Samacheer Kalvi 11th Tamil Guide Chapter 6.1 Kalathai Vendra kalai Book Back Solution

இயல் 6.1 – காலத்தை வென்ற கலை

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 11th Tamil Chapter 6.1 ‘Kalathai Vendra kalai’, you’ll find solutions to all the questions from the 11th Standard Tamil Book Lesson 6.1 காலத்தை வென்ற கலை

We have provided answers to one mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 11th Tamil Chapter 6.1 Kalathai Vendra kalai Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 11th Tamil Guide PDF.

காலத்தை வென்ற கலை வினா விடைகள்

On this page, you will find the question answers for the Lesson ‘Kalathai Vendra kalai’ which is the first subject of class 11 Tamil. Additionally, you can also access additional questions related to the Subject.

Previous Lesson: திருக்குறள்

Class 11 Tamil Text Books – Download

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

கூற்று 1 : தஞ்சைப் பெரிய கோவிலிலுள்ள ஓவியங்களை எஸ்.கே. கோவிந்தசாமி கண்டறிந்தார்
கூற்று 2 : அங்குள்ள சோழர்காலத்து ஓவியங்கள், ஃப்ரெஸ்கோ வகையை சார்ந்தவை

  1. கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
  2. கூற்று இரண்டும் தவறு
  3. கூற்று 1 தவறு, கூற்று 2 சரி
  4. கூற்று இரண்டும் சரி

விடை : கூற்று இரண்டும் சரி

குறு வினா

1. இந்தியக் கட்டக் கலையின் மூன்று வகைகள் யாவை

நாகரம், வேசரம், திராவிடம்

2. ஓலோகமாதேவீச்சுரம் கோவில் கல்வெட்டில் காணலாகும் பெண் அதிகாரிகளின் பெயர்களிலிருந்து நீங்கள் அறிவது யாவை?

  • ஓலோகமாதவீச்சுரம் கோவில் கல்வெட்டில் “எருதந் குஞ்சர மல்லி” என்ற பெண் அதிகாரி பற்றியும், இன்னொரு கல்வெட்டில் “சோமயன் அமிர்தவல்லி” என்ற பெண் அதிகாரி பற்றியும் குறிப்புகள் உள்ளன.
  • இதனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பெண்கள் அதிகாரிகளாகப் பணிபுரிந்தனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சிறு வினா

1. ஃப்ரெஸ்கோ ஓவியங்கள், கற்றக்கோவில்கள் குறித்து நீவீர் அறிவன யாவை?

ஃப்ரெஸ்கோ ஓவியங்கள்

ஃப்ரெஸ்கோ என்னும் இத்தாலியச் சொல்லிற்கும் “புதுமை” என்று பொருள், சுண்ணாம்புக் காரைப்பூச்சு மீது, அதன் ஈரம் காயும் முன் வரையப்படும் பழமையான ஓவியக் கலைநுட்பம்.

ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்களை அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல் முதலான இடங்களில் காணலாம்

கற்றக் கோவில்கள்

செங்கற்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிக் கோவில் கட்டுவதுபோல், கருங்கல்லை அடுக்கி கோவில் கட்டுவது “கற்றளி” எனப்படும். மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், காஞ்சி கைலாசநாதர் கோவில், பனைமலைக்கோவில் ஆகியவை கற்றளிக் கோவில்களுக்குச் சான்றாகும்.

நெடு வினா

கல்லும் கதை சொல்லும் என்னும் தொடர், தஞ்சைப் பெரிய கோவிலுக்குப் பொருந்துவதை விளக்கி எழுதுக

காலத்தை வென்று நின்ற கலை

ஒரு சமூகத்தின் நாகரிகம், பண்பாட்டு மேன்மைகளைப் பிரதிபலிப்பது கலை. தஞ்சைப் பெரிய கோவில் தமிழ்ச் சமுதாயத்தின் கலையாற்றலுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. அந்தக் கருங்கல் கலைச்செல்வம், தமிழரின் வரலாற்றுப் பெருமைகளை இன்றளவும் கதையாகக் கூறிக் கொண்டிருக்கிறது. தஞ்சையில் அமைந்துள்ள கோவில் இராசராச சோழனால் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருங்கற்களே இல்லாத நிலப்பரப்பில், கருங்கற் கொண்டு 216 அடி உயரம் உடையதாகவும், கருவறை விமானம், 13 தளங்களை உடையதாகவும் கட்டப்பட்டது.

கதை சொல்லும் கல்வெட்டு

சுற்றுச்சுவரின் அமைந்துள்ள கல்வெட்டுச் செய்திகள், எண்ணற்ற பழமையான வரலாற்றைக் கூறுகின்றன. கதை சொல்லம் அந்தக் கல் இசை, நடனம், நாகடம் எனப் பல அருங்கலைகளைப் பேணி வளர்த்த செய்திகளை தன்னுள் கொண்டுள்ளது. பஞ்ச காலத்தில் மக்களுக்கு உதவும் தானியக் கிடங்குகளை தன்னிடம் கொண்டிருந்ததை அறிய முடிகிறது. கருவூலகமாக, மருத்துவமனையாக, படைவீரர் தங்கும் கூடமாகக் கோவில் பயன்பட்ட கதைகளை கேட்டறிய முடிகிறது.

கோவில் உருவான கதையைக் கூறுகிறது

காேவிலை உருவாக்க மக்களும் அதிகாரிகளும் செயல்பட்டதைக் கதைபோல் எண்ணிப் பார்க்க செய்கிறது. இராசராசன் அமைத்த கோவிலின் முன்வாயில்கள், எண்ணற்ற வராற்றுக் கதைகளைக் கூறுகின்றன.

ஓவியங்கள் கூறும் கதை

கோவிலின் கருவறைத் தளங்களில் உள்ள சுற்றுக்கூடம், சாந்தார நாழிகைப் பகுதிச் சுவர்களில் தட்சணாமூர்த்தி ஓவியம், சுந்தரர் வரலாறு, திரிபுராந்தகர் ஓவியம் முதலியவற்றைப் பெயரி அளவில் வரைந்து வைத்துள்ளதை இன்றளவும் காண முடிகிறது. கோவில் கட்டுவதில் புதிய மரபு படைத்த இராசராசன் அமைத்த சிலைவடிவங்கள், வண்ண ஓவியங்கள் என யாவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் கலை வளர்த்தைக் கதைகதையாக இன்றும் இந்தப் பெரிய கோவில் நமக்குக் கூறுகிறது.

கல் சொல்லும் கதை

ஆண்களே அன்றிப் பெண்களும் அதிகாரிகளாகப் பணி புரிந்த செய்தியைக் கல்வெட்டுகள் கதைபோல் பாதுகாத்து வைத்துள்ளன. தஞ்சைப் பெரிய கோவிலை ஒரு முறை காணும் போது, “கல்வி கதை சொல்லும்” என்பது தெளிவாகப் புலப்படும்.

 

கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “காலத்தை வென்ற கலை” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.

பலவுள் தெரிக

1. 11ம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் இராசராச சோழன் ______________ -ஐ கட்டினான்

  1. தஞ்சை பெரிய கோயில்
  2. கங்கை கொண்ட சோழபுரம்
  3. அகத்தீஸ்வரன் கோயில்
  4. எல்லோரோ கோயில்

விடை : தஞ்சை பெரிய கோயில்

2. தஞ்சை பெரிய கோயிலின் 1000வது ஆண்டு விழா ___________-ல் நிறைவடைந்தது

  1. 2011
  2. 2012
  3. 2010
  4. 2013

விடை : 2010

3. தஞ்சை பெரிய கோயிலின் விமானம் __________ அடி உயரமுடையது

  1. 215
  2. 115
  3. 216
  4. 116

விடை : 216

4. கட்டக்கலை என்பது உறைந்த போன இசை என்று விளக்கமளித்தவர்

  1. ஃப்ரெஸ்கோ
  2. ஷுல்ஸ்
  3. பிரடிரிகா வொன்ஸ்லீவிங்
  4. எஸ்.கே. கோவிந்தசாமி

விடை : பிரடிரிகா வொன்ஸ்லீவிங்

5. தஞ்சைப் பெரிய கோவில் கோபுரங்களில் மிக உயரமான கோபுரம் எது?

  1. கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்
  2. இராசராசன் திருவாயில் கோபுரம்
  3. இராசராசன் கோபுரம்
  4. மதுராந்தகன் கோபுரம்

விடை : கேரளாந்தகன் திருவாயில் கோபுரம்

6. சோழன் செங்கணான் செங்கற்களாலான ____________ கட்டியுள்ளான்

  1. 78
  2. 80
  3. 76
  4. 82

விடை : 78

8. இராசசிம்மேச்சுரம் என்று _____________ கோவிலை அழைப்பர்

  1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  2. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  3. ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
  4. தஞ்சைப் பெரிய கோவில்

விடை : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

9. இராசராசனுக்குப் பெரியதொரு கோவிலைக் கட்ட வேண்டுமென்ற எண்ணத்தை தூண்டிய கோவில் ……..

  1. திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
  2. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்
  3. ஓலோகமாதேவிச்சுரம் கோவில்
  4. தஞ்சைப் பெரிய கோவில்

விடை : காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

10. ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் _____________, _________________, ____________ பகுதிகளில் காணப்படுகிறது

  1. காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
  2. அஜந்தா, தஞ்சாவூர், திருவில்லிபுத்தூர்
  3. அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல்
  4. காஞ்சிபுரம், எல்லோரா, சித்தனவாசல்

விடை : அஜந்தா, எல்லோரா, சித்தனவாசல்

12. இந்தியக் கட்டடக் கலைப்பாணியில் பொருந்தாதது

  1. நாகரம்
  2. வேசரம்
  3. திராவிடம்
  4. சாரசானிக்

விடை : சாரசானிக்

13. தஞ்சைப் பெரிய கோவில் _____________ வடிவில் கட்டப்பட்ட அமைந்த திராவிடக் கலைப் பாணி 

  1. கனசதுரம்
  2. உருளை
  3. எண்பட்டை
  4. கூம்பு

விடை : எண்பட்டை

14. _____________ தஞ்சைப் பெரிய கோவில் ஓவியங்களை கண்டறிந்தார்

  1. எஸ்.கே.கோவிந்தசாமி
  2. பி.கே.கோவிந்தசாமி
  3. பி.கே.கோவிந்தராஜன்
  4. எம்.எஸ்.கோவிந்தராஜன்

விடை : எஸ்.கே.கோவிந்தசாமி

15. காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டிய மன்னர்

  1. முதலாம் நரசிம்மவர்மன்
  2. இராசராச சோழன்
  3. மகேந்திரவர்மன்
  4. இராசசிம்மன்

விடை : இராசசிம்மன்

16. தஞ்சை பெரிய கோவிலானது இராசராசன் கட்டினான் என்று கூறியவர்

  1. ஃப்ரெஸ்கோ
  2. ஷூல்ஸ்
  3. எஸ்.கே. கோவிந்தசாமி
  4. உடையான்

விடை : ஷூல்ஸ்

17. இராசராசன் ___________ கோபுரங்கள் கட்டும் புதிய மரபைத் தோற்றுவித்தவர்

  1. மூன்று
  2. இரண்டு
  3. நான்கு
  4. ஐந்து

விடை : இரண்டு

18. பெரிய கோவில் காணப்படும் பெரிய நந்தியும் மண்டபமும் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது

  1. சோழர்
  2. சேரர்
  3. பல்லவர்
  4. நாயக்கர்

விடை : நாயக்கர்

குறு வினா

1. எவையெல்லாம் பிற்காலச் சோழர்களின் தனி அடையாளம் எனக் கூறுக.

தஞ்சைப் பெரிய கோவிலில் முதலில் உள்ள கேரளாந்தகன் திருவாயில், அடுத்து உள்ள இராசராசன் திருவாயில் ஆகிய இரண்டு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இவை பிற்கால சோழர்களின் சிறப்பான தனி அடையாளங்கள்

2. கள்ளிக் கோவில்கள் சிலவற்றை கூறு

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில், மகாபலிபுரம் கடற்கரைக் கோவில், பனைமலைக் கோவில், தஞ்சைப் பெரிய கோவில்

3. பழங்காலத்தில் கோவில்கள் கட்டிய விதத்தினை கூறுக

  • பழங்காலத்தில் கோவில்களை மண்ணால்கட்டி, மேல மரத்தால் சட்டகம் இட்டனர்.
  • அவற்றின் மேல் செப்பு, பொன் தகடுகளைக் கூரையாக வேய்ந்தனர்.
  • அடுத்த செங்கற்களை அடுக்கி கோவில்களை கட்டினர்.

4. குடவரைக் கோவில் என்றால் என்ன?

செங்கல், சுண்ணாம்பு, மரம், உலோகம் முதலானவற்றைப் பயன்படுத்தாமல் மலைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட கோவில் குடைவரைக் கோவிலாகும்

Leave a Comment