Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 1.3 Valarthamizh Book Back Solution

இயல் 1.3 – வளர்தமிழ்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 6th Tamil Chapter 1.3, Valarthamizh. Here, you’ll find solutions to all the questions from the 6th Standard Tamil Book Term 1 Lesson 1.3 வளர்தமிழ் வினா விடைகள்.

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 6th Tamil Chapter 1.3 வளர்தமிழ் / Valar Tamil Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 6th Tamil Guide PDF.

வளர்தமிழ் பாட வினா விடைகள் 2024

On this page, you will find the question answers for the Lesson – Valar Tamil which is the Third lesson of class 6 Tamil. Additionally, you can also access additional questions related to the Valartamil lesson.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. தொன்மை என்னும் சொல்லின் பொருள் _________________

  1. புதுமை
  2. பழமை
  3. பெருமை
  4. சீர்மை

விடை: பழமை

2. இடப்புறம் என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. இடன் + புறம்
  2. இடது + புறம்
  3. இட + புற
  4. இடப் + புறம்

விடை: இடது + புறம் or இடம் + புறம்

3. சீரிளமை என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல் _________________

  1. சீர் + இளமை
  2. சீர்மை + இளமை
  3. சீரி + இளமை
  4. சீற் + இளமை

விடை: சீர்மை + இளமை

4. சிலம்பு + அதிகாரம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் _______________

  1. சிலம்பதிகாரம்
  2. சிலப்பதிகாரம்
  3. சிலம்புதிகாரம்
  4. சிலபதிகாரம்

விடை : சிலப்பதிகாரம்

5. கணினி + தமிழ் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ________

  1. கணினிதமிழ்
  2. கணினித்தமிழ்
  3. கணிணிதமிழ்
  4. கனினிதமிழ்

விடை : கணினித்தமிழ்

6. தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர் ________

  1. கண்ணதாசன்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. வாணிதாசன்

விடை : பாரதியார்

7. மா என்னும் சொல்லின் பொருள்________

  1. மாடம்
  2. வானம்
  3. விலங்கு
  4. அம்மா

விடை : விலங்கு

Previous Lesson: தமிழ்க்கும்மி வினா விடை

கோடிட்ட இடத்தை நிரப்புக

1. நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்தவும் உதவுவது ________________

விடை : மொழி

2. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் ________________

விடை : தொல்காப்பியம்

3. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டும் எனில் அது ________________ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

விடை : எண்களின்

சொற்களைத் சொந்தத் தொடரில் அமைத்து எழுதுக

1. தனிச்சிறப்பு

விடை : உலக மொழிகளுள் தனிச்சிறப்பு உடையது தமிழ்

2. நாள்தோறும்

விடை : நாம் நாள்தோறும் திருக்குறள் படிப்பது நல்லது.

குறுவினா

1. தமிழ் மூத்தமொழி எனப்படுவது எதனால்?

  • இலக்கியம் தோன்றிய பிறகே இலக்கண விதிகள் தோன்றியிருக்க வேண்டும். தொல்காப்பியம் தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைமையான நூல்.
  • அப்படியென்றால் அதற்கும் முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் தோன்றியருக்க வேண்டும். ஆகவே இதனைக் கொண்டு தமிழ் மிகவும் தொன்மையான மூத்தமொழியென அழைக்கப்படுகிறது.

2. நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையபதி, குண்டலகேசி

சிறுவினா

1. அஃறிணை , பாகற்காய் என்னும் சொற்களின் பொருள் சிறப்பு யாது?

  • திணை இரு வகைப்படும்.
  • 1. உயர்திணை, 2. அஃறிணை
  • உயர்திணை எதிர்ச்சொல் தாழ்திணை என அமைய வேண்டும். ஆனால் தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல் + திணை – உயர்வு அல்லாத திணை) என பெயரிட்டு அழைக்கிறாேம்.
  • பாகற்காய் கசப்பு சுவை உடையது. அதனைக் கசப்புக்காய் என்று கூறாமல் இனிப்பு அல்லா காய் பாகற்காய் (பாகு + அல் + காய்) என அழைக்கிறோம்.

2. தமிழ் இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

தமிழ் இலக்கியங்கள் பலவும் செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை ஆகிய இனிமையான ஓசைகளையும், மோனை, எதுகை, இயைபு என்னும் சொல் இனிமையையும், செய்யளில் இடம் பெற்றுள்ள சொல்லுக்கான பொருளும் இனிமை மிகுந்தனவாக அமைந்து உள்ளதால் தமிழை இனியமொழி என்று அழைக்கின்றோம்.

3. தமிழ் மொழியின் சிறப்புக் குறித்து ஐந்து வரிகளில் எழுதுக.

  • மூத்த தமிழ் மொழி என்றும் இளமையானது. எளிமையானது. இனிமையானது, வளமையானது காலத்திற்கேற்ப தன்னை தகுதிப்படுத்திக் கொண்டது
  • நினைக்கும்போதே நெஞ்சில் இனிப்பது. நம் வாழ்வைச் செழிக்க செய்வது.
  • உலக செம்மொழிகளுள் ஒன்றாக விளங்குவது தமிழ் மொழியின் சிறப்பாகும்.
  • உலக மொழிகள் பலவற்றுள் இலக்கண, இலக்கிய வளம் பெற்றுத் திகழும் மொழிகள் மிகச்சிலவே
  • அவற்றை செம்மைமிக்க மொழி என ஏற்றுக் கொள்ப்பட்டவை ஒரு சில மொழிகளே தமிழ் மொழி அத்தகு சிறப்புமிக்க செம்மொழியாகும்

சிந்தனை வினா

1. தமிழ் மொழி படிக்கவும் எழுதவும் எளியது என்பது பற்றி உங்கள் கருத்து யாது?

தமிழ்மொழி பேசவும் படிக்கவும் எழுதவும் உகந்த மொழி. உயிரும் மெய்யும் இணைவதால் தோன்றுபவை

உயிர்மெய் ஒலிகள், உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் ஆகியவற்றின் ஒலிப்பு முறைகளை அறிந்து கொண்டால் உயிர்மெய் எழுத்துக்களை எளிதாக ஒலிக்கலாம்.

எழுத்துக்களை கூட்டி ஒலித்தால் தமிழ்படித்தல் இயல்பாக நிகழ்ந்துவிடும்.

தமிழ் மொழியை எழுதும் முறையும் மிக எளிதுதான். இதற்கேற்ப, தமிழ் எழுத்துக்கள் வலஞ்சுழி, இடஞ்சுழி எழுத்துகளாக உள்ளன.

அவற்றுள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

2. தமிழ் மொழி வளர்மொழி என்பதை உணர்கிறீர்களா? காரணம் தருக.

தமிழில் காலந்தோறும் பலவகையான இலக்கிய வடிவங்கள் புதிது புதிகாக உருவாகி வருகின்றன.

புதுக்கவிதை, கவிதை, செய்யுள் போன்றவை தமிழ்கவிதை வடிவங்கள், கட்டுரை, புதினம், சிறுகதை போன்றன உரைநடை வடிவங்கள்.

தற்போது அறிவியல் தமிழ், கணிணித்தமிழ என்று மேலும் மேலும் வளரந்து கொண்டு வருகிறது. இதனால் தான் தமிழ்மொழியை வளர்மொழி என்று கூறுகிறோம்.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “வளர்தமிழ்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB)படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடு

1. உலகத்திலுள்ள மொழிகளின் எண்ணிக்கை

  1. 60,000
  2. 30,000
  3. 20,000
  4. 40,000

விடை : 60,000

2. வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாது

விடை : ய

3. அஃறிணை என்ற சொல்லை பிரித்தெழுதக் கிடைப்பது

  1. அல் + திணை
  2. அஃ + திணை
  3. அஃ + றிணை
  4. அல் + இணை

விடை : அல் + திணை

4. தமிழ் என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. தொல்காப்பியம்
  3. திருக்குறள்
  4. தேவாரம்

விடை : தொல்காப்பியம்

5. பாகு + அல் + காய் என்ற சொல்லை சேர்த்தெழுதக் கிடைப்பது

  1. பாகற்காய்
  2. பாகல்காய்
  3. பாகுஅல்காய்
  4. பாகுஅற்காய்

விடை : பாகற்காய்

6. தமிழன் என்ற சொல் முதன்முதலில் ஆளப்படும் நூல்

  1. மணிமேகலை
  2. தொல்காப்பியம்
  3. குண்டலகேசி
  4. அப்பர் தேவாரம்

விடை : அப்பர் தேவாரம்

7. பூவின் நிலைகளுள் ஒன்று

  1. தோ
  2. கோ
  3. வீ
  4. சே

விடை : வீ

8. கணினித்தமிழ் என்ற சொல்லை பிரித்தெழுதக கிடைப்பது

  1. கணினி + த்தமிழ்
  2. கணினி + தமிழ்
  3. கணிணி + தமிழ்
  4. கணினித் + தமிழ்

விடை : கணினி + தமிழ்

9. பாம்பு என்னும் தமிழ்ச்சொல் இடம்பெறும் பழந்தமிழ்நூல்

  1. திருவாசம்
  2. குறுந்தொகை
  3. புறநானூறு
  4. அகநானூறு

விடை : குறுந்தொகை

பொருத்துக

  1. அருகு, கோரை – ஓலை
  2. நெல், வரகு – புல்
  3. கரும்பு, நாணல் – தாள்
  4. பனை, தென்னை – தோகை

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

பொருத்துக

  1. பாம்பு – திருக்குறள்
  2. கோடை – பெரும்பாணாற்றுப்படை
  3. பார் – குறுந்தொகை
  4. அரசு – அகநானூறு

விடை : 1 – இ, 2 – ஈ, 3 – ஆ, 4 – அ

குறுவினா

1. தமிழ் எழுத்துகளில் உள்ள வலஞ்சுழி எழுத்துகள் பட்டியலிடுக?

அ, எ, ஔ, ண, ஞ

2. தமிழ் எழுத்துகளிலுள்ள இடஞ்சுழி எழுத்துகள் எழுதுக?

ட , ய, ழ

3. பாரதியார் தமிழ் மொழியின் இனிமையை குறித்து பாடிய பாடலை கூறுக?

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்

4. தமிழ் கவிதை வடிவங்களை கூறுக?

துளிப்பா, புதுக்கவிதை, கவிதை, செய்யுள்

5. பூவின் ஏழுநிலைத் தமிழ் பெயர்கள் யாவை?

அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்

6. தமிழ் மொழியிலுள்ள அற நூல்களில் இரண்டினை எழுதுக?

திருக்குறள், நாலடியார்

7. சங்க நூல்கள் எவை?

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

குறுவினா

1. மா என்ற சொல் தரும் பொருள்களை கூறுக

மரம், விலங்கு, பெரிய, திருமகள், அழகு, அறிவு, அளவு, அழைத்தல், துகள், மேன்மை, வயல், வண்டு.

2. முத்தமிழ் – விரிவாக்கம் எழுதுக

  • இயல்தமிழ் – எண்ணத்தை வெளிப்படுத்தும்.
  • இசைத்தமிழ் – உள்ளத்தை மகிழ்விக்கும்.
  • நாடகத்தமிழ் – உணர்வில் நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டும்.

3. தமிழில் தோன்றிய கலைச்சொற்களுள் சில கூறுக.

இணையம், முகநூல், குரல்தேடல், புலனம், தேடுபொறி, செயலி, தொடுதிரை

4. தாவர இலைப் பெயர்களை எழுதுக

  • ஆல், அரசு, மா, பலா, வாழை – இலை
  • அகத்தி, பசலை, முருங்கை – கீரை
  • அருகு, கோரை – புல்
  • நெல், வரகு – தாள்
  • மல்லி – தழை
  • சப்பாத்திக்கள்ளி, தாழை – மடல்
  • கரும்பு, நாணல் – தோகை
  • பனை, தென்னை – ஓலை
  • கமுகு (பாக்கு) – கூந்தல்

6th Tamil Text Books Pdf

Leave a Comment