Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.5 Isai Tamilar iruvar Book Back Solution

இயல் 6.5 – இசைத்தமிழர் இருவர்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 6.4 ‘Isai Tamilar iruvar’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 6.5 இசைத்தமிழர் இருவர்

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 6.4 Isai Tamilar iruvar Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

இசைத்தமிழர் இருவர் வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Isai Tamilar iruvar’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: குற்றாலக் குறவஞ்சி

நெடு வினா

சிம்பொனித் தமிழரும், ஆஸ்கர் தமிழரும் இசைத்தமிழக்கு ஆற்றிய பணிகளை, நும் பாடப்பகுதி கொண்டு தொகுத்தெழுதுக?

சாதனை புரிந்த இளையராஜா

சிம்பொனித் தமிழர்:-

ஆசியக்கண்டத்தவர், சிம்பொனி இசைக்கோவையை உருவாக்க முடியாது என்னும் மேலை இசை வல்லுநர் கருத்தைச் சிதைத்தவர் இளையராஜா. இவர் தமிழ்நாட்டுத் தேனி மாவட்டத்து இராசையா ஆவார். தாலாட்டில் தொடங்கி தமிழிசை வரை அனைத்தையும் அசைபோட்ட இசை மேதை.

இசையைச் செவியுணர் கனியாக்கியவர்:-

திரையுலகில் கால் பதித்த இளையராஜா, இசையில் சிலம்பம் சுழற்றி, மக்களை இசை வெள்ளத்தில் மிதக்க வைத்தவர். பழந்தமிழிசை, உழைப்போர் பாடல், கர்நாடக இசை மெட்டுகளை அறிமுகப்படுத்தி, மெல்லிசையில் புது உயரம் தொட்டவர். எழுபது எண்பதுகளில் இவர் இசை, இசை வல்லாரை மட்டுமின்றி, பாமர மக்களையும் ஈர்த்துத் தன் வசப்படுத்தியது.

இசையில் சாதனைப் படைப்புகள்:-

ஐவகை நிலப்பரப்பைக் காட்சிப்படுத்தும் இளையராஜாவின் இசை மெட்டுகள், நெடுந்தூரப் பயணங்களுக்கு வழித்துணையாயின. இளையராஜாவின் இசையில், மண்ணின் மணத்தோடு, பண்ணின் மணமும் கலந்திருக்கும். எனவே, இசை மேலைகளால் மதிக்கப்பட்டார்.

எப்படிப் பெரியடுவேன்? காற்றைத் தவிர ஏதுமில்லை! என்னும் இசைத் தொகுப்புகள், இசையுலகின் புதிய முயறச்சிகள். இந்தியா 24 மணிநேரம் என்னும் குறும்படப் பின்னணி இசை, மனித உணர்வுகளான மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம், வலி என்பவற்றை உணர்த்துவன

இலக்கியங்களை இசையாக்கியவர்:-

மாணிக்கவாசகரின் பாடல்களுக்கு இசைவடிவம் கொடுத்த இளையராஜாவின் “இரமணமாலை, கீதாஞ்சலி, மூகாம்பிகை பக்தித் தொகுப்பு, மீனாட்சி ஸ்தோத்திரம்” என்றென்றும் நிலைத்து நிற்கும். பஞ்சமுகி என்னும் கர்நாடகச் செவ்வியல் இராகத்தை உருவாக்கியுள்ளார்.

இசையில் இந்திய மொழிகளை இணைத்தவர்:-

“இசைஞானி” எனப் போற்றப்படும் இளையராஜா, மேற்கத்திய இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தம் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இசைக் குறியீடுகளை மனத்தில் உருவாக்கிக் காகிதத்தில் எழுதிப் பயன்படுத்தினார். திரை இசைக்கு ஏற்ப உணர்வின் மொழியை மாற்றுவதில் வல்லவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என இந்திய மொழிகள் அனைத்திலும் இசையை வாரி வழங்கிய சிறப்புடையவர்.

அரிய செயல்:-

தேசத் தந்தை மகாத்மாகாந்தி எழுதிய “நம்ரதா கே சாகர்” பாடலுக்கு இசை அமைத்து, “அஜொய் சக்கரபரத்தி”யைப் பாடவைத்து வெளியிட்டார். ஆசியாவில் “முதல் சிம்பொனி” இசைக்கோவையை உருவாக்கினார்.  இன்று இளையராஜாவின் இசை ஆட்சி, உலகு முழுவதும் பரவுள்ளமை தமிழராகிய நமக்கு பெருமை

பெற்ற விருதுகள்:-

இளையராஜா, தமிழக அரசின் “கலைமாணி” விருதைப் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றார். மத்தியப்பிரதேச அரசு அளித்த “லதா மங்கேஷ்கர்” விருதைப் பெற்றார்; கேரள நாட்டின் “நிஷாகந்தி சங்கீத விருதைப் பெற்றார். இந்திய அரசு “பத்மவிபூஷன்” விருது வழங்கிப் பெருமைப்படுத்தியது. இசையால் உலகளக்கும் இளையராஜாவின் புகழ், காலம் கடந்து நின்று பாராட்டைப் பெறும், வாழ்க இசை! வளர்க இளையராஜாவின் இசைப்பணி

சாதனை புரிந்த ஏ.ஆர்.இரஹ்மான்

ஆஸ்கர் விருது வென்ற தமிழர்:-

2009-ம் ஆண்டு அமெரிக்க “கோடாக்” அரங்கில் இசைக்கான “ஆஸ்கர்” விருதுக்கு ஐந்து பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் இரஹ்மான் பெயரும் இருந்தது.

ஏனைய நால்வர், பலமுறை பரிந்துரை பெற்றவர்கள் எனினும், முதன்முறை பரிந்துரைக்கப்பட்டவர் அரங்கில் ஏறி, இரு கைகளிலும் ஆஸ்கர் விருதுக்கான சிலைகளை ஏந்தி, இறைவனை வணங்கிய பின் தாய்மொழியில் உரை நிகழ்த்தித் தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

இளமையில் இசையும் படிப்பும்:-

மலையாளத் திரைப்பட உலகில் புகழுடன் விளங்கிய தம் தந்தை ஆர்.கே. சேகரை எண்ணினார். நான்கு வயதில் தந்தையுடன் ஹார்மோனியம் வாசித்துத் திறமை காட்டியதை எண்ணினார்.

தந்தையை இழந்த சூழலில் பள்ளிப் படிப்புக்கு இடையூறு ஏற்படா வகையில், இரவெல்லாம் இசைக்குழுவில் பணி செய்து, காலையில் நேராகப் பள்ளி சென்று, வாயிலில் காத்திருக்கும் தாய் தந்த உணவை உண்டு பள்ளச்சீருடை அணிந்த காலத்தை நினைத்தார். வாழ்க்கைப் போராட்டம் பதினோராம் வகுப்போடு முடிக்க வைத்தது.

துள்ளல் இசைக்கு ஆட வைத்தவர்:-

1992-ல் “ரோஜா” படத்திற்கு இசையமைத்துத் திரை இசைப் பயணத்தை தொடங்கினார். தம் இசையால் தமிழ்த் திரையுலகில் புத்தெழுச்சியை ஏற்படுத்தினார். இளைஞர்களிடையே இசை ஆளுமையை வளர்த்தார். இவரது தமிழிசையின் துள்ளல் ஓசைக்கு மயங்காதவர் இலர். இசையின் நுட்பமுணர்ந்து, செம்மையாகக் கையாண்டு இளைஞர்களைத் தம் பாடலுக்கு ஆடவும் வைத்தார்.

இசையில் கணினித் தொழில் நுட்பம்:-

கணினித் தொழில்நுட்ப உதவியுடன் நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசை முறைகளைக் கலந்து, உலகத்தரத்தில் இசை அமைத்தார். இளம் பாடகர்களை அறிமுகப்படுத்தினார்.

இசைப்பாடலின் மெட்டை உருவாக்குமுன், தாளத்தைக் கட்டமைத்துப் பாடலுக்கான சூழலை உள்வாங்கி அதன் பின் பாட்டை வெளிக்கொணர்வது இரஹ்மானின் தனி ஆற்றல், பாடலின் பல்லவிக்கும் சரணத்துக்கம் இடையில் வரும் இசையை, மக்களை ஈர்க்கும் வகையில் அமைத்துத் தம் வல்லமையை வெளிப்படுத்துவார்.

உலகத் கலாசாரத்தை இசையில் இணைத்தல்:-

இவர் இசையமைத்த “வந்தே மாதரம்”, “ஜனகணமன” இசைத் தொகுதிகள் நாட்டுப்பற்றைத் தூண்டுவன. தென்னிந்திய மொழிப்படங்களுக்கும் இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்ததோடு மேலை நாட்டுப் படங்களுக்கம் நாடகங்களுகம் இசையமைத்து, இசையுலகில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டார். தம் இசையால் வெவ்வேறு கலாசார மக்களை இருங்கிணைக்கவும் செய்தார்.

பெற்ற விருதுகள்:-

  • ஏ.ஆர். இரஹ்மானுக்குத் தமிழக அரசு “கலைமாமணி” விருது வழங்கியது. கேரள அரசு “தங்கப்பதக்கம்” வழங்கிப் பாராட்டியது. உத்திரப்பிரேதச அரசு, “ஆவாத் சம்மான்” விருதும், மத்திய அரசு “லதா மங்கேஷ்கர்” விருதும் வழங்கின.
  • மொரிஷியஸ் அரசும் மலேசியா அரசு அரசும், “தேசிய இசை விருது” வழங்கிச் சிறப்பித்தன. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம், சர்வதேச இசை விருது வழங்கிப் பாராட்டியது.
  • இந்திய அரசு “பத்மபூஷன்” விருது வழங்கிப் பெருமைபடுத்தியது. “ஸ்லம் டாக் மில்லியனர்” படத்திற்கு இசையமைத்து “கோல்டன் குளோப்” விருதைப் பெற்று உலகப் புகழ் பெற்றார்.
  • இந்த விருதைப் பெற்ற முதல் இந்தியராக வலம் வரும் இரஹமானின் வாழ்க்கை, சாதனை படைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்குப் பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “இசைத்தமிழர் இருவர்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. _____________ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமாகினார்

  1. பொன்மனச்செம்மல்
  2. அரண்மனைக்கிளி
  3. அன்னக்கிளி
  4. அம்பிகாவதி

விடை : அன்னக்கிளி

2. இந்திய இசைமேதைகள் அனைவராலும் மதிக்கப்படுவர்

  1. இளையராஜா
  2. ஏ.ஆர்.இரஹ்மான்
  3. மதுரை சோமு
  4. ஆலங்குடி சோமு

விடை : இளையராஜா

3. சிம்பொனித் தமிழர் எனப் போற்றப்படுபவர்

  1. இளையராஜா
  2. ஏ.ஆர்.இரஹ்மான்
  3. மதுரை சோமு
  4. ஆலங்குடி சோமு

விடை : இளையராஜா

3. இளையராஜா ________________ எழுதிய திருவாகப் பாடல்களுக்கு ஆரட்டோரியோ என்னும் இசை வடிவில் இசையமைத்துள்ளார்.

  1. ஆண்டாள்
  2. மாணிக்கவாசகர்
  3. குலசேகர ஆழ்வார்
  4. திருமங்கையாழ்வார்

விடை : மாணிக்கவாசகர்

4. பஞ்சமுகி என்ற கர்நாடகச் செவ்வியல் இராகம் ____________ உருவாக்கியதாகும்.

  1. ஏ.ஆர்.இரஹ்மான்
  2. இளையராஜா
  3. மதுரை சோமு
  4. ஆலங்குடி சோமு

விடை : இளையராஜா

5. ஏ.ஆர்.இரஹ்மான் _______ முறை இசைக்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றவர்

  1. 3
  2. 2
  3. 4
  4. 6

விடை : 2

5. இளையராஜாவின் இயற்பெயர் ____________

  1. இராசையா
  2. இராசமாணிக்கம
  3. இராசமுத்தையா
  4. இராசமாணியன்

விடை : இராசையா

6. ஏ.ஆர்.இரஹ்மானின் இயற்பெயர் ____________

  1. அப்துல்காதல்
  2. அப்துல்ரஹமான்
  3. திலிப்குமார்
  4. சந்தோஷ்குமார்

விடை : திலிப்குமார்

7. தமிழ்நாடு ஏ.ஆர்.இரஹ்மானிற்கு அளித்த விருது ____________

  1. கிராமி
  2. தேசிய இசைவிருது
  3. கலைமாமணி விருது
  4. கோல்டன் குளோப்

விடை : கலைமாமணி விருது

சிறு வினா

1. இளையராஜா பெற்ற விருதுகள் சிலவற்றை கூறு

  • இந்திய அரசு – பத்ம விபூஷண் விருது
  • சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது
  • சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது
  • தமிழ்நாடு – கலைமாமணி விருது
  • மத்தியப்பிரதேசம் – லதா மங்கேஷ்கர் விருது
  • கேரளம் – நிஷாகந்தி சங்கீத விருது

2. ஏ.ஆர்.ரஹ்மான் பெற்ற விருதுகள் சிலவற்றை கூறு

  • இந்திய அரசு – பத்ம பூஷண் விருது
  • தமிழ்நாடு – கலைமாமணி விருது
  • கேரளம் – தங்கப்பதக்கம்
  • உத்திரப்பிரதேசம் -ஆவாத் சம்மான் விருது
  • மத்தியப்பிரதேசம் – லதா மங்கேஷ்கர் விருது
  • மொரீஷியஸ் – தேசிய இசை விருது
  • மலேசியா – தேசிய இசை விருது
  • ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் – சர்வதேச இசை விருது

Leave a Comment