[Term-2] Samacheer Kalvi 7th Tamil Guide Chapter 2.5 Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham Book Back Solution

இயல் இரண்டு – ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 7th Tamil Chapter 2.5 ‘Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham’ Here, you’ll find solutions to all the questions from the 7th Standard Tamil Book Term 2 Lesson 2.5 ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 7th Tamil Chapter 2.5 Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 7th Tamil Guide PDF.

ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham’ which is the first subject of class 7 Tamil. Additionally, you can also access additional questions related to the Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham subject.

Next Lesson: பள்ளி மறுதிறப்பு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

  1. 40
  2. 42
  3. 44
  4. 46

விடை : 42

2. எழுதினான் என்பது _______.

  1. பெயர்ப் பகுபதம்
  2. வினைப் பகுபதம்
  3. பெயர்ப் பகாப்பதம்
  4. வினைப் பகாப்பதம்

விடை : வினைப் பகுபதம்

3. பெயர்ப்பகுபதம் _______ வகைப்படும்.

  1. நான்கு
  2. ஐந்து
  3. ஆறு
  4. ஏழு

விடை : ஆறு

4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு _______.

  1. பகுதி
  2. விகுதி
  3. இடைநிலை
  4. சந்தி

விடை : இடைநிலை

பொருத்துக

  1. பெயர்ப் பகுபதம் –  வாழ்ந்தான்
  2. வினைப் பகுபதம் –  மன்
  3. இடைப் பகாப்பதம் –  நனி
  4. உரிப் பகாப்பதம் –  பெரியார்

விடை : 1 – ஈ, 2 – அ, 3 – ஆ, 4 – இ

சரியான பகுபத உறுப்பை எழுதுக

1. போவாள் = போ + வ் + ஆள்

  • போ – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆள் – பெண்பால் வினைமுற்று விகுதி

2. நடக்கின்றான் – நட + க் + கின்று + ஆன்

  • நட – பகுதி
  • க் – சந்தி
  • கின்று – நிகழ்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

பின்வரும் சொற்களைப் பிரித்துப் பகுபத உறுப்புகளை எழுதுக.

1. பார்த்தான் = பார் + த் + த் + ஆன்

  • பார் – பகுதி
  • த் – சந்தி
  • த் – நிகழ்கால இடைநிலை
  • ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி

2. பாடுவார் = பாடு + வ் + ஆர்

  • பாடு – பகுதி
  • வ் – எதிர்கால இடைநிலை
  • ஆர் – ஆண்பால் வினைமுற்று விகுதி

குறு வினா

1. ஓரெழுத்து ஒருமொழி என்றால் என்ன?

ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது ஓரெழுத்து ஒரு மொழி என்பர்

2. பதத்தின் இருவகைகள் யாவை?

பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்

3. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

  • பகுதி
  • விகுதி
  • இடைநிலை
  • சந்தி
  • சாரியை
  • விகாரம்

சிறு வினா

1. விகுதி எவற்றைக் காட்டும்?

திணை, பால், முற்று, எச்சம் ஆகியவற்றை காட்டும்

2. விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

பகுதி, விகுதி, சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.

(எ.கா.)

வந்தனன் – வா(வ) + த்(ந்) + த் + அன் + அன்

  • வா – பகுதி. இது வ எனக் குறுகி இருப்பது விகாரம்
  • த் – சந்தி. இது ந் எனத் திரிந்து இருப்பது விகாரம்
  • த் – இறந்தகால இடைநிலை
  • அன் – சாரியை
  • அன் – ஆண்பால் வினைமுற்று விகுதி.

3. பெயர்ப்பகுபதம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்

  • பொருட் பெயர்ப்பகுபதம்
  • இடப் பெயர்ப்பகுபதம்
  • காலப் பெயர்ப்பகுபதம்
  • சினைப் பெயர்ப்பகுபதம்
  • பண்புப் பெயர்ப்பகுபதம்
  • தொழில்பெயர்ப்பகுபதம்

மொழியை ஆள்வோம்!

கீழ்க்காணும் சொற்களை அறுவகைப் பெயர்களாக வகைப்படுத்துக.

நல்லூர், வடை, கேட்டல், முகம், அன்னம், செம்மை, காலை, வருதல், தோகை, பாரதிதாசன், பள்ளி, இறக்கை, பெரியது, சோலை, ஐந்து மணி, விளையாட்டு, புதன்

பொருள் இடம் காலம்
வடை நல்லூர் காலை
அன்னம் பள்ளி புதன்
பாரதிதாசன் சோலை ஐந்து மணி

சினை குணம் தொழில்
முகம் செம்மை கேட்டல்
தோகை பெரியது வருதல்
இறக்கை விளையாட்டு

மூவிடம்

இடம் மூன்று வகைப்படும்.

அவை 1. தன்மை 2. முன்னிலை 3. படர்க்கை.

தன்மை

தன்னைக் குறிப்பது தன்மை.

(எ.கா.) நான், நாம், நாங்கள், என், எம், எங்கள்.

முன்னிலை

முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை.

(எ.கா.) நீ, நீங்கள், நீர், நீவிர், உன், உங்கள்.

படர்க்கை

தன்னையும், முன்னால் இருப்பவரையும் அல்லாமல் மூன்றாமவரைக் குறிப்பது படர்க்கை.

(எ.கா.) அவன், அவள், அவர், அவர்கள், அது, அவை, இவன், இவள், இவை.

சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

1. _____________ பெயர் என்ன?

விடை : உன்

2. _____________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

விடை : நாம்

3. _____________ எப்படி ஓடும்?

விடை : அவை

4. _____________ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

விடை : நீ

5. _____________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.

விடை : அவைகள்

பின்வரும் தொடர்களில் மூவிடப் பெயர்களை அடிக்கோடிடுக. அவற்றை வகைப்படுத்துக.

  1. எங்கள் வீட்டு நாய்க்குட்டி ஓடியது.
  2. இவர் தான் உங்கள் ஆசிரியர்.
  3. நீர் கூறுவது எனக்குப் புரியவில்லை.
  4. எனக்கு, அது வந்ததா என்று தெரியவில்லை. நீயே கூறு.
  5. உங்களோடு நானும் உணவு உண்ணலாமா?
தன்மை முன்னிலை டர்க்கை
எங்கள் நீர் இவர்
எனக்கு உங்கள் அது
நானும் நீ
உங்களோடு  

மொழியோடு விளையாடு!

கீழே உள்ள குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டத்தில் எழுத்துகளை நிரப்புக.

Samacheer Kalvi 7th Tamil Guide Oru Eluthu Oru Mozhi Pagu Patham Paga Patham Book Back Solution

1. காலையில் பள்ளி மணி ________________

விடை : ஒலிக்கும்

2. திரைப்படங்களில் விலங்குகள் ________________காட்சி குழந்தைகளுக்குப் பிடிக்கும்.

விடை : நடிக்கும்

3. கதிரவன் காலையில் கிழக்கே ________________

விடை : உதிக்கும்

4. நாள்தோறும் செய்தித்தாள் ________________ வழக்கம் இருக்க வேண்டும்.

விடை : வாசிக்கும்

ஓர் எழுத்துச் சொற்களால் நிரப்புக.

1. _____________ புல்லை மேயும்.

விடை :

2. _____________ சுடும்.

விடை : தீ

3. _____________ பேசும்.

விடை : கை

4. _____________ பறக்கும்.

விடை :

5. _____________ மணம் வீசும்

விடை : பூ

பின்வரும் எழுத்துகளுக்குப் பொருள் எழுதுக.

  1. தா – கொடு
  2. தீ = நெருப்பு
  3. பா = பாடல்
  4. தை = தைத்தல்
  5. வை = புல்
  6. மை = அஞ்சனம்

பின்வரும் சொற்களை இருபொருள் தருமாறு தொடரில் அமைத்து எழுதுக.

ஆறு, விளக்கு, படி, சொல், கல், மாலை, இடி

1. ஆறு

  • ஆறு கால்களை உடையது.
  • தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது

2. விளக்கு

  • பாடலின் பொருளிளை விளக்கு
  • அம்மா வீட்டில் விளக்கு ஏற்றினார்

3. படி

  • பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள்
  • இளமையில் படித்தல் அவசியம்

4. சொல்

  • பெரியோர் சொல் கேள்
  • தஞ்சை சொல் (நெல்) வளம் மிகுந்தது

5. கல்

  • இளமையில் கல்
  • எறும்பு ஊர கல்லும் தேயும்

6. மாலை

  • பூவினால் செய்யப்படுவது மாலை
  • சூரியன் மறைவது மாலை நேரம்

7. இடி

  • மழையின் போது இடி இடித்தது
  • மரத்தின் மீது வண்டி இடித்து விட்டது

நிற்க அதற்கு தக…

கலைச்சொல் அறிவோம்.

  • கோடை விடுமுறை – Summer Vacation
  • நீதி – Moral
  • குழந்தைத்தொழிலாளர் – Child Labour
  • சீருடை – Uniform
  • பட்டம் – Degree
  • வழிகாட்டுதல் – Guidance
  • கல்வியறிவு – Literacy
  • ஒழுக்கம் – Discipline

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “ஓரெழுத்து ஒரு மொழி, பகுபதம், பகாப்பதம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதியவர் ________________

  1. சமண முனிவர்கள்
  2. பவணந்தி முனிவர்
  3. தொல்காப்பியர்
  4. திருவள்ளுவர்

விடை : பவணந்தி முனிவர்

2. நெடில் ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை _______.

  1. 39
  2. 40
  3. 41
  4. 42

விடை : 42

3. குறில் ஓரெழுத்து ஒருமொழிகள் ______________.

  1. நொ, து
  2. கி, கெ
  3. ரெ, ரி
  4. செ, வெ

விடை : நொ, து

4. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் ____________ ஆகும்.

  1. பெயர்ப்பகுபதம்
  2. வினைப்பகுபதம்
  3. இடைப்பகுபதம்
  4. உரிப்பகுபதம்

விடை : பெயர்ப்பகுபதம்

5. பெயர்ப்பகுபதம் ____________ வகைப்படும்.

  1. 5
  2. 4
  3. 3
  4. 6

விடை : 6

6. பகுதி  ____________ அமையும்.

  1. பெயர்ச்சொல்லாக
  2. கட்டளையாகவே
  3. வினையெச்சமாக
  4. வினைமுற்றாக

விடை : கட்டளையாகவே

7. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால், எண், இடம் ஆகியவற்றையோ முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது ___________ ஆகும்.

  1. சந்தி
  2. சாரியை
  3. விகுதி
  4. விகாரம்

விடை : விகுதி

8. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது ______________ ஆகும்.

  1. இடைநிலை
  2. சந்தி
  3. சாரியை
  4. விகாரம்

விடை : இடைநிலை

9. பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இடம் பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.

  1. இடைநிலை
  2. சாரியை
  3. சந்தி
  4. விகாரம்

விடை : சாரியை

9. பகாப்பதம் ______________ வகைச் சொற்களில் வரும்.

  1. 2
  2. 4
  3. 3
  4. 5

விடை : 4

சிறு வினா

1. வினைப்பகுபதம் என்பது என்ன?

பகுபதமாக அமையும் வினைச்சொல் வினைப்பகுபதம் ஆகும்.

2. பகாப்பதம் என்றால் என்ன?

பகுபத உறுப்புகளாகப் பிரிக்க முடியாத சொல் பகாப்பதம் எனப்படும்.

4. பகாப்பதம் வரும் நான்கு வகைச் சொற்களை எடுத்துகாட்டுடன் கூறுக

பெயர், வினை, இடை, உரி ஆகிய நான்கு வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உண்டு.

  • பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், நெருப்பு, காற்று.
  • வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழ்.
  • இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்.
  • உரிப் பகாப்பதம் – உறு, தவ, நனி, கழ

5. ஓரெழுத்து ஒரு மொழிகளை அட்டவணைப்படுத்துக

ஆ- பசு ஈ- கொடு ஊ- இறைச்சி
ஏ- அம்பு ஐ- தலைவன் ஓ – மதகுநீர் தாங்கும் பலகை
கா- சோலை கூ- பூமி கை- ஒழுக்கம்
கோ-அரசன் சா- இறந்துபோ சீ- இகழ்ச்சி
சே- உயர்வு சோ- மதில் தா- கொடு
தீ- நெருப்பு தூ- தூய்மை தே- கடவுள்
தை- தைத்தல் நா- நாவு நீ- முன்னிலை ஒருமை
நே- அன்பு நை- இழிவு நோ- வறுமை
பா- பாடல் பூ- மலர் பே – மேகம்
பை- இளமை போ- செல் மா- மாமரம்
மீ- வான் மூ – மூப்பு மே- அன்பு
மை- அஞ்சனம் மோ- மோத்தல் யா- அகலம்
வா- அழைத்தல் வீ- மலர் வை- புல்
வெள- கவர் நொ- நோய் து- உண்

Leave a Comment