Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 3.1 Yeru thaluvuthal Book Back Solution

இயல் 3.1 – ஏறு தழுவுதல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 3.1 ‘Yeru thaluvuthal’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 3.1 ஏறு தழுவுதல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 3.1 Yeru thaluvuthal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.

ஏறு தழுவுதல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Yeru thaluvuthal’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Yeru thaluvuthal Subject.

Previous Lesson: துணை வினைகள்

Class 8 Tamil Text Books – Download

பலவுள் தெரிக

1. பொருந்தாத இணை எது?

  1. ஏறுகோள் – எருதுகட்டி
  2. திருவாரூர் – கரிக்கையூர்
  3. ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு
  4. பட்டிமன்றம் – பட்டிமண்டபம்

விடை : திருவாரூர் – கரிக்கையூர்

2. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

  1. தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்.
  2. தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான.
  3. தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்.
  4. தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

விடை : தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்.

3. சொற்றொடர்களை முறைப்படுத்துக.

அ) ஏறுதழுவுதல் என்பதை ஆ) தமிழ் அகராதி இ) தழுவிப் பிடித்தல் என்கிறது
  1. ஆ – அ – இ
  2. ஆ – இ – அ
  3. இ – ஆ – அ
  4. இ – அ – ஆ

விடை : ஆ – அ – இ

குறு வினா

1. நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல் எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?

ஜல்லிக்கட்டு, மாடு பிடித்தல், மஞ்சு விரட்டு

2. ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

ஏறுகோள், எருதுகட்டி

3. ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள் கிடைத்த இடங்களைப் பட்டியலிடுக.

  • சேலம்
  • நீலகிரி – கரிக்கையூர்
  • மதுரை – கல்லூத்து மேட்டுப்பட்டி
  • தேனி – சித்திரக்கல் புடவு
  • சிந்துசமவெளி அகழாய்வு

சிறு வினா

1. வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாள நீட்சியை விளக்குக.

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • இதுவே வேளாண் உற்பத்தியின் பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது.

2. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?

  • ஏறு தழுவுதல், முல்லை நிலத்து மக்களின் அடையாளம்.
  • மருத நில வேளாண் மக்களின் தொழில் உற்பத்தியோடும் பாலை நிலத்து மக்களின் தேவைக்கான போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது.
  • ஏறுதழுவுதல் இங்கனம் திணைநிலை வாழ்வுடன் பிணைந்துள்ளதை அறியலாம்.

நெடு வினா

ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க

  • காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாகக்  ஸ்பெயின் நாடு கொண்டுள்ளது.
  • காளையைக் கொன்று அடக்குபவனே வீரனாகக் கருதப்படுவான்.
  • அதில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு.
  • காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சில நாடுகளில் கொல்லவதும் உண்டு.
  • வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது.
  • தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் ஆயுதத்தை பயன்படுத்தக் கூடாது.
  • நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.
  • எவராலும் அடக்க முடியாத காளைகள் வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.
  • அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்.

2. பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.

  • ஏறுதழுவுதல் விலங்குகளை முன்னிலைப்படுத்தும் வழிபாட்டையும் இயற்கை வேளாண்மையையும் வலியுறுத்தும் பண்பாட்டுக் குறியீடு ஆகும்.
  • நம் முன்னோர்களின் இத்தகைய பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் ஏறுதழுவுதல் நிகழ்வைக் காணவும், ஏறுகளைப் பேணவும் நாம் உறுதி கொள்ள வேண்டும்.
  • மாட்டுப் பொங்கள் விழாவினைப் பெரிய நிகழ்வாகக் கொண்டாட வேண்டும்.
  • நமது கலை, பண்பாட்டு நிகழ்வுகளை ஆண்டுதோறும் விழாவாகக் கொண்டாட வேண்டும்.
  • குழந்தைகளுக்கு நமது பண்பாடுகளையும் வீர விளையாட்டுகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஏறு தழுவுதல் ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. _____________யில், ஏறுதழுவுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  1. அகநானூறு
  2. கலித்தொகை
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : கலித்தொகை

2. மருதநில எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு, கலங்கினர் பலர் – பாடல்வரிகள் இடம் இடம் பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. கலித்தொகை
  3. நற்றிணை
  4. குறுந்தொகை

விடை : கலித்தொகை

3. பொருந்தாத இணையைக் கண்டறிக

  1. கலித்தொகை – காளை
  2. சிலப்பதிகாரம் – ஏறுகோள்
  3. புறப்பொருள் வெண்பாமாலை- ஏறுகோள்
  4. கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

விடை : கண்ணுடையம்மன் பள்ளு – ஏறுகட்டி

4. __________ மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் 

  1. ஈரோடு
  2. நாமக்கல்
  3. திருப்பூர்
  4. சேலம்

விடை : சேலம்

4. __________ மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்ப ட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் 

  1. ஈரோடு
  2. நாமக்கல்
  3. திருப்பூர்
  4. சேலம்

விடை : சேலம்

5. __________ மாவட்டத்தில் எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்ப ட்ட எருது பொருதார் கல் ஒன்று உள்ளது. கோவுரிச் 

  1. ஈரோடு
  2. நாமக்கல்
  3. திருப்பூர்
  4. சேலம்

விடை : சேலம்

6. தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறு தழுவுதல் _____________ ஆண்டுகாலத் தொன்மையுடையது.

  1. 1000
  2. 500
  3. 2000
  4. 1500

விடை : 2000

7. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும்  நாடு

  1. பிரான்ஸ்
  2. ஸ்பெயின்
  3. இத்தாலி
  4. இங்கிலாந்து

விடை : ஸ்பெயின்

8. மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிப்பது

  1. செல்வம்
  2. சல்லி
  3. காசு
  4. ஜல்லி

விடை : சல்லி

9. தமிழர்களின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு

  1. கபடி
  2. கில்லி
  3. ஏறுதழுவதல்
  4. பம்பரம்

விடை : ஏறுதழுவுதல்

10. கலித்தொகையில் முல்லைக்கலியில் ____________ பற்றிய செய்திகள் இடம் பெறுகின்றன

  1. கபடி
  2. கில்லி
  3. ஏறுதழுவதல்
  4. பம்பரம்

விடை : ஏறுதழுவுதல்

சிறு வினா

1. எருதுகள் என அழைக்கப்பட்டவை யாவை?

ஏரில் பூட்டி உழவு செய்ய உதவிய காளை மாடுகள் எருதுகள் என்று அழைக்கப்பட்டன

2. ஏறுதழுவுதல் பற்றி கூறும் இலக்கியங்கள் சிலவற்றை கூறுக

கலித்தொகை, சிலப்பதிகாரம், புறப்பொருள் வெண்பாமாலை, கண்ணுடையம்மன் பள்ளு

3. மாடுகளைப் போற்றி மகிழ்விக்க கொண்டாடப்படும் விழா எது?

மாட்டுப் பொங்கல்.

4. காளைப்போர் இடம் பெற்றுள்ள் வெளிநாட்டுச் சித்திரங்கள் யாவை?

  • எகிப்தில் உள்ள பெனி – ஹாசன் சித்திரங்கள்
  • கிரிட் தீவில் உள்ள கினோஸஸ் என்னுமிடத்திலுள்ள அரண்மனைச் சிற்பங்கள்

5. ஏறு தழுவுதல் வேறு பெயர்கள் யாவை?

மாடு பிடித்தல், மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு, எருது கட்டி, காளை விரட்டு, ஏறு விடுதல், வேலி மஞ்சு விரட்டு

6. ஜல்லிக்கட்டு – பெயர்க்காரணம் எழுதுக

  • சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று, ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.
  • சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்.
  • சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்ததாலும் ஜல்லிக்கட்டு என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

Back to 9th Tamil Guide Home Page

Leave a Comment