இயல் 9.1 – ஜெயகாந்தம்
Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 9.1 ‘Jeyakantham’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 9.1 ஜெயகாந்தம்
We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 9.1 Jeyakantham Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.
ஜெயகாந்தம் (நினைவு இதழ்) வினா விடைகள்
On this page, you will find the question answers for the Lesson ‘Jeyakantham’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.
Previous Lesson: பா வகை அறிதல்
பலவுள் தெரிக.
1. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது
- அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்தல்
- பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
- அறிவியல் முன்னேற்றம்
- வெளிநாட்டு முதலீடுகள்
விடை : பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்
2. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்துகொள்வது:
- தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
- சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
- அறத்தைக் கூறுவதற்காக எழுதினார்
- அழகியலுடன் இலக்கியம் படைத்தார்
விடை : தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார்
குறு வினா
நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு – இத்தொடரை இரு தொடர்களாக்குக.
நான் எழுதுவதற்குத் தூண்டுதல் ஒன்றுண்டு. நான் எழுதுவதற்குத் தூண்டுதலுக்குரிய காரணமும் ஒன்றுண்டு.
சிறு வினா
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால்’ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
இரயில் நிலையத்திற்கு வெளியே இருந்த கண்ணில்லாத பிச்சைகாரனுக்கு இரண்டனாவை அவர் போட்டார். அதை பெற்றுக் கொண்டவர் கைகள் குவித்து “சாமி நீங்க போற வழிக்கெல்லாம் புண்ணியம் உண்டு, என்று வாழ்த்தினான். அந்த பிச்சைக்காரனுக்குத் தர்மம் செய்யமாமல் இருந்திருந்தாலோ அல்லது தரம்ம் செய்ய ஓரணாவை எடுத்துச் சென்றிருந்தாலோ? விபத்துக்குள்ளான இரயிலில் தான் சென்றிருப்பான். தர்மம் தலைகாக்கும் என்பதை தர்மம் செய்தவன் உணர்ந்தான்.
தர்மம் தந்தவனும் அதைப் பெற்றவனும் மனதார வாழ்த்தும் நன் மாந்தர்களின் சிறப்புக் கூறுகளாகும்.
கூடுதல் வினாக்கள்
பின்வரும் பகுதியில் “ஜெயகாந்தம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.
பலவுள் தெரிக
1. சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் புதினத்திற்காக ஜெயகாந்தன் ____________________ விருதினை பெற்றுள்ளார்
- சாகித்திய அகாதெமி விருது
- குடியரசுத்தலைவர் விருது
- சோவியத் விருது
- தாமரைத் திருவிருது
விடை : சாகித்திய அகாதெமி விருது
2. தர்மார்த்தங்களை உபதேசிக்க வியாசர் எழுதியது
- சிலப்பதிகாரத்தை
- மணிமேகலையை
- பாரதத்தை
- இராமாயணத்தை
விடை : பாரதத்தை
3. ஜெயகாந்தன் பிறந்த ஆண்டு
- 1936
- 1934
- 1938
- 1940
விடை : 1934
4. யுகசந்தி தொகுப்பில அமைந்த சிறுகதை
- தர்க்கத்திற்கு அப்பால்
- ரிஷிமூலம்
- வாதம்
- ஒருபிடி சோறு
விடை : யுகசந்தி
5. ஜெயகாந்தன் ______________ பற்றி கவிதை எழுதியுள்ளார்
- வாலி
- கண்ணதாசன்
- புலமைபித்தன்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
விடை : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
6. இமயத்துக்கு அப்பால் என்ற நூலிற்காக ஜெயகாந்தன் பெற்றுள்ள விருது
- சாகித்திய அகாதெமி விருது
- சோவியத் விருது
- குடியரசுத்தலைவர் விருது
- தாமரைத் திருவிருது
விடை : சோவியத் விருது
7. சமகாலக் கருத்துகளையும், நிகழ்வுகளையும், சமகால மொழியல் சமகால உணர்வில் தந்தவர்
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- ஜெயமோகன்
- சுஜாதா
விடை : ஜெயகாந்தன்
8. உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்காக ஜெயகாந்தனுக்கு கிடைத்துள்ள விருது
- குடியரசுத்தலைவர் விருது
- சாகித்ய அகாதெமி விருது
- ஞானபீட விருது
- தாமரைத் திரு விருது
விடை : குடியரசுத்தலைவர் விருது
9. சிறுகதை மன்னன் என்று சிறப்பு பெயரை பெற்றவர்
- அகிலன்
- கோமகன்
- ஜெயகாந்தன்
- சுஜாதா
விடை : ஜெயகாந்தன்
10. கா.செல்லப்பனால் படிக்காதமேதையென குறிப்பிடப்படுபவர்
- அகிலன்
- புதுமைப்பித்தன்
- சுஜாதா
- ஜெயகாந்தன்
விடை : ஜெயகாந்தன்
16. ஜெயகாந்தன் ____________ ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளார்
- 1971
- 1972
- 1975
- 1977
விடை : 1972
சிறு வினா
1. ஜெயகாந்தனுக்கு கிடைத்துள்ள விருதுகளை கூறுக
குடியரசுத்தலைவர் விருது, சாகித்திய அகாதெமி விருது, சோவியத் நாட்டு விருது, ஞானபீட விருது, தாமரைத்திரு விருது
2. ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமானவைகளை கூறுக
யாருக்காக அழுதான். ஊருக்கு நூறு பேர், சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், உன்னைப்போல் ஒருவன்
3. ஜெயகாந்தன் எழுதிய சிறுகதைத் தொகுப்புகள் சிலவற்றினை எழுதுக
குருபீடம், யுகசாந்தி, ஒரு பிடி சோறு, உண்மை சுடும், இனிப்பும் கரிப்பும், தேவன் வருவாரா, புதிய வார்ப்புகள்
4. ஜெயகாந்தன் எழுதிய குறும்புதினங்கள் சிலவற்றினை எழுதுக
பிரளயம், கருணையினால் அல்ல, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், யாருக்காக அழுதான்?, கைவிலங்கு, சினிமாவுக்குப் போன சித்தாளு
5. ஜெயகாந்தன் எழுதிய புதினங்களை சிலவற்றினை எழுதுக
பாரீசுக்குப் போ, உன்னைப் போல் ஒருவன், சுந்தர காண்டம், கங்கை எங்கே போகிறாள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், இன்னும் ஒரு பெண்ணின் கதை, ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
6. ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு நூல்கள் யாவை
வாழ்விக்க வந்த காந்தி, ஒரு கதாசிரியனின் கதை