Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.5 Ilakkanam Pothu Book Back Solution

இயல் 4.5 – இலக்கணம் – பொது

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 4.5 ‘Ilakkanam Pothu’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 4.5 இலக்கணம் – பொது

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 4.5 Ilakkanam Pothu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

இலக்கணம் – பொது வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Ilakkanam Pothu’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: விண்ணை தாண்டிய நம்பிக்கை

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் ஆகிய தொடர்களில் இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே

  1. மரபு வழுவமைதி, திணை வழுவமைதி
  2. இடவழுவமைதி, மரபு வழுவமைதி
  3. பால் வழுவமைதி, திணை வழுவமைதி
  4. கால வழுவமைதி, இடவழுவமைதி

விடை : பால் வழுவமைதி, திணை வழுவமைதி

குறு வினா

1. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய்மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

கோடையில் பள்ளி விடுமுறை என்பதால்  ஆரல்வாய்மொழிக்குச் செல்ல திட்டமிருக்கும் உறுதித்தன்மை நோக்கி காலவழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக  இத்தொடர் அமைகிறது.

2. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.

சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும். புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினாள்.

சிறு வினா

நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது. வாழைத் தோப்பில் குட்டியுடன் நின்றிருந்த மாடு கத்தியது; தந்தை என்னிடம், “இலச்சுமி கூப்பிடுகிறாள், போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன். துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து, “என்னடா விளையாடவேண்டுமா?” என்று கேட்டு அவனை அவிழ்த்துவிட்டேன். என் தங்கை அங்கே வந்தாள். அவளிடம், “நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன். அவிழ்த்துவிடப்பட்ட இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.

இப்பத்தியிலுள்ள வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.

திருத்தப்பட்ட வழுக்கள்

நேற்றிரவு பெய்த மழை தொட்டியை நிறைத்தது.

வாழைத் தோட்டத்தில் கன்றுடன் நின்றிருந்த மாடு கதறியது.

துள்ளிய கன்றைத் தடவிக் கொடுத்த…

வழுவமைதித் தொடர்கள் வழுவமைதி வகை
நேற்று பெய்த மழை தொட்டியை நிறைந்திருந்தது (நிறைந்தது) கால வழுவமைதி
இலட்சுமி கூப்பிடுகிறாள். (மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
இதோ சென்று விட்டேன் (சென்று விடுகிறேன்) கால வழுவமைதி
என்னடா விளையாட வேண்டுமா? (மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
அவனை அவிழ்த்து விட்டேன். (பசு மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி
இலட்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள். (மாட்டைக் குறிக்கிறது) திணை வழுவமைதி

கற்பவை கற்றபின்…

வழுவமைதி வகைகளை இனம் கண்டு எழுதுக.

அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்

விடை: காலவழுவமைதி

ஆ) அவனும் நீயும் அலுவலரைப் பார்க்க ஆயத்தமாகுங்கள்

விடை: இடவழுவமைதி

இ) “இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்” என்று கூறினார் –

விடை: இடவழுவமைதி

ஈ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்

விடை: மரபுவழுவமைதி

உ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்திருக்கிறார்

விடை: திணைவழுவமைதி

அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக

1. தந்த “மகனே! நாளை உன்னுடைய தோழன்  அழகனை அழைத்து வா?” என்று சொன்னார். (ஆண்பாற் பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)

விடை: தாயே, “மகளே! உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா என்று சொன்னார்

2. அக்கா நேற்று வீட்டுக் வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது. (வழுவை வழாநிலையாக மாற்றுக.)

விடை: அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள். அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பினாள்.

3. “இதோ முடித்து விடுவேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக.)

விடை: “இதோ முடித்துவிட்டேன்” என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார்

4. அவன் உன்னிடமும் என்னிடமும் செய்திைய இன்னும் கூறவில்லை. (படர்க்கையை முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)

விடை: நீ என்னிடமும் அவனிடமும் அவன் செய்தியை இன்னும் கூறவில்லை

5. குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)

விடை: குழந்தை அழுகிறது பார்

மொழியை ஆள்வோம்!

மொழிபெயர்க்க

Malar Devi, switch off the lights when you leave the room.
Devi Yeah. We have to save electricity.
Malar Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.
Devi Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!
Malar I have read some other countries are going to launch these types of illumination satellites near future.
Devi Superb news! If we launch artificial moons, they can assist in disaster relief by beaming light on areas that lost power!

விடை:-

மலர் தேவி, நீ அறையை விட்டு வெளியே செல்லும் முன் விளக்கை அணைத்து விடு.
தேவி ஆம், நாம் மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.
மலர் நம் நாடு தெரு விளக்குகளை எரிய வைப்பதற்கு நிறைய மின்சாரத்தைச் செலவு செய்கிறது.
தேவி யாருக்குத் தெரியும்? வருங்காலத்தில் நம் நாடு செயற்கை நிலவை நிறுவி இரவில் வானத்தில் விளக்குகளை எரிய வைக்கலாம்.
மலர் வருங்காலத்தில் நிறைய நாடுகள் இவ்வகையான செயற்கைக்கோளை நிறுவ இருப்பதாக நான் வாசித்துள்ளேன்.
தேவி நல்ல செய்தி! நாம் செயற்கை நிலவை நிறுவினால் அது பேரழிவு மற்றும் மின்சாம் இல்லாத சமயத்தில் ஒளியூட்டி நிவாரண உதவிகளை செய்ய வழி செய்கிறது!

வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுதல்

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லா பறவைகளுக்கும் காது உண்டு. செவி துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறசெவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்கு பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.

யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு

விடை:-

காகத்திற்கு காது உண்டா? அதற்கு காது கேட்குமா?

எல்லாப் பறவைகளுக்கும் காது உண்டு. செவித் துளைகள் இறகுகளால் மூடி இருக்கும். மற்றப்படி பாலூட்டிகளில் உள்ளதுபோல் புறச்செவிமடல் இருக்காது. காகத்திற்கு காது உண்டு. காதுக் கேட்கும். பறவைகளுக்குப் பார்த்தல், கேட்டல் உணர்வு நன்றாக வளர்ச்சிப் பெற்று இருக்கும். சுவைத்தல் உணர்வுக் குறைவாகவும் நுகர்தல் உணர்வு இல்லையென்றேக் கூறலாம்.

யுரேகா! யுரேகா! – அறிவியல் வெளியீடு

இருசொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை – செயற்கை

விடை: பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன.

ஆ) கொடு – கோடு

விடை: கொடுப்பதும், கொள்வதும் ஒரு எல்லைக்கோடு போன்றதே

இ) கொள் – கோள்

விடை: உறவினர்களை அனுசரித்து கொள். கோள் சொல்வதை தவிர்

ஈ) சிறு – சீறு

விடை: சிறு பாம்பானாலும் சீறும் குணத்தை கொண்டுள்ளது

உ) தான் – தாம்

விடை : தான் என எண்ணாமல் தாம் என் எண்ணுவோம்

ஊ) விதி – வீதி

விடை: என் தலைவிதியோ வீதிகளில் கூவி விற்பது என வியாபாரி சலித்தார்.

பருப்பொருள்கள் சிதறும்படியாக

பத்தியைப் படித்துப் பதில் தருக.

ப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3. பெய்த மழை இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

பெய் மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்பு கோட்பாடு)

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

நிலம், நீர், காற்று, நெருப்பு

மொழியோடு விளையாடு!

தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் _________

விடை: கற்றல்

ஆ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை _________

விடை: கரு

இ) கல் சிலை ஆகுமெனில், நெல் _________ ஆகும்.

விடை: சோறு

ஈ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _________

விடை : எழுத்து

உ) மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது _________

விடை: பூவில்

குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக.

குறிப்பு எதிர்மறையான சொற்கள்
மீளாத் துயர் மீண்ட இன்பம்
கொடுத்துச் சிவந்த கொடாமல் கருத்த
மறைத்துக் காட்டு திறந்து மூடு
அருகில் அமர்க தூரத்தில் நிற்க
பெரியவரின் அமைதி சிறியவரின் ஆர்ப்பாட்டம்
புயலுக்குப் பின் தென்றலுக்கு முன்

அகராதியில் காண்க.

அ) அவிர்தல்

விடை: ஒளி செய்தல், பீரல், விரிதல், பாடம் செய்தல்

ஆ) அழல்

விடை: உட்டணம், எருக்கு, தீ, நெருப்பு, கள்ளி, கேட்டை நாள், கொடுவேலி

இ) உவா

விடை: இளமை, இளையோன், கடல், நிறைவு, பூரணை, யானை

ஈ) கங்குல்

விடை: இரவு, இருள், பரணி நாள்

உ) கனலி 

விடை: சூரியன், , கள்ளி, கொடுவேலி, கரியன், நெருப்பு

கலைச்சொல் அறிவோம்

  • Nanotechnology – மீநுண் தொழில்நுட்பம்
  • Space Technology – விண்வெளித் தொழில்நுட்பம்
  • Biotechnology – உயிரித் தொழில்நுட்பம்
  • Cosmic rays – விண்வெளிக் கதிர்கள்
  • Ultraviolet rays – புற ஊதாக் கதிர்கள்
  • Infrared rays – அகச்சிவப்புக் கதிர்கள்

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “விண்ணைத் தாண்டிய தன்னம்பிக்கை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. திணை __________ வகைப்படும்

  1. 3
  2. 4
  3. 2
  4. 5

விடை: 2

2. பால் __________ -ன் உட்பிரிவு

  1. சீர்
  2. அசை
  3. தளை
  4. பால்

விடை: பால்

3. உயர்திணைகளின் பிரிவுகளில் பொருந்தாதது

  1. ஆண்பால்
  2. பெண்பால்
  3. பலர்பால்
  4. ஒன்றன்பால்

விடை: ஒன்றன்பால்

4. ஒன்றன்பால் சான்று தருக

  1. ஆண்கள்
  2. பெண்கள்
  3. பசுக்கள்
  4. யானை

விடை: யானை

5. தன்மைப் பெயர்கள் சான்று தருக

  1. வந்தேன்
  2. வந்தோம்
  3. நடந்தாய்
  4. நான்

விடை: நான்

6. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் _____________ எனப்படும்.

  1. வழாநிலை
  2. வழுநிலை
  3. வழுவமைதி
  4. வழாமதி

விடை: வழாநிலை

6. இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது ___________ ஆகும்.

  1. வழாநிலை
  2. வழுநிலை
  3. வழுவமைதி
  4. வழாமதி

விடை: வழுவமைதி

குறு வினா

1. திணை வழுவமைதி என்றால் என்ன?

“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.

2. பால் வழுவமைதி என்றால் என்ன?

“வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக, பெண்பால் ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.

சிறு வினா

மூவிடப் பெயர்களைப் பெயர்/வினை எடுத்துக்காட்டுடன் கூறுக

இடம்  பெயர் / வினை எடுத்துக்காட்டு
தன்மை தன்மைப் பெயர்கள் நான், யான், நாம், யாம் …
தன்மை வினைகள்  வந்தேன், வந்தோம்
முன்னிலை முன்னிலைப் பெயர்கள் நீ, நீர், நீவிர், நீங்கள்
முன்னிலை வினைகள் நடந்தாய், வந்தீர், சென்றீர்கள்
படர்க்கை படர்க்கைப் பெயர்கள் அவன், அவள், அவர்,
அது, அவை…
படர்க்கை வினைகள் வந்தான், சென்றாள், படித்தனர், பேசினார்கள், பறந்தது, பறந்தன…

Leave a Comment