இயல் 9.1 – விரிவாகும் ஆளுமை
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Chapter 9.1 ‘ Virivagum Alumai’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 9.1 விரிவாகும் ஆளுமை
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 9.1 Virivagum Alumai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.
விரிவாகும் ஆளுமை வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘ Virivagum Alumai’ which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Virivagum Alumai Subject.
Previous Lesson: யாப்பிலக்கணம்
நூல் வெளி
- தமிழுக்குத் தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் தனிநாயகம் அடிகள் குறிப்பிடத் தக்கவர்.
- அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளை கொண்டவை.
- இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு, பாடமாக இடம் பெற்றுள்ளது.
- தம் சொற்பொழிவு வாயிலாக உலகம் முழுவதும் தமிழின் புகழை பரப்பினார்.
- அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தார்.
- இவர் தொடங்கிய தமிழ்ப் பண்பாடு இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
பலவுள் தெரிக
1. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?
- கொம்பு
- மலையுச்சி
- சங்கு
- மேடு
விடை : மலையுச்சி
2. தமிழ்ப் புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை?
- நிலையற்ற வாழ்க்கை
- பிறருக்காக வாழ்தல்
- இம்மை மறுமை
- ஒன்றே உலகம்
விடை : ஒன்றே உலகம்
குறு வினா
தமிழ்ச் சான்றோர்க்கும் உரோமையச் சான்றோர்க்கும் உள்ள வேறுபாடு யாது?
தமிழ்ச்சான்றோன் சமுதாயத்திலேயே வாழ்ந்து தன்னால் இயன்ற வரை சமுதாயத்திற்குப் பல நன்மைகள் செய்வான். ஆனால், உரோமையரின் சான்றோர் சமுதாயத்திலிருந்து விலகி, தன் சொந்தப் பண்புகளையே வளர்க்க வேண்டும்.
சிறு வினா
1. உலக இலக்கியத்தில் காண இயலாத அரிய கருத்துகளைக் ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடுவன யாவை?
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
- இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
2. கோர்டன் ஆல்பர்ட கூறும் மூன்று இலக்கணங்களைக் குறிப்பிடுக.
- முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமைதான என்கிறார் கோர்டன் ஆல்பர்ட்
- முதலாவது மனிதன், தன் ஈடுபாடுகளை வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும். பிறருடைய நலத்திற்கும், இன்பத்திற்கும் பாடுபடக் கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப் படுத்த வேண்டும்.
- இரண்டாவது ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்து ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
- மூன்றாவதாக அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையத் தரும் தத்துவத்தை கடைபிடித்து நடத்தல் வேண்டும்.
நெடு வினா
தமிழ் இலக்கியங்கள் காட்டும் சான்றாண்மைக் கருத்துக்களைத் தனிநாயக அடிகளாரின் வழி நிறுவுக.
- உலக நாடுகளையும் மக்களையும் உட்படுத்தி பாராட்டுவது நம் இயல்பு
- அதனையே “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு வரிகளையும்,
“யாதானும் நாடாமல் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாத வாறு” – என்னும் குறட்பா வரிகளும் கூறுகின்றன.
- மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள். பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களை தாழ்த்தவோ, உயர்த்தவோ முடியாது.
- இத்தகைய அரிய கொள்கையைத் தமிழ் மக்கள் கடைப்பிடித்திருந்தனர் என்னும் உண்மை பெரும் வியப்பைத் தருகின்றது.
- திருக்குறள் பற்றி ஆல்பர்ட் சுவைட்சர் குறிப்பிடும் போது “இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பதரிது” என்பார் ஆல்பர்ட் சுவைட்சர்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “விரிவாகும் ஆளுமை ” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. கணியன் பூங்குன்றனாரின் என்னும் கொள்கை எல்லா நூற்றாண்டுகளுக்கும் பொருத்தமாக உள்ளது.
- தீதும் நன்றும் பிறர் தர வாரா
- யாதும் ஊரே யாவருங் கேளிர்
- கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
- தமிழன் என்று சொல்லடா
விடை : யாதும் ஊரே யாவருங் கேளிர்
2. பரந்த ஆளுமையும் மனித நலக் கோட்பாடும் இலத்தீன் புலவர் _____________ கூறிய கூற்றுடன் ஒப்பிடத்தக்கவை ஆகும்.
- கோர்டன் ஆல்போர்ட்
- லாவோட்சு
- அரிஸ்டாட்டில்
- தெறென்ஸ்
விடை : தெறென்ஸ்
3. குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்று நிலை நாட்டியவர்
- கணியன் பூங்குன்றனார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- புலவர் ஆலத்தூர்கிழார்
விடை : புலவர் ஆலத்தூர்கிழார்
4. கிரேக்கத் நாட்டினைச் சேர்ந்த தத்துவ ஞானிகள்
- கோர்டன் ஆல்போர்ட், லாவோட்சு
- கோர்டன் ஆல்போர்ட், பிளேட்டோ
- அரிஸ்டாட்டில், லாவோட்சு
- பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
விடை : பிளேட்டோ, அரிஸ்டாட்டில்
5. மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது என்ற கருத்துகளை வெளியிட்டவர்
- ஸ்டாயிக்வாதிகள்
- பிளேட்டோ
- அரிஸ்டாட்டில்
- கோர்டன் ஆல்போர்ட்
விடை : ஸ்டாயிக்வாதிகள்
6. ஒழுக்கவியலை நன்கறிந்து எழுதிய உலகமேதை ___________
- பிளேட்டோ
- அரிஸ்டாட்டில்
- ஆல்பர்ட் சுவைட்சர்
- கோர்டன் ஆல்போர்ட்
விடை : ஆல்பர்ட் சுவைட்சர்
7. படுதிரை வையம் பாத்திய பண்பே பாடல்வரிகள் அமைந்துள்ள நூல்
- புறநானூறு
- அகநானூறு
- தொல்காப்பியம்
- நன்னூல்
விடை : தொல்காப்பியம்
8. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ஆய் என்பவரைப் போற்றுவதற்குக் காரணம் அவர், _________________ செய்ததுதான்.
- நன்மையை நன்மைக்காகவே
- தீமையை நன்மைக்காகவே
- நன்மையை தமக்காகவே
- நன்மையை பிறருக்காகவே
விடை : நன்மையை நன்மைக்காகவே
9. இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் பாடல் வரிகள் எழுதப் பெற்ற நூல்
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
- குறுந்தொகை
விடை : புறநானூறு
10. பண்புடைமை என்னும் அதிகாரத்திற்கு உரை கண்டவர்
- பரிப்பெருமாள்
- சேக்கிழார்
- சுப்பிர பாரதி மணியம்
- நக்கீரனார்
விடை : பரிப்பெருமாள்
11. sapens என்பதன் தமிழாக்கம் தருக
- பொருடையோன்
- பொறுமையுடையோன்
- அறிவுடையோன்
- அன்புடையோன்
விடை: அறிவுடையோன்
12. திருவள்ளுவர் ____________ என்பவரால் உலகப்புலவர் என்று போற்றுகிறார்
- ஜி.யு.பாேப்
- மணவை முஸ்தபா
- கெல்லாட்
- தேவநேயப்பாவணர்
விடை : ஜி.யு.பாேப்
13. தமிழுக்குத் தொண்டாற்றிய கிறித்துவப் பெரியார்களுள் _____________ குறிப்பிடத்தக்கவர்.
- ஜி.யு.பாேப்
- மணவை முஸ்தபா
- தனிநாயகம் அடிகள்
- தேவநேயப்பாவணர்
விடை: தனிநாயகம் அடிகள்
14. அகில உலகத் தமிழாய்வு மன்றம் உருவாகவும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் இவர் காரணமாக இருந்தவர்.
- ஜி.யு.பாேப்
- மணவை முஸ்தபா
- தேவநேயப்பாவணர்
- தனிநாயகம் அடிகள்
விடை: தனிநாயகம் அடிகள்
15. தனிநாயகம் அடிகள் தொடங்கிய _____________ என்ற இதழ் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது.
- தமிழ்ப் மரபு
- தமிழ் வாழ்வியல்
- தமிழ் இனம்
- தமிழ்ப் பண்பாடு
விடை: தமிழ்ப் பண்பாடு
16. எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய் நாடு என்றும், நம் நாடு எல்லா மக்களுக்கும் தாய் நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும் எனக் கூறியவர்
- பிளேட்டோ
- அரிஸ்டாட்டில்
- செனக்கா
- கோர்டன் ஆல்போர்ட்
விடை : செனக்கா
குறு வினா
தனிநாயகம் அடிகள் குறிப்பு வரைக
- தமிழுக்குத் தொண்டாற்றிய கிறிஸ்தவப் பெரியார்களுள் குறிப்பிடத் தக்கவர்.
- அடிகளாரின் சொற்பொழிவுகள் தமிழர் புகழைப் பரப்பும் குறிக்கோளை கொண்டவை.
- இலங்கையில் யாழ்ப் பல்கலைக்கழகத்தில் பாஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவினை ஆற்றியுள்ளார்.
- அகில உலகத் தமிழாய்வு மன்றம்றமற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமானவர்.
- இவரின் தமிழ்ப் பண்பாடு இதழ் இன்றும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
உலகதமிழ் மாநாடுகள் நடைபெற்ற வருடம், இடங்களை கூறுக
முதல் உலகதமிழ் மாநாடு
- இடம்: கோலாம்பூர்
- வருடம்: 1966
இரண்டாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: சென்னை
- வருடம்: 1968
மூன்றாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: பாரீசு
- வருடம்: 1970
நான்காம் உலகதமிழ் மாநாடு
- இடம்: யாழ்ப்பாணம்
- வருடம்: 1968
ஐந்தாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: மதுரை
- வருடம்: 1981
ஆறாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: கோலாம்பூர்
- வருடம்: 1987
ஏழாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: மொரீசியது
- வருடம்: 1989
எட்டாம் உலகதமிழ் மாநாடு
- இடம்: தஞ்சாவூர்
- வருடம்: 1995