில் உள்ள சர்க்கரையை நோக்கி எறும்புகள் போகின்றன.

6. படம் வரைந்தான்

  • அவன் படம் வரைந்தான்.
  • அவன் விலங்குகளின் படம் வரைந்தான்.
  • இயற்கையைப் படம் வரைந்தான்.
  • இயற்கை மரங்களை படமாக வரைந்தான்
  • பறக்கும் பறவைகளை அழகாக படம் வரைந்தான்.

வேறுபட்ட வினையெச்சங்களைப் பயன்படுத்தி, முதல்வினைகளைத் துணைவினைகளாக மாற்றுக

முதல்வினைகள், பார்த்தேன், கொடுத்தார், நடந்தான், சேர்ந்தார், அமைத்தோம்.

1. பார்த்தேன்

விடை: எழுதிப் பார்த்தான், தடுக்கப் பார்த்தான், கொடுத்துப் பார்த்தான், ஓடப் பார்த்தான்

2. கொடுத்தார்

விடை: எழுதிக் கொடுத்தார், படிக்கக் கொடுத்தார், வாங்கிக் கொடுத்தார். பார்த்துக் கொடுத்தார்

3. நடந்தான்

விடை: பார்த்து நடந்தான், கேட்டு நடந்தான், வாங்கி நடந்தான், சிரித்து நடந்தான்

4. சேர்ந்தார்

விடை: வந்து சேர்ந்தார், போய்ச் சேர்ந்தார், நடந்து சேர்ந்தார், ஓய்ந்து சேர்ந்தார்

5. அமைத்தாேம்

விடை: பார்த்து அமைத்தோம், கண்டு அமைத்தோம், கேட்டு அமைத்தோம், ஓய்ந்து அமைத்தோம்

வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைந்த தொடர்களாக உருவாக்குக

வினையடி – வை, வா, போ, செய், மாற்று, இரு, கொடு, கொள், எழுது, விடு, போடு

வினையடி முதல் வினை துணை வினை
வை மூட்டையைத் தலையில் வைத்தான் அம்மா குழந்தையைத் தூங்க வைத்தார்.
வா நீ நாளை வீட்டுக்கு வா ஆங்கிலேயர் நம்மை ஆண்டு வந்தனர்
போ நான் நூலகத்துக்குப் போனேன் நான் பயந்து போனேன்
செய் அவன் அதைச் செய்தான் அவன் அதைச் செய்ய வைத்தான்
மாற்று அவன் கடையை மாற்றினான் அவன் கடையை மாற்றச் செய்தான்
இரு நான் தனியாக இருந்தேன் அவனை தனியாக இருக்கச் செய்தேன்
கொடு அவள் கொடுத்தாள் அவளுக்குக் கொடுக்க செய்தான்
கொள் நீ அதைக் கொள் அவன் அதை ஏற்றுக் கொள்ளட்டும்.
எழுது மாறன் எழுதினான் நான் அவனை எழுதச் செய்தேன்
விடு யாரையும் உள்ளே விடாதே அப்பா இனி வந்து விடுவார்
போடு தொப்பியை கீழே போடு சாப்பிட்டவுடன் இலையைச் சுருட்டிப் போட வேண்டும்

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • குமிழிக் கல் – Conical Stone
  • நீர் மேலாண்மை – Water Management
  • பாசனத் தொழில்நுட்பம் – Irrigation Technology
  • வெப்ப மண்டலம் – Tropical Zone

அறிவை விரிவு செய்

  • அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
  • தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
  • தண்ணீர் தேசம் – வைரமுத்து
  • வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
  • மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்
  • கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் – மா. அமரேசன்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “துணை வினைகள்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

குறு வினா

1. வினைச்சொற்களை தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.

  1. தனி வினை, கூட்டு வினை
  2. முதல் வினை, கூட்டு வினை
  3. தனி வினை, முதல் வினை
  4. இறுதி வினை, முதல் வினை

விடை: தனி வினை, முதல் வினை

2. தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் ____________ என்பர்.

  1. கூட்டு வினை
  2. தனி வினை
  3. முதல் வினை
  4. இறுதி வினை

விடை: தனி வினை

3. கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் ____________ என்பர்.

  1. தனி வினை
  2. முதல் வினை
  3. இறுதி வினை
  4. கூட்டு வினை

விடை: தனி வினை

4. ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்துதன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை _____________ எனப்படும்.

  1. தனி வினை
  2. முதல் வினை
  3. இறுதி வினை
  4. கூட்டு வினை

விடை: முதல் வினை

Back to 9th Tamil Guide Home Page

 

Leave a Comment