Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 1.3 Iratura molithal Book Back Solution

இயல் 1.3 – இரட்டுற மொழிதல்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 1.3 ‘Iratura molithal’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 1.3 இரட்டுற மொழிதல்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 1.3 Iratura molithal Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

இரட்டுற மொழிதல் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Iratura molithal’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Iratura molithal Subject.

Previous Lesson: தமிழ்ச்சொல் வளம்

இரட்டுற மொழிதல் பாடல்

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்ககாக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

– தனிப்பாடல் திரட்டு

நூல் வெளி

  • புலவர் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்த இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • இப்பாடலை படைத்தவர் தமிழழகனார்.
  • சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம்.
  • இலக்கணப் புலமையும் இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.

சொல்லும் பொருளும்

  • துய்ப்பது – கற்பது, தருதல்
  • மேவலால் – பொருந்துதல், பெறுதல்

குறு வினா

தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்தக்காட்டுத் தருக.

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

எ.கா.:-

சீனிவாசன் பாற்கடலில் துயில் கொள்கிறான் – இத் தொடர் எவ்வித மாற்றமுமின்றி இரண்டு விதமான பொருளைத் தருகிறது.

  • சீனியில் (சர்க்கரை) வாசம் செய்யும் எறும்பு பாலில் இறந்து மிதக்கிறது.
  • சீனிவாசனாகிய திருமால் பாற்கடலில் துயில் கொள்கிறார்.

சிறு வினா

தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை விளக்குக.

பாடல் அடிகள் தமிழ் கடல்
முத்தமிழ் துய்ப்பதால் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழாய் வளர்ந்தது. முத்தினை அமிழ்ந்து தருகிறது.
முச்சங்கம் கண்டதால் முதல், இடை, கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.  வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மெத்த வணிகலமும் மேவதால்  ஐம்பெருங்காப்பியங்கள் அணிகலனாய்ப் பெற்றது. மிகுதியான வணிகக் கப்பல்கள் வந்து சென்றது.
நித்தம் அணை கிடந்தே சங்கத்தவர் காக்க சங்கப் பலகையில் அமர்ந்து சங்கப் புலவர்கள் பாதுகாத்தனர். தன் அலையால் சங்கினைத் தடுத்து நிறுத்திக் காத்தது.

 

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இரட்டுற மொழிதல்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. செய்யுளிலும் உரைநடையிலும் மேடைப்பேச்சிலும் ___________ பயன்படுத்தப்படுகின்றன.

  1. அணிகள்
  2. இலக்கணம்
  3. இலக்கியம்
  4. சிலேடைகள்

விடை : சிலேடைகள்

2. கடல் __________ வகையான சங்குகளை தருகின்றன

  1. இரண்டு
  2. மூன்று
  3. நான்கு
  4. ஐந்து

விடை : மூன்று

3. கடல் தன் அலையால் ___________ தடுத்து நிறுத்துகிறது.

  1. மணல்
  2. கப்பல்
  3. சங்கு
  4. மீனவர்கள்

விடை : சங்கு

4. இரட்டுற மொழிதல் அணியை ______________ எனவும் கூறுவர்

  1. சிலேடை அணி
  2. வேற்றுமை அணி
  3. பிறதுமொழிதல் அணி
  4. சொற்பொருள் பின்வருநிலையணி

விடை : சிலேடை அணி

5. சந்தக்கவிமணி எனக் குறிப்பிடப்படுபவர்

  1. பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  2. எழில் முதல்வன்
  3. தமிழழகனார்
  4. தேவநேயப் பாவாணர்

விடை : தமிழழகனார்

6. தமிழழகனாரின் இயற்பெயர்

  1. ஆறுமுகம்
  2. சண்முகமணி
  3. ஞானசுந்தரம்
  4. சண்முகசுந்தரம்

விடை : சண்முகசுந்தரம்

7. தமிழழகனார் ________ சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்

  1. 10
  2. 12
  3. 14
  4. 16

விடை : 12

9. முத்தமிழ் துயப்பதால் என்ற பாடல் இடம் நூல்

  1. எட்டுத்தொகை
  2. பத்துப்பாட்டு
  3. தனிப்பாடல் திரட்டு
  4. சிற்றிலக்கியங்கள்

விடை : தனிப்பாடல் திரட்டு

10. அடடே! காலையிலேயே மாலையும் வந்துவிட்டதே! என்றவர்

  1. கி.வா.ஜகந்நாதன்
  2. சுப்புடு
  3. கி.ஆ.பெ.விசுவநாதம்
  4. சண்முகசுந்தரம்

விடை : கி.வா.ஜகந்நாதன்

11. அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல், குரலிலும் கம்மல் என்ற சிலேடை வரியை கூறியவர்

  1. கி.வா.ஜகந்நாதன்
  2. சுப்புடு
  3. கி.ஆ.பெ.விசுவநாதம்
  4. சண்முகசுந்தரம்

விடை : சுப்புடு

12. இவர் பல்துறை வித்தகர் என்ற சிலேடை வரிகளுக்கு சொந்தவர்

  1. கி.வா.ஜகந்நாதன்
  2. சுப்புடு
  3. கி.ஆ.பெ.விசுவநாதம்
  4. சண்முகசுந்தரம்

விடை : கி.ஆ.பெ.விசுவநாதம்

வினாக்கள்

1. ஐம்பெருங்காப்பியங்கள் என குறிப்பிடப்படும் நூல்களை கூறுக

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி

2. முத்தமிழ் விரிவாக்கம் தருக

தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது

3. தமிழ் எதன் மூலம் வளர்க்கப்பட்டது;

தமிழானது முதல், இடை, கடை போன்ற முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது

4. கடல் எவற்றையெல்லாம் தருகிறது?

  • முத்தும், அமிழ்தும் கிடைக்கிறது
  • வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று சங்குகள் கிடைக்கின்றன

5. இரட்டுற மொழிதல் அணி என்றால் என்ன?

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டுற மொழிதல் அணி என்பர். இதனை சிலேடை அணி என்றும் அழைப்பர்.

6. தமிழ் எவற்றோடெல்லாம் இணைத்து பேசப்படுகிறது?

தமிழ் விண்ணோடும், முகிலோடும், உடுக்களோடும், கதிரவனோடும், கடலோடும் இணைத்து பேசப்படுகிறது

7. தமிழழகனார் – குறிப்பு வரைக

  • இயற்பெயர் – சண்முகசுந்தரம்.
  • வேறு பெயர் – சந்தக்கவிமணி
  • இலக்கணப் புலமையும், இளம் வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்றவர்.
  • படைப்பு – 12 சிற்றிலக்கியம்

8. தமிழ் குறித்து தமிழழகனார் கூறுவன யாவை?

  • தமிழ், இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
  • முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
  • ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது.
  • சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

Leave a Comment