Samacheer Kalvi 10th Tamil Guide Chapter 4.1 Seyarkai Nunnarivu Book Back Solution

இயல் 4.1 – செயற்கை நுண்ணறிவு

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 10th Tamil Chapter 4.1 ‘Seyarkai Nunnarivu’, you’ll find solutions to all the questions from the 10th Standard Tamil Book Lesson 4.1 செயற்கை நுண்ணறிவு

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 10th Tamil Chapter 4.1 Seyarkai Nunnarivu Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 10th Tamil Guide PDF.

செயற்கை நுண்ணறிவு வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Seyarkai Nunnarivu’ which is the first subject of class 10 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: திருக்குறள்

பலவுள் தெரிக

1. தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு : செயற்கை நுண்ணறிவு

குறிப்புகள் : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காண்பிப்பது.

  1. தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
  2. குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
  3. தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
  4. குறிப்புகளுக்குத் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

விடை : தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன

2. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

  1. துலா
  2. சீலா
  3. குலா
  4. இலா

விடை : இலா

குறுவினா

1. வருங்காலத்தில் தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறிப்பிடுக.

எ.கா.:- செயற்கை நுண்ணறிவால் இயங்கும் போக்குவரத்து ஊர்திகள்

  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் இயந்திர மனிதன் (Robo – ரோபோ)
  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் திறன்பேசி (Smart Phone)

சிறு வினா

1. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.

  • இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்தவில்லை.
  • அது மனிதனுக்குரியத் தேவைகளை மட்டுமே மேம்படுத்தி இருக்கிறது.
  • அறிவியலால் இன்று மனிதன் மனிதனாக வாழவில்லை.
  • இயந்திரம் மனிதனாகிவிட்டது. மனிதன் இயந்திரம் ஆகிவிட்டான்.
  • மனித நேயத்தையும் அன்பையும் இரக்கத்தையும் இன்றைய மனிதனிடம் பார்க்க முடியவில்லை.
  • பணிகளால் அவன் எந்திரத்தைப் போல ஓடிக்கொண்டே உள்ளான்.

2. மனிதர்களின் மூளையைப் போன்றது, செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினியின் மென்பொருள். மனிதனைப் போலவே பேச, எழுத, சிந்திக்க இத்தொழில் நுட்பம் மேம்படுத்தப்படுகிறது. இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படுகிற நன்மைகளைப் பற்றி அறிவியல் இதழ் ஒன்றுக்கு ‘எதிர்காலத் தொழில்நுட்பம்’ என்ற தலைப்பில் எழுதுக.

உயரினங்களில் மனிதரை உயர்த்திக் காட்டுவது அவர்களின் சிந்தனை ஆற்றலே! அந்தச் சிந்தனைக்குத் தொழில்நுட்பமும் துணை செய்கிறது. திறன்பேசிகளில் இயங்கும் உதவு மென்பொருள் கண்ணுக்குப் புலப்படாத மனிதனைப் போல நம்முடன் உரையாடி உதவி செய்கிறது.

நாம் சொல்கிறவர்களுக்குத் தொலைபேசியில் அழைப்பு விடுக்கும். நாம் திறக்க கட்டளையிடுகிற செயலியைத் திறக்கும். நாம் கேட்பதை உலாவியல் தேடும், நாம் விரும்பும் அழகா கவிதைகளை இணையத்தில் தேடித்தரும். எந்தக்கடையில் எது விற்கும் என்று சொல்லும். படிப்பதற்கு உரிய நூல்களைப் பட்டியலிடும். நாம் எடுத்த ஒளிப்படங்களை பற்றிப் பட்டியிலிடும்.

எதிர்காலத்தில் நம் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோரை விடவும் உதவு மென்பொருள் நம்மை நன்கு அறிந்திருக்கும்.

நெடுவினா

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறைகொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்றுவிடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் ‘செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிப்பாடுகள்’ பற்றி ஒரு கட்டுரை எழுதுக.

முன்னுரை:-

ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளும் வெறும் வணிகத்துடன் அது நின்றுவிடாது. செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் இனி மிகுதியாக இருக்கும்.

ஊர்திகளை இயக்குதல்:-

  • எதிர்காலத்தில் நாம் இயக்கும் ஊர்திகளைச் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயக்கப்படும்.
  • இத்தகைய ஊா்திகள் ஏற்படுத்தும் விபத்து குறையும்.
  • போக்குவரத்து நெரிசல் இருக்காது.
  • பயண நேரம் குறையும்.
  • எரிபொருள் மிச்சப்படும்.

மனிதர்களிடம் போட்டி:-

மென்பொருள்கள், கவிதைகள், கதைகள் விதவிதமான எழுந்து நடைகள் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு மனிதர்களிடம் போட்டியிட்டாலும் வியப்பதற்கில்லை

கல்வித்துறை:-

கல்வித்துறையில் இத்தொழில் நுட்பத்தைப் பல விதங்களில் பயன்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன.

பிற செயல்பாடுகள்:-

விடுதிகளில், வங்கிகளில், அலுவலகங்களில் தற்போது மனிதன் அளிக்கும் சேவையை இயந்திர மனிதன் செய்யும்.

நம்முடன் உரையாடுவது, ஆலோசனை வழங்குவது, பயண ஏற்பாடு செய்து தருவது, தண்ணீர் கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்குப் பொம்மை கொண்டு வந்து தருவது, குழந்தைகளுக்கு வேடிக்கைக் காட்டுவது எனப் பலவற்றையும் செய்யும் நிலை வரும்

வேலை வாய்ப்புகளில் மாற்றம்:-

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றத்தை எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு கொண்டு வரும்.

இயந்திர மனிதனிடம் குழந்தை:-

எதிர் காலத்தில் இயந்திர மனிதனிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அலுவலகம் செல்லும் பெற்றோரைப் பார்க்க முடியும்.

தோழனாய் இயந்திர மனிதன்:-

வயதானவர்களுக்கு உதவிகள் செய்தும், அவர்களுக்கு உற்ற தோழனாய் பேச்சுக் கொடுத்தும் பேணும் இயந்திர மனிதர்களை நாம் பார்க்க முடியும்.

உயிராபத்தை விளைவித்தல்:-

செயற்கை நுண்ணறிவுள்ள இயந்திர மனிதர்களால், மனிதர் செய்ய இயலாத அலுப்புத் தட்டக்கூடிய கடினமான செயல்களையும் செய்ய முடியும்.

மனித முயற்சியல் உயிராபத்தை விளைவிக்கக் கூடிய செயல்களையும் செய்ய முடியும்.

வணிக வாய்ப்புகள்:-

பெருநிறுவனங்கள் தங்கள் பொருள்களை உற்பத்தி செய்யவும் சந்தைப்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளைச் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திக் கொடுக்கும்.

முடிவுரை:-

செயற்கை நுண்ணறிவு சாதனங்களால் மனிதனின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “செயற்கை நுண்ணறிவு” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. 2016இல் ஐ.பி.எம்.நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி

  1. பெப்பர்
  2. உலா
  3. இலா
  4. வாட்சன்

விடை : வாட்சன்

2. சீனாவில் சிவன் கோயில் கட்டப்பட்ட துறைமுக நகரம்

  1. ஷாங்காய்
  2. நான்ஜிங்
  3. சாங்சுன்
  4. சூவன்செள

விடை : சூவன்செள

3. இயல்பான மொழிநடையை உருவாக்குதல் என்னும் மென்பொருளின் பெயர் ______________

  1. வேர்ல்டுஸ்மித்
  2. வேர்டுஸ்மித்
  3. வேர்டுபீட்டர்
  4. வேட்ஸ்வொர்த்

விடை : வேர்டுஸ்மித்

4. எழுத்தாளி _______________ என்று அழைக்கப்படுகிறது.

  1. வேர்ல்டுஸ்மித்
  2. வேர்டுபீட்டர்
  3. வேட்ஸ்வொர்த்
  4. வேர்டுஸ்மித்

விடை : வேர்டுஸ்மித்

5. செயற்கை நுண்ணறிவுக் கணினியான வாட்சன் சில நிமிடங்களில் இரண்டு கோடி தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் ______________க் கண்டுபிடித்தது.

  1. காய்ச்சலை
  2. கல்லீரல் நோயை
  3. புற்றுநோயை
  4. கணைய நோயை

விடை : புற்றுநோயை

6. இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்று கூறியவர்

  1. பாரதியார்
  2. பாரதிதாசன்
  3. சுரதா
  4. கண்ணதாசன்

விடை : பாரதியார்

7. இவ்வுலகை இதுவரை ____________ ஆண்டு கொண்டிருக்கிறது. இனிமேல் ____________ தான் ஆளப்போகிறது.

  1. மென்பொருள், செயற்கை நுண்ணறிவு
  2. செயற்கை நுண்ணறிவு, மென்பொருள்
  3. நுண்ணறிவு, முகநூல்
  4. முகநூல், புலனம்

விடை : மென்பொருள், செயற்கை நுண்ணறிவு

8. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன்

  1. வாட்சன்
  2. வேர்டுஸமித்
  3. ஸ்டீவ்ஸ்மித்
  4. பெப்பர்

விடை : பெப்பர்

9. இந்தியாவின் பெரிய வங்கி ____________

  1. பாரத ஸ்டேட் வங்கி
  2. இந்தியன் வங்கி
  3. பரோடா வங்கி
  4. கனரா வங்கி

விடை : பாரத ஸ்டேட் வங்கி

10. இலா என்ற உரையாடு மென்பொருள் உருவாக்கிய வங்கி

  1. ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம்
  2. ஐ.பி.எம். நிறுவனம்
  3. பாரத ஸ்டேட் வங்கி
  4. கனரா வங்கி

விடை : பாரத ஸ்டேட் வங்கி

11. 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இயந்திர மனிதர்களைப் பணி அமர்த்தியுள்ள நாடு

  1. ஆஸ்திரேலியா
  2. அமெரிக்கா
  3. ஜப்பான்
  4. சீனா

விடை : சீனா

12. இலா மென்பொருள் ஒரு விநாடிக்கு உரையாடும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை

  1. ஆயிரம்
  2. பத்தாயிரம்
  3. லட்சம்
  4. பத்து லட்சம்

விடை : பாரதியார்

13. சாப்ட் வங்கி உருவாக்கிய நாடு

  1. ஆஸ்திரேலியா
  2. அமெரிக்கா
  3. ஜப்பான்
  4. சீனா

விடை : ஜப்பான்

14. தமிழ்க்கல்வெட்டு _____________ நாட்டில் காணப்படுகிறது.

  1. ஆஸ்திரேலியா
  2. சீனா
  3. அமெரிக்கா
  4. ஜப்பான்

விடை : சீனா

15. சீனாவின் சிவன் கோவில் கட்டிய பேரரசர் _____________

  1. பெய்ஜிங்
  2. காண்டன்
  3. குப்லாய்கான்
  4. சூவன்செளா

விடை : குப்லாய்கான்

குறு வினா

1. வேர்டுஸ்மித் குறிப்பு வரைக

  • இதழியலில் மொழி நடையை உருவாக்கும் மென்பொருளின் பெயர் வேர்டுஸ்மித் எனப்படும்.
  • இதற்கு “எழுத்தாளி” என்று பெயர்.

2. வாட்சன் பற்றிய குறிப்பு வரைக

  • 2016-ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன்.
  • சில நிமிடங்களில் இரண்டு கோடித் தரவுகளை அலசி, நோயாளி ஒருவரின் புற்றுநோயைக் கண்டுபிடித்தது.

3. செயற்கை நுண்ணறிவு நமக்கு எவற்றின் அறிமுகமாகிறது?

  • சமூக ஊடகங்கள்
  • மின்னணு சந்தைகள்

4. செயற்கை நுண்ணறிவின் பொதுவான பணி யாது?

மனிதனால் முடியும் செயல்களையும், அவன் கடினம் என்று கருதும் செயல்களையும் செய்யக்கூடியது செயற்கை நுண்ணறிவு

5. இலா மென்பொருள் குறிப்பு வரைக

  • பாரத ஸ்டேட் வங்கி “இலா” என்னும் உரையாடு மென்பொருளை உருவாக்கியுள்ளது.
  • ஒரு விநாடிக்குப் பத்தாயிரம் வாடிக்கையாளர்களுடன் உரையாடும்.
  • அவர்களுக்கான சேவையை இணையம் மூலம் அளிக்கிறது.

6. ELA – விரிவாக்கம் தருக

ELA – Electronic Live Assistant

Leave a Comment