Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 5.1 Mozhipeyarpu Kalvi Book Back Solution

இயல் 5.1 – மொழிபெயர்ப்புக் கல்வி

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 5.1 ‘Mozhipeyarpu Kalvi’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 5.1 மொழிபெயர்ப்புக் கல்வி

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 5.1 Mozhipeyarpu Kalvi Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

மொழிபெயர்ப்புக் கல்வி வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Mozhipeyarpu Kalvi’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: இலக்கணம் – பொது

பலவுள் தெரிக

மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம்வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி

  1. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  2. காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  3. பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
  4. சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

விடை : சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

குறு வினா

தாய்மொழியும் ஆங்கிலமும் தவிர நீங்கள் கற்க விரும்பும் மொழியினைக் குறிப்பிட்டுக் காரணம் எழுதுக.

தாய்மொழித் தமிழும் உலகப் பொது மொழி ஆங்கிலமும் தவிர, நான் கற்க விரும்பும் மொழி இந்தி

இந்தி கற்க விரும்புக் காரணம் :

  • இந்தி நமது நாட்டின் தேசிய மொழி.
  • இந்தி இந்திய பாராளுமன்ற மொழி.
  • பாராளுமன்ற விவாதங்களை அறிய உதவும் மொழி.
  • அரசு மற்றும் தனியார் வேலை வடக்கே கிடைத்தால் துணையாக இருக்கும் மொழி.
  • வட நாட்டு மக்களின் பண்பாட்டை புரிந்து கொள்ளும் உதவும் மொழி இந்தி.

சிறு வினா

1. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?

  • என்னுடன் படித்த மாணவன் வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்கிறான்.
  • நான் அவனைக் கண்டு இளம் வயது படிப்பதற்கு உரியது, பணி செய்வதற்கு அல்ல.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா!
  • நாம் இன்று வேலைக்குச் செல்வதால் இன்றைய தேவைதான் பூர்த்தியாகும். நாளைய தேவை பூர்த்தியாகுமா?

கண்ணுடையார் என்பர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையார் கல்லா தவர்.  – என்கிறார் வள்ளுவர்

  • அப்துல்கலாம் அவர்கள் வறுமையில் வாடினாலும் காலை, மாலை வேலைக்குச் செல்வார் இடைப்பட்ட நேரத்தில் பள்ளிக்குச் சென்றதால் தான் உலகம் போற்றும் உத்தமர் ஆனார். இவர் போல நீயும் உழை; இடைப்பட்ட நேரத்தில் என்னோட பள்ளிக்கு வா. படித்தும் பணிக்கு போகலாம்.
  • அரசும், தொண்டு நிறுவனமும் உடை முதல் உணவு வரை இலவசமாகத் தருகிறது.

நாம் கல்வியால் இணைவோம்!
நம் தேசத்தை கல்வியால் உயர்த்துவோம்!!

2. ஐக்கிய நாடுகள் அவையில் மொழிபெயர்ப்பு

ஐ.நா.அவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனால் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது (Interpreting) என்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசு வதை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார். ஒருவர் பேசுவதைக் காதணிேகட்பியில் (Headphone) கேட்டபடி சில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார். அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணிேகட்பியை எடுத்துப் பொருத்திக்கொண்டு அவரது மொழியில் புரிந்துகொள்வார். இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

இப்பகுதியில் இருந்து 5 வினாக்களை உருவாக்குக

  1. ஐ.நா. அவையில் உறுப்பினர்கள் தம் மொழியில் பேசும்போது மொழி தெரியாதவர்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா?
  2. மொழிபெயர்ப்பு என்றால் என்ன?
  3. பார்வையாளர்கள் அவையில் பேசுவோர் உரையை எப்படி புரிந்து கொள்கின்றனர்?
  4. மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பர்?
  5. ஐ.நா. அவையில் பேசுவோரின் பேச்சு எவ்வளவு நேரத்தில் மொழிபெயர்க்கப்படுகிறது?
  6. ஐ.நா. அவையில் செய்யப்பட்டுள்ள வசதி யாது?
  7. காதணி கேட்பியை எதற்குப் பயன்படுத்துவர்?
  8. விளக்குவது (Inter Preting) என்றால் என்ன?

நெடு வினா

தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறதுறைக் கருத்துகள் – தமிழுக்குச் செழுமை.

மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ‘செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.

தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

முன்னுரை:-

உலகம் தகவல் தொழில் நுட்பத்தினால் சுருங்கி விட்ட குழலில் கூட மொழிபெயர்ப்புத் துறை முக்கிய இடம் பெறுகிறது. இத்தகு மொழிபெயர்ப்பு கலை மக்களின் வாழ்வில் எத்தகு போக்கினைச் செய்கிறது என்பது பற்றிக் காண்போம்.

வரையறை:-

மொழி பெயர்ப்பு என்பது மூல மொழியில் உள்ள சொல் அல்லது சொற்றொடர்களை எவ்வித பொருள் மாற்றமும் இல்லாமல் வேறு மொழியில் பெயர்ப்பு செய்வது மொழிபெயர்ப்பு எனப்படும்.

தமிழ் இலக்கிய வளம்:-

தமிழ் இலக்கிய வளம் பெற வேண்டும் என்றால் பிற மொழியல் சிறந்து விளங்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்து தமிழில் மொழிபெயர்ப்புப் பணி நடைபெற்ற வருகிறது. அதனடிப்படையில் கம்பரின் இராமவதாரம், வில்லிபுத்தூராரின் வில்லிபாரதம் போன்ற காவியங்கள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டவையே.

கல்வி மொழி:-

மொழிபெயர்ப்பைக் கல்வியாக்குவதன் மூலம் அனைத்துலக அறிவை நாம் பெற்றுமப் பல்வேறு துறையில் சிறந்து விளங்க முடியும்.

பிற மொழி இலக்கியம்:-

ரவீந்திரநாத் தாகூர் வங்க மொழியில் எழுதிய கீதாஞ்சலியை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தப் பிறகு நோபல் பரிசு கிடைத்துள்ளது.

அறிவியல் கருத்துகள்:-

மொழிபெயர்ப்பு அறிவியல் சார்ந்த துறையிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்துகிறது. Tele என்ற ஆங்கிலச் சொல் தொலை என்பதனைக் குறிக்கும். இதன் அடிப்படையில் Telephone – Telescope – தொலைபேசி, தொலைநோக்கி என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

பல்துறை கருத்துக்கள்:-

கல்வி, அறிவியல், இலக்கியம் மட்டுமல்லாமல் பிற துறையிலும் வளர்ச்சி அடைந்துள்ளன. வானொலி, திரைப்படம், இதழியியல், விளம்பரம் போன்ற துறைகளில் மொழிபெயர்ப்பு பணி சிறந்து விளங்குகிறது. தொலைக்காட்சித் தொடர்கள் வேற்று மொழிக்கு மாற்றப்படுவதால் அனைத்து மக்களையும் சென்றடைகிறது.

முடிவுரை:-

எந்த மொழியின் படைப்பாக இருந்தாலும் எதை மொழி பெயர்க்க வேண்டும்? எப்படிச் செய்ய வேண்டும்? என்பதனை அறிந்து இலக்கண விதிமுறையுடன் செய்வதால் நிலைபெற்று விளங்கும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “மொழிபெயர்ப்புக் கல்வி” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை வோறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்

  1. மணவை முஸ்தபா
  2. பாரதியார்
  3. மு.கு.ஜகந்நாதர்.
  4. கால்டுவெல்

விடை: மணவை முஸ்தபா

2. உலக நாகரிக வளர்ச்சிக்கும் பொருளியல் மேம்பாட்டிற்கும் மொழிபெயர்ப்பும் ஒரு காரணமாகும் என்றவர்

  1. மு.கு.ஜகந்நாதர்.
  2. பாரதியார்
  3. மணவை முஸ்தபா
  4. கால்டுவெல்

விடை: மு.கு.ஜகந்நாதர்.

3. மொழிபெயர்த்தல் என்னும் தொடரைக் தொல்காப்பியர் கையாண்ட இடம் ____________

  1. பெயரியல்
  2. வினையியல்
  3. உயிரியல்
  4. மரபியல்

விடை : மரபியல்

4. இரவிந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு பெற்ற மொழிபெயர்ப்பு நூல்

  1. கீதாஞ்சலி
  2. மனோன்மனியம்
  3. மனோகரம்
  4. தாகூரின் கவிதைகள்

விடை : இரவிந்திரநாத் தாகூர்

5. மொகு சாஸ்ட்டு என்ற தொடரின் பொருள்

  1. பதில் தர மறுக்கிறோம்
  2. விடை தர அவகாசம் வேண்டும்
  3. விரை தர முடியாது
  4. கேள்வி கேட்க அவகாசம் வேண்டும்

விடை : விடை தர அவகாசம் வேண்டும்

6. மொழிபெயர்ப்பு முயற்சியல் ஈடுபடும் நிறுவனங்கள்

  1. சாகித்திய அகாதெமி
  2. தேசிய புத்தக நிறுவனம்
  3. தென்னிந்திய புத்தக நிலையம்
  4. இவை அனைத்தும்

விடை : இவை அனைத்தும்

7. காசினியல் இன்றுவரை அறிவின் மன்னர்
கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணிப்
பேசி மகிழ் நிலை வேண்டும்
 என்ற வரிகளை கூறியவர்

  1. குலோத்துங்கன்
  2. இராஜேந்திரன்
  3. இராஜராஜன்
  4. பராந்தகன்

விடை : குலோத்துங்கன்

8. வால்காவிலிருந்து கங்கை வரை என்ற நூலை கணமுத்தையா தமிழில் மொழிபெயர்த்த ஆண்டு

  1. 1942
  2. 1944
  3. 1947
  4. 1949

விடை : 1949

9. வடம் (கயிறு), ஒட்டகம் என்ற இருபொருளுக்குரியச் சொல்

  1. Camel
  2. Cow
  3. Horse
  4. Rope

விடை : Camel

10. சென்றிடுவீர் எட்டுத்திக்கும் – கலைச்
     செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற வரிகளை எழுதியவர்

  1. வாணிதாசன்
  2. கண்ணதாசன்
  3. பாரதியார்
  4. பாரதிதாசன்

விடை : பாரதியார்

11. தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
     பரவும் வகை செய்தல் வேண்டும் என்ற பாடலின் ஆசிரியர்

  1. பாரதியார்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. பாரதிதாசன்

விடை : பாரதியார்

Leave a Comment