Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.6 Agapporul Ilakkanam Book Back Solution

இயல் 6.6 – அகப்பொருள் இலக்கணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.6 ‘Agapporul Ilakkanam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.6 அகப்பொருள் இலக்கணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.6 Agapporul Ilakkanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

அகப்பொருள் இலக்கணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Agapporul Ilakkanam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: பாய்ச்சல்

பலவுள் தெரிக

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ________________

  1. முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்
  2. குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்
  3. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
  4. மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடை : குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

குறு வினா

1. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

முதற்பொருள்

நிலம் காடு முல்லை
பொழுது பெரும்பொழுது – கார்காலம் சிறுபொழுது – மாலை

கருப்பொருள்

உணவு வரகு, சாமை

2. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருப்பொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்.
முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

உழவர்கள் வயலில் உழுதனர்.

நெய்தல் பூச்செடியை பார்த்தவாறே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர் (அல்லது) தாழைப்பூச்செடியைப் பார்த்தவாரே பரதவர்கள் கடலுக்குச் சென்றனர்.

முல்லை பூச்செடியைப் பார்த்தவாறே இடையகர்கள் காட்டுக்குச் சென்றனர்

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க.

Koothu

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the streets. It is performed by rural artists. The stories are derived from epics like Ramayana, Mahabharatha and other ancient puranas. There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe. Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup. Koothu is very popular among rural areas

தமிழாக்கம்

கூத்து

தெருக்கூத்து அதன் பெயருக்கு ஏற்றாற்போல் தெருவில் நடக்குமு் ஒரு மிகச்சிறந்த கலை. இதில் கிராப்புற கலைஞர்கள் பங்கேற்கிறார்கள். இதன் கதைகள் பழங்காவியமான இராமாயணம், மகாபாரதம் மற்றும் பழைய புராணங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. இதில் பழைய பாடல்களை உரையாடலுடன் கலைஞர்கள் உருவாக்குகிறார்கள். பதினைந்து முதல் இருபது கலைஞர்கள் சிறிய இசைக்குழுவாக சேர்ந்தது தான் தெருக்கூத்துக் கூட்டம். இசைக்குழுவில் பல பாடல்கள் இருந்தபோதும் கலைஞர்கள் தங்கள் குரலிலேயே பாடுவார்கள். கலைஞர்கள் மிகச் சிறந்த உடையலங்காரமும் ஒப்பனையும் செய்திருப்பபர். கிராமங்களில் கூத்து மிகவும் பிரபலமானது.

தொடர்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டுள்ளவாறு மாற்றுக.

1. அழைப்புமணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் (தனிச் சொற்றொடர்களைக் கலவைச் சொற்றொடராக மாற்றுக)

விடை: அழைப்புமணி ஒலித்ததால், கயல்விழி கதவைத் திறந்தார்.

2. இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கிவைத்தார். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார். (தொடர் சொற்றொடராக மாற்றுக.)

விடை: இன்னாசியார் புத்தகங்களை வரிசைப்படுத்தி அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார்.

3. ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக்கொண்டு, காலில் சலங்கை அணிந்துகொண்டு, கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர். (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை: ஒயிலாட்டத்தில் குழுவினர் ஒரே நிறத் துணியை முண்டாசுபோலக் கட்டிக் கொள்வர். காலில் சலங்கை அணிவர். கையில் ஒரு சிறுதுணியை இசைக்கேற்ப வீசியும் ஆடுவர்.

4. கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக.)

விடை: கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால் கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.

5. ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

விடை: ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றது. அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது.

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச்சொற்களாக மாற்றி எழுதுக

புதிர்

உங்களிடம் ஏழு கோல்டு பிஸ்கட் உள்ளது. அதில் ஒன்று மட்டும் எடை குறைவானது. உங்களிடம் உள்ள ஒரு தராசை இரு முறைகள் மட்டுமே யூஸ் பண்ணி வெயிட் குறைந்த கோல்டு பிஸ்கட்டைக் கண்டுபிடிக்கவும்.

விடை

தராசின் இரண்டு தட்டுகளிலும் மூன்று மூன்று கோல்டு பிஸ்கட்டுகளை வையுங்கள். இரண்டு தட்டுகளும் ஈக்வலாக இருந்தால், கையில் மிச்சம் உள்ள பிஸ்கட்டே வெயிட் குறைவானது. பட் ஆனால், ஒரு பக்க தராசுத் தட்டு உயர்ந்தால் அதில் உள்ள மூன்று பிஸ்கட்களில் ஒன்று வெயிட் குறைவானது. அந்த மூன்று பிஸ்கட்டுகளை மட்டும் எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். இரண்டு
தட்டுகளிலும் ஒரு ஒரு பிஸ்கட்டைப் போட்டு இதே எக்ஸ்பெரிமெண்ட்டை ரிப்பீட் செய்து ஆன்சரைக் கண்டுபிடியுங்கள்! ஆல் தி பெஸ்ட்!

பிற மொழிச் சொல் தமிழ்ச்சொல்
காேல்டு பிஸ்கெட் தங்கக்கட்டி
பிஸ்கட் கட்டி
எக்ஸ்பெரிமெண்ட் சோதனை
ஆன்சரை விடையை, முடிவை
ஆல் தி பெஸ்ட் எல்லாம் நல்லபடி முடியட்டும்.
ஈக்குவலாக சமமாக
வெயிட் எடை
ரிப்பிட் மறுமுறை, மறுபடி

நாட்டுப்புறப் பாடலுக்கேற்ற சூழலை எழுதுக

 

பாடல்

 

 

ஆத்துக்கு அந்தண்டையே அண்ணன் வச்ச தென்னம்புள்ளே!
அண்ணன் புள்ள வாடினாலும் யம்மாடி! யம்மாடி!
தென்னம்புள்ள வாடலாமோ? யம்மாடி! யம்மாடி!
வாய்க்காலுக்கு மேற்குப்புறம் வஞ்சி வெச்ச வாழைமரம்
வஞ்சி மனம் வாடினாலும் யம்மாடி! யம்மாடி!
வாழைமரம் வாடலாமோ யம்மாடி! யம்மாடி!
பாடல் எழுந்த சூழல்

 

அண்ணன் நட்டு வைத்த தென்னம் பிள்ளைக்கு நீர் பாய்ச்ச, தோப்புக்கு வரும் பெண்ணொருத்தி குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கி விடுகிறாள் . தென்னம்பிள்ளைக்கு நீரூற்றுகிறாள்; குழந்தை அழுகிறது; பாடலைப் பாடியவாறே குழந்தையின் அழுகையை நிறுத்தி நீரூற்றுதலைத் தொடர்கிறாள்.
பாடல் பாடல் எழுந்த சூழல்
பாடறியேன் படிப்பறியேன் – நான்தான்
பள்ளிக்கூடம் தானறியேன்ஏடறியேன் எழுத்தறியேன் – நான்தான்
எழுத்துவகை தானறியேன்படிக்க நல்லா தெரிஞ்சிருந்தா – நான்தான்
பங்காளிய ஏன் தேடுறேன்எழுத நல்லா தெரிஞ்சிருந்தா – நான்தான்
எதிராளிய ஏன் தேடுறேன்நாலெழுத்துப் படிச்சிருந்தா – நான்தான்
நாலு தேசம் போய்வருவேன்நாலு பக்கம் வரப்புக்குள்ளே – தெனமும்
நான் பாடுறேன் தெம்மாங்குதான்
வரப்புகளுக்கு இடையே நின்று வயலில் வேலை செய்யும் விவசாயி ஒருவன் தனக்கு கல்வியறிவு இல்லாத காரணத்தினால் தான் படும் துன்பத்தை எண்ணி வருத்தத்துடன் பாடிக்கொண்டே தன் வேலையைச் செய்கிறான்

 

 

 

 

 

 

மனிதனுக்கும் மலருக்குமான மணம் வீசும் இந்த நயவுரையைத் தொடர்க

வண்டுகளை ஈர்க்கும் வாசனையில்
பூக்களிடம் வசப்படுவது மனிதர்களே!
பூச்சியைக் கவரும் வண்ணங்களில்
பூக்களிடம் விழுவது மனிதர்களே!
அழகைக் கொண்டு பூ கவருகையில்
அப்பூக்களிடம் பணிவது மனிதர்களே!

மொழியோடு விளையாடு

தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

1. வானம் ………….. தொடங்கியது. மழைவரும்போலிருக்கிறது.

விடை: கருக்கத்

2. அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ………………

விடை: சிவந்தது

3. ………………… மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.

விடை: வெள்ளை

4. கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ………….. புல்வெளிகளில் கதிரவனின் ……………. வெயில் பரவிக் கிடக்கிறது.

விடை: பச்சை / மஞ்சள்

5. வெயிலில் அலையாதே; உடல் ……………….

விடை: கருத்துவிடும்

பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டு எழுதுக.

தங்கும் தோற்பாவை
மரம் வீடு விருது
அவிழும் தோற்பவை
தயங்கும் கவிழும்
மரவீடு விருந்து

1. விரட்டாதீர்கள் – பறவைக்கு …………………..
    வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவைதரும் ………………..

விடை: மரம் வீடு / மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் …………….
    சோலைப் பூவினில் வண்டினம் …………..

விடை: அவிழும் / தங்கும்

3. மலை முகட்டில் மேகம் ……………… – அதைப்
    பார்க்கும் மனங்கள் செல்லத் ………………….

விடை: கவிழும் / தயங்கும்

4. வாழ்க்கையில் ………………. மீண்டும் வெல்லும் – இதைத்
    தத்துவமாய்த் ……………….. கூத்து சொல்லும்

விடை: தோற்பாவை / தோற்பவை

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே ………. – அதில்
    வரும்காசு குறைந்தாலும் அதுவேயவர் ……….

விடை: விருது / விருந்து

அகராதியில் காண்க.

1. தால்

விடை: தாலாட்டு, தாலு, நாக்கு

2. உழுவை

விடை: புலி, ஒருவகை மீன், தும்பிலி

3. அகவுதல் 

விடை: அழைத்தல், ஆடல், கூத்தாடல்

4. ஏந்தெழில் 

விடை: மிக்க அழகு, மிக்க வனப்பு

5. அணிமை 

விடை: சமீபம், அருகு, நுட்பம், நுண்மை

நிற்க அதற்குத் தக…

கலைச்சொல் அறிவோம்

  • Aesthetics – அழகியல், முருகியல்
  • Terminology – கலைச்சொல்
  • Artifacts -கலைப் படைப்புகள்
  • Myth – தொன்மம்

அறிவை விரிவு செய்

  • தேன்மழை – சுரதா
  • திருக்குறள் நீதி இலக்கியம் – க.த.திருநாவுக்கரசு
  • நாட்டார் கலைகள் – அ.கா.பெருமாள்

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “அகப்பொருள் இலக்கணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. ___________ என்பது ஒழுக்கமுறை

  1. பொருள்
  2. யாப்பு
  3. அணி
  4. சொல்

விடை: பொருள்

2. அன்புடைய தலைவன் தலைவி இடையிலான உறவுநிலைகளைக் கூறுவது

  1. புறத்திணை
  2. பொதுவியல் திணை
  3. அகத்திணை
  4. பாடவியல் திணை

விடை: அகத்திணை

3. அன்பின் திணைகள் ________ வகைப்படும்

  1. 2
  2. 4
  3. 3
  4. 5

விடை: 5

4. பொருந்தாததை தேர்க

  1. குறிஞ்சி – மலையும் மலைசார்ந்த இடமும்
  2. முல்லை – காடும் காடு சார்ந்த இடமும்
  3. மருதம் – வயலும் வயல் சார்ந்த இடமும்
  4. நெய்தல் – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

விடை: நெய்தல் – சுரமும் சுரம் சார்ந்த இடமும்

5. பொழுது ____________ வகைப்படும்

  1. 2
  2. 3
  3. 4
  4. 5

விடை: 2

5. பின்பனிக் காலத்தின் பெரும்பொழுது

  1. ஆவணி, புரட்டாசி
  2. ஐப்பசி, கார்த்திகை
  3. மாசி, பங்குனி
  4. சித்திரை, வைகாசி

விடை: மாசி, பங்குனி

5. பின்பனிக் காலத்தின் பெரும்பொழுது

  1. ஆவணி, புரட்டாசி
  2. ஐப்பசி, கார்த்திகை
  3. மாசி, பங்குனி
  4. சித்திரை, வைகாசி

விடை: மாசி, பங்குனி

9. பொருந்தியவற்றை தேர்க

  1. காலை – காலை 7 மணி முதல் 11 மணி வரை
  2. நண்பகல் – காலை 11 மணி முதல் 2 மணி வரை
  3. எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை
  4. மாலை – மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை

விடை: எற்பாடு – பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

குறுவினா

1. ஐந்திணைகளையும் அதற்குரிய பொழுதுகளையும் எழுதுக

திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை
நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள் எற்பாடு
பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி  நண்பகல்

2. ஐந்திணைகளுக்குரிய தெய்வங்களை கூறுக

  • குறிஞ்சி – முருகன்
  • முல்லை – திருமால்
  • மருதம் – இந்திரன்
  • நெய்தல் – வருணன்
  • பாலை – கொற்றவை

3. ஐந்திணைகளுக்குரிய மக்களை கூறுக

  • குறிஞ்சி – வெற்பன், குறவர், குறத்தியர்
  • முல்லை – தோன்றல், ஆயர். ஆய்ச்சியர்
  • மருதம் – ஊரன், உழவர், உழத்தியர்
  • நெய்தல் – சேர்ப்பன், பரதன், பரத்தியர்
  • பாலை – எயினர், எயிற்றியர்

4. ஐந்திணைகளுக்குரிய உணவுகளை கூறுக

  • குறிஞ்சி – மலைநெல், தினை
  • முல்லை – வரகு, சாமை
  • மருதம் – செந்நெல், வெண்ணெல்
  • நெய்தல் – மீன், உப்புக்குப் பெற்ற பொருள்
  • பாலை – சூறையாடலால் வரும் பொருள்

4. ஐந்திணைகளுக்குரிய பூக்களினை கூறுக

  • குறிஞ்சி – குறிஞ்சி, காந்தள்
  • முல்லை – முல்லை, தோன்றி
  • மருதம் – செங்கழுநீர், தாமரை
  • நெய்தல் – தாழை, நெய்தல்
  • பாலை – குரவம், பாதிரி

5. ஐந்திணைகளின் யாழ்களை கூறுக

  • குறிஞ்சி –  குறிஞ்சி யாழ்
  • முல்லை – முல்லை யாழ்
  • மருதம் – மருத யாழ்
  • நெய்தல் – விளரி யாழ்
  • பாலை – பாலை யாழ்

Leave a Comment