Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.4 Kambaramayanam Book Back Solution

இயல் 6.4 – கம்பராமாயணம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.4 ‘Kambaramayanam’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.4 கம்பராமாயணம்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.4 Kambaramayanam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

கம்பராமாயணம் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kambaramayanam’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

நூல் வெளி

  • கம்பர் இராமனது வரலாற்றை தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
  • ஆறு காண்டங்களை உடையது.
  • கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
  • “கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிக்கு உரியவர்
  • சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்.
  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்.
  • விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்று புகழ் பெற்றவர்
  • சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன கம்பர் இயற்றிய நூல்கள் ஆகும்.

பலவுள் தெரிக

கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

  1. நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
  2. ஊரில் விளைச்சல் இல்லாததால்
  3. அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
  4. அங்கு வறுமை இல்லாததால்

விடை : அங்கு வறுமை இல்லாததால்

குறு வினா

உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’
காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’
கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

கும்பகருணனே உம்முடைய பொய்யான வாழ்வு எல்லாம் இன்றிலிருந்து இறங்கத் தொடங்கி விட்டது. அதனைக் காண்பதற்கு எழுந்திடுவாய் என்று சொல்லி எழுப்பினார்கள்.

வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையிலே படுத்து உறங்கச் சொல்கிறார்கள்.

சிறு வினா

‘கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

நிலம் தொழில் / உணவுப்பயிர் இன்றைய வளர்ச்சி
குறிஞ்சி மலை நெல், திணை நெல், தேன், கிழங்கு ஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது.
மருதம் செந்நெல், வெண்ணெல் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
நெய்தல் உப்பு, மீன் மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நெடு வினா

சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.

அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி… தண்டலை மயில்கள் ஆட…

இவ்வுரையைத் தொடர்க!

“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,
கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”

தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,

சோலையை நாட்டிய மேடையாகவும்

மயிலை நடன மாதராகவும்

குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்

தாமரை மலரை விளக்காகவும்

மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்

வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்

பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து

தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.

இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.

படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.

“காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”

எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.

கம்பன் கவிதை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குிறான். தம்மை உச்சிக்கு கொண்டு சேர்க்கிறான்.

உதாரணமாக

” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயன
மறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.

கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம், ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு எற்ப,

கம்பர் கங்கை காண் படலத்தில்

“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோ
வேழ நெடும் படை……….”

எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஒசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.

“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழவெ லாம்
இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”

மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்து பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிய முடிகிறது.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “கம்பராமாயணம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. பாலகாண்டம் ஆற்றுப்படலத்தில் குறிப்பிட்டுள்ள ஆறு

  1. சரயு ஆறு
  2. கங்கை ஆறு
  3. நர்மதை ஆறு
  4. யமுனை ஆறு

விடை : சரயு ஆறு

2. கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி கம்பராமாயணத்திற்கு ______________ எனப் பெயரிட்டார்

  1. இராமகாதை
  2. இராமாயணம்
  3. கம்பராமாயணம்
  4. இராமாவதாரம்

விடை : இராமாவதாரம்

3. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என _______________ பெருமைப்படுகிறார் 

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. கண்ணதாசன்
  4. கம்பதாசன்

விடை : பாரதியார்

4. கம்பர் ___________ ஊரில் பிறந்துள்ளார்

  1. திருவெண்காடு
  2. திருவழுந்தூர்
  3. திருவழுந்தூர் 
  4. திருவாரூர்

விடை : திருவழுந்தூர்

5. கம்பராமாயணத்தில் _____________ காண்டங்கள் இடம் பெற்றுள்ளன

  1. 9
  2. 7
  3. 4
  4. 6

விடை : 6

6. திருவெண்ணெய்நல்லூரில் பிறந்தவர்

  1. சடையப்ப வள்ளல்
  2. சீத்தலை சாத்தனார்
  3. இளங்கோவடிகள்
  4. கம்பர்

விடை : சடையப்ப வள்ளல்

7. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்ற புகழுக்குரியவர்

  1. செயங்கொண்டர்
  2. ஒட்டக்கூத்தர்
  3. புகழேந்தி
  4. கம்பர்

விடை : கம்பர்

8. சடையப்ப வள்ளல் ___________ ஆதரித்துள்ளார் 

  1. ஒளைவயார்
  2. கம்பர்
  3. ஒட்டக்கூத்தர்
  4. புகழேந்தி

விடை : கம்பர்

9. பொருந்தாதை தேர்க

  1. தாதுகு சோலை – ஆற்றுப்படலம்
  2. தண்டலை மயில்களாட – நாட்டுப்படலம்
  3. வெய்யோன் ஒளி – கங்கைப்படலம்
  4. ஆழ நெடுந்திரை – ஆரண்ய படலம்

விடை : ஆழ நெடுந்திரை -ஆரண்ய படலம்

10. தண்டலை, மறிகடல் இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை, வினையெச்சம்
  2. வினைத்தொகை, பெயரெச்சம்
  3. உருவகம்இ பண்புத்தொகை
  4. பண்புத்தொகை, வினைத்தொகை

விடை : பண்புத்தொகை, வினைத்தொகை

சிறு வினா

1. கம்பனின் பெருமையை பற்றி கூறும் தொடர்கள் யாவை?

கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்

2. கம்பரின் படைப்புகளை கூறுக

சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது

3. கம்பர் இராமனுக்கு கூறும் உவமைகளை கூறுக

மை, நீலக்கடல், கார்மேகம், பச்சை நிற மரகதம்

4. கம்பர் சிறு குறிப்பு வரைக

  • சிறப்பு – கல்வியில் பெரியவர் கம்பர், கம்பன் வீடுக்கட்டுத்தறியும் கவிபாடும்
  • பிறப்பு – சோழ நாடு, திருவழுந்தூர்
  • ஆதரித்தவர் – திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளல்
  • புகழ் – விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
  • படைப்புகள் – சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது

Leave a Comment