Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 6.3 Muthukumarasamy Pillai Tamil Book Back Solution

இயல் 6.3 – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 6.3 ‘Muthukumarasamy Pillai Tamil’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 6.3 முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 6.3 Muthukumarasamy Pillai Tamil Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Muthukumarasamy Pillai Tamil’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: பூத்தொடுத்தல்

முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்

|ஆடுக செங்கீரை!

செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
வம்பவ ளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை

செங்கீரைப் பருவம், பா.எண்.8

சொல்லும் பொருளும்

 • பண்டி – வயிறு
 • அசும்பிய – ஒளிவீசுகிற
 • முச்சி – தலையுச்சிக் காெண்டை

இலக்கணக் குறிப்பு

 • குண்டலமும்  குழைகாதும் – எண்ணும்மை
 • ஆடுக – வியங்கோள் வினைமுற்று
 • கட்டிய – பெயரெச்சம்
 • வட்டச் சுட்டி – குறிப்பு பெயரெச்சம்

பகுபத உறுப்பிலக்கணம்

பதிந்து = பதி + த் (ந்) + த் + உ

 • பதி – பகுதி
 • த் – சந்தி
 • ந் – ஆனது விகாரம்
 • த் – இறந்தகால இடைநிலை
 • உ – வினையெச்ச விகுதி

நூல் வெளி

 • முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழினை குமரகுருபரர் இயற்றினார்.
 • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • இதில் இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே பாட்டுடைத் தலைவராகக் காெண்டு, அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
 • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
 • பத்துப் பருவங்கள் அமைத்து, பருவத்திற்குப் பத்துப்பாடல் என நூறு பாடல்களால் இது பாடப்பெறும்.
 • இது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகையாகப் பாடப்பெறும்.
 • குமரகுருபரரின் காலம் 17ஆம் நூற்றாண்டு.
 • இவர் தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி ஆகிய மாெழிகளில் புலமை மிக்கவர்
 • கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை முதலான நூல்களை இயற்றியுள்ளார்.

இருபாலருக்கும் பாெதுவான பருவங்கள்

 • காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி.

ஆண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்)

 • சிற்றில், சிறுபறை, சிறுதேர்

பெண்பாற் பிள்ளைத்தமிழ் (கடைசி மூன்று பருவம்)

 • கழங்கு, அம்மானை, ஊசல்

சிறு வினா

1. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

வைத்தியநாதபுரி முருகன் செங்கீரை ஆடும் அழகு

கிண்கிணி:-

கால்களில் அணிந்திருந்த சிறு செம்பொன் கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடின.

அரைஞான் மணி:-

இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரை வட்டங்கள் ஆடின.

சிறு வயிறு:-

பசும்பொன் என ஒளிரும் தொந்தியுடன் சிறு வயிறு சரிந்தாடியது.

நெற்றிச் சுட்டி:-

பட்டம் கட்டிய நெற்றியில் பொட்டுடன் வட்ட வடிமான சுட்டி பந்தாடியது.

குண்டலங்கள்:-

கம்பிகளால் உருவான குண்டலங்களும் காதின் குழுகளும் அசைந்தாடின.

உச்சிக் கொண்டை:-

உச்சிக் கொண்டை அதில் சுற்றிக் கட்டுப்பட்டுள்ள ஒளியுள் முத்துகளோடு ஆடியது.

ஆடுக:-

வைத்திய நாதபுரி முருகனே! செங்கீரை ஆடி அருள்புரிவாயாக

பவளம் போன்ற உன் திருமேனி ஆட, செங்கீரை ஆடுக.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. குமரகுருபரர் எழுதிய நூல்களில் பொருந்தாதது

 1. கந்தர் கலிவெண்பா
 2. மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்,
 3. மதுரைக்கலம்பகம்,
 4. திருவாதவூர் மும்மணிக்கோவை

விடை : திருவாதவூர் மும்மணிக்கோவை

2. முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழில் நான்காவது பருவம்

 1.  காப்பு
 2. சப்பாணி
 3. செங்கீரை
 4. தால்

விடை : சப்பாணி

3. குமரகுருபரர் _________ நூற்றாண்டைச் சேர்ந்தவர்.

 1. 14
 2. 15
 3. 16
 4. 17

விடை : 17

4. சிற்றிலக்கியங்கள் ___________ வகைகளை கொண்டது

 1. 16
 2. 64
 3. 96
 4. 108

விடை : 96

5. முத்துகுமாரசுவாமி பிள்ளைத்தமிழில்  _________ பருவங்கள் இடம் பெற்றுள்ளன

 1. 8
 2. 10
 3. 12
 4. 7

விடை : 10

6. கீழ்கண்டவற்றுள் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாதது

 1. சிற்றில்
 2. ஊசல்
 3. சிறுதேர்
 4. சிறுபறை

விடை : ஊசல்

7. கீழ்கண்டவற்றுள் பெண்பாற் பிள்ளைத் தமிழுக்குப் பொருந்தாதது

 1. சிற்றில்
 2. ஊசல்
 3. சிறுதேர்
 4. சிறுபறை

விடை : சிற்றில்

8. காற்றில் ஆடுவது போன்று குழந்தை மென்மையாகக் ஆடுகின்ற பருவம்

 1. செங்கீரை
 2. தால்
 3. காப்பு
 4. சிறுபறை

விடை : செங்கீரை

9. பிள்ளைத்தமிழில் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் இரண்டிற்கும் பொதுவான பருவங்கள்

 1. 12
 2. 8
 3. 7
 4. 10

விடை : 7

10. செங்கீரை ஆடுமாறு __________ இறைவனை குமரகுருபர் வேண்டுகிறார்

 1. சுவாமிமலை முருகன்
 2. வைத்தியநாத முருகன்
 3. திருக்கழுக்குன்ற முருகன்
 4. திருச்செந்தூர் முருகன்

விடை : வைத்தியநாத முருகன்

11. பண்டி என்பதன் பொருள்

 1. பெருக்கம்
 2. சுருக்கம்
 3. வயிறு
 4. தலை

விடை : தலை

11. செங்கீரை இலக்கணக்குறிப்பு தருக

 1. வினைத்தொகை
 2. பண்புத்தொகை
 3. பெயரெச்சம்
 4. வினையெச்சம்

விடை : பண்புத்தொகை

12. பொருந்தாததை தேர்க

 1. அரை நாண் – கால் தலையில் அணிவது
 2. சுட்டி – காதில் அணிவது
 3. குழை – இடையில் அணிவது
 4. குண்டலம் –  நெற்றியில் அணிவது

விடை : குழை – இடையில் அணிவது

குறு வினா

1. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்?

பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இரு வகைப்படும்.

2. ஆண்பாற் பிள்ளைத்தமிழ் கொண்டுள்ள பருவங்களை கூறுக

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர்

3. பெண்பாற் பிள்ளைத்தமிழ் கொண்டுள்ள பருவங்களை கூறுக

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, கழங்கு, அம்மானை, ஊசல்

4. ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்கும், பெண்பாற் பிள்ளைத்தமிழுக்கும் பாெதுவான பருவங்கள் எத்தனை?

காப்பு, செங்கீரை தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி என 7 பருவங்கள் உள்ளன.

5. செங்கீரைப் பருவம் குறிப்பு வரைக

 • செங்கீரைச் செடி காற்றில் ஆடுவது போன்று குழந்தையின் தலை 5-6ம் மாதங்களில் மென்மையாக அசையும். இப்பருவத்தை செங்கீரைப் பருவம் என்பர்.
 • இப்பருவத்தில் குழந்தை தன் இருகைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலினை நீட்டி தலை நிமிர்ந்தும் முகமசைந்தும் ஆடும்.

6. பிள்ளைத்தமிழில் குமரகுருபரர் குறிப்பிடும் அணிகலன்களையும் அணியப்படும் இடங்களையும் பட்டியலிடுக

 • சிலம்பு, கிணகிணி – கால்
 • சுட்டி – நெற்றி
 • அரை நாண் – இடை (இடுப்பு)
 • குண்டலம், குழை – காது
 • சூழி – தலை

குறு வினா

1. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் சிறு குறிப்பு வரைக

 • ஆசிரியர் – குமரகுருபரர்
 • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
 • பாட்டுடைத் தலைவன் – இறைவனையாே, தலைவரையாே, அரசனையாே குழந்தையாகக் கருதிப் பாடுவர்.
 • பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்தியம்புகிறது.
 • பருவங்கள் – பத்துப் பருவங்கள்
  பாடல்கள் – பருவத்திற்குப் பத்துப்பாடல் (100 பாடல்கள்)
 • வகை – ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ்

2. குமரகுருபரர் சிறு குறிப்பு வரைக

 • காலம் – 17ஆம் நூற்றாண்டு.
 • புலமை – தமிழ், வடெமாழி, இந்துஸ்தானி போன்ற மாெழிகள்
 • நூல்கள் – கந்தர் கலிெவண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை, நீதிநெறி விளக்கம், திருவாரூர் மும்மணிக்காேவை

Leave a Comment